274 பாடல் பெற்ற தலங்களின் 2-வது சுற்றின் 5-வது பகுதி
ஈசனிடம் மன்றாடி விட்டு, கடைசியாக ஒருத்தரிடம் கேட்கலாம் என்று எண்ணத்துடன், பைக்கை கிளப்பி கொண்டு இருந்த ஒருவரிடம் , கோவில் பெயர் சொல்லி கேட்டேன். அவர் பெயர் சம்பத் குமார். அவரும் நல்ல சிவ பக்தர் போலும். மனைவி வெளி ஊரில் உள்ளதால், அவர் தில்லையாடி சிவன் கோவிலுக்கு செல்லும் திட்டத்துடன் கிளம்பி கொண்டு இருந்தார்.
ஏற்கனவே எனது நண்பர் @Ramkumar Vasudevan திருதளிச்சேர் கோவிலின் விலாசத்தை கூகிள் வைத்து சொல்லி இருந்தாலும், அதற்கான வழி புரியவில்லை. சம்பத்திடம் எனது நிலைமையை விளக்கியவுடன், அவர் தனது திட்டத்தை தள்ளி வைத்து விட்டு , என் கூட தானே கோவில் தேட வந்தார்.
எனது வரைபடத்தில் குறிக்கப்பட்ட இடத்தில யாழ்மூரிநாதர் திருக்கோயில் தேடினால், ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. சம்பத் அவருடைய நண்பரை தொடர்பு கொண்டு , வழியை கண்டு அறிந்தார். ஈசன் வழி சொன்னான். தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில், இருவரும் கோவில் சென்று அடைந்தோம். கோவில் புனரமைப்பு நடந்து கொண்டு இருந்தது. நிதியுதவி அளிக்க தகவல் பலகை வைத்து இருந்தார்கள்.
சமபந்தரின் பாடலுக்கு , யாழ் இசைத்தவரின், கர்வம் அடக்க ஈசன் யாழ் வாசித்த இடம். எமன் இங்கே தவம் இருந்து, எம தர்ம பதவி மீண்டும் பெற்ற இடம். ஈசன் வெள்ளி கவசம் கொண்டு காட்சி தருகின்றான். எத்திசை நோக்கினாலும் ,நோக்கும் திசை எங்கும் நின்று அருள் புரிபவன், கருவறைக்குள் அமர்ந்து கருணை காட்டுகின்றான். மாசற்ற சோதி (ஈசன்) மனதிற்குள் எரிகிறது. வார்த்தைகளில் வடிக்க முடியாமல், ஈசன் வீற்று இருக்கின்றான்.
சுற்றி வந்தால் தட்சிணாமூர்த்தி சற்று சாய்ந்து அமர்ந்து உள்ளார். ஈசனின் யாழ் இசை கேட்டு தட்சிணாமூர்த்தி, வியப்பில் பின்புறம் சாய்ந்தார் என்பது நம்பிக்கை. யாராலும் விளங்கி கொள்ள முடியாதவன் (ஈசன்), மனிதனை மட்டும் அல்லாமல், சக அம்சத்தையும் சாய்த்து உள்ளான் என்று சரித்திரம் சுட்டுகிறது. ஈசன் என்ற பெயர் தவிர்த்து வேறு எதுவும் உள்ளீடாக உள்ளே வரவில்லை யாகையால், உத்தரவு வாங்கி விட்டு இருவரும் வெளியே வந்தோம்.
திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில், கோவில் ஓரளவு நல்ல நிலைமையில் உள்ளது. சம்பந்தர் இந்த கோவிலை கவனிக்க மறந்து கடக்க முயல, பிள்ளையார் அழைத்து , தன் தகப்பன் புகழ் பாட சொன்ன இடம். பார்வதி தேவி, முனிவர் மகளாக பிறந்து ஈசனிடம் ஒன்றிய இடம். சம்பந்தர் மாற்று மதத்தவரை வாதில் வென்ற இடம். சொக்கநாதனை (ஈசன்) கண்டவுடன் மனம் சொக்கி அவன் திருவடிகளில் விழுகிறது.
இதற்கு தான் என்னை அலைய விட்டாயோ என் ஈசனே என்ற கேள்வி வருகிறது. விடையாக விண்ணோர் தேவனின் (ஈசன்) ஆலய மணி ஒலிக்கிறது. பிரளயத்தின் அதிபதியின்(ஈசன்) பிரகாரம் சுற்றினால், பாவத்தின் பளு குறைகிறது. பணிந்து விட்டு வெளியேறினோம்.
பயண திட்டபடி இன்றைய நாளுக்கு இன்னும் திருநள்ளாறு, திருக்கடையூர் கோவில் மட்டும் பாக்க வேண்டி இருந்தது. இரண்டு கோவில்களும் இரவு 9.30 மணி வரை திறந்து இருக்கும் என்பதால் , சம்பத் வேண்டுகோளை ஏற்று தில்லையடி சிவன் கோவில் நோக்கி கிளம்பினோம்.
தில்லையடி சிவன் கோவில் செல்ல சம்பத் ஒரு ஒற்றையடி பாதை வழியாக ஒரு பாடல் பெறாத சிறிய சிவன் கோவில் அழைத்து சென்றார். ஊர் பெயர் தேவனூர் , காசிநாதர் கோவில்.
காரிருள் எங்கும். பைக்கின் ஒளி இல்லையென்றால் , அங்கே நின்று விட வேண்டியது தான். கிட்டத்தட்ட இருளில் ஒரு கோவில் இருந்தது. இப்போது தான் பராமரிப்பு பண்ணுகிறார்கள் போலும். சற்று சிறிய கோவில். ஈசன் கருவறையில் அமர்ந்து உள்ளான்.
கருவறைக்கு கிட்ட போய் சம்பத் தனது அலைபேசி மூலம் ஒளி காட்ட, வௌவால்கள் முகத்தின் அருகே பறந்து போகின்றன. ஈசன் மேல் ஒளி பட, குங்குமம் ஒளியை உள்வாங்கி , சிதறடிக்க, ஈசன் விழி திறந்து பார்த்த பிரமை உள்ளுக்குள் படர்கிறது. கால்கள் அனிச்சையாக பின்னடைகின்றன. வெளி வந்து கோவிலுக்கு சிறிய நிதியுதவி அளித்து விட்டு கிளம்பினோம்.
தில்லையாடி சிவன் கோவில், செல்லும்போது 7.30 pm மணி , கோவில் கருமையின் கருணையில் நின்றது. அப்பொதுதான் கோவில் அடைத்து மணியகாரரும், அர்ச்சகரும் வெளி வந்தார்கள். சென்னையில் வருகிறோம் என்று சொன்னவுடன். கோவில் வெளிக்கதவை மட்டும் திறந்து பிரகாரம் சுற்றி வர அனுமதித்தார். சாவி துவாரத்தின் வழியாக ஈசனை கண்டோம்.
ஒரு கண் வைத்து நோக்கினாலும், நெற்றிச்சுடரோன் (ஈசன்) நிழல் நம் மீது பாய்வது போல் ஒரு எண்ணம். பாடல பெறாத சிவன் கோவில் இது. சோழ மன்னனின் அமைச்சர் அரசனுக்கு தெரியாமல் இந்த கோவிலை கட்ட, அமைச்சரை தண்டிக்க முற்பட்ட அரசனின் கண்களை ஈசன் பறித்து, பின்பு மன்னித்த இடம். இருள் சூழ்ந்து இருந்த கோவிலை, வலம் வந்து விடை பெற்றோம்.

No comments:
Post a Comment