Thursday, October 9, 2014

274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் முதல் சுற்றின் -பயண திட்ட குறிப்புகள்

நண்பர்கள் சிவாலயங்கள் பதிவுக்கான, நான் சென்று வந்த பயண திட்டத்தை தெரிவித்தால், நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.

http://tiny.cc/ewggnx

இந்த லிங்கை காப்பி செய்து , அப்படியே GOOGLE CHROME ல் PASTE செய்து பார்த்தால் , முழு வரைபடம் வழிகளுடன் காணலாம்.

கோவில்கள் இருக்கும் இடம் A, B, C....என்று குறிக்கப் பட்டு இருக்கும்.
இணைத்துள்ள புகைப்படத்தை வைத்து ஒப்பிட்டு பார்த்தல், A, B, C.....எந்த கோவிலை குறிக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
!! சில பயண குறிப்புகள !!.
எனது பதிவுகளில்....
நான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், பற்றி குறிப்பிடவில்லை. அருகே உள்ளதால் நான் அதிகம் முறை இந்த கோவிலுக்கு சென்று வந்து உள்ளேன்.
அது போல பாடல் பெற்ற தலமான காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் பற்றி பதிவில் எழுத மறந்து விட்டேன். இங்கேயும் அர்ச்சகர் சில குறிப்பிட்ட நேரம் மட்டும் வருவார். ஆனால் அங்கே ஒரு வயதான பாட்டியிடம் வெளிப்புற சாவி உள்ளது. அவர்களிடம் கேட்டு வாங்கி நாம ஈசனை கருவறை இரும்பு கதவின் வழியே குறைவின்றி தரிசிக்கலாம்.(கருவறை சாவி அர்ச்சகரிடம் உள்ளது)
நான் பாடல் பெற்ற தலங்களை மட்டும் எழுதி உள்ளேன். ஆனால், பாடல் பெறாத பல தலங்களையும் தரிசித்தேன். அதை பற்றி எழுதினால பதிவை முடிக்க முடியாது என்ற காரணத்தினால் அதை பற்றி குறிப்பிட வில்லை. .
*சென்னையில் இருந்து தனியாக செல்லும் எண்ணம் இருந்தால், இரு சக்கர வாகனம் பயணத்திற்கு நல்லது. பல தலங்களை சுலபமாக, மிக வேகமாக சென்று அடையலாம்.
*ரோடு ஓரம் விற்கும் 40/50 -ருபாய் பேண்ட் , T-SHIRT களையும் , ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிந்து விட கூடிய உள்ளாடைகளையும் வாங்கி வைத்து கொண்டால், எந்த திருத்தலத்திற்கு உள் செல்லும்போது எந்த உறுத்தலும் இருக்காது. ஏன் என்றால் ஒருமுறை குளித்த உடன், போட்டு கொண்டு இருந்த ஆடைகளை எறிந்து விட்டு புதிது அணிந்து கொள்ளலாம்.
*முடிந்த வரை, நீர் உணவாக, இளநீர் எடுத்து கொள்ளுங்கள். இயற்கை உபாதை தொல்லை அதிகம் வராது.
*போகும் முன், ஒவ்வரு கோவிலின் முழு விவரத்தையும், தல வரலாறு, சிறப்பு பற்றி PDF வாக பதிவு செய்து அலைபேசியில் ஏற்றி வைத்துக் கொண்டால், யாருடைய வழிகாட்டுதல் இன்றி கோவிலை பற்றி அறியலாம்.
*வரைபடத்தை A3 பேப்பரில் அச்சிட்டு எடுத்து கொண்டால் பயண வழி பற்றி அதிகம் கவலைபட தேவை இல்லை.
*புகைப்பட கருவியை கண்டிப்பாக எடுத்துக் கொண்டு செல்லாதீர்கள். உங்கள் நோக்கம் மாறி விடும். ஈசனை பற்றி மறந்து விட்டு, எந்த இடம் புகைப்படத்திற்கு ஏற்றது என்ற எண்ணம் வரும். நான் எனது அலைபேசியில் உள்ள புகைப்படக் கருவியை வேண்டும் இடத்தில உபயோக படுத்தி கொண்டேன்.
*ஒவ்வரு கோவிலிலும் , நெய் விளக்கு ஏற்றுங்கள், மாவிளக்கு ஏற்றுங்கள் என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். தவிர்த்து விடுங்கள். இல்லை என்றால், கவனம் சிதறும்.
நான் சுதந்திர தினம் அன்று கிளம்பியதால், பொது சம்பந்தி விருந்தை ஒட்டி , பல கோவில்கள், காலை 5 மணியில் இருந்து மதியம் 2 , 3 மணிவரை திறந்து இருந்தன. சில இடங்களில் டிவி கள் வைக்கப்பட்டு, சுதந்திர நிகழ்சிகள் கூட என்னால் பார்க்க முடிந்தது.
முடிவாக.....ஈசன் வந்து இறங்கிய இடம், நம்முடைய வருகைக்காக காத்து கொண்டுக் இருக்கிறது. செல்லுங்கள் சென்று தரிசியுங்கள்.
ஈசன் திருவருள் புரியட்டும்

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...