Thursday, October 9, 2014

வெற்றி திருநகர்-புத்தகம்- அகிலன்

வெற்றி திருநகர்-புத்தகத்தை பற்றி ஒரு நண்பர் கேட்டார். விஜயநகர பேரரசின் உன்னத மன்னர் கிருஷ்ண தேவராயர் வரலாற்றை சுட்டி காட்டும் நாவல் அது. தென் இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் யாராவது ஒருத்தருக்கு, தாங்கள் இன்னும் ஹிந்துவாக இருப்பது குறித்து நன்றி தெரிவிக்க விரும்பினால், அது விஜய நகர அரசர்களுக்கும் (கர்நாடக), அவர்களின் வீரர்களுக்கும் தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.
முறையற்ற போர் முறை கொண்ட முஸ்லிம் மன்னர்கள் சூழ்ந்த இருந்து , தென் இந்தியா தத்தளித்து கொண்டு இருந்த நேரம், இருளை கிழித்துக் கொண்டு உதயமாகும் சூரியனாய் , எழுந்தது ஒரு அரசு.
நயவஞ்சக நரிகள் நாட்டாமை நடத்தி கொண்டு இருந்த போது, சிங்கமாய் சீறிய அரசு. என் வரையில் , நம் சோழர்களை விட ஒரு படி மேல் இருந்தவர்கள் இவர்கள். உண்மை. சோழர்கள் மேல் எப்போதும் எனக்கு ஒரு காதல் உண்டு. ஆனால் விஜயநகர பேரரசு மேல் அளவற்ற மரியாதை உண்டு.
ஏன் எனில் சோழர்கள் இருந்த காலம் வேறு மாதிரி. சோழர்களை சுற்றி இருந்தவரகள் ஹிந்து அரசர்களாக இருந்த காரணத்தினால் , ஹிந்து மதத்திற்கும், அதன் நம்பிக்கைக்கும் எந்த போர்களினாலும் பாதிப்பை ஏற்படுத்த முடிய வில்லை.
ஆனால் விஜய நகர கதை வேறு, சுற்றி நின்றவர்கள் இந்த மண்ணின் பழம்பெரும் நம்பிக்கையை வேரோடு அழித்து , தங்கள் நம்பிக்கையை இந்த மண்ணில் விதைக்க விரும்பிய பாமினி சுல்தான்கள். கோவில்களை அழிப்பதை கொள்கையாக கொண்ட வெறியர்கள்.
அதனால் போர் எப்போதும் போர். விஜயநகர அரசர்கள் மாதிரி போரிலே வாழ்க்கை நடத்திய மற்ற அரச பரம்பரை மிகக் குறைவு. வேண்டுமானால் ராஜபுத்திர அரசர், மராட்டிய வீர சிவாஜியை சொல்லலாம். இவர்கள் எல்லாம் ஹிந்து மதத்திற்காக போரிட்ட அரசர்கள்.
தென் இந்தியாவின் எந்த பழம் பெரும் ஆலயத்திற்கு நீங்கள் காலடி எடுத்து வைக்கும் பொது, ஒரு நிமிடம் இந்த விஜய நகர அரசுக்கு நன்றி சொல்லுங்கள். இவர்களின் வீர தியாகமே, இன்று நமக்கு ஆன்ம நம்பிக்கை அளிக்கும் திருக்கோவில்கள், நம்மிடையே பத்திரமாக அமைய காரணம்.
எழுத்தாளர் அகிலன் தன் முன்னுரையில் இப்படி குறிப்பிடுகிறார், "தென் இந்தியாவில் இன்னோர் பாகிஸ்தான் உருவாகாமல் தடுத்த பெருமை இந்த அரசை சாரும் "
துரதிஸ்டவசமாக தலைக்கோட்டை போரில் விஜயநகர அரசு தந்திரமாக முறியடிக்கப்பட்டது. பாலகுமாரன் தனது "பிருந்தாவனம்" நாவலில் தலைக்கோட்டை போரின் கோரமுகத்தை சொல்லி இருப்பார்.
வெற்றியின் விளம்பில் இருந்த போர், தலை கீழாக மாறியது!!
விஜயநகர படையில் தோழர்களாக இருந்த முஸ்லிம் படை தளபதிகள் ,கடைசி நேரத்தில் பாமனி சுல்தான்களுடன் இணைந்து விஜயநகர படைகளையே தாக்க, குழப்பம் ஏற்பட்டு விஜயநகர பேரரசு வீழ்த்தப்பட்டது.
வீரம் வெல்ல முடியாததை , நம்பிக்கை துரோகம் பாமனி சுல்தான்களுக்கு பரிசாக பெற்று தந்தது.
உண்மையில் நம் மக்கள் விஜயநகர பேரரசை மறந்தே போனார்கள்.
நம் மக்களுக்கு அது பழக்கம்தான் , அருளிய ஆண்டவனை , திருக்கோவில் தாண்டியதும் மறந்து விட்டு, அந்த ஆண்டவன் குடி கொண்டு இருக்கும் திருக்கோவில்களுக்கு தீங்கு நேரும் போது, அதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதும், மத சார்பற்ற மந்திரத்தில் மூழ்கி , நம்பிக்கை கொடுத்த ஆண்டவனையே நடு ஆற்றில் , விட்டு விலகுவதும், நம் மக்களின் வழக்கம் தான்.
பேரரசின் தலைநகரம் ஹம்பியின் எச்சங்கள் மிச்சம் இருக்க, Robert Sewell என்றவர் , இந்த அரசை பற்றி ஆராயுந்து, அதனை பற்றி தகவல்களை திரட்டி ஒரு நூலக வெளியிட்டார்.
நூலின் பெயர் என்ன தெரியுமா " மறந்து விட்ட பேரரசு" (A Forgotten Empire: Vijayanagar).
உண்மை தான்- "எம் ஹிந்து மக்கள் மறந்து விட்ட பேரரசு"
குறிப்பு: அன்றைய முஸ்லிம் மன்னர்களின்- செயலுக்கு இன்றைய சமுதாயத்தை நான் குற்றம் சொல்லவில்லை.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...