Tuesday, March 29, 2016

நரிக்குறவர்கள் என்ற நெறிக்குறவர்கள்

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தங்கையே. நரிக்குறவர்கள் எப்போதும் நம்மை வியப்பில் வைப்பவர்கள். சுயதொழில் எப்படி செய்யலாம் என்பதை தினமும் நம் கண் முன்னே நமக்கு காட்டுபவர்கள். எந்த திருவிழா ஆகட்டும் இவர்கள் ஏதாவது ஒரு பொருளை விற்று கொண்டு இருப்பார்கள். "என்னால் இந்த தேசத்தில் வாழ முடியாமல் போனது , பிழைக்க வழி தெரியவில்லை , தவறான பாதையை தேர்ந்தெடுக்க தள்ளப்பட்டேன் என்று தொலை காட்சியில் கதறிய பெண்களையும் , ஆண்களையும்" நாம் பார்த்து கொண்டு இருந்த போது, இவர்கள் குழுவாக இயங்கி சிறு சிறு வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்கள். 

என் அறிவுக்கு எட்டிய வரை இவர்கள் திருடியதாகவோ , யாரையாவது ஏமாற்றி பிழைப்பு செய்ததாகவோ , தவறான வழியில் பணம் சம்பாதித்கவோ அறிந்தது இல்லை. திருவான்மியூரில் இருந்த போது, பழைய விளையாட்டு சாமான்களை குப்பையில் போட போனேன். ஒரு நரிக்குர குட்டி பையன் மிக ஆசையாக பார்த்து கொண்டு இருந்தான். சரி என்று அவனிடம் கொடுத்து விட்டு வந்து விட்டேன். அவனுக்கு ஒரே சந்தோசமாக போய்விட்டது.

போயும் போயும் உடைந்த பொருள்களை ஒரு குழந்தையிடம் கொடுத்து விட்டோமே என்று உறுத்தல் இருந்தது. சரி வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு புதியதாக ஒன்று வாங்கி கொடுத்து விடலாம் என்ற அளவில் ஒருவாறு மனதை அமைதியாக்கி கொண்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து வீட்டில் இருந்து அலுவுலகம் செல்லும் வழியில் அந்த சிறுவன் எதிர்ப்பட்டான். என்னிடம் ஓடி வந்து அந்த விளையாட்டு சாமான்களை காட்டினேன். ஏதோதோ செய்து அந்த கார்களையும், பொம்மைகளையும் ஒரு மாதிரி நன்றாக செய்து வைத்து இருந்தான்.

நான் சந்தோசம் கண்ணா வைத்து விளையாடு என்று சொன்னவுடன், ஒரு காரை நான் வைத்து கொண்டு மற்றவற்றை விற்று விடுவேன் என்றான்.
ஏற்கனவே ஒன்றை விற்று விட்டதாக சொன்னான். என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. ஆனால் மிக ஆச்சரியமாக இருந்தது. என்னை பொறுத்தவரை அவன் சிறு குழந்தை. அவனை பொறுத்தவரை அவன் ஒரு சிறு வியாபாரி.

வாழ்வது எப்படி என்பதையும் அவன் சரியாக அறிந்து இருக்கின்றான். இத்தனை வயது வந்தும் இன்னும் ஒரு வகையில் நமக்கு அது பிடிப்பட வில்லை.

வாழ்க்கை பாடத்தை வாழ்வியல் கலையாக கற்று தேர்ந்தவர்கள் , இன்று பொறியியல் படிப்பிலும் கற்று தேர்ந்து இருக்கிறார்கள்.

சுகமான வாழ்விற்காக சீர் கெட்டு போய் அழிந்து . பின் வாழும் சமுதாயத்தை குற்றம் சாடி திரிந்தவர்கள் , இந்த நரிக்குறவர்கள் என்ற நெறிக்குறவர்களை பார்த்து நாணி கொள்ளுங்கள்.....

http://www.dinamalar.com/news_detail.asp?id=1458010

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...