Saturday, October 8, 2016

சில பிள்ளைகளை நினைத்தால் வேதனையாக இருக்கிறது

சில பிள்ளைகளை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. மனைவியோ , கணவனோ திருநெல்வேலியில் இருந்தால் கூட , எப்படியாவது வாரம் வாரம் விழுந்தடித்து கொண்டு ஊருக்கு போய் பார்த்து விட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் தாய் தந்தையர் வேறு ஊரில் இருந்தால் , மூன்று நான்கு , ஆறுமாதங்கள் ஆனாலும் போய் பார்ப்பதில்லை. கேட்டால் ரயில் கிடைக்க வில்லை , பேருந்து கிடைக்க வில்லை என்று சமதானம் சொல்கின்றனர் . மாதத்திற்கு ஒரு முறை கூட நம்மை பெற்றவர்களை பார்ப்பதற்கு மார்க்கம் தெரியவில்லையா?

வேறு மனைவியும் , வேறு கணவனும் தேடி கொள்ளலாம், இன்னோர் பிள்ளை பெற்று கொள்ளலாம். எல்லா உறவுகளுக்கும் உலகத்தில் மாற்று உறவு உண்டு. தாய் தந்தையருக்கு மாற்று இந்த உலகில் எந்த மனிதரும் இல்லை. எங்கும் நிறையும் இறை கூட அந்த இடத்தை நிரப்ப முடியாது.

இன்று கை நிறைய சம்பாதிக்கும் திமிரில் ,அவர்கள் வாழ தெரியாமல் வாழ்ந்தார்கள் என்று பேசாதீர்கள். அவர்கள் அறிந்தே இருந்திராத பொருளாதார யுத்த களத்தில் அவர்கள் பட்ட காயம் அறியாமல் கருத்து சொல்லாதீர்கள். தோல்வியின் வலிகளை அறிந்ததால் தான் , நமக்கு வெற்றிகளின் வழிகளை காட்டி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் சேர்த்த சொத்தே நீங்கள் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் இருக்கும் போதே அவர்களிடம் உரையாடி உங்கள் உள்ளத்தை அவர்களை பற்றிய நினைவுகளால் நிரப்பி கொள்ளுங்கள் . உலகமே நம்மை உதறி தள்ளினாலும் , நமக்கு என்று அறுதியாகவும் , இறுதியாகவும் ,உள்ள ஒரே உலகம் நம் பெற்றோர். தாய் தந்தையர் போனால் அந்த வெற்றிடம், வெறுமையானது, அது முடிவானது, எந்த சலனமற்றது. அங்கே நாம் பற்றி கொள்ள இனி யாரும் இல்லை

என் பிள்ளை என் பிள்ளை என்று நம்மை கொண்டாட இனி யாரும் இருக்க போவதில்லை. அவர்களை காண இயலாததிற்கு காரணத்தை சொல்லி , காலத்தை கடத்தாதீர்கள். காலம் யாருக்கும் காத்திருக்க போவதில்லை. முதுமை முழுதாக அவர்களை நம்மிடம் இருந்து பறித்து கொள்ளும் முன்னரே அவர்கள் முன் போய் நில்லுங்கள், கூட இருந்து மகிழுங்கள்.

அவர்கள் மறைந்தால், நாம் என்ன மற்றும் ஒருமுறை, அவர்களுக்கு பிள்ளைகளாவா பிறக்க போகின்றோம்?

ரகுகுல ராமனை அவமானபடுத்தும் நோக்கில் திருத்தப்பட்ட தமிழ் விக்கிபீடியா

என்னால் முடிந்த வரை ராமரை பற்றிய தமிழ் விக்கிபீடியாவை மாற்றி அமைத்து இருக்கின்றேன். அவதூறு சொல்லும் பிரிவை நீக்கி இருக்கிறேன். ராமாயண வரலாற்றில் பல நற் கருத்துக்கள் சொல்லப்பட்டன அதை பற்றி மேற் கொள் காட்டாமல பல நூறு கோடி பேர் நம்பும் ராமரை பற்றி மட்டமான தொகுப்புகள் ஏற்றப்பட்டன. திராவிட கட்சிகளை பற்றி ராமர் வீக்கி பீடியாவில் ஏன் பேச வேண்டும். திட்டமிட்டு அசிங்க படுத்த முயற்சி செய்து இருக்கிறார்கள். எல்லா மாற்று மத தெய்வங்களின் வரலாற்றிலும், புனித நூல்களிலும் முரண்பாடுகள் உள்ள கருத்துக்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன , ஆனால் அந்த தெய்வங்களின் விக்கிபீடியாக்களில் அது தொகுக்க பட வில்லை. ஏன்?

ராமன் இந்த தேசத்தின் பொக்கிஷம். சரித்தர நாயகன். இந்திய வரலாற்றில் இப்படி பட்ட மனிதன் இந்த தேசத்தில் வாழ்ந்து இருக்கின்றான் என்பதே இன்று வரை எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இது சாத்தியம் சாத்தியமா என்று வினா என்னுள் தொடர்ந்து விரட்ட படுகிறது .சத்தியத்தை பற்றி படிக்கும்போது உள்ளே ஒரு சங்கடம் பரவி மெல்ல வெளியேறுகிறது. அது வேறு ஒன்றும் இல்லை அவ்வப்போது என்  மனதினுள் வந்து குடி புகும் சாத்தான், சந்தடி செய்யாமல் வெளியேறி இருக்கிறது.

சத்தியத்தை நேருக்கு நேர் சந்திக்க இங்கே எவருக்கும் துணிவு இருந்ததாக சரித்தரம் இல்லை. ராம சரிதம் படிக்கும் எந்த நெஞ்சிற்கும் இது நேரும். அவன் சத்திய புருசன் என்பது மனதினுள் சங்கல்பமாகும். ராம நாமம் நம்மை நம்மிடம் இருந்து ரட்சிக்கும்.

நற் சிந்தனைகளின் நிஜ உருவம் ராமன். பக்தியின் பரிதவிப்பில் பக்தன் எதை கொடுத்தாலும் தெய்வம் ஏற்கும். ராமன் கள் குடித்தானா , மாமிசம் சாப்பிட்டனா என்பதை பற்றி எள்ளவும் எனக்கு அக்கறை இல்லை. அவன் என்ன உபதேசம் செய்தான் என்பதில் தான் ஆர்வம் கொள்ள வேண்டும். மனதாலும் மாற்று மங்கையரை தொட மறுத்தவன் அவன். தந்தை சொல் மிக்க வார்த்தை தரணியில் இல்லை என்று வாழ்ந்த தலைவன்.

இயற்கையை இயக்கும் இறைவனே என்றாலும் , மனித உடல் எடுத்து வந்தால் , உடலுக்கு உண்டான உறவுகளின் வார்த்தைகளுக்கு உட்பட்டு வளைந்து , அலைந்து திரிந்து வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று ராமன் கற்பித்தான் நமக்கு . ஆனால் மனித மனதில் உறையோடி போய் இருக்கும் இச்சைகளுக்கு ராமன் ஆட்பட மறுத்தான்.

கண் மூடினால் கன்னியர்களை பற்றி கனவில் கழியும் கள்வர்களுக்கு ராமன் பற்றிய பிம்பங்கள் கலவரமாக இருந்து இருக்கிறது. அவர்களால் ராமனாக மாற முடியாது, அதனால் ராமனும் அவர்களை போன்றவர் தான் என்ற கருத்தை உருவாக்க முயன்று இருக்கிறார்கள்.

அதாவது தெய்வத்தை பற்றி, மேல் எழும்ப தெரியவில்லை , தெய்வத்தை தன் நிலைக்கு கீழ் இழுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். தன் இச்சைகளை அறுக்க தெரியாமல் எச்சையாக திரியும் மனிதர்களுக்கு ராமன் சரிதம் அச்சமாக இருந்து இருக்கிறது என்பதின் வெளிப்பாடு தான் விக்கிபீடியாவில் அவர்கள் செய்து வைத்து இருந்த மாற்றங்கள்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D


கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...