லஜ்ஜா (Lajja)- அவமானம்- தஸ்லிமா நஸ்ரின்
Lajjā- Novel by Taslima Nasrin
கிழக்கு பதிப்பகம் விலை-200
பங்களாதேஷ் எழுத்தாளர் எழுதிய நாவல். பங்களாதேஷில் சிறுபான்மையிரான ஹிந்து மக்கள் எப்படி அழிக்கப்பட்டனர் என்பதை இஸ்லாமிய பெண் எழுத்தாளர் பதிவு செய்து இருக்கிறார்.
எதற்காக இந்த பெண் எழுத்தாளரை கொல்ல அந்த நாட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முயன்றனர் என்பது முதலில் புரிபடாமல் இருந்தது. புத்தகம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அகோர முகத்தை பதிவு செய்கிறது. ஆனால் எந்த இடத்திலும் இஸ்லாத்தை விமர்சிக்க வில்லை.
பிறகு ஏன் தீவிரமாக வேகமாக எதிர்த்தார்கள் , இந்தியாவில் உள்ள இஸ்லாம் அமைப்புகளும் ஏன் தீவிரமாக எதிர்த்தார்கள். போதா குறைக்கு காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்ம் எதிர்த்தார்கள்.
விடை புத்தகத்தில் உள்ளது.
கதை இந்தியாவின் பாபர் மசூதி இடிப்பில் இருந்து தொடங்குகிறது. இடிப்பால் ஏற்பட்ட இன்னல்கள் பங்களாதேஷ் ஹிந்துக்களின் வாழ்க்கையை இருட்டில் தள்ளுகிறது என்ற வரிகளுடன் புத்தகம் நம்மை வரவேற்கிறது .
பாபர் மசூதியால் தான் ஹிந்துக்கள் வாழ்க்கை பாழாகிப் போனதோ என்ற கவலையுடன் தொடர்ந்து படித்தால், இல்லை பாபர் மசூதி நிகழ்வுக்கு முற்பட்டே அங்கே ஹிந்துக்கள் ஒழித்து கட்டப்பட்டு வந்து இருக்கிறார்கள் என்பதும், பாபர் மசூதி நிகழ்வை மிக சரியாக அங்கே இருந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள் உபயோகி படுத்திக் கொண்டனர் என்பதை புள்ளி விவரங்களுடன் புத்தகம் நம்மிடையே பகிர்கிறது.
இது எதிர் வினைக்கான, எழும் வினை அல்ல என்பதும், ஹிந்துக்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு தங்களது எதேச்சதிகார ஆளுமையின் அழித்து கொண்டு இருக்கும் அரசாங்கத்தையும் , அதற்கு ஆதரவு அளிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் இந்த புத்தகம் அம்பலபடுத்துகிறது
சுதந்திரக் காற்றை சுவாசம் செய்ய முடியாமல் தடுமாறி கீழான நிலையில் இருந்த கிழக்கு பாகிஸ்தானை , பங்களாதேஷ் என்ற புதிய பரிமாணத்தில் பாரில் அறிமுகம் செய்தது எங்கள் பாரத தேசம் அல்லவா?
நட்பாக இருந்து இருக்க வேண்டிய அந்த தேசம் நம்பிக்கை துரோகம் செய்தது எப்படி. நன்றியுள்ள மனத்தினை மதம் மறித்து கொன்று, மதமே அங்கே மகுடம் சூடி இருக்கிறது. மாட்சிமை அற்ற அதன் ஆட்சியாளர்கள் , ஹிந்துக்களை அகதிகளாக அடித்து விரட்டி , இந்திய தேசத்தின் முதுகில் அல்ல, நேரடியாக நெஞ்சிலே வாளை சொருகி இருக்கிறார்கள்.
மதசார்ப்பற்ற அரசாங்கம் என்ற அறிவிக்க முயன்று தோற்று போய், முற்றும் இஸ்லாமிய தேசமாகி போன பங்களாதேஷ்ல் எப்படி ஹிந்து மக்கள் வேட்டையாடப் பட்டனர் அவர்கள் வீட்டு பெண்கள் எப்படி கற்பழித்து கொல்லப்பட்டார்கள், எப்படி வேலை வாய்ப்பில் மறுக்க பட்டனர் , எப்படி ஆயிரக்கணக்கான கோவில்கள் அழிக்க பட்டது என்பதை புத்தகம் அட்டவணை படுத்துகிறது.
இஸ்லாத்தை ஆட்சி அதிகாரமாக கொண்ட எந்த தேசத்திலும் , பிற மதங்கள் வாழ முடியாது என்ற கருத்திற்கு இது வலு சேர்க்கிறது. நிகழ் காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை நினைவில் நிறுத்தினால், இஸ்லாமிய தேசத்தில் இஸ்லாமியர்கள் கூட வாழ முடியாது என்பதை முகத்தில் அடித்தார் போல் வரலாறு நம் கண் முன்னே எழுதிக் கொண்டு இருக்கிறது. அதற்கான முன்னுரை தான் இந்த புத்தகம்
இஸ்லாம் மக்கள் பெரும்பான்மை கொண்ட தேசங்களான பாகிஸ்தானும் , பங்களாதேசம் வேறுபட்டு நின்றாலும் கொள்கை அளவில் ஒருமித்து நிற்கின்றன. காபீர்கள் அற்ற தேசம் என்ற கொள்கை அது.
நல்ல முஸ்லிம்கள் அங்கே இருந்தாலும், ஹிந்துக்கள் மீது நடக்கும் கொடுமைகளை தட்டி கேக்க முடியாமல் தளர்ந்து போய் கிடப்பதையும், ஒவ்வார் முறையும் ஹிந்துக்களை காக்க முயன்று, கடைசியில் காக்க முடியாத இயலாமையையும் புத்தகம் ஒப்புக் கொள்கிறது.
இன்றும் விழித்துக் கொள்ள மறுக்கும் இந்திய ஹிந்துக்களுக்கு இஸ்லாமிய தேசத்தில் இருந்து அனுப்பட்ட ஒரு எச்சரிக்கை கடிதம், புத்தகமாக கடந்து நம் கைகளுக்கு வந்து இருக்கிறது என்பதாக நான் கருதுகின்றேன்.
பிரித்து படிப்பதும், படிக்காமல் விடுவதும் அவரவரின் விருப்பம்.
ஆனால் நல் வாழ்விற்கான விருப்பம் , வாழ்வதற்கான வாழ்விடத்தை வகுத்து கொள்வதில் இருந்து தொடங்குகிறது.
இருக்கும் இடம் போனால் , இன்னோர் இடம் தேடி கொள்ளலாம். ஆனால் வாழ்விடம் எது என்று கூட அறிய முடியாமல் , ஒரு தேசமே களவு போவதையும், அந்த களவின் பின் நிற்பது ஒரு மதம் என்ற அறிய நேரிட்டால் என்ன செய்வது?
நட்பாய் நாம் இருக்க வேண்டும், ஆனால் நாம் தான் இந்த தேசத்தின் நாயகர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த தேசத்தின் இடங்கள் எல்லா மதத்தினரக்கும் பாத்தியபடும், பாதுகாக்க படும்.
இல்லை என்றால் ஒரு மதத்தினரக்கு மட்டும் பதிவு செய்ய படும்.
http://sugashiva.blogspot.in/