Tuesday, December 27, 2016

மனசாட்சியை தட்டி சொல்லுங்கள், பிராமணர்களாக நம்மை கட்டி வைத்து அடித்தார்கள்

உயர் சாதி ஆதரவு நிலை எடுக்காதே, என்று பல அறிவுரைகள்." உங்கள் சாதிக்கும் எங்கள் சாதிக்கும் எதிராக அவர்கள் செய்த செயல்கள் அதிகம்" என்று மீண்டும் மீண்டும் என்னை அறிவுறுத்தும் சில நண்பர்கள். நீங்கள் எந்த உயர்சாதியை சொல்கிராய் என்றால் கூச்சமே இல்லாமல் பிராமணர்கள் என்று பேசுகிறார்கள். சிரிப்பாக வருகிறது.
மனசாட்சியை தட்டி சொல்லுங்கள், பிராமணர்களாக நம்மை கட்டி வைத்து அடித்தான், கொன்றான் ? சாதியின் வலி எனக்கும் தெரியும், அதன் பிடியில் சிக்கி எங்கள் ஒரு தலைமுறையின் தலை எழுத்தே திசை மாறி போய் இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் ஒரு உயிரே போய் இருக்கிறது. தாத்தாவின் காலத்தில் நடைபெற்றது அந்த துயர சம்பவம். அந்த கிராமத்தில் பிராமணர்கள் யாரும் இல்லை. அங்கே இருந்த ஆதிக்க சாதிகளான யாரும் தங்கள் வீட்டில் மனுநீதி புத்தகம் வைத்து கொண்டு அதன் படி சாதி பார்க்க வில்லை. அன்று என் தந்தை நாத்திகர் ஆனார்.
(ஹிந்து மதம் மட்டும் இல்லை என்று சொல்லும் நாத்திகர் அல்ல அவர். எந்த மதத்தையும் மறுத்த நாத்திகர். அவர் பத்தாவது படிக்கும் பள்ளி கூட வயதில் முழு நாத்திகர் ஆனார் என்று உறவுகள் சொல்லி அறிந்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் பொது தேர்வு எழுத முடியாத நிலைமைக்கு என் உடல் நிலை சரி இல்லாத போது தான் , தந்தை இறையிடம் கண்ணிற் பொங்க நின்றதை கண்ணுறேன். மீண்டும் ஆத்திகர் ஆனார். அதற்கு முன் தந்தை இறை முன் நின்றதை நான் பார்த்ததே இல்லை. ஒரு பொழுதும் அவரின் நாத்திக சிந்தனையை என்னிடம் விதைத்து இல்லை, யாரையும் அவரின் கொள்கைக்கு இழுத்ததும் இல்லை. என் அளவில் நான் அறிந்த மிக சிறந்த நாத்திகவாதி)
அன்று அந்த கிராமத்தில் என்ன நடந்து என்பது இன்று வரை எனக்கு சரியாக சொல்ல படவே வில்லை. விவரம் புரியும் விசயத்தில் விசாரித்து அறிந்து கொண்டேன். சாதி வெறுப்பு என்னிடத்தில் வேர் படிந்து விட கூடாது என்பதில் தந்தை கவனமாக இருந்தார். அவர் சொன்ன ஒரே விஷயம், “எல்லா சாதியிலும் நல்லவர்களும் உள்ளனர், கெட்டவர்களும் உள்ளனர், மனிதனின் குணம் அறிந்து பழகு, சாதி பார்த்து பழகாதே”.
கல்லூரி காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் தான் சாதி பற்றி மிக மோசமாக அறிந்து கொண்டேன். கவுண்டர்கள் , தேவர்கள் , நாயக்கர்கள் , பிராமணர்கள் , செட்டியார்கள் , வன்னியர்கள் எல்லாரிடம் கலந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. நல்லவர்கள் பல பேர் இருந்தனர், ஒருத்தரும் சாதி பார்க்க வில்லை. சொந்த மகனை போல் நடத்தினார்கள். ஆனால் சில கசப்பான சம்பங்களும் சில இடத்தில் நடந்தன. முகத்திற்கு நேராக என்ன சாதி (என்ன ஆளுங்க நீங்க என்ற கேள்வி ) கேட்கப்பட்டது , சிறிது நேரத்தில் மிக வெளிப்படையாக வித்தியாசம் காட்டினார்கள். மிகவும் அதிர்ச்சியாக இருந்த விஷயம், பெண்கள் தான், அதுவும் படித்த பெண்கள் தான் அதிக அளவில் சாதி வித்தியாசம் காட்டியவர்கள். இன்னும் கொடுமை மதம் மாறிய ஒரு கிறிஸ்தவர் குடும்பமும் அடக்கம்.
தமிழகத்தில் பல கிராமங்கள் உள்ளன, அங்கே பெரும்பாலும் பிராமணர்கள் இல்லை , பின்பு எப்படி இன்னும் சாதி வேறுபாடு காட்டபடுகிறது என்று யோசியுங்கள். சாதி சலுகை கொடுக்கப்பட்ட பிறகு எத்தனை குடும்பங்கள் மேல் நோக்கி உயர்ந்தன என்பதை பார்த்து இருக்கின்றேன். புகழ்பெற்ற பள்ளியில் படித்த கீழ் சாதி நண்பர் ஒருவர் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிய வில்லை. அவர் தந்தை , தாத்தா எல்லாம் வசதி படைத்தவர்கள். ஆனால் அவர் பிராமணரை பற்றி குறை கூறி கொண்டு இருந்தார். அவர்கள் தான் எல்லா இடத்திலும் முன் நிற்கிறார்கள் என்றார். நீ ஏன் நல்ல மதிப்பெண் எடுக்க முடிய வில்லை என்று முதலில் யோசி. உன் குடும்பம் நல்ல பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டது அல்லவா, உன் தலைமுறையில் இனி நீ சாதி சலுகை பெறாதே, நீ விட்டு கொடுத்தால் உன் சாதியை சேர்ந்த வேறு ஒருவர் பயன் பெறட்டும் என்று சொன்னேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசவதே இல்லை.
பிராமணரை எதிர்க்க சொன்ன அதே பெரியார் தான், தமிழை காட்டுமிராண்டி என்று சொன்னார். எங்கே தமிழை எதிர்த்து பேசுங்களே பார்போம். ஆனால் செய்ய மாட்டார்கள் . பெரியார் ஏன் அப்படி தமிழை சொன்னார் என்று யோசிக்க வேண்டும் என்று கதை சொல்வார்கள். பெரியாரை அதிகம் தூக்கி பிடிப்பது யார் என்று பாருங்கள், கிறிஸ்தவர்களும் , இஸ்லாமியரும், தி.கவினரும் தான்.
பெரியார் சொன்னது எல்லாம் சரி என்று கண்ணை மூடி கொண்டு நம்பும் பக்தி கூட்டத்தை தான் பெரியார் உருவாக்கி விட்டு போய் இருக்கிறார். அப்படி போலி பகுத்தறிவு கூட்டம் எனக்கு தேவை இல்லை. சாதி பற்றி தெளிவு எனக்கு இருக்கிறது. ஆக தயவு கூர்ந்து உங்களது அறிவுரை எனக்கு தேவை இல்லை.

தந்தை என்ற ஜீவனை

அது என்ன அம்மாவை பற்றி புகழ்ந்து பேசும் போது, தந்தையை விட்டு விடுகிறார்கள். இங்கே யாரும் வரம் வாங்கி கொண்டு வந்து பெண்ணாகவோ , ஆணாகவோ பிறப்பது இல்லை. இயற்கையின் இயக்கத்தில் நிகழ்பவை. தாய்க்கு மாற்று கிடையாது , அதே போல தான் தந்தை. தந்தை கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டு , தாயே தெய்வம் என்று பாடி கொண்டு இருக்கிறார்கள், தந்தையை மதிப்பது இல்லை. பொருள் ஈட்டும் போரட்டத்தில் பல தந்தைகள் தன்னை இழந்து இருக்கிறார்கள். சுமை தாங்கியாகவே வாழ்ந்து விட்டு, சுவடே இல்லாமல் மறைந்து போகிறார்கள்.
ஐயோ பிள்ளைகள் பள்ளி கூடம் தொலைவில் இருந்தால் போய் வர களைத்து போவார்கள் என்று எண்ணி, பள்ளி கூடம் அருகில் வீடு பார்த்து , தந்தை தினமும் 50 கிலோ மீட்டர் பயணித்து வேலைக்கு போய் வந்து கொண்டு இருப்பார். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தனது நிகழ் காலத்தை கடந்த காலமாக்கி கொண்டு இருப்பார். தந்தையை மட்டம் தட்டி பேசும் எந்த பிள்ளைகளும் தந்தையின் வருமானத்தில் தான் உல்லாச வாழ்க்கை நடத்துகிறது. பத்து ரூபாய் சம்பாரிக்க தெரியாத பிள்ளைகள் , தந்தையிடம் ஆயிரம் கேள்விகள் கேக்கும். ஒரு வகையில் பிள்ளைகளின் இந்த அலட்சிய போக்கிற்கு தாயும் ஒரு காரணம். பிள்ளைகளை கணவனுக்கு எதிராக தூண்டி விட்டு தன்னை நிலை நிறுத்த முயல்கிறார். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் தாயையும் சேர்ந்து எதிர்க்கிறது. தாய் வேறு வழி இல்லாமல் பிள்ளைகள் பக்கம் முழுதும் விழுந்து விடுகிறார்.புத்தி சொல்லும் தந்தை பிள்ளைகளுக்கு தொந்தரவராக தெரிகிறார். பல குடும்பத்தில் இது தான் நிலை.
தாயின் தடையற்ற அன்பானது தந்தையின் தியாகத்தினாலும் உழைப்பினாலும் தான் பிள்ளைகளுக்கு முழுதாக கிடைக்கிறது. தந்தையை தள்ளி வைத்து தாயை கொண்டாடி மகிழ்வது தவறு. இறையும் பெற்றவர்களும் வேறானவர்கள் அல்ல. இறையிடம் பேதம் பார்த்தல் சரியா?

மிமிஸ் போடும் படித்த முட்டாள்களே , அதற்கு லைக் போடும் மூடர்களே

ஒரு பெண்ணின் உருவ அமைப்பை வைத்து கிண்டல் பண்ணி மிமிஸ் போடும் படித்த முட்டாள்களே , அதற்கு லைக் போடும் மூடர்களே , உங்கள் உருவத்தை முதலில் கண்ணாடியில் பாருங்கள் , உங்கள் குடும்பத்திலும் பெண்கள் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை போன்ற தறுதலைகளை பெற்ற உங்கள் தாயும் ஒரு பெண் என்பது உங்களுக்கு உறைக்க வில்லையா ?

எனது முக நூல் நண்பர்கள் கவனத்திற்கு

எனது முக நூல் நண்பர்கள் கவனத்திற்கு , இந்த முக நூல் ஒரு இஸ்லாமிய குழு, ஆனால் வேறு பெயரில் இயங்கி கொண்டு இருக்கிறது.அவர்கள் பதிவை எனது நண்பர்கள் சில பேர் மீள் பதிவு செய்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் பதிவை கவனித்து பாருங்கள், மருந்துக்கும் கூட இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி கண்டனம் செய்து எந்த பதிவும் இல்லை. பெரும்பாலும் பதிவுகள் பிஜேபி, RSS, பிராமணர் பற்றி தான் எழுதி கொண்டு உள்ளார்கள். சரி அவர்கள் உரிமை என்று எடுத்து கொண்டாலும் , இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஹைதராபாத் வெடிகுண்டு குற்றவாளிகள் பற்றி பதிவு வர இல்லை. சிரியாவிற்காக பிராத்தனை செய்கிறார்கள். நல்லது செய்யட்டும், நம் பிராத்தனையும் உண்டு.
ஆனால் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் கொல்லப்படும் முஸ்லிம்கள் பற்றி பிராத்தனை செய்ய தோன்ற வில்லை, ஆப்கானிஸ்தான் பற்றி பதிவு இல்லை ஆனால் இஸ்ரேலை பற்றி பதிவு வருகிறது, சிரியாவை பற்றி வருகிறது . ஆனால் பாகிஸ்தானை கண்டித்து பதிவு வர வில்லை, இரண்டு இடத்திலும் இறப்பவர்கள் முஸ்லிம்கள். தாலிபனும், பாகிஸ்தானும் , ஐ.ஐ.ஸ் ம் இந்தியாவை எதிரி என்று வெளிப்படையாக அறிவித்தவர்கள் , இந்தியாவின் அழிவை விரும்புவர்கள். அவர்களை எதிர்த்து எழுத ஏன் தயக்கம். யோசியுங்கள்
இந்தியாவில் பல நாச வேலைகளை செய்யும் தீவிரவாத குழுக்களை பற்றி எச்சரிக்கை செய்தி வந்தால் , அதை கறுப்ப பண விவகாரத்துடன் கோர்த்து தீவிரவாத குழுக்களுக்கு வக்காலத்து வாங்குகிறது. ஆகா இது ஏதோ மோடியையும் , ஹிந்துக்களையும் எதிர்க்கும் மத குழு அல்ல. இது இந்திய தேசத்தின் அழிவை விரும்பும் முக குழு. மோடி எதிர்ப்பு என்பது வேறு, இந்திய தேசத்தை எதிர்ப்பது என்பது வேறு. இஸ்லாமிய பெயரில் இயங்கினால் , எங்கே ஹிந்துகளை ஏமாற்ற முடியாது என்பதால் , வேறு பெயரில் இயங்கிறது. அதாவது நம் கையை வைத்து நம்மை குத்த செய்தல். என் நண்பர்கள் ஏமாற வேண்டாம், உங்கள் நண்பர்களையும் விழிப்புடன் இருக்க சொல்லுங்கள்

Like
Comment

ஒரு முட்டாள் நூறு முட்டாள்களை உருவாக்குகின்றான்



ஒரு முட்டாள் நூறு முட்டாள்களை உருவாக்குகின்றான் என்பதற்கு இவர்கள் மிக சிறந்த உதாரணம் Special Correspondent FB Wing. தொடர்ந்து மோடியை பற்றி பொய் தகவல்களை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். மோடியின் கூட்டத்திற்கு மோடியின் கறுப்பு பண விவகாரத்தால் கூட்டம் வர வில்லையாம் , அதனால் அவர் கோபித்து கொண்டு கீழே இறங்கி சென்று விட்டாராம். பஞ்சாபில் நடந்த கூட்டத்தின் கடைசி முப்பது வினாடி வீடியோ லிங்கை மட்டும் பதிவு ஏற்றி , இவர்கள் கதை விட்டு உள்ளார்கள். முழு வீடியோ இங்கே உள்ளது https://www.youtube.com/watch?v=pZHpRqK42lI&feature=youtu.be. நீங்களே பார்த்து ஏது உண்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உலகத்தின் மிக மோசமான செயல் , தன்னை நம்புவர்களை ஏமாற்றுவது. மக்கள் பிஜேபி எம்பியை அடித்து விட்டார்கள் என்று வேறு கதை பரப்ப , கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை அப்படியே எல்லா மீடியா நண்பர்களுக்கும் tag செய்து , பின்பு அது பொய் என்று தெரிந்த பிறகு, மூக்குடைப்பு அடைந்தார்கள் இந்த Special Correspondent FB Wing. நம்பியவர்கள்.
நாளை உண்மையிலே இவர்கள் ஒரு உண்மை சம்பவத்தை பதிவு செய்தால் யாராவது நம்புவார்களா என்ற அடிப்படை யோசனை கூட இல்லாமல் இவர்கள் உள்ளார்கள் என்பதை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது
பல மோடி எதிர்ப்பு குழுக்கள்(மத குழுக்கள் கூட) பிரச்சனையின் அடிப்படையில் மாற்று கருத்தை முன் வைத்து மோடியை சாடுகிறார்கள். மாற்று கருத்தை மறுக்க தேவை இல்லை. அதில் உள்ள தென்படும் அறிவுரையை ஏற்பதே சரியான செயல்.
ஆனால் இந்த குழு பொய்யை மட்டுமே பேசி கொண்டு உள்ளது .
போன பதிவின் போது நண்பர் ஒருவர் சொன்னார் , விட்டு விடுங்கள் . “சில சமயம் முட்டாள்கள் முட்டாள்களை தான் நம்புவார்கள்” என்றார். அவர் சொன்னது உண்மை என்பதை , இவர்களை தொடர்ந்து யார் ஆதரிக்கார்கள் என்பதை பார்த்தால் புரியும்.

Image may contain: one or more people and text

சென்னை மிச்சம் இருக்குமா என்று தெரியவில்லை.

இன்று சேலத்தில் இருந்து சென்னை வரும் வழியில் செங்கல்பட்டு அருகே இந்த காட்சியை பார்த்தேன் சுமார் 5 மணி அளவில். ஏதோ சிறிய ஏரி வழிந்து ஓடுகிறது என்றார்கள். எந்த ஏரி என்று தெரிய வில்லை. ஆனால் அபாயகரமான அளவுக்கு வீடுகளை சூழ வில்லை. செங்கல் பட்டில் இருந்து சென்னை வரை வர்தா புயலின் மிச்சம் பார்த்தேன். கிட்டத்தட்ட சூறையாடி இருக்கிறது. புறநகர் சென்னையா இது என்றளவிற்கு ஒரு சந்தேகம் எழுந்தது.
ஆனால் காவல்துறை துரிதமாக செயல்பட்டு மரங்களை அகற்றி இருக்கிறது . சென்னைக்கு உள்ளே நுழையும் போது , ஒரு லாரி பாலத்தின் மீது கிடந்தது.
ஆறடி ஆழத்தில் வேர் ஊன்றி நின்ற மரத்தை வேரோடு வெளியே இழுத்து பத்தடி தள்ளி போட்டு இருக்கிறது. அதை மடித்து இரண்டாக வீசி இருக்கிறது. மனிதன் எல்லாம் அதற்கு எம்மாத்திரம் . ஊதி போய் விடும்.
காவல்துறை நண்பர் ஒருவர் சொன்னார். மரத்தால் மனிதன் தப்பித்தான். காற்றின் வேகத்தை மட்டுபடுத்தி இருக்கின்றன. கோர்வையாக நின்ற மரங்கள் , கேடயமாக இருந்து உள்ளன. இருக்கலாம்.
இயற்கை ஒவ்வார் முறையும் எதையாவது அனுப்பி பாடம் சொல்கிறது. இந்த முறை வர்தாவை அனுப்பி வகுப்பு எடுத்து இருக்கிறது.
இயற்கை பஞ்ச பூதத்தை அனுப்பி இங்கே யார் வாத்தியார் என்று சொல்லி போய் இருக்கிறது
இரண்டு பூதம் வந்து போயிற்று. முதலில் நீரால் நொறுக்கி தள்ளியது , அடுத்து காற்றால் கலைத்து போட்டது.
இன்னும் மூன்று பூதங்கள் மிஞ்சி இருக்கின்றன. அதை எதிர் கொள்ள சென்னை மிச்சம் இருக்குமா என்று தெரியவில்லை.
-0:40
Click for more
426 Views

Tamilisai Soundararajan அவர்களுக்கு இருக்கும் தைரியத்தில் பாதியாவது அவரின் உருவத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு இருக்கிறதா

 
Tamilisai Soundararajan அவர்களுக்கு இருக்கும் தைரியத்தில் பாதியாவது அவரின் உருவத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு இருக்கிறதா. துணிச்சலாக பேசும் பெண்களை எதிர் கொள்ள திரணி அற்றவர்கள் தான் இத்தகைய செயலில் ஈடுபடுவது. பிஜேபி தலைவர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலை வெறி தாக்குதல் நடை பெற்றுக் கொண்டு இருந்த நேரத்தில் இவர் அதன் தலைவரானார். சிறிதும் அஞ்சாமல் அவர்களை கடுமையாக எதிர்த்தார். தோல்வியோ வெற்றியோ பிஜேபி யை களத்தில் வைத்து கொண்டு உள்ளார். இஸ்லாமிய என்று எழுதினாலே பின்னங்கால் பிடரி பட்டு பயந்து ஓடும் பேடிகள் இவர் தலைமுடி பற்றி எழுதி கொண்டு உள்ளார்கள். முதலில் உங்கள் வீட்டு பெண்கள் முகமும் தலை முடியும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள் மூடர்களே. அவர் பேசும் தமிழ் அழகு எத்தனை பேருக்கு வரும். காலம் காலமாக பெண்களை மட்டும் தட்டி , சித்தாந்த ரீதியாக பெண்ணை வெல்ல முடியாத கோழைகளின் பிதற்றல் தான் இந்த பதிவு. சீவ வேண்டியது உங்கள் மழுங்கி போன மூளையை

பேடிகள். யாராவது கவனித்திற்களா?

பேடிகள். யாராவது கவனித்திற்களா. ஜெயாவை பற்றி குறிப்பிடும் போது, மறுக்காமல் அவரின் சாதி பற்றி தூற்றப்படும். பிராமிணியம், பார்ப்பினியம் என்று பழிக்கப்படும். செய்தவர்கள் திராவிட கழகமும், மாற்று மத கூட்டமும்.
இன்று கதை வேறு. இன்றைய முதல் அமைச்சர் சாதி பற்றி இன்று பேச முடியுமா . முதுகெலும்பை முறித்து போட்டு விடுவார்கள். சசிகலாவை சாடி வரும் பதிவுகளில் சாதி காண வில்லை. ஜெயாவிற்கு சாதி பார்த்த கூட்டம் ,ஏன் இன்று சசிகலாவிற்கும், பன்னிர் செல்வத்திற்கும் சாதி பார்க்க வில்லை. தேவர் என்பது ஆண்ட சாதி.
சாதி பாருங்கள் என்று சொல்ல வருவது என் நோக்கமல்ல. யாரையும் சாதி பார்த்து சலவை செய்ய கூடாது என்பதே என் எண்ணம். ஜெயாவை பற்றி விமர்சித்த போது , அவரை மட்டும் விமர்சித்து இருக்க வேண்டும் , ஆனால் அனாவசியமாக அவரின் சாதியையும் சேர்த்தே விமர்சித்தார்கள். அது சந்தேகம் இல்லாமல் அந்த சமூகத்திற்கும், அதன் மக்களுக்கும் நடந்த அநீதி.
அதிகாரத்தில் இருந்த பிராமிண மக்களுக்கு சாதி சட்டை போட்டு விட்டு , சாடிய சூரபுலிகள் , இன்று மற்றவர்களுக்கு சாதி சட்டையை போடுவதை நிறுத்தி விட்டது. ஏன் எனில் இன்றைய அதிகார சாட்டை அவர்கள் முதுகு சட்டையை உரித்து விடும்.

நெருங்கிய என்ற வார்த்தையை நெறித்து போட்டு விட வேண்டும் போல

உதவிகள் எப்போதும் செய்து கொண்டே இருக்க வேண்டும் , மறுக்க மட்டும் கூடாது . நூறு முறை உதவிகள் செய்து இருப்போம் , நினைவில் இருக்காது , ஒரு முறை முடியாது என்று சொல்லி விட்டால் போதும் , அந்த நிமிடத்தில் இருந்து நீங்கள் அவருக்கு வேண்டாதவர் ஆகி விடுவீர்கள். பல முறை உதவி செய்தாலும், ஒரு முறை கூட நன்றி வாயில் இருந்து வராது. நன்றி சொல்வார்கள் என்று எதிர்பார்த்து உதவி செய்வதில்லை.
ஆனால் பல முறை உதவி செய்தவர் , இந்த முறை மறுக்க காரணம் என்ன என்று பல பேர் யோசிக்காமல், “கேட்டேன் முடியாது” என்று சொல்லி விட்டார் என்று மற்றவரிடம் சொல்லி கொண்டு உள்ளார்கள். நெருங்கிய உறவுகள் என்றாலும் , கல்லூரி, பள்ளி நண்பர்கள் என்றாலும், அலுவலக உறவுகள் என்றாலும் எல்லா இடத்திலும் இதே கதை தான்.
நெருங்கிய என்ற வார்த்தையை நெறித்து போட்டு விட வேண்டும் போல.

சோ மறைந்தார்

சோ மறைந்தார்
என் தந்தை ஒரு தீவிரமான துக்ளக் வாசகர்
அம்மாவின் அரசியல் ஆலோசகர் என்று அறியப்பட்டவர். அரசியல் விமர்சகர் .அதையும் தாண்டி நல்ல உள்ளம் படைத்தவர். சினிமா இல்லாமல் ஒரு இதழை நடத்த முடியும் என்ற எடுத்து காட்டிற்கு துக்ளக் வார இதழ். திமுகவிற்கும், அதிமுகவிற்கும் எதிராக பேனாவை பிடித்தவர்.
கலைஞரின் கைது போது , எல்லா பத்திரிக்கையும் கைதை கண்டித்தன. இவர் மட்டும் தான் துணிச்சலாக ,”கைது சரி, செய்த முறை தவறு” என்று எழுதினார். ஜெயாவை எதிர்த்த போது, ஜெயாவல் கடுமையாக சாடப்பட்டார். பின்பு சோவை புரிந்து கொண்டு அவரின் கருத்துகளை ஜெயா ஏற்றார்
விடுதலை புலிகளையும் , தீவிரவாதிகளையும் கடுமையாக எதிர்த்தவர். சில கருத்துகளில் அவருடன் உடன்பட முடிய வில்லை என்னால்.
என் நினைவு சரியாக இருந்தால் இவர் தான் மோடி பிரதமராக வேண்டும் என்று முதன் முதலில் கூறினார். குஜராத்தின் வளர்ச்சி பற்றி தன் இதழில் கட்டுரைகள் வரைந்து ,மோடியை வெளிச்சம் போட்டு காட்டினார். இவர் பிராமிணர் , பிராமணரை தான் ஆதரிப்பார் என்ற கருத்தை பொய்யாக்கி , மோடி பின் நின்றார்.
எங்கே பிராமணன் என்ற கட்டுரை இன்றளவும் எனக்கு பிடித்தமான ஒன்று.
எனக்கு பிராமிணர்கள் மேல் மரியாதை ஏற்பட இவரும் ஒரு காரணம்
பன்முக தன்மை கொண்ட நபரில் இவரும் ஒருவர் . இவர் பேனா தொடாத தேசிய தலைவர்களே இல்லை.
இந்திய தேசத்திற்கு எது உகந்ததோ அதுவே இவருக்கும் உகந்தது.
அரசியல் பற்றிய இவரின் விமர்சனங்கள் மக்களின் விமோசனத்திற்கு தான் வழி வகுத்தது
ஒரு துக்ளக் தர்பார் துயரில் முடிந்தது, கலைந்து போனது !!
Like
Comment

போய் வாருங்கள் தாயே. ஜெயலலிதா

போய் வாருங்கள் தாயே.
இது அதிர்ச்சியை தவிர வில்லை ஒரு ஆற்றாமையை தருகிறது. உள்ளே ஒரே சங்கடமாக இருக்கிறது எல்லார் மனதிலும். வீடு திரும்ப இருந்த நேரத்தில் விதி வழி மறித்து பறித்து கொண்டது. ஊருக்கு பகுத்தறிவு உபதேசம் பண்ணி விட்டு, வீட்டில் பஞ்சாங்கம் வைத்து பிராத்தனை செய்து கொண்டு இருந்த ஆண் அரசியல் தலைவர்கள் மத்தியில், ஒளிவுமறைவு இன்றி தன் ஆன்மிக நம்பிக்கையை அறிவித்த ஆண்மை மிக்க ஒரே பெண் முதல் அமைச்சர்
ஆணாதிக்கம் ஊடுருவி போன சமூகத்தில் , ஒரு பெண்மணியாக இவர் அரசாண்ட விதம் வியப்பின் உச்சம். மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் , இவர் காட்டிய மன உறுதி வேறு எந்த மங்கைக்கும் இனி வருமா என்பது கேள்விகுறி தான்.
இவரின் சில செயல்பாடுகள் ஐயம் இன்றி விமர்சினத்திற்கு உள்ளானவை தான். ஆனால் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகளில் , இவரின் உறுமல்கள், உச்ச நீதிமன்றத்தில் உரிமையை பெற்று தந்தது. ராஜ தந்திரி என்றழைக்கப்பட்ட கருணாநிதியும் கூட பல குள்ள நரிகளை தன்னுடன் சேர்த்த பின்னரே, யுத்தத்திற்கு போனார், ஆனாலும் பெரும்பாலும் ஜெயம் ஜெயாவிற்கு தான்
அம்மா என்று இவரை தொண்டர்கள் அழைப்பதற்கு அம்மா உணவகம் ஒரு மிக சிறந்த உதாரணம். தனித்து நின்று களம் கண்டு ஜெயாவை வீழ்த்த எந்த திராவிட கட்சிக்கும் இங்கே தைரியம் இருந்தது இல்லை. எதிர்ப்பவர் எவரையும் எதிர்த்தவர். காலனும் அதற்கு விதி விலக்கல்ல. இவரை முறித்து போட முடிய வில்லை அவனால், அதனால் இரண்டு மாதமாக அரித்து அரித்து அவரை அழைத்து கொண்டான்.
இத்தனை வயதில் இத்தனை மருத்துவ போராட்டமா , போதும் அம்மணி என்று இறைவனே இந்த இரும்பு பெண்மணியை இழுத்து கொண்டது போலும்.
மண்ணுலகம் உங்கள் முன் மண்டி இட்டு விட்டது. உங்களுக்காக விண்ணுலகம் மிச்சம் இருக்கிறது தாயே. ஆக இந்த வேதனைகள் போதும், செய்த சாதனைகள் போதும்.
சென்று வாருங்கள் தாயே.
Like
Comment

சாமனிய வியாபாரிகள் விற்கும் விலையை பாருங்கள்.

நவம்பர் 8 ம் தேதியில் இருந்து, ஐயோ பாவம் சிறு குறு சாமானிய வியாபாரிகள் என்று கதறியவர்களே, அந்த சாமனிய வியாபாரிகள் விற்கும் விலையை பாருங்கள். 
Due to speculative news spreading on CM Jayalalithaa health, most of the vendors in and suburban of the City selling eatables, milk and water for hyped price.
TAMIL.ONEINDIA.COM

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...