இன்று சேலத்தில் இருந்து சென்னை வரும் வழியில் செங்கல்பட்டு அருகே இந்த காட்சியை பார்த்தேன் சுமார் 5 மணி அளவில். ஏதோ சிறிய ஏரி வழிந்து ஓடுகிறது என்றார்கள். எந்த ஏரி என்று தெரிய வில்லை. ஆனால் அபாயகரமான அளவுக்கு வீடுகளை சூழ வில்லை. செங்கல் பட்டில் இருந்து சென்னை வரை வர்தா புயலின் மிச்சம் பார்த்தேன். கிட்டத்தட்ட சூறையாடி இருக்கிறது. புறநகர் சென்னையா இது என்றளவிற்கு ஒரு சந்தேகம் எழுந்தது.
ஆனால் காவல்துறை துரிதமாக செயல்பட்டு மரங்களை அகற்றி இருக்கிறது . சென்னைக்கு உள்ளே நுழையும் போது , ஒரு லாரி பாலத்தின் மீது கிடந்தது.
ஆறடி ஆழத்தில் வேர் ஊன்றி நின்ற மரத்தை வேரோடு வெளியே இழுத்து பத்தடி தள்ளி போட்டு இருக்கிறது. அதை மடித்து இரண்டாக வீசி இருக்கிறது. மனிதன் எல்லாம் அதற்கு எம்மாத்திரம் . ஊதி போய் விடும்.
காவல்துறை நண்பர் ஒருவர் சொன்னார். மரத்தால் மனிதன் தப்பித்தான். காற்றின் வேகத்தை மட்டுபடுத்தி இருக்கின்றன. கோர்வையாக நின்ற மரங்கள் , கேடயமாக இருந்து உள்ளன. இருக்கலாம்.
இயற்கை ஒவ்வார் முறையும் எதையாவது அனுப்பி பாடம் சொல்கிறது. இந்த முறை வர்தாவை அனுப்பி வகுப்பு எடுத்து இருக்கிறது.
இயற்கை பஞ்ச பூதத்தை அனுப்பி இங்கே யார் வாத்தியார் என்று சொல்லி போய் இருக்கிறது
இரண்டு பூதம் வந்து போயிற்று. முதலில் நீரால் நொறுக்கி தள்ளியது , அடுத்து காற்றால் கலைத்து போட்டது.
இன்னும் மூன்று பூதங்கள் மிஞ்சி இருக்கின்றன. அதை எதிர் கொள்ள சென்னை மிச்சம் இருக்குமா என்று தெரியவில்லை.

-0:40
Click for more
No comments:
Post a Comment