ஒரு முட்டாள் நூறு முட்டாள்களை உருவாக்குகின்றான் என்பதற்கு இவர்கள் மிக சிறந்த உதாரணம் Special Correspondent FB Wing. தொடர்ந்து மோடியை பற்றி பொய் தகவல்களை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். மோடியின் கூட்டத்திற்கு மோடியின் கறுப்பு பண விவகாரத்தால் கூட்டம் வர வில்லையாம் , அதனால் அவர் கோபித்து கொண்டு கீழே இறங்கி சென்று விட்டாராம். பஞ்சாபில் நடந்த கூட்டத்தின் கடைசி முப்பது வினாடி வீடியோ லிங்கை மட்டும் பதிவு ஏற்றி , இவர்கள் கதை விட்டு உள்ளார்கள். முழு வீடியோ இங்கே உள்ளது https://www.youtube.com/watch?v=pZHpRqK42lI&feature=youtu.be. நீங்களே பார்த்து ஏது உண்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உலகத்தின் மிக மோசமான செயல் , தன்னை நம்புவர்களை ஏமாற்றுவது. மக்கள் பிஜேபி எம்பியை அடித்து விட்டார்கள் என்று வேறு கதை பரப்ப , கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை அப்படியே எல்லா மீடியா நண்பர்களுக்கும் tag செய்து , பின்பு அது பொய் என்று தெரிந்த பிறகு, மூக்குடைப்பு அடைந்தார்கள் இந்த Special Correspondent FB Wing. நம்பியவர்கள்.
நாளை உண்மையிலே இவர்கள் ஒரு உண்மை சம்பவத்தை பதிவு செய்தால் யாராவது நம்புவார்களா என்ற அடிப்படை யோசனை கூட இல்லாமல் இவர்கள் உள்ளார்கள் என்பதை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது
பல மோடி எதிர்ப்பு குழுக்கள்(மத குழுக்கள் கூட) பிரச்சனையின் அடிப்படையில் மாற்று கருத்தை முன் வைத்து மோடியை சாடுகிறார்கள். மாற்று கருத்தை மறுக்க தேவை இல்லை. அதில் உள்ள தென்படும் அறிவுரையை ஏற்பதே சரியான செயல்.
ஆனால் இந்த குழு பொய்யை மட்டுமே பேசி கொண்டு உள்ளது .
போன பதிவின் போது நண்பர் ஒருவர் சொன்னார் , விட்டு விடுங்கள் . “சில சமயம் முட்டாள்கள் முட்டாள்களை தான் நம்புவார்கள்” என்றார். அவர் சொன்னது உண்மை என்பதை , இவர்களை தொடர்ந்து யார் ஆதரிக்கார்கள் என்பதை பார்த்தால் புரியும்.

No comments:
Post a Comment