பன்னீர், சசிகலாவிற்கு எதிராக உண்மையை பேசி விட்டார். அடுத்தது என்ன? பன்னீர் மக்கள் செல்வாக்கு பெற்று இருக்கிறார். எந்த மக்கள் ?
அந்த மக்கள் அதிமுக வை விரும்பும் உண்மையான மக்கள். திமுக கூட்டம் , அதிமுக வின் வீழ்ச்சியை தான் விரும்புவர். எல்லா தனி தமிழ் நாட்டு பிரிவினை குழுவும், திராவிட பகுத்தறிவு குழுவும், சிறுபான்மையினரின் பெரும்பான்மை மக்களும், திமுக வருவதை தான் விரும்பும். அதிமுக வின் குழப்பத்தை அவர்கள் ரசிப்பார்கள்.
சசிகலா உள்ளே போனாலும், அதிமுக எம் எல் க்கள், இன்னோருவரை தேர்ந்தெடுத்து ஆட்சியை தொடர்வார்கள். அடுத்த நான்கு வருடம் தங்களுக்கு அதிகாரம் செலுத்தும் வாய்ப்பை வீண் செய்ய மாட்டார்கள்.
பன்னீர் செல்வம் பின் நிறைய எம் ஏல்க்கள் உடனடியாக வந்தால் தான் பன்னீர் பிரகாசிக்க முடியும் இப்போது உள்ள நிலைமையில் . மக்கள் ஆதரவு அவருக்கு உள்ளது. ஆனால் உடனடி தேர்தல் வந்தால், அவர் நிற்க வைக்கும் நபர்களுக்கு ஜெயிக்கும் வல்லமை இருக்க வேண்டும். அவர் மட்டும் தான் ஜெயிப்பார். ஜெயாவாலும் , கருணாநிதியாலுமே 234 தொகுதிகளை வெல்ல முடிய வில்லை.
தனி கட்சி தொடங்கவும், நடத்தவும் நிதி தேவை. நான்கு வருடங்கள் இதே மக்கள் ஆதரவை அவர் எடுத்து செல்ல சென்று தேர்தலை சந்திக்க வேண்டும். தனியாக நின்றால் அவருக்கு முன் சாத்தியமற்ற சாத்திய கூறுகளே சவாலாக நிற்கிறது.
பிஜேபி என்ன செய்யும் என்று சொல்ல முடிய வில்லை. முடிந்த வரை சசிகலா முதல்வராவதை கவர்னர் மூலம் அது தாமதித்து ஒரு வகையில் தமிழர்களின் முதல் அமைச்சர் நாற்காலியின் கௌரவத்தை காப்பாற்றி வருகிறது. ஆனால் எவ்வளவு நாள் செய்யும் என்று சொல்ல முடியாது, அரசியல் சட்டம் அனுமதிக்கும் வரையில் தான் அது இதை செய்யும்.
சசிகலாவை மிரட்டும் என்று சொல்ல முடிய வில்லை. மாநிலங்களவையில் எம்பிக்கள் அதரவு அவர்களுக்கு தேவை. வருமான வரி துறை வைத்து அதிமுக எம் ஏல்க்களை மிரட்டி பன்னீர் பக்கம் கொண்டு போகும் என்று என்னால் கருத வில்லை. மோடி அதை செய்யும் ஆள் இல்லை. அதுவும் இல்லாமல், தமிழக மக்களை நம்பி பிஜேபி எந்த செயலிலும் இறங்காது. இறங்கவும் கூடாது. நம் மக்கள் கூசாமல் பிஜேபிக்கு எதிராக திரும்பி விடுவார்கள். அது மட்டும் அல்ல பிஜேபியும் எதிர்கால நோக்கில் அதிமுக தேய்வதை தான் விரும்பும். தற்போது தார்மீக ஆதரவை அது பன்னீர்ருக்கு அளித்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசும், மக்களும் பக்க பலமாக உள்ளனர் இப்போது.
பன்னீரை பிஜேபி கண்டிப்பாக பாதுகாக்கும் ஏன் என்றால் சசி குழுவை பற்றிய பல உண்மைகள் தெரிந்தவர் அவர். ஆனால் அரசியல் ரீதியான பாதுகாப்பு அவருக்கு எப்படி தொடர்ந்து கிடைக்கும் என்பதை பொறுத்து தான் அவரின் அரசியல் வாழ்வு இருக்கிறது.
அதிமுகவிற்கு நல்ல பண்புள்ள தலைவர் கிடைத்து உள்ளார். ஆனால் மக்களுக்கு நல்ல தலைவர் கிடைத்து விட்டார் என்று சொல்ல முடிய வில்லை. அவரை பற்றிய அரசியல் நாம் இன்னுமும் முழுதாக அறிய வில்லை.
அறியபடாத அந்த அரசியல் புத்தகத்திற்கு கடைசி அத்தியாயம் இருந்தாக எந்த காலத்திலும் ஆதாரமும் இல்லை