Saturday, February 18, 2017

போராட்டத்தை முடிக்க கூடாது என்பதற்காக பொய்யான செய்திகளை பரப்பி

போராட்டத்தை முடிக்க கூடாது என்பதற்காக பொய்யான செய்திகளை பரப்பி ,பிரிவினை கருத்தை ஆதரித்து என்று சமூக வலைத்தளதில் எழுதி கலவரத்திற்கு தூபம் போட்டதில் பல வெளிநாட்டு இந்தியர்களுக்கும் பங்கு உண்டே, அவர்களை என்ன செய்ய போவீர்கள் என்று சில நாட்களுக்கு முன் ஒரு காவல் துறை அன்பரிடம் கேட்டேன். அப்படிப்பட்ட நபர்களின் facebook, twister பதிவுகளை எடுத்து அந்த நபர்களது என்பதை உறுதி செய்த பின்பு , அந்த நபர்கள் வாழும் நாடுகளுளின் , குடி உரிமை அதிகாரிகளுக்கு, இந்த பதிவுகள் ஈமெயில் அனுப்பட்டு, அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இது இப்போது இல்லை, சமூக வலைத்தளம் பயன்பாடு வந்ததில் இருந்தே நடைமுறையில் உள்ளது . வெளி நாட்டில் இருந்து கொண்டு ஐ.ஸ்.ஐ.ஸ் க்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு திரட்டிய நபர்கள் இப்படி தான் கைது செய்யப்பட்டனர். இனிமேல் சமூக வலைத்தளம் அதிகமாக கண்காணிக்க படும் வாய்ப்புக்கள் அதிகமாகலாம் என்றார்.

அரசாங்கம் செய்ய வேண்டியது என்று இல்லை, நீங்களே அந்த அந்த நாடுகளின் குடியுரிமை இணையதளத்தில் சென்று ஈமெயில் கண்டறிந்து , உங்கள் கவனத்திற்கு வரும் நபர்களை பற்றி தகவல் அனுப்பலாம் என்றார். நாம எங்கே அனுப்பறது , நாம தான் அந்த மாதிரி நபர்கள் எல்லாரையும் unfriend செய்து விட்டோமே.அது இல்லாமா எது போலி , எது உண்மையான ID என்று எப்படி நமக்கு தெரியும்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...