Saturday, February 18, 2017

ஈசன் என் தந்தையானான், அவன் சரி பாதி என் தாயானாள்.

தந்தி டீவி க்கு நன்றி, சமயப்புரம் மாரியம்மன் கும்பாபிஷேகம் நேரடியான ஒளிபரப்பு பார்க்க நேர்ந்தது இன்று காலையில். சிறு வயதில இருந்து அடிக்கடி தாயாரால் அழைத்து செல்லப்பட்ட கோவிலில் இதுவும் ஒன்று . மிரண்டு மருண்டு மாரியம்மன் முன் நின்று வேகமாக வெளியேறி போனதுதான் அடிக்கடி நிகழ்ந்தது. ஏன் என்றால் தவறுகள் செய்தால் கடுமையாக இந்த அம்மன் தண்டிக்கும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அம்மனும் அசரடிக்கும் அளவிற்கு அச்சத்தை தந்ததது.நாம் செய்வது தவறா அல்லது தப்பா என்று தடுமாறி கொண்டு இருந்த பள்ளி பருவம் அது. மெல்ல இந்த கோவில் போவது நின்றது.
ஈசன் மீது ஈர்ப்பு அதிகமாகி, மனம் ஒரு நேர் சிந்தனையில் வந்து நின்ற போது, இந்த கோவில் போனேன் 2009ம் ஆண்டு. இந்த முறை பயம் இல்லை, பதட்டம் இல்லை. மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று பார்க்க பார்க்க பரவசம் தான் வந்தது. செய்தது தவறு என்றால் தயங்காமல் தாயே என்னை தண்டித்து விடு என்று வேண்டும் அளவிற்கு தைரியம் வந்தது. அசரடித்த அன்னை , உள்ளே அதிர வைத்தாள், அழ வைத்தாள். இன்று வரை ,எங்கே மாரியம்மன் பாடல் கேட்டாலும் சட்டென்று சிந்தனை சமுயபுரத்தாளிடம் சரண் அடைந்து விடுகிறது.
ஈசன் என் தந்தையானான், அவன் சரி பாதி என் தாயானாள்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...