#யார்டா இங்கே வீர தமிழன், வீர தமிழச்சி#
ராத்திரி ரெண்டு மணிக்கும் வரை கண் முழிச்சி நாட்டு மாடுகளை கடத்தி போற வண்டிய தடுத்து , சண்டை போட்டு, கடத்திட்டு போறாவனுக்கு ஆதரவாக இருக்க போலீஸ் கிட்ட அடி வாங்கி , வாதம் பண்ணி, மாட்டை மீட்டு, கோசலைக்கு மாட்ட அனுப்ப, வண்டி பிடிக்க பணம் இல்லாமல், எல்லார் கிட்டயும் உதவி கேட்டு , பணம் வாங்கி வண்டிய பிடிச்சி மாட்ட கோசலக்கு அனுப்பி விட்டு, அதுக்கப்பறம் வீட்டுக்கு போய் தொழில் பார்த்து , மீண்டும் மாடு மீட்க வெறும் ரெண்டு பேரா போறான் பாரு அவன் வீர தமிழன், அப்படி போற புருசன் உயிரோடு திரும்புவானா என்று கூட தெரியாமல் அவனை தடுக்கமா மனைவி என்ற பெயரில் ஒரு மஹாராசி இருப்பா பாரு, அவ வீர தமிழச்சி.
இவர்கள் எப்போதும் இந்த தமிழ் சமுதாயத்தில் சத்தம் இல்லாமல் இயங்கி கொண்டு தான் உள்ளனர் தங்கள் வலிகளை தாங்கி கொண்டு.
இன்று கூட்டம் கூடியதால் குரல் கொடுக்கும் ஆண்களும் பெண்களும் அல்ல. ஜல்லிகட்டு வெற்றியுடன் இந்த கூட்டம் கலையும்.
ஆனால் அவர்கள் நமக்கு முன்னாலும் களத்தில் இருந்தனர். பின்னாலும் இருப்பார்கள்.
No comments:
Post a Comment