Saturday, February 18, 2017

“தமிழர்கள் மதம் அற்றவர்கள்” என்ற வார்த்தையை தேடி பயணித்த போது. எனக்கு கிடைத்த தகவல்கள்......

“தமிழர்கள் மதம் அற்றவர்கள்” என்ற வார்த்தையை தேடி பயணித்த போது. எனக்கு கிடைத்த தகவல்கள்......
கி-மு. 10500 முதல் சங்கம் தொடங்கியது. ஆனால் இந்த திராவிட , அந்நிய மத மாற்றிகள் , நாத்திகர்கள் நம்ப மாட்டார்கள். இவர்கள் புத்த மதத்தில் இருந்து தான் எல்லாவற்றையும் நம்புவார்கள். ஏன் என்றால் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார். புத்த மதம் வைத்து பார்ப்போம்.
புத்த மதம் எப்போது தோன்றியது கிமு 563. நந்தர்களை அழித்து தான் மௌரிய வம்சம் தோன்றியது என்பது சரித்தரம். சரித்தரம் படி மௌரிய வம்சத்தின் அசோகர் ஆட்சி புரிந்த தருணம் கி.மு 273 . இவர் காலத்தில் தான் இலங்கையில் புத்த மதம் பரவியது . இவர் அனுப்பிய தூதவன் இலங்கையை அடையும் போது குவேனி என்ற தமிழ் அரசி ஆட்சியில் இருந்ததாக, இலங்கையின் “ மகா வம்சம்” என்று புத்த நூல் சொல்கிறது ஆக இலங்கையில் ஆதி குடி தமிழர்கள் தான். கி.மு 180 மௌரிய பேரரசு முடிவடைந்தது.
சங்ககாலப் புலவர்களில் ஒருவர் மாமூலனார். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் அகத்திணைப் பாடல்கள். அவற்றுள் 29 பாலைத் திணைப் பாடல்கள். ஒன்று குறிஞ்சித் திணைப் பாடல். குறிஞ்சி திணை மக்கள் “சேயோன்” என்ற தெய்வம் , அதாவது முருகனை வழிபட்டனர் என்று சொல்கிறது.
இவர் அகநானூறில்
 “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)
அதாவது மௌரியர்களால் நந்தர்களின் பாடலி புத்திரம் சிதைவற்ற நிகழ்வை சொல்கிறார். மௌரியர் காலம் கி.மு 180ல் முடிவடைந்த பிறகு, கி.பி யில் இந்த புலவர் வந்து நந்தர்களின் அழிவை பாடுகிறார் என்று கொள்ள முடியாது. அவர் காலத்தில் நடைபெற்ற அல்லது அவரது காலத்திற்கு சிறிது முன் என்று தான் அர்த்தம். இவர் கி.முவை சேர்ந்தவராக தான் இருக்க முடியும்.
ஆக அசோக காலத்தில் தமிழர்கள் வாழ்ந்து இருக்கின்றனர். அந்த தமிழ் மக்கள் முருகனை முதன்மை தெய்வமாக வைத்து வணங்கி இருக்கிறார்.சங்ககாலம் புலவர்கள் இந்த காலத்திலும் வாழ்ந்து இருக்கின்றார். அதற்கு முன்னரும், பின்னரும் வந்து இருகின்றனர். அவர்களின் பாடலை வைத்து தான் அவர்களின் காலம் நிர்ணயம் செய்யபடுகிறது.
விடுதலை கட்சியின் இணையதளமும் கூட , தமிழர்கள் முற் காலத்தில் இயற்கையை உருவகப்படுத்தி முருகன், கொற்றவை என்ற தெய்வங்களை வழிபட்டு வந்தனர் என்பதை ஒத்து கொள்கின்றது. மதமே இல்லை என்று சொல்லி வந்த , நாம் தமிழர் கட்சின் சீமானும் , சட்டென்று முருகன் எங்கள் முப்பாட்டன் , சிவன் எங்கள் ஆதிபாட்டன் என்று கூற தொடங்கியதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஏன் என்றால் தமிழர்கள் “தெய்வம்” என்ற ஒன்றை வழிப்பட்டு வந்தனர் என்பது தமிழ் சங்க கால நூல்கள் மறுக்க முடியாமல் வைக்கின்றன. தை நீராடல் பற்றி சொல்லும் சங்க இலக்கியம் அப்போது பெண்கள் கடைபிடித்த விரதத்தை பற்றி பேசுகிறது. எந்த மாற்று மத பெண்கள் அன்று விரதம் இருக்கின்றனர்.
தமிழக கோவில்களும் , அதுனுள் உள்ள கல்வெட்டும் மற்றும் சங்க இலக்கியம் தான் தமிழர்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது என்பதை இன்று வரை நிருபிக்கிறது. சங்க இலக்கியத்தை மறுத்தல் எனபது தமிழர்களின் வரலாற்றை மறுத்தல் ,அது தமிழ் இனத்தின் தற்கொலைக்கு சமமானது என்று எல்லாருக்கும் தெரியும்.
அதனால் மெல்ல வார்த்தையை மாற்றுகின்றனர். தை நீராடல் என்பது “இயற்கைக்கு நன்றி செல்லுதல்” என்ற பதத்தை மட்டும் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். கவனமாக “வழிபடுதல்” என்ற வார்த்தையை விலக்கி விட்டனர். “வழிபடுதல்” என்ற வார்த்தை யாருக்கு சங்கடம் விளைவிக்கும். தமிழர்களுக்கா? இல்லை கிறிஸ்தவ , இஸ்லாமிய மதத்திற்கு அந்த வார்த்தையை ஏற்க முடியாது.
கேவலம் தன்னை மத சார்பற்றவன் என்று காட்டி கொள்வதற்காக , நம் பெருமை மிகு தமிழ் இன மக்களின் வழிபாட்டு நம்பிக்கையை மறைக்கின்றனர். தனக்கு கற் மாளிகையை எழுப்பவதற்கு பதில் , தமிழ் கடவுள்களுக்கு பெரிய கற் கோவில்களை எழுப்பி பல ஆயிரம வருடம் ,இந்த மண்ணில் அதை நிலை பெற செய்த , என் தமிழன் கட்டிய கோவில் என்று நம்மை எல்லாம் பெருமைப்பட வைத்த, நம் தமிழ் மன்னர்களை இழிவுபடுத்தி கொண்டு உள்ளனர்.
தமிழ் இன துரோகிகள் அவர்கள்
“கி.மு” என்பது கிறிஸ்து பிறப்பிற்கு முன் என்ற அர்த்தம். ஆக நம் தமிழர்கள் அரசாட்சி செய்து , போர் செய்தும், தெய்வத்திற்கு விழா எடுத்து கொண்டு இருந்த போது கிறிஸ்தவம் உலகத்தின் எந்த மண்ணிலும் முளை விடவே இல்லை. கிறிஸ்துவே அப்போது இல்லை எனும்போது , இஸ்லாமும் இல்லை.
ஆரியன் வந்து தமிழரோடு கலந்தான், அதனால் ஏய் ஆரியனே தமிழ் நாட்டை விட்டு வெளியேறு என்று கத்தும் கூட்டம் , கிறிஸ்தவத்தையும் , இஸ்லாத்தையும் நோக்கியும் அதே வார்த்தையை சொல்ல வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தமிழர்களின் நம்பிக்கையை, “தன் நம்பிக்கையாக” எவன் ஏற்கின்றானோ அவன் இங்கே இருக்கட்டும் , இல்லாதவர்கள் வெளியேறலாம்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...