Saturday, February 18, 2017

நியூஸ் 7 பற்றி எழுத கூடாது என்று இருந்தேன்

நியூஸ் 7 பற்றி எழுத கூடாது என்று இருந்தேன். ஏன் என்றால் உண்மையாக சல்லிக்கட்டிற்கு சோறு தண்ணி இல்லாமல் போராடும் பிள்ளைகளும் களத்தில் இருந்தனர். இந்த நியூஸ் சேனல் பற்றி எழுதினால் சல்லிகட்டிற்கான நோக்கம் சிதைய நேரிடலாம்(நாம் எழுதி அவளவு பேர் கேக்க போவது இல்லை). நியூஸ் 7 நியூஸ் 7 என்ற புகழ்ந்த என் நண்பர்களுக்கு மட்டும் சில பேர் கோடிட்டு காட்டினேன். அமைதியாகி விட்டனர். இன்று அவரச சட்டம் வந்து விட்டது. அது நிரந்தர சட்டமாக மாற முடியும் என்பதை எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் உச்ச நீதி மன்றம் என்ன பண்ணும் என்பது கவனிக்க வேண்டியது.
இது தமிழக கனிம வளங்களை கொள்ளை அடித்த வைகுண்டராஜன் என்ற நபருக்கு சொந்தமானது நான் சொல்ல வில்லை சவுக்கு இணைய தளம் சொல்கிறது . டிசம்பர் 29 தேதி ஜெயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதி மன்றம் சொல்கிறது, தீபாவின் மீது அதிக படியான மீடியா வெளிச்சம் வெளிச்சம் விழுகிறது.முக புத்தகமும் , twitterம் அதையே பேசியது. அது மட்டும் அல்ல , மத்திய அரசு வருமான வரி அலுவலகம் தமிழகத்தின் பல நிறுவனங்கள் மீது சோதனை நடத்தி கொண்டு இருந்தது. மேலும் பல நிறுவனம் மீது சோதனை நடத்த தயாராக இருந்தது. அதில் வைகுண்ட ராஜனின் நிறுவனமும் இருந்து இருக்கலாம். நியூஸ் 7 சட்டென்று சல்லிகட்டை நோக்கி தனது மீடியா வெளிச்சத்தை பரப்பியது. மிக தயாராக எல்லா இடத்திலும் கவர் செய்தது. முன்னணி செய்தி நிறுவனம் கூட இப்படி செய்து இருக்கமா என்று சந்தேகம்.
ஜெயாவின் மரணம் பற்றிய பேச்சு, தீபாவின் அரசியல் எழுச்சி, வருமான வரி சோதனைகள் அப்படியே நின்றது. எல்லார் கவனமும் சல்லிகட்டு நோக்கி திரும்பியது , இல்லை திருப்ப பட்டது என்றும் சொல்லலாம். சமுக வலைத்தளமும் திரும்பியது. மத்திய , மாநில அரசுக்கு எதிராக திரும்பியது. யோசித்தால் மிக சரியான திட்டமிடல் என்று தோன்றுகிறது.
வைகுண்டராஜன் admkக்கு ஆதரவாக இருந்தார் என்றும், பின்பு dmk ஆதரவாகவும் இருந்தார் என்று செய்திகள் வந்தன
நியூஸ் 7 பின்னால் ஏதோ ஒரு அரசியல் கட்சி இருந்து இருக்கிறது. ஆனால் எந்த அரசியல் இருந்தாலும் , ஒரு நல்லது நடந்து இருக்கிறது.
குறிப்பு:இணைப்பு கீழ் இருக்கிறது

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...