Saturday, February 18, 2017

எவனும் எங்கள் தமிழருக்கு மாடுகளை பற்றி கதை சொல்ல வேண்டாம்.



எங்கள் ஈசனின் வாகனம் நந்தி.மாட்டை தெய்வம் என்று கோவிலில் வைத்தவன் தமிழன். இறையும் இயற்கையும் வேறானது அல்ல. ஈசனின் கருணையை பெற வேண்டுமா , நந்தியை முதலில் வேண்டு என்று சொன்னது தமிழ். இயற்கையிடம் இருந்து உணவை பெற வேண்டும் எனில், அதற்கு முதலில் மாட்டின் தான் உதவியை பெறுக. இறை இங்கே இறங்கியது இடையானக தான். கண்ணன் காத்ததும் கறவைகளை தான். எங்கே வேறு மதத்தில் இப்படி காட்டுங்கள் பார்ப்போம்.
எங்களுக்கு தெரியும் மாடுகளை பற்றி. ஆநிறைகள் எங்கள் ஆன்மிகத்தில் கலந்தே வந்து உள்ளது. மாட்டிற்கு மறுக்காமல் நீதி சொன்ன மனு நீதி சோழன் வாழ்ந்த தமிழ் மண் இது. சங்க காலத்திலும் "ஆநிறை கவர்தலும்" , "ஆநிறை மீட்டலும்" என்று விரிவாக பேசப்பட்டு இருக்கிறது. போருக்கு முன் மாடுகள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு எடுத்து செல்ல பட்டு இருக்கிறது. ஆக ஆதி தமிழர் வரலாறு முழுவதும் ஆநிறைகளோடு கலந்தே வந்து இருக்கிறது. இங்கே எவனும் எங்கள் தமிழருக்கு மாடுகளை பற்றி கதை சொல்ல வேண்டாம்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...