ஏன் நட்பில் உள்ள போலி மத சார்பற்ற நண்பர்களுக்கு
நாங்கள் ஏன் சல்லிக்கட்டு பிரச்சினை வைத்து பிஜேபி ஆதரவு நிலையை விலக்க வேண்டும். நாட்டு மாட்டினம் அழியும் என்பது தான் மைய கருத்தாக இருக்கிறது சல்லிகட்டில். கடத்தப்படும் அந்த நாட்டு மாடுகளை காப்பாற்றி , கோசலைக்கு அனுப்புவும் , பண உதவி செய்யவும், அப்படி வரும் தகவல்களை மீள் பதிவு செய்ததில் பெரும் பங்காற்றுவது பிஜேபி மற்றும் ஹிந்துத்துவா தொண்டர்கள். நாட்டு பசு இல்லை என்றால் எங்கே நாட்டு காளைகளை வளர்ப்பீர்கள் ? .
பசுவை வைத்து நடந்த விஷயத்தை மத பிரச்சினையாக்கியது ஊடகம். ஒரு ஹிந்துவை சிறுபான்மை அடித்தால் , இரு குழுக்கள் உள்ள பிரச்சினை என்று செய்தி போடும் . அதே ஹிந்து திருப்பி அடித்தால், ஹிந்துக்கள் சிறுபான்மையை அடித்தார்கள் என்று செய்தி போடும். சல்லிகட்டு நடக்கும் , நடக்காது போனாலும் , அந்த மாடுகளை அப்போதும் , இப்போதும் , எப்போதும் காப்பாற்ற எதாவது ஒரு வகையில் பிஜேபி யும் , ஹிந்து உணர்வு உள்ளவர்களும் உதவி கொண்டு உள்ளனர். தீடிரென்று தமிழ் உணர்வு இங்கே பொங்க வில்லை . தனது கலாச்சாரத்தின் மீது அங்கமாகவும் , தன் கடவுள் நம்பிக்கையின் வெளிபாடாகவும் மாட்டை காப்பாற்றுவதை இயல்பான கடமையாக செய்து கொண்டு உள்ளனர்.
நீங்கள் ஒரு சிறு துரும்பையாவது செய்தீர்களா. இப்போது பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சல்லிக்கட்டு சல்லிக்கட்டு என்று எவனோ போடும் பதிவுகளை மீள் பதிவு செய்து கொண்டு உள்ளீர்கள். உங்களுக்கு என்று சொந்த கருத்து என்றைக்காவது இருந்தது உண்டா. பெரும் அலை செல்லும் திசையில் செல்லும் படகை போல், பெரும் கூட்டம் எதை நோக்கி நகர்கிறதோ அதை நோக்கி சென்று கொண்டு உள்ளீர்கள்.
சரி விடுங்கள் . நாங்கள் மத வெறியர்கள். நீங்கள் மத சார்பற்றவர்கள் தானே உண்மையில் மாட்டை காப்பற்றும் எண்ணம் இருந்தால் , அன்றே நான் “இதை மத பிரச்சினையாக பார்க்க வில்லை, எந்த மாட்டையும் கொல்ல கூடாது அதற்காக மனிதர்களை அடிக்க கூடாது கொல்ல கூடாது “ என்ற நிலைப்பாடவது அப்போது எடுத்தீர்களா. வாய் மூடி இருந்தீர்கள். இன்னும் சொல்ல போனால் பயந்து போய் கிடந்தீர்கள். அப்போ எங்கே போனது நம் தமிழன வீரம். அன்று கோழையாக இருந்து விட்டு. இன்றும் கூட்டம் சேர்ந்த உடன் கூட்டத்துடன் கூட்டமாக சேர்ந்து கொதிப்பது பேர் தான் வீரமா
நான் பிஜேபி ஆதரவாளன , மறைக்க வில்லை. ஹிந்துத்துவா ஆதரவாளன். மறைக்க வில்லை. என் நட்பில் மோடி வெறுப்பாளர் பலர் உள்ளனர் நாத்திக வாதிகள் பலர் உள்ளனர்.மாற்று கருத்தை நான் மதித்து இருக்கின்றேன். ஆனால் என் கருத்தை அவர்கள் மேல் திணித்தது இல்லை. இந்திய எதிர்ப்பாளர்கள் தவிர்த்து மற்ற யாரையும் நான் நட்பில் வைத்து உள்ளேன். அவர்களின் பதிலுக்கு பதில் அளித்து கொண்டு தான் உள்ளேன். நான் ஆதரிக்கும் பிஜேபி யின் நடவடிக்கை பற்றி என்னுள் கேள்வி வரும் போது , நேரடியாக அவர்களை கேள்வி கேட்டு கொண்டு தான் உள்ளேன். மறைமுகமாக கேள்வி கேக்க வில்லை.
உங்கள் போலி மத சாரபற்ற தன்மையை உலகிற்கு காட்ட எங்களை ஏன் பகடை காயாக பயன்படுத்த வேண்டும்.
காவிரி விசயத்திலும், முல்லை பெரியாறு விசயத்திலும், இலங்கை தமிழர் வரலாற்றிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் , மீத்தேன் திட்டத்திலும், விவசாயிகள் பிரச்சினையிலும் கூட இருந்து குழி பறித்தது தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள். அந்த தலைவர்களின் முக புத்தகத்தில் போய் ஒரு வார்த்தை கேட்டது உண்டா. இல்லை அவர்கள் ஆதரவாளர்களிடம் வாதாடியது உண்டா. எப்படி அந்த கட்சிகள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றன. நீங்கள் ஆதரவு கொடுப்பதால் தானே. கிறிஸ்தவ தலைவர்களும் , இஸ்லாமிய தலைவர்களும் வெளிப்படையாகவே காங்கிரெஸ், DMK ஆதரிக்கும் போதும்,பிஜேபி எதிர்ப்பு நிலையை எடுக்கும்போது , நான் ஏன் பிஜேபி ஆதரவு நிலையை எடுக்க கூடாது.
முதலில் எல்லா கட்சியையும் கண்டித்து விட்டு, திராவிட கட்சிகளின் ஆதரவாளர்களிடம் கேள்வி கேட்டு விட்டு, உங்கள் பதிவில் “உங்கள் கருத்தாக” அதை பதிவு செய்து விட்டு அப்புறம் எங்களிடம் பேசுங்கள். எங்களை கேள்வி கேட்பதன் மூலம் நீங்கள் மத சார்ப்பறவர் என்ற மற்றவருக்கு அறிவிக்க நீங்கள் முயற்சி மேற் கொண்டு உள்ளீர்கள். ஏன் என்றால் மோடியை எதிர்ப்பது தான் மத சார்பின்மை என்பது எல்லாரும் கடை பிடிக்கும் தந்திரம்.
நான் மோடி ஆதரவாளராக இருப்பது உங்களுக்கு பிடிக்க வில்லையா , என் பதிவு உங்களுக்கு தொந்தரவாக உள்ளதா, தாரளமாக என்னை உங்கள் முக புத்தகத்தில் இருந்து விலக்கி கொள்ளுங்கள்.
மோடி ஆதரவாளர்கவும் , ஹிந்துத்துவம் மீதும் , தாய் தேசத்தின் மீது பற்று கொண்ட நபராகவும் இயங்குவது சிரமம். நீங்கள் தொடர்ந்து எங்களை பற்றி எழுதினால் கையை வெட்டுவேன், கழுத்தை வெட்டுவேன், என்று எல்லா மிரட்டல்களை தாண்டி தான் எழுதி கொண்டு இருக்கின்றோம். முக புத்தகத்தில் எழுதியதற்காகவே கொல்லப்பட்ட கதை இங்கே உண்டு.
எங்கள் விதி எங்கள் அலுவலக வாசலில் நிற்கிறதா அல்லது வீடு திரும்பும் வழியில் வெட்டு அரிவாளுடன் காத்து இருக்கிறதா என நாங்கள் அறியோம்.
ஆனால் உயிரோடு இருக்கும் வரை எங்களின் நம்பிக்கைக்கு உண்மையாக தான் இருக்கின்றேன் , உங்களை மாதிரி போலியாக இல்லை.
No comments:
Post a Comment