ஒரு
முறை உங்களை பற்றி எதிர் மறையான கருத்து சொல்கிறார்கள் உங்களிடம்.
நீங்கள் வருத்தம் அடைந்து உங்களை மாற்றிக் கொள்கிறீர்கள் . இரண்டாவது முறை
உங்களை பற்றி மீண்டும் எதிர் மறையான கருத்து. மீண்டும் சுய பரிசோதனை
செய்து உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறீர்கள். எல்லாம் சரியாகி
விட்டது என்று நினைக்கும்போது , சாதாரண உரையாடலில் கூட உங்களிடம் கடுமையான
வார்த்தைகளை கொண்டு காயபடுத்துகிறார்கள்.
இது சரியா என்று நாம் வலியோடு கேட்டால், நீ அணுகிய முறை சரியில்லை அதனால் உனக்கு கிடைத்தது என்று அவர்களின் கடுமையான வாரத்தைகளை நியாயபடுத்துகிறார்கள். இன்னும் ஒரு படி போய், முதல் முறை அவர்கள் நம்மிடம் என்ன எதிர்மறை கருத்து சொன்னார்களோ ,மீண்டும் அதில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவர்களும் அழுத்தத்தை பல பேருக்கு தந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்னும் சற்று நிதானித்து பார்த்தால், அடிப்படையில் உள்ளுக்குள் அவர்களுக்கு நம் மேல் வெறுப்பு இருக்கிறது என்பது மெல்ல புரிகிறது. அப்படி நாம் என்ன செய்தோம் என்று கேள்விக்கு பதில் கடைசி வரை கிடைப்பது இல்லை. மறுத்தல் கூட மரியாதையாக வர வேண்டும் என்பதை அறியாத மனிதர்களை விட்டு விலகுவதே அவர்களுக்கும் நல்லது, நமக்கும் நல்லது. |
ஈசனை அடையும் முடிவற்ற பயணம்...இந்த முறை தரணி வழியாக, அதன் வழிதடத்தில் நான் செய்த விசாரிப்புகள் இங்கே......
Friday, May 13, 2016
மறுத்தல் கூட மரியாதையாக வர வேண்டும்
என் கல்லூரி வாழ்க்கை அது வேறு உலகம்
இன்று
ஒரு கல்லூரி தோழர் ஒருவர் அழைத்து இருந்தார். அலைபேசியில், அவரின் உறவினர்
ஒருவருக்கு வேலை வாய்ப்பு பற்றி அறிய. பேச்சு மெல்ல கல்லூரி வாழ்க்கை
பற்றி திரும்பியது. அந்த கல்லூரி நாட்களில் அவர் என்னிடம் எப்போதும் எந்த
மாதிரி கேள்விகளை கேட்டு கொண்டு இருப்போரே அதே மாதிரியான கேள்விகள்,
கிட்டத்தட்ட அதே பாணியில் பதில் அளித்து கொண்டு இருந்தேன். பேச்சு முடிந்த
பிறகு, நீ கொஞ்சமாவது மாறி இருப்பாய் என்று நினைத்தேன்
மாற வில்லை என்றார். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. என்ன மாற வில்லை
என்றேன். இல்லை கல்லுரியில் பேசி கொண்டு இருந்த அதே பேச்சுகளை தான் பதிலாய்
தருகிறாய் என்றார்.
நானும் பதிலுக்கு நீயும் அப்படியே தான் இருக்கின்றாய் என்றேன். அவருக்கு வருத்தமாக போய்விட்டது. கல்லூரி நாட்களில் நீ என்னிடம் கேட்டாயோ அதே கேள்விகளை பனிரெண்டு வருடம் கழித்து கேட்கின்றாய். வேறு எதுவும் உனக்கு கேக்க தோன்ற வில்லை. அப்படி என்றால் நீயும் மாற வில்லை தானே என்றேன். வேகமாக மறுத்து விட்டு, நான் அப்படி, இப்படி என்று சொல்லி விட்டு , வேலை வாய்ப்பு பற்றி தகவல் தெரிந்தால் சொல் , என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்து விட்டார். கல்லூரி வாழ்க்கை அது வேறு உலகம். இன்று நின்று யோசிக்கும்போது , சில விசயங்களை நிதானித்து செய்து இருக்கலாம் அல்லது தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது இன்னும் நன்றாக படிப்பில் கவனம் செலுத்தி இருந்து இருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. வயதிற்குரிய குறும்புகளை ஒரு வரையறைக்குள் வைத்து இருந்து இருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது. நான் செய்த சில வேலைகளை நினைத்தால் எனக்கே இன்று சிரிப்பாக வருகிறது. ஆனால் அது முடிந்த போன நாட்கள். அது முதிர்ச்சியற்ற பருவம், அப்படித்தான் இருந்து இருக்க முடியும் என்னால். இன்று அப்படி இல்லை. முப்பது வயதை தொட்ட போது நமக்குள் இருந்த முரண்பாடுகள் மரணித்து போகின்றன. மெல்ல ஒரளவு பக்குவம் முளைத்து வருகிறது. என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேச கூடாது என்று தெரிகிறது. யார் யாரை எல்லாம் விட்டு விலகி நிற்க வேண்டும் என்ற தெரிகிறது. சிந்தனைகளை சிதறடிக்கும் சில்லறை தனமான சிற்றின்பம் விஷயத்தை தவிர்க்க சொல்லி மனம் வேண்டுகிறது. கிட்டத்தட்ட இன்னொரு பட்ட படிப்பு மாதிரி. முழு முதுமை வந்து தழுவும்போது கூட , இந்த படிப்பை முடிக்க முடியாது என்று புரிகிறது அந்த நண்பருக்கு ஏன் அது புரியவில்லை என்று எனக்கு புரியவில்லை. நான் மாற வில்லை என்று அவரே முடிவு செய்து விட்டார். அவர் மாறி விட்டார் என்றும் அவரே முடிவு செய்து கொண்டார். அதாவது எனக்கும் அவருக்கும் சேர்த்து அவரே நீதிபதியாக இருந்து தீர்ப்பு எழுதிக் கொண்டார். இது தீர்ப்பா அல்லது நம் தலைஎழுத்தா என்று அறியமுடியவில்லை. ஆனால் இந்த மாதிரி நீதிபதிகள் எல்லா உறவுகள், நட்பு வட்டத்தில் இருந்து நமக்கு சில சமயம் தலைவலியாக வருகிறார்கள் என்பதை அறிவேன். |
புத்த மத பயங்கரவாதத்தல் பாதிக்கபட்ட எம் இலங்கை தமிழ் ஹிந்து மக்களுக்கும் உதவி
சன் டிவி நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதியுதவி
சன் டீவி தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற உதவிய மூன்று காரணிகள் , சினிமா,
அரசியல் , விளம்பரத்தில் வரும் வருமானம். மிக சரியாக நடிகர் சங்கத்தை தன்
பக்கம் விழ வைத்து விட்டது. எந்த திருவிழா நாளும் , நடிகர்களின்
பேட்டியையும், அவர்களின் புது படங்களையும் போட்டு, இடையே வரும் விளம்பரம்
மூலம் கொள்ளை லாபம் செய்தது உலகம் அறியும்.
நம் அதி புத்தி சாலி நடிகர்கள் , கொஞ்சம் சரியாக யோசித்து இருந்தால் தங்களுக்கு என்று ஒரு தனி டிவி தொடங்கி, தனது சுப்பர் ஸ்டார்களின் மூலம் , மிக சுலபமாக விளம்பரங்களை ஈர்த்து நன்கு லாபம் பார்த்து இருக்க முடியும். தனது நலிந்த , நாடக கலைஞர்களுக்கு வேலை வாய்பை நிரந்தரமாக அளித்து இருக்க முடியும்.
பல திரை அரங்கம் காணமல் போனதற்கு காரணம் சன் டிவியின் கே டிவி என்பது நிதர்சன உண்மை.
இதை எல்லாம் விட்டு, சன் டிவியின் ஆக்டோபஸ் கரங்களுக்கு நடிகர் சங்கம் தன்னை பலி கொடுத்து விட்டது.
நம் அதி புத்தி சாலி நடிகர்கள் , கொஞ்சம் சரியாக யோசித்து இருந்தால் தங்களுக்கு என்று ஒரு தனி டிவி தொடங்கி, தனது சுப்பர் ஸ்டார்களின் மூலம் , மிக சுலபமாக விளம்பரங்களை ஈர்த்து நன்கு லாபம் பார்த்து இருக்க முடியும். தனது நலிந்த , நாடக கலைஞர்களுக்கு வேலை வாய்பை நிரந்தரமாக அளித்து இருக்க முடியும்.
பல திரை அரங்கம் காணமல் போனதற்கு காரணம் சன் டிவியின் கே டிவி என்பது நிதர்சன உண்மை.
இதை எல்லாம் விட்டு, சன் டிவியின் ஆக்டோபஸ் கரங்களுக்கு நடிகர் சங்கம் தன்னை பலி கொடுத்து விட்டது.
அமானுஷ்மாக இருக்க வாய்ப்பு இல்லை
நல்ல
உறக்கத்தில் இருக்கும்போது , சட்டென்று அறை முழுவதும் மல்லிகை பூ வாசம்
பரவுகிறது. மெல்ல கலவரம் பரவி விளக்கை போட்டு சிறிது நேரம் வைத்தாலும்
தூக்கம் வர மறுக்கிறது. கல்லூரி நாட்களில் பார்த்த அத்தனை பேய் படங்களும்,
மனதில் மறு ஒளிபரப்பாகி தொலைக்கிறது. கந்த சஷ்டி கவசம் நம்மை அறியாமலே நம்
வாயில் ஒலிக்கிறது.
சேலத்திற்கு நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் விழுப்புரம் வழியாக பயணித்த போது, ஒரு முறை உளுந்தூர்பேட்டை சேலம் சாலையிலும் , மறுமுறை திருப்பத்தூர் வழியாக பயணித்த போது , ஊத்தங்கரையிலும் நெடிய மல்லிகை பூசம் வாசம் தழுவி சென்றது நினைவில் உள்ளது. அது பெரிய வியப்பை தந்தாலும் பயத்தை தர வில்லை. ஆனால் சாத்திய அறைக்குள் பூ வாசம் வரும் போது, , மனம் கொஞ்சம் ஆடித்தான் போனது . அமானுஷ்மாக இருக்க வாய்ப்பு இல்லை என்று படித்த படிப்புகள் என்ன தான் கற்பித்தாலும் , மனம் என்னமோ சிறிது பதட்டத்து உடனே உறங்க செல்ல முற்பட்டது. ஈடுகாட்டின் அரசன் என் ஈசன் , அவனே என் இறைவன் என்று அறிவு ஆண்டவனை சுட்டி காட்ட, சுடலையின் நாயகனை சுற்றி என் நினைவுகளை நிறுத்தி கொண்டதும் , நித்திரை நிம்மதியாக வந்தது. |
சீமானின் கருத்தில் உடன்படுகின்றேன்
கருணாநிதி
தோற்று விட்டால் , தமிழனை திட்டுவார் "நீ மானமுள்ள தமிழனா , சோற்றில்
அடித்த பிண்டங்கலாகி போன தமிழனா" என்று .
நாம் தமிழர் கட்சி தமிழனை திட்டி
கொண்டு ஒட்டு கேட்கிறது. "பச்சை தமிழனா, மானமுள்ள தமிழனா , சூடு சொரணை உள்ள
தமிழனா".
கருணாநிதிக்கும், சீமானுக்கும் முற்பட்டு இருந்து நாம் தமிழர்களாக தான் இருந்து வருகிறோம். இந்த இரண்டு பேருக்கும் ஒட்டு போட்டு தான் நாம் தமிழர் என்று நிருபிக்க வேண்டிய அவசியம் நம் தமிழர்களுக்கு இல்லை. தமிழ் புத்தாண்டு அன்று விடுமுறை மறுத்த பல பன்னாட்டு நிறுவனங்கள் உண்டு. பொங்கல் பண்டிகைக்கும் விடுமுறை மறுத்த நிறுவனங்கள் உண்டு. சாதாரண படிப்பறிவு அற்ற மக்களும் வந்து போகும் வங்கிகளில் , தமிழே தெரியாத பல பணியாளர்களை தமிழகத்தில் பணி அமர்த்தி வாடிக்கையாளர்களை தினமும் வேதனை படுத்தும் வங்கிகள் உண்டு. தமிழகத்தில் தங்கள் வியாபாரத்தை செய்து கொண்டு இருக்கும் பல பன்னாட்டு நிறுவங்கள் ,தங்கள் 24 மணி நேர தொலைபேசி உதவியில் ஒரு தமிழரை கூட அமர்த்தாமல் இருக்கும் நிலை உள்ளது. ஏன் எனில் கேட்பார் யாரும் இல்லை. எங்கள் மண்ணை ஆண்ட யாருக்கும் நான் தமிழன் என்ற எண்ணம் இருந்தது இல்லை. அதனால் சீமானின் கருத்தில் உடன்படுகின்றேன் " இந்த மண்ணில் யாவருக்கும் வாழ உரிமை உண்டு, ஆனால் இந்த மண்ணை ஆளும் உரிமை என்றும் "தமிழ் கலாச்சாரத்தை" மறவாது கடைபிடிக்கும் தமிழருக்கு மட்டுமே உண்டு" |
|
Subscribe to:
Posts (Atom)
கொரோனா வைரஸ்
எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...

-
நண்பர்கள் சிவாலயங்கள் பதிவுக்கான, நான் சென்று வந்த பயண திட்டத்தை தெரிவித்தால், நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். http://tiny.cc/ewgg...
-
"இது தான் காலம் காலமாக நீங்கள் செய்வது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் தமிழ் பெருமை வளர்ந்தது அல்லவா? நல்லது அந்த நினைப்போடு நீங்கள்...
-
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன் - புத்தகம். ரயில் பயணத்தின் போது, இந்த புத்தகம் வாங்கினேன். படிக்க மிக சுவராசியமாக இருக்...