Friday, May 13, 2016

அமானுஷ்மாக இருக்க வாய்ப்பு இல்லை

நல்ல உறக்கத்தில் இருக்கும்போது , சட்டென்று அறை முழுவதும் மல்லிகை பூ வாசம் பரவுகிறது. மெல்ல கலவரம் பரவி விளக்கை போட்டு சிறிது நேரம் வைத்தாலும் தூக்கம் வர மறுக்கிறது. கல்லூரி நாட்களில் பார்த்த அத்தனை பேய் படங்களும், மனதில் மறு ஒளிபரப்பாகி தொலைக்கிறது. கந்த சஷ்டி கவசம் நம்மை அறியாமலே நம் வாயில் ஒலிக்கிறது.

சேலத்திற்கு நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் விழுப்புரம் வழியாக பயணித்த போது, ஒரு முறை உளுந்தூர்பேட்டை சேலம் சாலையிலும் , மறுமுறை திருப்பத்தூர் வழியாக பயணித்த போது , ஊத்தங்கரையிலும் நெடிய மல்லிகை பூசம் வாசம் தழுவி சென்றது நினைவில் உள்ளது. அது பெரிய வியப்பை தந்தாலும் பயத்தை தர வில்லை. ஆனால் சாத்திய அறைக்குள் பூ வாசம் வரும் போது, , மனம் கொஞ்சம் ஆடித்தான் போனது .

அமானுஷ்மாக இருக்க வாய்ப்பு இல்லை என்று படித்த படிப்புகள் என்ன தான் கற்பித்தாலும் , மனம் என்னமோ சிறிது பதட்டத்து உடனே உறங்க செல்ல முற்பட்டது.

ஈடுகாட்டின் அரசன் என் ஈசன் , அவனே என் இறைவன் என்று அறிவு ஆண்டவனை சுட்டி காட்ட, சுடலையின் நாயகனை சுற்றி என் நினைவுகளை நிறுத்தி கொண்டதும் , நித்திரை நிம்மதியாக வந்தது.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...