Friday, May 13, 2016

சன் டிவி நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதியுதவி

சன் டீவி தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற உதவிய மூன்று காரணிகள் , சினிமா, அரசியல் , விளம்பரத்தில் வரும் வருமானம். மிக சரியாக நடிகர் சங்கத்தை தன் பக்கம் விழ வைத்து விட்டது. எந்த திருவிழா நாளும் , நடிகர்களின் பேட்டியையும், அவர்களின் புது படங்களையும் போட்டு, இடையே வரும் விளம்பரம் மூலம் கொள்ளை லாபம் செய்தது உலகம் அறியும்.

நம் அதி புத்தி சாலி நடிகர்கள் , கொஞ்சம் சரியாக யோசித்து இருந்தால் தங்களுக்கு என்று ஒரு தனி டிவி தொடங்கி, தனது சுப்பர் ஸ்டார்களின் மூலம் , மிக சுலபமாக விளம்பரங்களை ஈர்த்து நன்கு லாபம் பார்த்து இருக்க முடியும். தனது நலிந்த , நாடக கலைஞர்களுக்கு வேலை வாய்பை நிரந்தரமாக அளித்து இருக்க முடியும்.

பல திரை அரங்கம் காணமல் போனதற்கு காரணம் சன் டிவியின் கே டிவி என்பது நிதர்சன உண்மை.

இதை எல்லாம் விட்டு, சன் டிவியின் ஆக்டோபஸ் கரங்களுக்கு நடிகர் சங்கம் தன்னை பலி கொடுத்து விட்டது.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...