Friday, May 13, 2016

புத்த மத பயங்கரவாதத்தல் பாதிக்கபட்ட எம் இலங்கை தமிழ் ஹிந்து மக்களுக்கும் உதவி

மிக்க நன்றி. இது குறிப்பாக தங்கள் வீட்டு பெண்கள் , பாகிஸ்தானின்/பங்களதேஷ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இரையாகும் அவலத்தை தடுக்க முடியாமல் தவித்த ஹிந்து பெண்களின் பெற்றோர்களுக்கு வயிற்றில் பாலை வார்த்து இருக்கும். அப்படியே காலம் காலமாக எங்கள் தமிழக மண்ணில் அகதிகளாக தவித்து வரும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இந்த சலுகைகளை வழங்கினால் அதை விட பெரும் மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை.

முக்கிய விஷயம், தனி ஈழம் கண்டிப்பாக வர வேண்டும், அதில் மாற்று கருத்து எதுவும் இல்லை. ஆனால் அந்த சுதந்திர ஈழத்தின் வரைபடத்தில் தமிழ் நாட்டையும் சேர்த்து காண்பிக்க போய் தான் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதுவே இந்திய அரசுகள் தன் நிலையை மாற்ற பெரும் காரணமாக இருந்தது. இலங்கை உறவுகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைந்த இலங்கை உறவுகள் பணம் தான் கொடுக்க முடியும். ஆனால் விடுதலையை பெற்று தர முடியாது. யதார்த்தமாக யோசித்து பாருங்கள் , இங்கே உள்ள இலங்கை உறவுகள், தனி தமிழ்நாடு என்ற சித்தாந்தம் பற்றி பேசி கொண்டு இருப்பவர்களிடம் விலகி இருங்கள். வீரவோசம் காட்டி பேசுபவர்கள் பேசி விட்டு போய் விடுவார்கள். இழப்பு நமக்கு தான்.

ஹிந்துக்களின் தாய் நாடான இந்தியா ஒரு கண்ணில் சுண்ணாம்பும் , மறு கண்ணில் தேனையும் தடவ முடியாது.

பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதத்தல் பாதிக்கப்பட ஹிந்து மக்களுக்கு உதவி செய்த மத்திய அரசாங்கம் , புத்த மத பயங்கரவாதத்தல் பாதிக்கபட்ட எம் இலங்கை தமிழ் ஹிந்து மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும். அவர்களையும் இந்த தேசத்தின் குடிமக்களாக கருத வேண்டும். அதுவே நம் ஹிந்து மதம் பேசும் தர்மம்.


No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...