Monday, September 26, 2016

முன்னே இருப்பவனை முறித்து போட்டு விட்டால் , முடங்கி சாய்ந்து விடுமோ ஹிந்து மதம்


தொடர்ந்து மூன்றாவது நிகழ்வாக ஹிந்து இயக்கத்தின் நபர்கள் தொடர்ந்து கொல்லபடுகிறார்கள். பிஜேபியை தவிர எந்த கட்சியும் இந்த நிகழ்வை கண்டிக்க வில்லை. அதை கண்டித்த H Rajaஅவர்களின் முக புத்தகத்தில் உன்னை கொன்றால் மகிழ்ச்சி என்று எழுதுகிறார்கள். இதே இந்நேரம் சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டு இருந்தால் தேசிய அளவில் விவாதம் எழுந்து இருக்கும். நமது ஹிந்துக்களே சிறுபான்மைக்கு பாதுகாப்பு இல்லை என்று முக புத்தகத்தில் எழுதி இருப்பார்கள்.

இது தனிப்பட்ட தாக்குதல் என்று கொள்ள முடிய வில்லை. ஹிந்து என்பதாலே கொல்லபடுகிறார். கோழைகள் பெயர் ஜிகாதிகள். ஒரு மனிதன் நிராயத பாணியாக இருக்கும் போது, கூட்டமாக வந்து கொன்று விட்டு போகிறார்கள். இது தான் உங்கள் மார்க்கம் போதிக்கும் வீரமா?. கருத்திற்கு பதில் கருத்து தான் வர வேண்டும், ஆனால் கருத்தை சொன்னவனை காவு வாங்குகிறார்கள். வாதத்தில் எதிர்ப்பவனை வாதத்தால் தான் வெல்ல வேண்டும், வாளால் அல்ல. ஒரு வேளை கொள்கைகளை எதிர்ப்பவனை கொலை செய்தல் என்பது தான் மார்க்கத்தின் கொள்கையோ.

ஹிந்து மதம் என்று போராட வந்த அனைவருக்கும் தெரியும் ஒரு நாள் தான் கொல்லபடுவோம் என்று. iஇருந்தாலும் துணிந்து நிற்கிறார்கள் பார் அவர்கள் தான் வீரர்கள். ஆயிரம் வருடங்களாக மரணத்தை காட்டி தான், ஹிந்து மதத்தை மண்டியிட செய்ய முயன்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்று மட்டும் அவர்களுக்கு தோல்வி தான். என்றுமே அவர்களுக்கு தோல்வி தான்.

முன்னே இருப்பவனை முறித்து போட்டு விட்டால் , முடங்கி சாய்ந்து விடுமோ ஹிந்து மதம். வெட்டி சாய்த்து விட்டால் வென்று விடலாம் என்ற எண்ணமோ? வெட்ட வெட்ட இங்கே துளிர் விடும், உங்கள் மார்க்கம் இந்த மண்ணில் முளை விடும் முன்னே , பல ஈராயிரம் ஆண்டுகள் முன்னே தழைத்து தலைமுறை தலைமுறையாக தாங்கி ஆலமரமாக நிற்பது ஹிந்து மதம். அதன் வேர்களை வேர் அறுக்க இங்கே யாராலும் முடியாது.

போங்கள், தொடர்ந்து கொல்லுங்கள் , வெட்டுங்கள் , ஆனந்த கூத்தாடுங்கள், மார்க்கத்தின் மூர்க்கம் இது தான் என்று முன் எடுத்து செல்லுங்கள் தமிழகத்தில்.

அடுத்த முறை வெட்டும்போது நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வெட்டி கொண்டு இருப்பது தமிழக ஹிந்துக்களின் சகிப்புத்தன்மை என்பதை
https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0ahUKEwj6zrKn7K7PAhWE2SYKHeWpDdcQFggnMAE&url=http%3A%2F%2Fwww.dinamalar.com%2Fnews_detail.asp%3Fid%3D1615414%26&usg=AFQjCNEpnnpV9UAkwLLumgycaAlwIfa4yQ&sig2=Fy8pkcJgf0dJgsUVStv9Wg

எத்தனை முறை கேட்டாலும் அமுதமான பாடல்

எத்தனை முறை கேட்டாலும் அமுதமான பாடல். ராமனுக்கு இங்கே நிகர் ராமன் தான். வடக்கில் இறை இறங்கி தெற்கு நோக்கி வந்து இருக்கிறது, மீண்டும் தெற்கில் இருந்து வடக்கே போய் இருக்கிறது. மொத்த இந்திய தேசத்தையும் இறை நடந்தே அளந்து இருக்கிறது. இராமாயணம் படிக்கும் போது, இறையுடன் நாமும் வடக்கில் தொடங்கி , தெற்கே வந்து மீண்டும் வடக்கு நோக்கி போகின்றோம்.

வாழும் தேசத்தின் புவியியல் வரலாறும் ராமாயணத்தில் சேர்த்து வாசிக்கபடுகிறது. இறையின் மீது விழுந்த பற்றும் பக்தியும், அது நடந்து போன தேசத்தின் மீது இயல்பாக விழுகிறது , அந்த இந்திய தேசத்தில் தான் நான் பிறந்தேன் என்று உணரும்போது தேசத்தின் மீதான காதல் விழுதாகி பழுத்த ஆலமரமாகிறது , நமது அடுத்த தலைமுறைக்கும் பற்றி படர்கிறது.
ஏன் இராமயணம் படிக்க வேண்டும் என நம் முன்னோர் சொன்னது இப்போது புரிகிறது.

https://www.youtube.com/watch?v=cS0ZFfoCqu8

ஒரு பெண்ணை காதலித்தல் என்பது...

இறைவனே. இவர்கள் திருந்தவே மாட்டார்களா. இன்னும் எத்தனை பெண்கள் பலியாக போகிறார்கள். வேலைக்கு போனால் தொல்லை, ரயிலில் போனால் தொல்லை, பேருந்தில் பயணித்தால் தொல்லை. ஒரு பெண் தான் பாதுகாப்பாக உணரும் இடம் தன் வீடு, அவள் வீட்டில் புகுந்தும் ஒரு பெண்ணை கொன்றால், பெண்கள் எங்கே தான் போவார்கள். பெண்ணை பெற்றவர்கள் என்ன தான் செய்வார்கள். எத்தனை பெண்ணை பெற்றவர்கள் கதி கலங்கி போய் இருப்பார்கள்.

காதலித்த பெண்ணை கொன்று விட்டு , என்ன சாதிக்க போகிறார்கள். தன் உள்ளத்தை பறித்தவளின் உயிரை பறிக்க எப்படி மனம் வரும். அவளின் கை பிடிக்க ஏங்கி தவித்த கைகளுக்கு எப்படி கொல்ல தைரியம் வரும்.
உண்மையாக காதலித்தவருக்கு சத்தியமாக சாத்தியம் அன்று. ஒரு பெண்ணின் மீது அன்பு கொள்ளுதல் , அவளை ஆளுமை செய்ய அல்ல, அவள் அழகை கைபற்ற அல்ல , நம் அன்பால் அவளை திளைக்க வைத்து , அவள் கண் மூடும் வரை அவளை காப்பாற்ற.

உன் அன்பு அவளால் மறுக்கபட்டால் , அவளிற்கு பிடித்த இடத்தில் அவள் தேடும் அன்பை அவள் பெற்று கொள்ளட்டும் , என்று நகர்ந்து போகுதல் உண்மையான காதல்.

உன் அன்போ அல்லது உன் அருகாமையோ ஒரு பெரும் தொந்தரவு என்று பெண் சொன்னால் , அவளை விட்டு விலகி போகுதலும் கூட ஒரு வகையில் அது பேராண்மை.

"அட என்னிடம் இருந்தால் கூட இந்த பெண் இவ்வளவு நன்றாக இருந்து இருக்கமாட்டாள் , இப்போது பார் சகல வசதிகளோடு வாழ்கிறாளே, நன்றி இறைவனே " என்று சொல்லி அகம் மகிழ்பவனே நல்ல ஆண் மகன்
உன்னால் ஒரு பெண்ணின் சாதாரண பார்வையையும் , நட்பையும் புரிந்து கொள்ள முடிய வில்லையா , அப்படி என்றால் பெண்ணை விட்டு விலகி நில்லுதல் சரியான முடிவு. நானும் ஒரு வயதில் அந்த தடுமாற்றத்தில் தவித்து இருக்கின்றேன். சட்டென்று ஒரு நாள் புரிந்தது , பெண்ணை புரிந்து கொள்ளும் பக்குவம் என்னிடம் இல்லை , பெண்ணை விட்டு விலகி போவது என்னை பொறுத்தவரை சரியாக இருந்தது. என்னை என்னிடம் இருந்து காப்பாற்றி கொண்டேன்.

அதை விடுத்து கட்டாயபடுத்தி வருவது பேர் காதலா ? எப்படி தான் நேசித்த பெண்ணை கொல்ல மனம் வரும். காமத்தை காதலாக கொள்ளும் காலிகளின் கயமைதான் , இத்தகைய செயலை செய்யும். தனக்கு சொந்தமாகத அழகு , மற்றவருக்கு சொந்தமாக கூடாது என்ற கீழ் நிலை புத்தியின் வெளிப்பாடு இது.
இது ஒரு தலை காதல் என்று சொல்லி காதலை களங்கப்படுத்தாததீர்கள்

http://tamil.oneindia.com/news/tamilnadu/teenager-stabbed-death-kovai-262797.html

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...