Monday, March 6, 2017

ஒரு மறக்கப்பட்ட பேரரசு-விஜய நகரம்-அத்தியாயம் 2

அத்தியாயம் 2


விஜய நகரத்தின் தோற்றம் (கி.பி 1316)


விஜயநகர நகரம், ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஆண்டு 1336 இல் ஸ்தாபிக்கப்பட்டதாக இருக்க, வேண்டும். பின்வரும் இரண்டு விஷயங்களை வைத்து பார்த்தால் , உண்மையான ஆண்டு எது என்பதில், இருந்து 1336 ஆண்டு வெகு தொலைவில் இல்லை. முதல் விஷயம் , கல்வெட்டு சொல்லும் முதலாம் ஹரிஹரர் ராஜா அல்லது, கி.பி 1340 என்று இபின் படுடாவால் குறிப்பிட பட்ட ஹரியப்பா அல்லது ஹரி என்ற அரசர். இரண்டாவது விஷயம் பெர்னோ நுனுஸ் தரவுகள். அதன் படி தென் இந்தியாவில் முஹம்மது பின் துகள்க் நடத்திய படை எடுப்பு வருடம் கி.பி 1334.

இபின் படுடா மற்றும் பெர்னோ நுனுஸ் சொல்லும் நிகழ்வுகளை ஒரு ஒப்பீடு செய்து பார்த்தால், அந்த நிகழ்வுகள் விஜயநகரத்தின் அடித்தளம் ஏற்பட வழிவகுத்த நிகழ்வுகளாக என்ற சிறிய சந்தேகம் மனதில் எழும்

இபின் படுட தரவுகள் படி, துக்ளக் , தனக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட தனது மருமகன் பஹ-உத்-தின் குஷ்ணச்பை அடக்க , தெற்கு பக்கம் படை எடுத்து போனான். பயந்து போன , மருமகன், கம்பிலாவில் (kampila) உள்ள ஹிந்து அரசரான ராயரிடம் தஞ்சம் அடைந்தான். இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் இந்த இடத்தை , மலைகளுக்கு மத்தியில் அமைந்த கோட்டை என்று அழைக்கிறார். “ராய்” என்று சொல், சந்தேகம் இன்றி, கர்நாடகவை குறிக்கிறது. அங்கே தான் ராஜா என்பதை “ராயா” என்று சொல்வார்கள். "கம்பாலா" அல்லது "காம்பிலா" என்று அழைக்கப்படும் பழைய கோட்டை நகரம் தான், விஜயநகர அரசர்களின் முன்னோடிகள் வாழ்ந்த ஊர். இது அனுகொண்டியின் கிழக்கில் இருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் உள்ளது. உண்மையில் "மலைகளுக்கு மத்தியிலுள்ள உள்ள நகரம் என்று சொல்ல முடியா விட்டாலும், பாறைகள் நிறைந்த பிரதேசத்தின் நடுவில் தான் இந்த பெரிய நகரம் இருந்தது.

துக்ளக் தாக்கும் போது, மிக இயல்பாக , கம்பிலாவை விடுத்து , நல்ல பாதுகாப்பான உயரத்தில் அரண் போல் அமைந்த அனுகொண்டிக்கு நகர்ந்து , ராயர் தன்னை தற்காத்து கொண்டு இருக்க முடியும், அதில் வெற்றி பெரும் வாய்ப்பும் இருந்து இருக்க முடியும். அப்படி நடந்து இருந்தால், இந்த இரண்டு வரலாறு ஆசிரியர்களால். குறிப்பிடபடும் நிகழ்வுகள் வேறுபாட்டில் இருக்கும். ஆனால் நடந்ததோ வேறு.

இபின் படுட தரவுகள் படி “துக்ளக் தாக்கும் முன், ராயர் தன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்த பஹ-உத்-தின் குஷ்ணசவை , தனது பக்கத்து தேசத்துக்கு பாதுகாப்பாக அனுப்புகிறார்”. அந்த பக்கத்து தேசம் ஒரு வேளை மைசூரில் உள்ள துவாரசமுதிரத்தின் அரசர் ஹொய்சல பல்லாலராக இருக்கலாம். அங்கே அனுப்பி விட்டு, தோல்வி உறுதி என்ற நிலையில், ஒரு பெரிய தீ மூட்டப்பட்டு அதில் ராயரின் மனைவிகள், அமைச்சர்களின் மனைவிகள், முக்கிய குடும்பத்தின் ஆண்களின் மனைவிகள் தீக்குளித்தார்கள், பின்பு அரசரும் அவரது படைகளும், சுல்தானை எதிர்த்து வீர மரணத்தை தழுவின.

கம்பிலா நகரம் வீழ்ந்தது, ராயின் 11 மகன்கள் சிறைபிடிக்க பட்டு , சுல்தானிடம் கொண்டு செல்லப்பட்டு, அவரின் ஆணையின் படி வலுக்கட்டாயமாக முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டார்கள். “நகரம் வீழ்ந்த பிறகு, சுல்தான் , பிணை கைதிகளான , ராயரின் மகன்களை அரச குடும்பத்திற்கு தரும் மரியாதை தந்து நல்ல விதமாக நடத்தினார்” என்று இபின் படுட சொல்கிறார். அதுவும் அல்லாமல் , தானும் அவர்களுடன் தோழர் மற்றும் நண்பராக இருந்தாக குறிப்பிடுகிறார்.

இபின் படுட சொல்லும் இந்த கதைக்கும், இதையே ஹிந்து பராம்பரிய படி பெர்னோ நுனுஸ் சொல்லும் கதைக்கும், சில கணிசமான வித்தியாசம் மட்டுமே உள்ளது. அது சுல்தானின் படை எடுப்புக்கு காரணத்தை சொல்கிறது. ஹிந்துக்கள் கணக்கின் படி , ஹிந்து அரசை அழித்து, ஒரு தூய இஸ்லாமிய அரசை நிறுவுதல் என்பதாகும். ஆனால் துக்ளக்கின் படி, அது கலகம் செய்தவர்களை அடக்குதல் என்பதாகும். ஹிந்துக்கள் படி சுல்தானால் ராயரின் நேரடி ரத்த வம்சம் அழிக்கபட்டது. ஆனால் இபின் படுட படி, ராயரின் 11 மகன்கள் முஸ்லிமாக மாறி உயிர் வாழ்ந்தனர்.


இரண்டு பேரும் சொல்லும் நிகழ்வில் உள்ள வேறுபாடு, உண்மையில் நடைபெற்ற படை எடுப்பு பற்றிய தகவலை மறுப்பதாக அமைய இல்லை. இந்த இரு நிகழ்வும் சொல்லும் தேதிகளை பொருத்தி பார்த்தால், இந்த நிகழ்வுகள் கண்டிப்பாக வேறு வேறு இல்லை. இரண்டும் ஒரே நிகழ்ச்சியை தான் குறிக்கின்றன. ஆச்சாரமான ஹிந்து மரபு படி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட ராயரின் 11 பிள்ளைகள் , ஹிந்து அரச குடும்பத்தின் கணக்கில் கொள்ளபட வில்லை என்று தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும். .

இபின் படுட தரவுகள் படி “துக்ளக் கம்பிலாவை காலி செய்த பிறகு, நேராக பஹ-உத்-தின் குஷ்ணசவ் தஞ்சம் அடைந்து இருக்கும் இளவரசனின் நகரத்திற்கு படையுடன் வருகின்றான். அந்த இளவரசன், பஹ-உத்-தின் குஷ்ணசவை கை விட்டு, சுல்தானின் நட்பை ஏற்று, பஹ-உத்-தின் குஷ்ணசவ் வை சுல்தானிடம் ஒப்ப்டைக்கின்றான்.

பஹ-உத்-தின் குஷ்ணசவை அவனுடைய பெண்களை கொண்டே இழிவுபடுத்த வைத்தம், துப்ப வைத்தும் சுல்தான் அவமான படுத்துகின்றான். பின் அவனை உயிருடன் தோல் உரித்து கொன்றான். அவனுடைய உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அரிசியுடன் சமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி பஹ-உத்-தின் குஷ்ணவின் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் கட்டாயமாக பரிமாற பட்டது. மறு பகுதி யானைகள் உண்ணும் உணவில் கலக்கப்பட்டு , யானைகளுக்கு கொடுக்கபட, அவை உண்ண மறுத்தது. பஹ-உத்-தின் குஷ்ண வின் தோலுக்குள் வைக்கோலை வைத்து பதப்படுத்தி, மற்ற கலககாரர்களை எச்சரிக்கும் விதமாக அதை நாடு எங்கும் எடுத்து போக சொன்னான்.

பெர்னோ நுனுஸ் படி,  “அனுகொண்டியை 1334 ல் கைபற்றிய பிறகு, மாலிக் நைப் என்றவனை அதன் ஆளுநராக நியமித்து விட்டு, வடக்கே திரும்பி போனான். சிறிது காலத்தில் நகரம் மீண்டும் எழுந்து கிளர்ச்சி செய்ய, சுல்தான பழைய ஹிந்து அரசரின் முதல் அமைச்சரான “தேஹோரா (Dehorao) அல்லது ஹரிஹரி1 (Harihara I) என்று அழைக்கப்படும் ஹிந்துவை , அரசர் ஆக்குகின்றான். ஏழு வருடம் அவர் ஆட்சியில் இருக்கின்றார். ஒரு நாள் ஹரிஹரி 1 மலைகளுக்கு வேட்டைக்கு செல்லும்போது, ஒரு முயல் இவரின் வேட்டை நாய்களுக்கு பயந்து ஓடாமல், அவற்றின் மீதே பாய்ந்து , கடித்து எதிர்த்து போராடியது. இந்த அற்புதத்தை பார்த்து பிரமித்து, ஹரிஹரி 1 திகைத்து,  வீடு திரும்பு போது, வழியில் உள்ள ஆற்றின் கரையில், மாதவச்சாரியார் வித்யாரண்யா என்ற ரிஷியை சந்திக்கிறார். இவர் தான் விஜயநகரம் என்ற நகரத்தை உருவாக்க தேஹோராவிற்கு அந்த இடத்தில் ஆலோசனை சொல்கிறார்.

மாதவச்சாரியார் வித்யாரண்யா அறிவுரையை ஏற்று , அதற்கான வேலைகளை ராஜா செய்து முடிக்கிறார், அதை செய்தவுடன், நாகும்தயம் (Nagumdym) என்ற இடத்தை விட்டு அகன்று, புதிய நகரத்தில் , மக்களுடன் குடிபெயர்கிறார். அந்த நகரத்தை தனது குருவின் பெயரான “ “வித்யாஜுனா” என்று அழைக்கின்றான் , அதாவது “வெற்றி திருநகரம்” என்ற பொருள்.

இவ்வாறு 1336ம் ஆண்டு  விஜயநகரம் முளைத்து எழுந்து, மிக பெரிய மகோதன்மய நிலைக்கு சென்று பரந்து விரிந்த பெரிய பேரரசாக நின்றது.

வரலாற்றின் படி, விஜயநகர நகரத்தில் தனது மாதவச்சாரியார் குருவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மிக பிரமாண்டமான கோவில் ஒன்றை ஹரிஹரி 1 எழுப்புகிறார். இது இன்று வரை பயன்பாட்டில் உள்ள அற்புதமான கோவில், ஹம்பியின் கோவில் என்று அழைக்கபடுகிறது. இந்த கோவிலை பற்றிய ஆவண தொகுப்பு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் இருக்கிறது. மேலே பாறைகள் சூழ்ந்து , நவீன கால ஜெயின் கோவில்களை ஒத்த, சுவர் முழுவதும் கற்கள் வைத்து கட்டப்பட்ட ஒரு சிறிய ஆலயம் உள்ளே உள்ளது. அது இருக்கும் இடத்தை வைத்து பார்த்தால், அதை சுற்றி இருக்கும் எல்லா பழமையான விஷயத்தை விட இது மிக பழமையானதாக இருக்க முடியும். அதன் வயதை சரியாக கணிப்பது கடினம். 1886ம் ஆண்டு, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில், சென்னை தொல்பொருள் மேலாளர் ரியா என்பவரால் பிரசரிக்க பட்ட இதழில் பின்வருமாறு சொல்ல பட்டு இருக்கிறது “இதை கட்ட உபயோக படுத்த பட்டு இருக்கும் சாந்தை வைத்து பார்க்கும்போது, இது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்ற ஐயத்தை தருகிறது”. அப்படி இருக்க வாய்ப்பும் உள்ளது, எவ்வாறு இருந்தாலும் அடுத்தடுத்து இது ஏதோ பெரிய மகான்களால் உபயோக படுத்தபட்டு இருக்க வேண்டும். இதை கடைசியாக மாதவச்சாரியார் உபயோக படுத்தி இருக்கிறார். அந்த பாறைகளின் மீது இன்று நாம் நின்று, அந்த இடிபாடுகளின் வழியாக ஒரு அற்புதமான நகரத்தை கற்பனை செய்து பார்த்தால், இயற்கையின்  மிக பெரிய மாயாஜாலத்தை காணலாம். ஏன் அனுகொண்டியின் பல தலைவர்கள் மற்றும் குரு மார்கள் , இந்த ஆற்றினால் பிரிக்கப்பட்ட தனிமையான இடத்தை விரும்பினார்கள் என்று புரியும்.

மாதவச்சாரியார் என்ற அந்த குருவை பற்றிய காலத்தை யாராலும் உறுதியாக சொல்ல முடிய வில்லை , விஜய நகரத்தின் பேரோடு கலந்து இருக்கும் அந்த மாதவச்சாரியார் என்ற குருவை ஒட்டி நடைபெறும் எல்லா பாரம்பரியம் அவரை குறிக்கிறதா அல்லது அதிக அளவில் அறியபடாத வேறு சாதுவை சொல்கிறதா என்று தெரிய வில்லை.  வேறு சில மாதவச்சாரியாரும் சிருங்கேரியில் வாழ்ந்ததாக சொல்லபடுகிறது.

விஜயநகர நகரம்  பிறந்த கதை பற்றி வேறு மரபு வழி கதைகளும் உண்டு.

முதல் கதை - 1323ல் துக்ளக்கால் , வாரங்கல் முழுதாக  அழிக்கபடும் போது அந்த மன்னரிடம் பணியில் இருந்த புக்க, ஹரிஹர சகோதரர்கள் , மாதவச்சாரியாருடன் தப்பி அனுகொண்டி மலை பிரதேசத்திற்கு சென்று, மாதவச்சாரியாரின் ஆலோசனை பேரில் விஜயநகரத்தை உருவாக்கினார்கள்

இரண்டாம் கதை- 1309ல் துக்ளக்கால் வாரங்கல் முதன் முதலில் கைபற்ற படும் போது , துக்ளக்கின் சார்பில் அதிகாரிகளாக  புக்க, ஹரிஹர சகோதரர்கள் அனுப்பட்டனர். மாலிக் காஃபூர் என்ற தளபதியின் கீழ் ஹோய்சலா பல்லாலர் அதிகாரத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் அவர்கள் இருந்தனர். பலமான போரட்டத்திற்கு பின்னர் ஹிந்து ராஜ்யத்தின் தலைநகரமான துவாரசமுத்திரா கைகொள்ள பட்டது.  ஆனால் புக்க, ஹரிஹர சகோதரர்கள் இருந்த படை தோற்கடிக்கப்பட, அவர்கள் அனுகொண்டி மலை பிரதேசத்திற்குள் தஞ்சம் அடைந்தனர். அங்கே மாதவசாரியார் என்று துறவியை சந்தித்து , சிந்தனை பெற்று, இஸ்லாமிய அரசுக்கு எதிராக விஜயநகரத்தை உருவாக்கினார்கள்.

விஜய நகரம் உருவானது பற்றிய கதைகள் வேறாக இருந்தாலும், எல்லா கதையும்  புக்க, ஹரிஹர சகோதரர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் , வாரங்களில் இருந்து அனுகொண்டி போனர்கள் என்பதை ஒரு மனதாக சொல்கிறது. போனதற்கு காரணம், தாங்கள் ஹிந்துக்கள் என்று பெருமையின் வெளிப்பாடுதான். விருப்பம் இல்லாமல், முகம்மதியர்கள் கீழ் பணி புரிய முதலில் ஒப்புக் கொண்டாலும், தேச பற்றாலும், மதப் பற்றாலும் உந்தப்பட்டு, அவர்கள் தங்கள் எஜமானர்களின் உத்தரவை துறந்து, சக ஹிந்துக்களுடன் இணைந்து போராட தொடங்கினார்கள்.

அடுத்த கதையின் படி மாதவச்சாரியார் மறைத்து வைக்கப்பட்ட ஒரு புதையலை கண்டுபிடிக்க, அதை வைத்து விஜயநகரத்தை உருவாக்கினார், மரண தருவாயில் அதை குருபா என்ற இன குடும்பத்தில் ஒப்படைக்க, அவர்கள் அரசாள தொடங்கினார்கள்.
போர்த்துகீசிய வரலாற்று ஆசிரியர்  “குடோ” (couto) , விஜய நகரம் தோன்றிய வருடம் 1220  என்று சொல்லி, வேறு கதை பேசுகிறார். “மாதவச்சாரியார் துறவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்து போது , அவருக்கு பணி விடை செய்து கொண்டு இருந்த புக்கா என்ற இடையனை பார்த்து ஒரு நாள் “ நீயே இந்த பிரதேசங்களை வென்று ஆட்சி செய்ய போகும் பேரரசன்” என்று ஆசி வழங்கினார். அந்த வார்த்தையை கேள்விப்பட்ட இடையர் கூட்டம் அவரை தலைவன் என்று ஏற்று கொண்டு அவர் பின் அணி வகுத்தது. அவர் தனது சுற்றியுள்ள viz., Canara, Taligas, Canguivarao, Negapatao ஐந்து பிரதேசங்களை வெற்றி கொண்டார். அவர்களின் வழிகாட்டி குருவாக மாறினார், அவரே பிற் காலத்தில் அரசர் புக்க ராயர் எனப்பட்டார்.  துக்ளக் இவர் மீது படை எடுக்க, அவனை தோற்கடித்து, அவனை பின் வாங்க செய்தார், அதன் பின் விஜய நகரத்தை கட்டி முடித்தார்”.

அதை தான் நாம் தவறுதலாக பிஸ்நாக (Bisnaga) என்று அழைக்கின்றோம். ஆனால் அங்கே வாழும் ஆதி குடிகள் அதை “கனரா ராஜ்யம்” என்று அழைகின்றார்கள். போர்த்துகீசிய “குடோ” வின் விவரிப்பில், பல கதைகள் எல்லாம் சேர்ந்து ஒரு கலவையாக தெரிகிறது. விஜய நகரம் தோன்றிய ஆண்டை அவர் தவறாக குறிப்பதில் இருந்து, பெர்னோ நுனுஸ் தகவல்களில் பாதியை மட்டும் தான் அவர் எடுத்துக் கொண்டு இருக்க வாய்ப்பு உண்டு, அல்லது போர்த்துகீசிய வரலாற்று ஆசரியர் “பர்ரோஸ்” Barros வின் ஆவணத்தின் சுருக்கமாக எடுத்து கொண்டு இருப்பார். மற்றவை, ஹிந்து மதம் சார்ந்த நம்பிக்கை கொண்டு வந்த விஷயமாக இருக்கும். 

ஆனால் ஒரு விஷயம் உறுதி, அது டெல்லி சுல்தான் துக்ளக் தோல்வி அடைந்தது.

மற்றொரு வரலாறு படி,  புக்கா மற்றும் முதலாம் ஹரிஹரர் ஆகியவர்கள்  ஹோய்சலா பல்லாலர் அவர்களின் எதிரிகளாக இருந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறது
1474 இல் இந்தியாவில் இருந்த நிகிடின் என்ற  ரஷியன் பயணி, விஜயநகரத்தில் இருந்து ஆட்சி புரிந்த “ஹிந்து அரசர் கடம்” என்று குறிப்பிடுவது இந்த அரசர்கள் கண்டிப்பாக பழமை வாய்ந்த கடம்பர் அரசு வம்ச வழியை சேர்ந்தவர்கள் என்ற கருத்திற்கு ஆதாரம் சேர்க்கிறது.


விஜய நகரம் உருவான விதம் பற்றி விதமான விதமான மரபு கதைகளும் , கற்பனைகளும் நம்மிடம் இருக்கின்றன, அதில் எதை எடுத்து கொள்வது என்பது நம் விருப்பம். ஹிந்து மரபுகளின் அடிப்படையும் , சரித்தர சான்றுகளையும் கலந்து வரும் முடிவுகளே, சரியானதாக இருக்க முடியும். அதன் படி பார்த்தால், குருபா இனத்தை சேர்ந்த ஹிந்து மதத்தின் மீது தீவிர பற்று உடைய இந்த இரண்டு சகோதரர்கள், வாரங்கல் மன்னரின் கருவூலதை நிர்வாகித்து வந்தார்கள். 1323 வாரங்கல் வீழ்ந்த பிறகு, அனுகொண்டி அரசரிடம் போய் வேலை செய்தார்கள். அனுகொண்டி தலைவரும், முகலாயர்கள் ஹிந்து மதத்திற்கும் அதன் மக்களுக்கும் செய்யும் கொடுமைகளை கண்டு வெறுப்புற்று, ஹிந்து மக்களை காப்பதே தங்கள் கடமை என்று உறுதி கொண்டு இருந்தார். அனுகொண்டியின் கருவூலத்தை பாதுகாக்கும் நிதி அமைச்சர்களாக ஹரி , புக்க சகோதரர்கள் உயர்த்தபட்டனர். 1334ல் துக்ளக் எதிராக புரட்சியில் ஈடுபட்ட அவரின் மருமகன் பஹ-உத்-தின் குஷ்ணச்பை, அனுகொண்டி அரசரிடம் தஞ்சம் அடைகின்றான். துக்ளக் அனுகொண்டியை தாக்கி , அரசரை கொன்று, மாலிக் என்பவனை அரசரின் இடத்தில் நியமிக்கின்றான். அனுகொண்டி மக்கள் மாலிக்கு எதிராக கிளர்ந்து எழ, அவர்களை அமைதி படுத்த, துக்ளக், நிதி அமைச்சர்களாக இருந்த  ஹரி, புக்க சகோதரர்களை , அரசரின் அதிகாரத்திற்கு உயர்த்துகின்றான். 

அவர்களே பின்னாளில் இஸ்லாமிய அரசுக்கு எதிராக விஜய நகரத்தை உருவாக்கி , சரித்தரித்தில் இடம் பெற்ற ஹரி ஹரி 1 , புக்கா 1.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...