Wednesday, June 1, 2016

எங்குமே நிரந்தரம் இல்லா பந்தங்களே

என்ன தான் நெருங்கிய உறவானாலும் , நட்பானாலும் , வாழ்க்கையின் ஒரு கட்டத்திற்கு மேல் அதை தொடர முடியாத நிலை ஏற்படலாம். அதை தொடர்வது நமது வாழ்க்கையிலும் சிக்கலை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்படுத்தி, இரண்டு பக்கமும் வேதனை படுவதை விட, அந்த உறவுகளையும், நட்ப்பையும், அப்படியே விட்டு விட வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.

இந்த உறவும், நட்பும் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா என்று தவித்த காலங்கள் உண்டு. நமது முடிவால் அவர்கள் வருந்த போகிறார்கள் என்று நாம் வருந்தி கொண்டு இருந்தோம். கவலைகள் நம்மை காயபடுத்த நாமே காரணமாக இருந்தோம்.

யாருக்காகவும் காத்திருக்காத காலம் , நமது காயத்தை ஆற்றி விட்டு அதன் போக்கில் விரைந்து கொண்டு இருக்கிறது. நினைவுகளை நிறுத்தி பார்க்கையில், எங்குமே நிரந்தரம் இல்லா பந்தங்களே நின்று கொண்டு இருக்கின்றன

நாம் திருஞானசம்பந்தரா ?

நேற்று வெகு காலம் கழித்து தோழி ஒருத்தர் அழைத்து இருந்தார் ஜெர்மனியில் இருந்து. "சிலதொழில்கள் தொடங்க உள்ளதாகவும் , ஆனால் என் கணவர் மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர் என்றும், அதனால் ஜாதகரீதியில் கிரக நிலை சரி இல்லாத காரணத்தினால் சிறிது காலம் கழித்து தொடங்க விரும்புவதாகவும் , தனக்கு உடன்பாடு இல்லை எனவும் , யார் சொன்னாலும் மறுக்கிறார் . உன் பதிவுகளை விரும்பி படிப்பார் என்பதால் ஒரு வேளை நீ சொன்னால் கேட்கலாம் என்பதால் அழைத்தேன் என்றார்.

வேயுறு தோளிபங்கன் என்ற கோளாறு பதிகம் படித்தால் போதாதா, திருதிருஞானசம்பந்தர் கூட அதைத்தான் படித்தார் அல்லவா  என்ற வேறு கேட்டார். நான் பேச வேண்டியது உன் கணவரிடம் இல்லையம்மா, உன்னிடம் தான் என்றேன்.

அது திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு, சமணர்களை வெல்ல கிளம்பு போது, கிரக நிலை சரி இல்லை அவருக்கு ,அது போக்க இறையை வேண்டி பதிகம் பாடினார். இறை இரங்கியது அவருக்கு.

அது எப்படி நமக்கு பொருந்தும், நாம் திருஞானசம்பந்தரா ?
திருஞானசம்பந்தர் அழுதவுடன் தாயாக வந்து அமுது ஊட்டினாள் உலகம்மை. பிள்ளை பாதம் தேய்கிறதே என்ற பிறைசூடன் தங்க காலணிகள் அனுப்பினான். சம்பந்தர் இறையின் பிள்ளை.

நாமும் இறையின் பிள்ளைகள் என்றாலும் , நமக்கு இறை வருமோ அப்படி?
நீங்கள் திரு திருஞானசம்பந்தராக இருந்தால் மட்டுமே அந்த பதிகத்தின் முழு பயனை பெற முடியும். இங்கே ராமனாக இருந்தால் மட்டுமே சீதா தேவி போன்ற மனைவியை பெற முடியும்.

இறைவனின் செயல்களை நமது செயல்களுக்கு உதாரணம் காட்டுவது தவறு இல்லை, ஆனால் இறையின் இயல்பை நாம் இயம்பி கொண்டு இருக்கின்றமோ என்பதே இயற்கையின் கேள்வி ?
இறை நடந்த வழிகளில் இருந்து நாம் நமது வாழ்வியல் தடத்தை அமைத்து கொள்ளலாம். இறையுடனும் அவரின் அடியார்களுடனும் நம்மை ஒப்பிடுதல் பாவம்.

இறை நம்பிக்கை இல்லை என்றால் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தொடங்கி விடலாம்.

முயற்சி திருவினையாக்கும். உண்மை. ஆனால் இறை கூட மனிதனாக மண்ணில் இறங்கிய பிறகும், தன் மனைவியை மீட்டு எடுக்க காலம் கனிந்த பிறகே களம் கண்டது

தோழிக்கு இறை நம்பிக்கை உண்டு, ஆனால் ஜாதகம் மேல் நம்பிக்கை இல்லை , கணவருக்கு இரண்டும் உண்டு. ஒருமித்த கருத்து ஏற்படா விட்டால் ஒன்று கணவரின் கருத்துக்கு உட்படுங்கள், இல்லை உங்களின் இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று பூ வாக்கு கேளுங்கள். இறை கண்டிப்பாக பதில் அளிக்கும் என்றேன்

அவரின் கணவர் ஏற்று கொண்டு விட்டார்.

நமக்கான பதில்களை நம்மை படைத்தவன் மட்டுமே அளிக்க முடியும்

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...