Monday, June 20, 2016

சனாதன மதத்தை காத்தல் என் தர்மம். அதில் என் தலையே போனாலும் வருத்தம் இல்லை.

மத அடிப்படைவாதிகளை பற்றி எழுதுவதால், எனது பாதுகாப்பை பற்றி கவலை பட்ட அன்பான தோழர்களுக்கும் , தோழிகளுக்கும் மிக்க நன்றி. இன்று வரை அப்படிப்பட்ட மிக தீவிரமான எதிர்ப்பு வந்தது இல்லை. சில சின்ன மிரட்டல்கள் வந்தன. எழுதுவதற்கு கை இருக்காது என்று ஒருவர் அன்பாக எச்சரித்தார். நான் பதிலுக்கு” நான் எழுதியது சரி என்பதை உங்கள் எச்சரிக்கை சொல்கிறது” என்றவுடன் அமைதியாகி விட்டார்.

மரணத்தை பற்றி பயம் இல்லாமல் இல்லை. குடும்பத்தை பற்றி கவலை இருக்கிறது. யார் போனாலும் இருந்தாலும் , ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை தொடர்ந்து பயணிக்க போகிறது. ஆனாலும் கொடூரமாக கொல்லப்பட்டால், அது குடும்பத்தில் தீராத வடுவாக போய் விடும் என்று கவலையாக இருக்கிறது. தந்தை அற்ற மகனாக என மகன் தரணியில் தடுமாறி நிற்பானோ என்று கலக்கமாக இருக்கிறது.

ஆனால் வேறு வழி இல்லை எழுதி தான் ஆக வேண்டும், அது நம்மை மரணத்திற்கே இட்டு சென்றாலும். எல்லா விஷயங்களையும் பற்றிய கவலை கொள்ளும்போது, என் ஆன்மிக நம்பிக்கையையும், என் முன்னோர்கள் வழி வந்த கலாச்சாரத்தையும் , அதனை தாங்கும் என் ஹிந்து மதத்தையும் பற்றி நான் கவலை கொள்ள தான் வேண்டும். நாம் கவலை கொள்ளாமல் வேறு யார் கவலை கொள்ள முடியும்.

வீட்டிற்குள் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டு விட்டு, கோவில்களுக்கு தீங்கு நேரும்போது, எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று மற்றவர்கள் இருக்கும் போது, என்னால் இருக்க முடியவில்லை. குறைந்த பட்சம் என் எழுத்தில் எதிர்ப்பை காட்டி இருக்கின்றேன்.

ஒரு நண்பர் அயல்நாட்டில் வேலை கிடைத்த பிறகு எழுதுவதை நிறுத்தி விட்டார். இன்னோர் நண்பர் கட்சிகளில் ஆர்வம் கண்ட பின்பு எழுதுவதை நிறுத்தி விட்டார். இன்னோருவர் ஹிந்து மதம் என்ற எழுதுவதே தன் சாதி பெருமை காக்க என்றளவில் வைத்து கொண்டார்.

நான் தொடர்ந்து எழுதுவதால் சில இடங்களில் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன். ஒரு அன்பர் அவரின் குழந்தைகளிடம் என்னை விட்டு விலகி இருக்க சொன்னார். இன்னொருவர் நட்பை துண்டித்தார். சில உறவுகள் அன்னியபட்டன. அலுவலகத்தில் நான் ஒரு ஹிந்து ,மத வெறியனாக அடையாளம் கொள்ளப்பட்டேன். குடும்ப உறவுகளில் பேதங்கள் வந்தன உண்மையில் மாற்று மதத்தவரால் பாதிக்கபட்டதை விட , என் முதுகில் குத்தியது சாட்சாத் நம் ஹிந்துக்கள் தான்.

தாங்கள் மதச்சார்பற்ற ஹிந்து என்று காட்டுவதற்காக ,தன் ஆன்மிக நம்பிக்கையை இழிவாக பேசுபவர்களுடன் கை கோர்த்து திரிந்து , அவர்களை கொண்டாடி நம்மை இழிவு படுத்த செய்தனர். குறிப்பாக பல பெண்கள் இதை செய்தனர்.

பாகிஸ்தானின் மலலாலா என்ற பெண்ணிற்கு வேதனைபட்டு விவாதம் செய்த ஹிந்துக்கள், அதே பாகிஸ்தானில் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக தினமும் வேட்டையாட படும் ஹிந்து பெண்களை பற்றி நாம் பேச்சு எடுத்தால் ,மெல்ல அந்த விவாதத்தை தவிர்க்கின்றனர். அந்த மலலாலா, ஒரு போதும் ஹிந்து பெண்களை பற்றி பேசியதில்லை என்ற சொன்னால் நம்மை வெறுப்போடு பார்க்கிறார்கள்.

தன் குழந்தைகளிடம் ஹிந்து மதம் சாத்தனை வழிபடும் கூட்டம் என்று கற்பித்து விட்டு, நம்மிடம் வந்து நட்பாக நாங்கள் அன்பு மதம் என்று சொல்லி திரியும் கூட்டத்துடன் எதற்காக போலியான நட்பை கொண்டாட வேண்டும்.

கவலை பட பல காரணம் பல இருக்க , இது ஒரு வேலை என்று எழுதி கொண்டு இருக்கிறாயே என்று ஏளனம் செய்தவர்கள் பலர். என் புகைபடத்திற்கு லைக் போட்டு விட்டதால், என் பதிவுகள் அவரின் முகபுதகத்தில் வந்ததை கண்டு. தன் மனைவி முகம் சுளிக்கிறாள் என்ற சொல்லி , புகைபடத்திற்கு லைக் செய்வதற்கு பதில் , புகைப்படம் நன்றாக  இருந்தது என்று whatsup மெசேஜ் அனுப்பிய நண்பர்கள்.

இவர்கள் எல்லாருக்கும் சேர்த்து தான் நானும் என்னை போன்றவர்கள் தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கின்றோம். ஒரு தேசம் நிலையாக இருந்தால் தான் , அந்த தேசத்தின் பொருளாதாரம், நிம்மதி எல்லாம் நிலையாக வளரும். ஆனால் அந்த தேசம் மாற்று மதத்தவரால் ஆட் கொள்ளபட்டால் , அந்த தேசத்தின் ஆன்மா கொல்லப்படும்.

கிறிஸ்தவத்திற்கும் , இஸ்லாத்திற்கும் முன்னே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, செழித்து வரும் பெருமை மிகும் தமிழ் கலாச்சாரத்தில் வழி வந்த கூட்டம் நாம். இது நம் மண். ஹிந்து மதம் என்ற பெயர் வைத்தாலும் வைக்க வில்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை. என் முன்னோர்கள் வழிபட்ட அத்தனை தெய்வங்களையும் ஹிந்து மதம் ஏற்கிறது.

எங்கள் கோவில்கள் எங்களின் தமிழ் வரலாற்றின் உச்சத்தை சொல்கிறது. என் குடும்பத்தின் பொருளாதார நிலை உயர அல்லும் பகலும் உழைப்பது என் கடமை. என் முன்னோர்கள் காத்த சனாதன மதத்தை காத்தல் என் தர்மம். அதில் என் தலையே போனாலும் வருத்தம் இல்லை.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...