Thursday, October 9, 2014

ஒரு ஹிந்து கோவிலின் அவல நிலைமை-எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்

ஒரு ஹிந்து கோவிலின் அவல நிலைமை, நான் திரும்ப திரும்ப இதை தான் சொல்வது, கிறிஸ்தவம் நம் கலாசார அடையாளங்களை அழிக்கும் என்று. மூன்று நாட்களுக்கு முன், சென்னை, காஞ்சிபுரம் , வேலூர் உள்ள ஊர்களில் தேவராம் பாட பெற்ற தலங்களை தரிசிக்கலாம் என்று கிளம்பினேன்.
(நான் ஒரு சகிப்புத்தன்மை உள்ள ஹிந்து, ஆனால் என் கோவில்கள் அழிந்தால் எனக்கு அதை பற்றி எந்த கவலை இல்லை என்று எண்ணம் உடையவர் என்றால் , உங்களுக்கான பதிவு இல்லை இது.)
அதில் ஒன்று, காஞ்சிபுரத்தில் உள்ள எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் , காண சென்ற போது , நொறுங்கிப் போனேன்.
அந்த கோவிலுக்கு செல்லும் வழி எங்கும் , கிறிஸ்தவத்தின் ஆளுமை முழுதாக உள்ளது. சென்னையில் இருந்து NH45 வழியாக , தண்டல் கூட்டு ரோடில் வலப்பக்கம் திரும்பி பயணித்த சிறிது நேரத்திலே , தமிழ் பெயர்கள் அற்ற, ஊர்களை காணலாம். கிறிஸ்தவம் உள்ளே நுழைந்து இருக்கிறது. கலாச்சார் மிச்சங்களை அழித்து இருக்கிறது.
போகும் வழியாக மப்படு என்ற ஊரை தொட்டால் , ஒரு பழமை வாய்ந்த சிவன் கோவில் தென்படுகிறது. அதன் அருகே ஒரு மசூதி காணலாம். என்ன நடந்து இருக்கும் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.
அந்த கோவிலை பற்றி விசாரித்தல் மிக அலட்சியமான பதில் வருகிறது, அதற்கு காரணம் , என் நெற்றி நிறைய திருநீறு என்று புரிகிறது. இறை அங்கு இல்லை என்று சொல்லி விட்டு விலகி போகிறார்கள், மிக தெளிவாக அவர்கள் மாற்று மதத்தினர் என்று தெரிகிறது. நான் சென்ற நேரம் நடை திறக்க வில்லை, (எப்போது திறப்பார்கள் என்று தெரியவில்லை), வெளியே இருந்து ஈசனை நினைத்து அழுது விட்டு நகர்ந்தேன்.
மேலே தொடர்ந்து, தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், பற்றி விசாரித்தல் , யாருக்கும் தெரிய வில்லை, ஒருவேளை தெரிந்து இருந்தும் பதில் சொல்ல விரும்ப வில்லை போலும்.
கூகிள் வரைபடம் வைத்து, அரக்கோணம் சாலையை தொடர்ந்து சென்றால் , நரசிங்கபுரம் என்ற இடம் வருகிறது, மிக விரைவில் நரசிங்கபுரம் தனது பெயரை இழந்து கிறிஸ்தவ பெயர் கொண்ட western பெயர் பெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
நரசிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தில், ஒரு ரோடு ஓர கிறிஸ்தவ ஆலயம் கட்டியம் கூறி நம்மை வரவேற்கிறது. தெய்வநாயகேஸ்வரர் ஆலயத்திற்கான வழி என்று ஒரு பழுப்பு ஏறிய பலகை நமக்கு வழி சொல்கிறது.
மிக மோசமான வழிகள், ஆனால் அமைதியான இடம். ரம்மியமான கிராம சூழ்நிலை. மெயின் ரோட்டில் இருந்து மிக தொலைவு. எனது இரு சக்கர வாகனம் பயணிக்க தடுமாறிய போது, திருஞானசம்பந்தர் தன் பிஞ்சு கால்கள் தேய இந்த வழியாக நடந்து வந்து இருப்பார் என்று நினைவு வருகிறது.
வழி சொல்ல யாரும் இல்லை, தட்டு தடுமாறி கோவில் அமைந்த கிராமத்தை அடைந்து, வழி கேட்டால் , நம்மை விசித்திரமாக பார்கிறார்கள். ஒரு வழியாக கோவிலை அடைந்தால், கோவிலின் மிக மிக அருகே ஒரு பெரிய கிறிஸ்தவ ஆலயம் உள்ளது.
கோவில் மூடி கிடக்கிறது. சிறிய கதவு வழியே உள்ளே சென்றால், கோவில் நல்ல பராமரிப்பில் இல்லை. மூடிய இரும்பு கதவு வழியாக , ஈசனை நோக்கினால் , ஈசன் சிறைபட்டதாக தோன்றுகிறது.
சம்பந்தர் வந்து தேவாரம் பாடல் பெற்ற தலம், சீண்டுவார் யாரும் இல்லாமல் இருக்கிறது. என் ஈசனே உனக்கா இந்த நிலைமை என்று , கண்ணிற் வழிய நிற்கும் போது, ஒரு பெரியவர் வந்து நின்றார்.
கோவிலை கூட்டி தீபம் போடுபவர். கோவிலை திறந்து விட்டு தரிசனம் செய்ய வைத்தார். மொத்த கிராமத்தில் 95% கிறித்தவர்களாக மதம் மாறி விட்டார்கள் என்றும், சில கிறிஸ்தவ கும்பல் மிச்சம் இருக்கும் ஹிந்துகளையும் மத மாற சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன்.
விஷேச தினங்கள் மட்டும் கூட்டம் வரும் என்றும், அன்று மட்டும் அர்ச்சகர் வருவார் என்றும் சொன்னார். அர்ச்சகரை குறை சொல்லி ஒன்றும் இல்லை. ஊர் மக்கள் வந்தால் தான் தானே வருவாய் கோவிலுக்கு, அவருக்கு குடும்பம் உள்ளதால், அவர் திருவள்ளுருக்கு சென்று விட்டார்.
பல நிலங்கள் இருந்தும், தின பூஜை எதுவும் இன்றி , விசேச தினத்திற்காக ஈசன் காத்து கொண்டு உள்ளான். என்ன செய்வது என்று புரியவில்லை. அவரிடம் ஒரு ஆயிரம் ருபாய் கொடுத்து கோவிலை நன்றாக பார்த்து கொள்ளுங்கள், தினமும் தீபம் ஏற்றுங்கள் என்று வேண்டி கொண்டு , சம்பந்தர் பாடிய தேவார பாடலை கருவறை முன் (உள் அல்ல) நின்று படித்து விட்டு வெளியே வந்தேன்.
இந்த மண் எல்லா மதத்தினருக்கும் சொந்தம், ஆனால் தமிழும், தமிழ் கலாச்சாரமும், ஹிந்து மதத்தோடு பெருந் தொடர்புடையவை. அதில் மாற்று மதத்தவருக்கு எந்த தொடர்பும் கிடையாது.
அதனால் அவர்களுக்கு நமது பழமையான கோவில் பற்றி அக்கறை இல்லை. நமக்கு இருக்கிறது, முடிந்த வரை இந்த ஆலயம் செல்லுங்கள்.
சகிப்புத்தன்மை என்ற சட்டையை , நாம் கழற்ற வேண்டியதில்லை, கிறிஸ்தவ மத மாற்றிகளே நம்மை கழற்ற வைத்து விடுவார்கள். நாம் கழட்டி வைத்தால் , என்ன நடக்கும் என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள்.
கிறிஸ்து அன்பானவர். ஆனால் கிறிஸ்தவம் இந்த தேசத்தின் கலாச்சாரத்திற்கு அபாயகரமானது!!
குறிப்பு: எல்லா புகைப்படத்தையும் பாருங்கள், மற்ற கோவில்களை பற்றி தனியாக பதிவு இடுகின்றேன்.






கிறிஸ்தவம் தமிழரோடு இணைந்ததா?

நண்பர் ஒருவர் எனது தெய்வநாயகேஸ்வரர் கோவில் பதிவை பகிர்ந்தார். நான் எனது கட்டுரையில் எந்த இடத்திலும், யேசுவை பற்றி ஒரு வார்த்தை தவறாக சொல்ல வில்லை. ஆனால் பதிவுக்கு கருத்து தெரிவித்த நபர் எடுத்தவுடன் ஈசனை இகழ்கிறார். கிறிஸ்தவம் இல்லை எனில் இந்த தேசம் கல்வி அறிவு பெற்று இருக்காது என்று ஏகடியம் வேறு. என்ன மட்டமான சிந்தனை. கிறிஸ்தவம் வரும் முன் இந்த தேசம், எழுத்தறிவே பெற வில்லையா என்ன?. 
தமிழன் என்ற உணர்வு இருந்தால் , சங்க இலக்கியம் பற்றி யோசித்து இருப்பார். நீங்கள் திருவள்ளுவரையே கிறிஸ்தவர் என்று சொன்னவர்கள் தானே. ஹிந்து மதம் வந்த கதை இருக்கட்டும். கிறிஸ்தவம் இந்தியாவில் எப்படி வந்தது. கடல் வழியாக தானே. உங்களுக்கும் முன் ஹிந்து மதம் வந்து விட்டதல்லவா. 
ஒரு விவாதத்திற்கு இவர் சொல்வதை போல் வைத்து கொண்டால், நான்அந்நிய மதமான ஹிந்து மதத்தை கைவிட்டு, தமிழரின் வழிபாடான இயற்கையை வழி பட தயார். இவர் அந்நிய மதமான கிறிஸ்தவத்தை விட்டு, தமிழர்கள் போல் இயற்கையை வழிபட முடியமா?.
ஹிந்துமதம் தமிழரோடு இணைந்தே உள்ளது என்பதற்கு மித சரியான உதாரணம், தமிழர்கள் பஞ்ச பூதங்களை வழிபடுகின்றனர். பொட்டும் பூவும் உள்ள கலச்சாரம் இது. மற்ற மதங்களின் கோவிலுக்கும் எங்களால் சென்று வழிபாடு நடத்த முடியும். ஏன் எனில் எங்கும் நிறைபவன் இறைவன் என்று நாங்கள் அறிவோம்.
கிறிஸ்தவம் தமிழரோடு இணைந்ததா?. மிக தெளிவாக தமிழரின் கலாசாரம் ஆன, பொட்டையும் , பூவையும் , இயற்கை வழிபாட்டையும், தமிழ் பெயர்களையும் புறந்தள்ளி வைத்து உள்ளது அல்லவா?. கிறிஸ்தவ ஆலயத்தில் மட்டும் இறைவன் உள்ளான் என்று சொல்லி, இறைவனை ஒரு இடத்தில் மட்டும் அடைத்த கூட்டம் அல்லவா நீங்கள்.
இப்போது தான் சில நல்ல கிறிஸ்தவர்கள் இதை பற்றி வருந்தி, திருந்தி, தமிழர் வழி வருகின்றனர. மாதாவை கும்பிடும் சில கிறிஸ்தவர்கள் ஹிந்து கோவிலுக்கும் வர தொடங்கி உள்ளனர்.
இயேசுவின் பாணியில் சொல்வதேன்றால் , "இறையே இவர் அறியாமல் செய்கிறார், இவரை மன்னித்து விடுங்கள்"

ஒரு இஸ்லாமிய நண்பர் உடனான விவாதம்.

ஒரு இஸ்லாமிய நண்பர் என்னிடம் நான் இஸ்லாத்திற்கு எதிராக தவறான புரிதல் கொண்டு உள்ளேன் என்று வருத்தப்பட்டார். சிறிது நேரம் விவாதம் செய்தோம். பேச்சு பாலஸ்தீன்ம் வரை சென்று அக்பர் வரை திரும்பியது.
உண்மையில் சொல்லப் போனால் இஸ்லாம் என்ற வார்த்தை அறிமுகபடுத்தியது என் சிறுவயது பள்ளி பாட புத்தகங்கள். கஜினியையும், முஹம்மது கோரியை பற்றி அறிந்த போது இஸ்லாம் எனக்கு அறிமுகம் ஆனது. இந்திய அராசங்கம் இப்படிதான் இந்த நாட்டு மக்களுக்கு அறிமுகபடுத்தியது, கோவில்களை கொள்ளை அடித்து சென்றவர்கள் என்று.
நானும் மதச்சார்பற்ற என்ற கொள்கையை உடையவன் என்பதில் பெரு நம்பிக்கை கொண்டு விளங்கியவன். பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவகர்கள் மீது பெரும் வெறுப்பு ஏற்பட்டது. பின்னாளில் அந்த மசூதியை நீதிமன்றம் மூலம் பேசி அகற்றி, ராமர் கோவிலை கட்ட முயற்சி செய்து இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். 
அகற்றி இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பெரும்பான்மை கூட்டமாக சென்று இடித்தால் சிறுபான்மை மக்களுக்கு பயம் வர தான் செய்யும். அந்த செயலை தவிர்த்து நீதிமன்றம் மூலமாக,செய்து இருக்க வேண்டும் என்று இன்று வரை நம்புகின்றேன்.
குஜராத் கலவரத்தின் போது, முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டதாக சொன்ன போது, எனக்கு நான் சார்ந்து இருந்த ஹிந்து மத மக்கள் மீது கோவம் வந்ததது. ஆனால் கலவரத்தில் 700க்கு அதிகமான ஹிந்து மக்களும் கொல்லப்பட்டதை உச்ச நீதிமன்றம் அறிக்கை சொன்ன பிறகும், குஜராத்தில் முஸ்லிம்கள் மட்டும் கொல்ல பட்டதாக, இஸ்லாமிய அமைப்புகள் திரும்ப திரும்ப சொல்லிய போது, எரிச்சல் வந்ததது. 
ஒரு உயிரின் மதிப்பு கூட அதன் சார்ந்த மதத்தின் மீது வைத்து மதிப்பீடு செய்யபடுவதாக தோன்றியது? முதன் முதலில் என்னுள் தோன்றிய விசயம் இங்கு சிறுபான்மை மக்களின் உயிர் மட்டும் மதிப்பு பெற்றதா ?
ஹிந்துவாகிய நான், முஸ்லிம்கள் தாக்க படுவதை கண்டிக்கும் போது, ஏன் அந்த அமைப்புகள் என் மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்க மறுத்தனர் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
காஷ்மீர் பண்டிட்கள் . காஷ்மீரை விட்டு துரத்தி அடிக்க பட்ட போது, ஏன் எந்த இஸ்லாம் அமைப்புகளும் காஷ்மீர் ஹிந்துக்களாக பேச வர வில்லை.
இஸ்ரேல் அரசால் கொல்லப்பட்ட குழந்தைளை கண்ட போது, எல்லார்க்கும் வேதனை தந்தது. இஸ்ரேலை கண்டித்து, ஹமாஸ்க்கு ஆதரவாக பல பதிவுகள் இஸ்லாமிய நண்பர்களால் பதிவு செய்யபட்டது. இஸ்ரலை பிடிக்கும் என்றாலும், இஸ்ரேலை கண்டித்து பதிவுகள் போட்டேன்.
ஆனால் அதே ஹமாஸ் சொந்த இன குழந்தைகளை , உளவு சொன்னதாக சொல்லி கொன்ற போது, என் இஸ்லாமிய நண்பர்கள் உட்பட மௌனம் சாதிக்கின்றனர். இது பாரபட்சம் அல்லவா.
சொந்த இன இஸ்லாம் மக்களை கொன்று குவித்து , இந்தியாவிற்கு எதிரான போரை அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஆதரித்து பதிவுகள் பதிய பட்டால் உங்களை பற்றி நாங்கள் என்ன நினைப்பது.
குண்டுகளை வைத்து விட்டு . அதற்கு முஸ்லிம் பெயர் கொண்ட அமைப்புகள் பொறுபேற்று கொண்டு , ஜிஹாதிற்கு ஆக செய்தோம் என்ற சொன்ன போது தான், அது இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று அரசாங்கம் அறிவித்தது.
எனக்கு தெரிந்த வரை எந்த அரசாங்கமும தானாக சொல்லவில்லை. அவர்களே தங்களை இஸ்லாமிய போராளிகள் என்று அறிவித்து கொண்டனர். போராளிகள் அரசாங்கத்துடன் அல்லவா போர் செய்ய வேண்டும். இங்கே நிராயுதபாணியாக மக்கள் கூடும் கோவில்களையும், சாலைகளையும், குறி வைத்து கொன்று, அது மதத்திற்கு என்று சொன்னால், அதை எப்படி ஏற்பது. போராளிகள் இங்கே தான் பயங்கரவாதிகள் என்று உருப்பெற்றது.
எல்லா மக்களும் தீவிரவாதிகள் இல்லை என்பதை நாங்களும் ஒத்து கொள்கின்றோம்.ஆனால் அந்த மதத்தை பற்றி அப்படி ஒரு பிம்பம் விழ உங்கள் மக்கள் காரணமா, எங்கள் மக்கள் காரணமா அல்லது அரசாங்கமா என்று சிந்தித்து பாருங்கள்.
சிறும்பான்மை மக்களை அச்சுறுத்தி பெரும்பான்மை மக்கள் பேசினால்/தாக்கினால் , முதல் எதிர்ப்பு ஒரு ஹிந்துவிடம் இருந்து தான் வரும். ஆனால் பெரும்பான்மை மக்களை அச்சுறுத்தி சிறும்பான்மை மக்கள் பேசினால்/தாக்கினால், எந்த சிறுபான்மை இன மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.
நீங்கள் அதை ரசிக்கிறீர்கள் என்று எங்களுக்கு எண்ண தோன்றுகிறது.
சாதிய கொடுமைகளை நானும் பலமுறை எதிர்த்து உள்ளேன். சாதிய முறையை எதிர்ப்பது, என்பது என் மதத்திற்கு எதிரானது அல்ல. என் மதத்தை மீட்டு எடுத்து மேல் நோக்கி நகர வைப்பது.
என் மதம் என்பதாலே அதை தூக்கி பிடித்து கொண்டு திரிய மாட்டோம். யார் தவறு செய்தாலும், தவறு தவறுதான்.
ஹிந்து மதமும், அதன் மக்களும் , சகிப்புதன்மை கொண்டவை. எங்கள் மக்கள் பலர் இன்று மதச்சார்பற்ற என்ற நிலை ஹிந்து மதத்தையும், அழிவுக்கு கொண்டு போக வைக்கும் என்ற பயத்தை உணர தொடங்கி உள்ளனர்.
அப்படி அந்த பயத்தை உணர்த்தியது எந்த ஹிந்து மத தலைவரும், அமைப்பும் இல்லை என்பது சத்தியம்
நட்பாய் , நடுநிலையாய் இருக்க விரும்புகிறோம,
அதுவே இந்த நாட்டை இதுவரை நடத்தி கொண்டு போகிறது.
அது தொடர போகிறதா என்பதே என் கேள்வி!!

"பதிவை போட்டு என்ன விசயத்தை சாதிக்க போகிறிர்கள்" ஒரு தங்கையின் கேள்வி

"பதிவை போட்டு என்ன விசயத்தை சாதிக்க போகிறிர்கள்" ஒரு தங்கையின் கேள்வி. என்ன விஷயத்தை சாதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்கிறீர்கள் என்று கேட்டேன். வேறு எதாவது எழுதுங்கள் என்றார். நீங்களே சொல்லுங்கள் எதை பற்றி எழுதலாம் என்றேன். எதாவது எழுதுங்கள் , மத மாற்றத்தை தவிர. ஏன் என்று கேட்டேன்.
தயக்கமாய் உள்ளது அது மட்டும் அன்றி தண்ணிர், மின்சாரம் போன்ற பிரச்னைகளை பற்றி எழுதலாமே என்றார். இங்கே தான் பிரச்சனை. இந்தியா விளையாட்டு போட்டிகளில் தோற்றுவிட்டால், முக நூலில் வந்து இவர்கள் அழுது புலம்பும் போது, தண்ணிர், மின்சாரம் போன்ற பிரச்சினைகளை பற்றி வருத்தபடலமே யாராவது சொன்னால் கொலை வெறிக் கொண்டு சொன்னவர்களை பார்ப்பார்கள்.
இவர்கள் ஒரு துரும்பை கூட எதற்கும் எடுத்த போட மாட்டார்கள். ஆனால் நாமாக ஒரு விஷயத்தை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று நினைத்தால் உடனே நம்மிடம் வேறு விஷயத்தை தூக்கி கொண்டு வருகிறார்கள்.
இந்த தங்கைதான் கிருஷ்ண ஜெயந்தி அன்று தனது குழந்தைகளுக்கு, கோகுல கண்ணன் போல வேடம் அணிவித்து எங்கள் வீட்டில் கண்ணன் என்று பதிவை போட்டார். இவர் மட்டும் அல்ல பலரும் அந்த மாதிரி புகைப்படங்களை வலைத்தளத்தில் ஏற்றினார்கள். மிக்க மகிழ்ச்சி.
அடையாளம் என்று ஒன்று இருந்தால் தானே அணிவிக்க முடியம். கண்ணன் என்ற அடையாளத்தை தாங்கி பிடிப்பது ஏது?
நீங்கள் கண்ணனை கொண்டாடி விட்டால் போதுமா. உங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் , அவர்களுக்கு வர போகும் பல தலைமுறைகளுக்கு இந்த மாதிரி கண்ணன் வேடம் அணிவித்து அழகு பார்க்க வேண்டாமா?. அதற்கு நமது அடையாளமான நமது மதத்தை பாதுகாக்க வேண்டும் அல்லவா.
கண்ணனையும் , சிவனையும் கடவுள் இல்லை என்று சொல்லும் மாற்று மதத்தினர் உங்களை சுற்றி பெருகிக் கொண்டு இருகின்றனர். ஹிந்து மதத்தின் மக்கள் தொகை வேகமாய் குறைந்து கொண்டு வருகிறது என்ற குறிப்புக்கள் தெரிவிகின்றன. நீங்கள் கவனிக்க வில்லையா , இல்லை கவனிக்க வில்லை என்பதை போல் நடித்து கொண்டு உள்ளிர்களா. பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்களின் நிலை என்னவாயிற்று என்று யோசித்தது உண்டா?. குமரி அம்மனின் மாவட்டமான , கன்னியாகுமரியை, ஏன் கன்னிமேரி என்று மாற்ற முயற்சித்து ஒரு மண்டைகாடு கலவரத்திற்கு வித்திட்டார்கள் என்று என்றாவது படித்தது உண்டா?.
வரலாற்றை புறந்தள்ளி , வீதியில் விழுக பார்கிறிர்கள். இது முட்டாள் தனம் அல்லவா.
எனது தெய்வனகேஸ்வரர் கோவிலின் அழிவை பற்றிய பதிவு, கிட்ட தட்ட 700க்கு மேல் பகிரப்பட்டது. எனது முக நூல் மெசேஜ் மட்டும் 500 யை தாண்டியது. ஆனால் எனது நட்பு வட்டாரத்தில் இருந்த பல பேர்கள் மௌனமாய் இருந்தர்கள்.
சாதாரண மண்புழு கூட தனது எதிர்ப்பை காட்டும். கொடுமை எனில் மிக பெரிய சிவ பக்தர்கள் என்று எனக்கு அறிமுகமான நபர்கள் வாய் பொத்தி மௌனித்தார்கள். ஆனால் மிக சாதாரணமான மனிதர்கள் , பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் மனிதர்கள் , அறிமுகம் அற்ற கல்லுரி மாணவர்கள் அந்த பதிவை வேகமாய் பகிரந்தார்கள். தங்களது தனிப்பட்ட கவலைகளை புறந்தள்ளி அந்த தகவலை நமது மக்களிடம் கொண்டு சேர்த்தனர். மெல்ல ஒரு விழிப்புணர்வு பரவியதை பார்க்க முடிந்தது. நீங்கள் செய்திர்களா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்
இந்த தங்கைக்கு ஏன் அந்த கவலை வரவில்லை. இத்தனைக்கும் மிக பெரிய பக்தி மான் அவர். எனது பகிர்வை பகிர்ந்து தான் தனது கவலையை சொல்ல வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
உனக்கும் எனக்குமான , பொதுவான இறை நம்பிக்கைக்கும், அதை தாங்கி பிடிக்கும் எனது கலாச்சார அடையாளதிற்காக , எனது சக்திக்கு உட்பட்டு, எனக்கு தெரிந்த வழியில் நான் போராடி கொண்டு இருந்தால், என்னை நீ ஆதரிக்க வேண்டாம் , ஆனால் முடிந்த வரை என்னை குறை சொல்லாமல் இரு.
நான் மட்டும் அல்ல பல நண்பர்களின் நிலையும் அதுதான்.
எதிரி எப்போதும் வெளியில் இல்லை, உள்ளே தான் இருகின்றான் என்ற பழமொழி நினைவுக்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

சாதியை மறுப்பு என்பது எல்லா சாதியையும் மறுப்பது

பிராமிணர்களை விமர்சித்து எழுத கூடாது என்பது என் கொள்கை அல்ல. இங்கே சாதியை மறுப்பு என்பது எல்லா சாதியையும் மறுப்பது. ஆனால் சாதி மறுப்பு என்று பேசப்படும் போது, பிராமிணர்களை மட்டும் குறி வைத்து தாக்குவதும் , எழுதுவதும் என்பது தான் சாதி மறுப்பு என்ற கொள்கை என்றால் அந்த கூட்டத்தில் சத்தியமாக நான் இல்லை.
எப்படி கிறிஸ்தவத்தை/இஸ்லாத்தை பற்றி விமர்சித்து எழுதும் போது, சில நல்ல கிறிஸ்தவ/இஸ்லாமிய உள்ளங்கள் காயப்படும் என்று மனம் பதறுகிறதோ, அதே மாதிரி தடுமாற்றம் பிராமிணர்கள் பற்றி எழுதும்போது வருகிறது.
ஒரு பிராமிண தங்கையிடம் பேசி கொண்டு இருந்த போது, தான் கிறிஸ்தவ நபர்களுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் சர்ச்சுக்கு செல்வதாக கூறினார். நல்லது உங்கள் கிறிஸ்தவ  நண்பர்கள் நமது பெருமாள் கோவிலுக்கு வருகிறார்களா? என்று கேட்டேன்.
பதில் இல்லை. மீண்டும் கேட்டேன். வர மாட்டார்கள் என்றார். ஏன் நீங்கள் மட்டும் போகிறிர்கள் என்றேன். அமைதியாக இருந்தார்.

உங்களை சுட்டி காட்டி, கிறிஸ்தவ மத மாற்றிகள் , சாதாரண மக்களை மாற்றுவார்கள். பாருங்கள்!! பிராமிண பெண்ணே இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு எங்கள் சர்சுக்கு வருகிறார் , நீங்கள் ஏன் வர கூடாது என்று மற்றவர்களை பார்த்து கேட்பார்கள் என்று சொன்னேன். அதற்கு ஏன் துணை போகிறிர்கள் என்று கேட்டேன்.

பெருமாள் கோவில் பிரசாதத்தை உங்கள் கிருஸ்த நண்பர்கள் சாப்பிடுவார்களா என்றதற்கு இல்லை என்று சொன்னார். நான் சிரித்தேன்.
மெல்லிய கோபம் வந்தது அவருக்கு , தொடர்ந்து விவாதத்தில் , கடைசியாக சொன்னார். " எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை" என்று சொன்னார். அமைதியாக எழுந்து வந்து விட்டேன்.
இவரை போன்ற ஆட்கள் ஹிந்து மதத்தின் மிக பெரிய பலவீனம். எந்த இஸ்லாமியரும், எந்த கிறிஸ்தவரும், நமது கோவில் பண்டிகைளின் போது, கொழுக்கட்டை கொடு , சக்கரை பொங்கல் கொடு, திருப்பதி லட்டு கொடு என்று கேட்பதில்லை.
ஆனால் நமது ஹிந்து மக்கள் தான், எப்போதும் மிக இழிவாக, கேக்கையும் , மட்டன் பிரியாணியையும் , சாப்பிட்டே இல்லாதவர்கள் போல், கிறிஸ்தமஸ் கேக் கொடு, ரம்ஜான் பிரியாணி கொடு என்று அலைகிறார்கள்
நானும் கேட்பேன், எந்த கிறிஸ்தவர்/இஸ்லாமியர் நான் கொண்டு வந்த கொழுக்கட்டையையும் , சக்கரை பொங்கலயையும் திருப்பதி லட்டுயையும் , எடுத்து உட் கொள்கிறார்களோ , அவரகளிடம் கிறிஸ்தமஸ் கேக் கொடு, ரம்ஜான் பிரியாணி கொடு என்று கேட்பேன். அப்படி பட்ட சில நல்ல நண்பர்கள் உண்டு.
ஒரு கிறிஸ்தவரும்/இஸ்லாமியரும் நமது கோவில் பிரசாதங்களை உட் கொள்ள மறுப்பதின் பொருள் என்ன வென்றால், நாம் இறை எண்ணும் வணங்கும் விஷயம் அவர்களை பொறுத்தவரை சாத்தான்.சாத்தனுக்கு படைக்கப்பட்ட பொருளை எப்படி உண்பது.
உங்களுக்கு ஆன்ம நம்பிக்கை தரும் ஆண்டவனை , அவர்கள் மனதிற்குள் சாத்தான் என்று பழிப்பார்கள்.
அடுத்தவனின் நம்பிக்கையை இழிவாக எண்ணக்கூடிய இவர்கள் தான் உலகின் "அன்பு மதங்கள்". இப்படித்தான் இவர்கள் உலகை ஏமாற்றி கொண்டு இருகிறார்கள்.
அந்த தங்கையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஹிந்து மதம் தானே பெருமாளை கொண்டாடி வருகிறது. கிருஸ்தவமா கொண்டாடி கொண்டு இருக்கிறது?. இவரின் கிறிஸ்தவ நண்பர்கள் ஏன் பெருமாள் கோவிலுக்கு வருவதில்லை. இவர் வணங்கும் பெருமாள் சாத்தான் என்பது அந்த நண்பர்களின் எண்ணம்.

தனது ஆன்ம நம்பிக்கையை இழிவாக எண்ணும் கூட்டத்துடன், எப்படி இவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. சத்தியமாக புரிய வில்லை.
இவரை சொல்லி குற்றம் இல்லை, இவரின் பெற்றோர் சகிப்புத்தன்மையின் அளவு என்று சொல்லி கொடுத்து இருக்க வேண்டும். இவர் மெதுவாக ஹிந்து மதத்தை விட்டு விலகுவார் என்று தெரிகிறது. யார் கண்டது விலகாமலும் போகலாம்
.
யாரை நம்பியும் ஹிந்து மதம் இயங்குவது இல்லை. இறை என்ற சொல் இருக்கும் வரை, ஹிந்து மதத்தின் இருப்பானது இருக்கும். ஹிந்து மதம் இறையை இயக்க வில்லை. இறை ஹிந்து மதம் என்ற சொல்லை இயக்குகிறது.
எப்போது எல்லாம் ஹிந்து மதம் என்ற சொல்லின் அமைப்புக்கு ஊறு நேருகிறதோ அப்போது எல்லாம், இறை இந்த மண்ணில் இறங்கி வந்து இருக்கிறது.
மீண்டும் இறங்கும்!!
இறங்க போகும் இறைக்கு , எனது தலைமுறையில் வரும் குழந்தைகள் துணை நிற்கும். ஹிந்து மதத்தின் கொடி பிடித்து நிற்கும், எதிர்க்கும்.

"வரலாறு படைத்தது இந்தியா... செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான்"

"வரலாறு படைத்தது இந்தியா... செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான்"
மிக்க மகிழ்ச்சி. இதயம் கனிந்த பாரட்டுகள் இஸ்ரோவிற்கு.. பாரதத்தின் விண்வெளி பயணம், இந்த தேசத்தின் கலாசாரத்தின் ஊடே எப்போதும் பயணித்து வந்து உள்ளது.
நமது விண்வெளி சாஸ்திர ஆரயாச்சியாளர் ஆரியபட்டவின் காலம் ஆகட்டும், மேற்கத்திய நாடுகள், செயற்கைகோள்கள் விட்டு நிரூபிக்கும் முன்னரே, இந்த தேசத்தின் கலாச்சாரம் , ஒன்பது நவ கிரகங்களை மிக சரியாக கணித்து, அதற்கான நிறத்தையும் சொன்னது. நவக்கிர கோவில்கள் மிக சரியான உதாரணம். அந்த கோவில்கள் 800 ஆண்டு பழமையானது என்பதே , நாம் எவ்வளவு விண்வெளியை பற்றிய அறிவியலில் உச்சத்தில் இருந்தோம் என்பதற்கான ஆதாரம்.
அற்புதங்களும், ஆரயாச்சிகளும் , இந்த தேசத்திற்கும் , கலாச்சாரத்திற்கும் புதிதல்ல, அது இந்த தேசத்தின் மக்கள் இடையே , வாழ்வியல் நடை முறையாக நடந்து வந்துள்ளது. வடக்கு நோக்கி தலை வைத்து படுக்காதே ,சொன்னதின் பின், காந்தத்தின் அமைப்பை பற்றி அறிவியல் உண்மை இருந்தது. சூரிய கிரகணதையும் , சந்திர கிரகணத்தையும் ,இந்த தேசமே மிக சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கணித்தது.
ஐரோப்பவிற்கும் , அரபு நாடுக்கும் , அற்புதங்களும், ஆரயாச்சிகளும் அதியசமானவை. ஒரு அற்புதம் நடந்து விட்டாலே , ஊர் கூடி ஒப்பாரி வைக்கும் தேசங்கள் அவை. வீதி வீதியாய் போய் அற்புதங்களை விற்பனை செய்யும் அல்ப கூட்டங்கள் அவை.
நாம் அப்படிப்பட்ட கூட்டம் அல்ல. நாம் வித்தியாசமான கோணம் கொண்டவர்கள். நம்மால் முடியாததை நாம் இன்று சாதிக்க வில்லை, நம்மால் முடியும், என்பதையும் , உலகுக்கு சொல்ல வில்லை.
நமது மக்களுக்கு சொல்லி இருக்கின்றோம்.இது பலம்மிக்க தேசம், ஆன்மிகத்தில் ஆகட்டும், ஆரயாச்சியில் ஆகட்டும், நம் கொடி எப்போதும் உச்சத்தில் பறந்தது என்று. யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று சொல்லி உள்ளோம்.
ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் நேரம் இது
மங்கள்யானை மங்களகரமாக வரவேற்போம்.
LikeLike ·  · 

274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 4-வது பகுதி

274 பாடல் பெற்ற தலங்களின் 2-வது சுற்றின் 4-வது பகுதி
சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர். சிறிய கோவில். அர்ச்சகர் அழகு தமிழில் உரைக்கிறார். தனது திருமண நிச்சயத்திற்கு செல்லும் சம்பந்தர் , உச்சி பொழுது நிறைகையில், இங்கே தங்க, ஈசன் உணவு கொண்டு கொடுத்த தலம். எந்நாட்டவர்க்குமிறைவன், இங்கே கண்ணிற்கு இனியவனாய் காட்சி தருகின்றான். கோவிலுக்கு நிதி உதவி தேவை என்று அர்ச்சகர் வெளிப்படையாக வேண்டுகிறார். தவறு இல்லை அதில்.
ஆனால் வாரி கொடுக்கும் வான்மீக நாதன் (ஈசன்) கோவில் வளம் அற்று இருக்கையில் உள்ளம் வலிக்கிறது. சுற்றி வந்தால் துணை தெய்வங்கள் தளர்ந்து போய் இருக்கிறது. ஈசன் எனக்கு கொடுத்த வளத்தில் என்னால் முடிந்த ஒரு பாகம் அவனுக்கு கொடுத்து வந்தேன்.
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர், உச்சிநாதர் கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. கொள்ளிட ஆற்று பெருக்கில் கோவில் சிதைந்து போக, இவ்விடம் கோவில் அமைத்து இறைவனை பேணுகின்றனர். மண்ணில் சற்று புதைந்த நந்தி நம்மை வரவேற்கிறது. வெள்ளை நிற லிங்கம், நம்மை பார்த்து சிரிக்கிறது. அதன் பின்பு ஈசனும், தேவியும் எழுந்து அருளி உள்ளனர்.
கபில முனிவரை கொள்ளை கொண்ட கண்மலர்கொண்டான் (ஈசன்), மீது மன்னனின் குதிரை கால் பட்டு பிளவு பட்ட தடம் உள்ளது. பிளந்து போனலும், பிறவி அறுப்பவனின் , பலம் குறையமா என்ன. இங்கும் அர்ச்சகர் கோவிலுக்கு நிதி வேண்டுகிறார். பராமரிப்பு என்ற வார்த்தை இந்த பக்கம் கூட எட்டி பார்க்க வில்லை போலும். கோவில் சுற்றி பார்க்கையில் அர்ச்சகர் முடிந்தளவு முயற்சி செய்து ,கோவிலை சரியாக வைக்க முயல்கிறார். நானும் முடிந்தவரை தென்பட்ட குப்பைகளை சுத்தம் செய்தேன். இயன்ற பண உதவி செய்து விட்டு அடுத்த கோவில் நோக்கி சென்றேன்.
'திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில் எனது பயண திட்டப்படி பார்க்க வேண்டிய கோவில். ஆனால், காரைக்காலில் உள்ள கோவிலை தவறாக புதுசேரி என்று குறிப்பிட்டு வைத்து கொண்டதால், கோவில் தேடி தலைச்சங்காடுதல பகுதி முழுதும் அலைந்தேன். என் பயண திட்டத்தில் இல்லாத பாடல் பெற்ற தலமான தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் கண்டேன். கோவில் திறந்து இருந்தது. ஒருவரும் இல்லை. மத்திம அளவு உடைய கோவில். ஒரளவு நல்ல நிலையில் உள்ளது. கருவறை சற்று இருட்டறையாக இருந்தால், சற்று பயமாக இருந்தது. சிறிய அகல் விளக்கு மட்டும் ஈசனின் இருப்பை சொன்னது. கறுத்தமணிகண்டர் (ஈசன்) நமக்கு வரும் கலவரத்தை கண்டு கள்ளத்தனமாய் சிரிக்கிறார். பிரகாரம் சுற்றி வந்தால், கால் எல்லாம் நடுங்குகிறது.
அசாதாரணமான அமைதி அச்சத்தை தருகிறது. மீண்டும் ஈசன் முன் வந்து நின்றால், கண்கள் இருளுக்குள் கலந்து அங்கே ஈசன் மட்டும் ஒளிர்கின்றான். பயம் மெல்ல விலகி, இறையின் பெயர் சொல்லி அழைக்க , அதுவரை அருகே இருந்த அச்சம் அணைந்து போனது. திருமால் வழிபட்டு சங்கை ஆயதமாக பெற்ற தலம் என்று குறிப்பு உள்ளது. தியானத்தில் இருக்கும் ஈசனின், தனிமை தவம் கலைக்க விரும்பமால், விடை பெற்றேன்.
திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இந்த கோவில் செல்லும்போது மதியம் 2.00 மணி. கோவில் சாத்தப்பட்டு இருந்ததால் , அருகே இருந்த அஞ்சுநேயர் கோவிலில் சிறிது ஓய்வு எடுத்தேன். நடை திறந்ததும், முகம் , கால் கழுவி உள்ளே சென்றேன். கோவிலின் தலபுராணம் மீண்டும் அர்ஜுனன் பாசுபதம் பெற்ற வரலாறை சொல்ல குழப்பம். திருவேட்களம் கோவிலும் அதே வரலாறை சொல்கிறது.
ஆனால் சின்ன திருத்தம், இங்கே அம்பாள், அர்ஜுனன் ஆயுதம் பெற தகுதியானவனா என்ற விவாதம் செய்த கதை வருகிறது, ஆனால் ஈசனை வில்லால அடித்த நிகழ்வு வராத காரணத்தினால், ஒரு நிகழ்வின் தொடர் நிகழ்வாக நாம் உருவகபடுத்தினால், நம்மால் இந்த கோவிலின் வரலாறை புரிந்து கொள்ள முடியும். கோவில் தெம்பாய் இருக்கிறது. ஈசன் இங்கே சதுர வடிவ ஆவுடையப்பன் மேல் உள்ளார். சலஞ்சடையான் (ஈசன்) நன்றாக கோவிலில் சஞ்சராம் செய்கின்றான். நற்றுணைநாதன் (ஈசன்) நலம் சொல்லி விசாரிக்க, நமக்கோ அவன் நாமம் சொல்லி நல்வழிப்படுத்த மனம் வேண்டுகிறது.
உலகம் இயங்குகிறதோ இல்லையோ , நமது உள்ளம் ஈசனின் துணையின்றி இயங்காது என்று உள்ளே உறைக்கிறது. நாகரிகம் என்ற பெயரில் கோவில் அழகை , அதன் சிறப்பை சிதைகிறார்கள் என்று மணியக்காரர் வருத்தப்பட்டார். எந்த அமைப்பு இன்றி கல் தூண்கள் நந்தி அமைந்த இடம் மேல் ஆயிரம் வருடமாய் நிற்க, அதன் மேல் டைல்ஸ் அடித்து அதன் சிறப்பை மறைத்து விட்டார்கள் என்று காட்டினார். என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கோவில் சுற்றி வந்து விடை பெற்றேன்.
தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில், மற்றும் திருதேளிசெர் கோவில் செல்லும் வழி யாருக்கும் தெரியாமல் தடுமாற, நற்றுணையாவது நமச்சிவாயமே என்ற எண்ணி, ஈசனிடம் மனதில் மன்றாட , ஈசன் மனம் இரங்கினான்.







பாகிஸ்தான்!! வெறுப்பில் பிறந்த தேசம்

பாகிஸ்தான்!! வெறுப்பில் பிறந்த தேசம். பாரத தேசத்தை பகைமையோடு பார்க்கும் தேசம். அங்கே பிறக்கும் சின்ன சிறிய சிசுவுக்கும், பாரதத்தை சிதைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்து சொல்லி வளர்கபடுகிறது. இது நேற்று இன்றோடு முடிய போகிற பகை இல்லை. 1000 வருடங்கள் முன் முகமதிய அரசர்கள் மதத்தின் பெயரால் இங்கு நடத்திய வன்முறைகள், தலைமுறை தலைமுறையாய் பாரதத்தில் சொல்லப்பட்டு, அதன் உச்ச கட்டமாக பாரத பிரிவனை போது மீண்டும் இங்கு நடத்தி காட்டப்பட்டது. விளைவு நம்பிக்கை இன்மை எங்கும் இரு தேசத்திலும்ம் விதைக்கப்பட்டது.
அடுத்த மதத்தின் இருப்பை பொறுத்து கொள்ள மறுக்கும் மதத்தை அடிபடையாக கொண்டு அரசாலும் ஒரு தேசம், எப்படி தன் மதத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான தேசத்தை அருகாமையில் அனுமதிக்கும். நம்மை அழிக்கும் வரும் வரை அது நிம்மதி அற்றே இருக்கும். சொல்ல போனால் , இந்த தலைமுறையும் நமக்கு அடுத்த தலைமுறையும் சிறு சிறு பிரச்சனைக்களோடு கடந்து செல்லும்.
ஆனால் வெகு நிச்சியமாக இறுதி யுத்தம் நிகழ்ந்தே தீரும்.இரு தேசத்தில் ஏதாவது ஒன்று அதன் இருப்பை இழந்து விடும்.
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு. நாம் என்ன தான் மத சார்பற்ற நாடு என்று சொன்னாலும், அது நம்மை , ஹிந்துக்களின் நாடக மட்டும் பார்க்கும். எனவே யுத்தம் என்று வரும் போது, அது இரு மதத்திற்கான போராக மட்டும் இருக்க முடியும்.
1000 வருடங்கள் தொடர்ந்து தாக்கியும், இன்னமும் ஹிந்துக்களின் நாடாகவே உள்ளது என்ற எண்ணமே அவர்களை இறுதி களத்திற்கு வர வைக்கும்.
அமைதியை நாம் விரும்பினாலும், நமது அமைதி புறாக்கள் , அவர்களால் அடித்து கொல்லப்பட்டு, அவர்களின் அடுப்பங்கரையில் சமாதி ஆகும். எனவே நமது வேங்கையை வளர்த்து வைப்பதே நமக்கு நல்லது.
இதுவே யதார்த்தமான உண்மை. நாம் என்ன தான் பூசி மெழுகினாலும், இதுவே இறுதியில் நிகழும்.

மதம் மாற நினைபவர்களுக்கு k.பாலசந்தர் அவர்களின் நெத்தியடி .1985 ல் வெளிவந்த " கல்யாண அகதிகள்" திரைப்படத்தின் climax காட்சி"

அருமையான கிளைமாக்ஸ். உண்மையில் என் மனதில் நான் ஒரு ஹிந்து என்று ஆழ பதிய வைத்தது கிறிஸ்தவ மத மாற்றிகளும் அதன் வெறித்தனமான மத மாற்ற முறைகளும். இஸ்லாம் கூட அத்தைகைய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.
உண்மையில் இஸ்லாமிற்கு ஹிந்து மதத்தின் மேல் பயம் உள்ளது. அதே போல் நமக்கும் அவர்கள் மேல் உள்ளது.
வாள் முனையில் மத மாற்றிய முறைகள் இனி இங்கு எடுபடாது என்று அவர்களுக்கு தெரியும்.
ஆனால் கிறிஸ்தவ மத மாற்றிகள் கொல்லை புறம் வழியாக  கோழைகள் போல் நுழைகின்றனர். வாயில் தேன் தடவி நமது வரலாற்றை மாற்ற முயல்கிறார்கள். குழந்தைகளிடம் மனரீதியான தாக்குதலை செய்கிறார்கள்.
சொந்த தேசத்தின் அத்தனை அடையாளங்களையும், கிறிஸ்தவத்தின் அடையாளங்களாக மாற்ற வெறி கொண்டு அலைகின்றதை கண்டு அதிர்ந்து போனேன். சொந்த மண்ணை இகழ்ந்து இது ஒரு நாடே அல்ல, நம்மை அடிமை படுத்தியவன் உருவாகியதே இந்த பாரத தேசம் என்ற கருத்துகளை கேட்டு கலங்கி போனேன்.
ராமாயண வரலாறிலும், மகாபாரத வரலாறிலும் இது ஒரு பரந்த பாரத தேசம் என்று குறிப்பிடபடுகிறது. வெளி நாட்டு பயணர்களின் குறிப்பிலும் இது பாரத தேசம் என்ற சொல்லபடுகிறது. அலெக்ஸ்சாண்டர் போர் குறிப்புகளில் பாரத தேசத்தின் மேற்கு பரப்பில் அமைந்த மன்னருடன் போர் புரிந்தாக சொல்லபடுகிறது.
அயல்நாட்டு அரசர்களுக்கு அகண்ட பாரதமாக அறியப்பட்ட இந்த தேசம் , எப்படி இந்த கிறிஸ்தவ மத மாற்றிக்களுக்கு மட்டும் ஒரே தேசமாக அறிய பட வில்லை.
நம்பிக்கை!! அது தான் பிரச்னை.
ஏன் எனில் இவர்கள் நம்பிக்கை ஜெருச்லமை அடிபடையாக கொண்டது. பைபளில் சொல்லப்படும் நகரம் இன்று உள்ளது என்று பெருமைபடுவார்கள்.
தங்கள் பிள்ளைகளுக்கு இயேசுவின் கதையை சொல்லும் போது ஜெருஸ்லேம் வரலாறும் சொல்லப்படும். அவரின் அற்புதங்கள் பற்றி அறிய வைக்கப்படும்.
ஆனால் நாம் பிறந்த இந்த புண்ணிய பூமியில் , நடந்த வரலாறு நிகழ்வாம் ராமாயணம் நகரம் அயோத்தி இன்றும் அதே பெயருடன் உள்ளது. இது ஏசுவிற்கு முற்பட்டது.
ஆனால் அது கதை என்பார்கள். இன்று வரை சென்று பார்த்த இல்லாத, அவர்களுக்கு எந்த விதத்திலும் வரலாற்று தொடர்பு இல்லாத ஜெருஸ்லேம் மீது மிக பெரிய நம்பிக்கை வைப்பார்கள். தவறு இல்லை. நானும் ஐரோப்பாவில் பிறந்து இறந்தால் கிறிஸ்தவத்தை காப்பது எனது வேலையாக கொண்டு இருப்பேன். ஏன் எனில் அவர்களின் வரலாறு கிறிஸ்தவத்துடன் தொடர்பு உடையது.
என் முன்னோர் செய்த புண்ணியம் , நான் இந்த புண்ணிய பூமியில் பிறந்தது.
பொன்னியின் செல்வன் நாவலை ஹிந்து மத நாவல் அதை படிக்காதிர் என்ற சொன்ன ஒரு கிறிஸ்தவ மத போகரை நான் அறிவேன்.
சொந்த மண்ணின் வரலாற்றை எவ்ளவு அழகாக மதத்தின் பெயரால்அறிய விடாமல் செய்கிறார்கள்.
ஒரு தேசத்தின் கலாசாரம் அதன் ஆலயங்களில் உறைந்து இருக்கும். அதன் கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு இருக்கும். அங்கே நடந்த அற்புதங்களை பற்றி குறிப்பு இருக்கும்.
மிக புத்திசாலித்தனம் கொண்டு, நம் இறைவனை சாத்தன் என்று சொல்லி. நம் கோவில் பக்கம் மத மாற்றிய மக்களை போகாமல் செய்தனர்.
விளைவு, பல கிறிஸ்தவ மக்களுக்கு சொந்த தேசத்தின் வரலாறு அறியபடாமல் போனது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்து சென்ற ஆதிசங்கரின் திக்விஜயம் நூலை படித்தால், இங்கே வாழ்ந்த மகான்களையும் அவர்களின் அற்புதங்களையும், எப்படி இங்கே அரச ஆண்ட மன்னர்கள் , தங்களை எப்படி இந்த பாரத தேசத்தின் அங்கமாக கருதினார்கள் என்று அறிய முடியும்.
அயோத்தில் எது நடந்தாலும், காஷ்மீரில் எது நடந்தாலும், நாகலாந்தில் எது நடந்தாலும், எங்களுக்கு உள்ளம் பதற காரணம், அது எங்களின் ஆன்மிக வரலாற்று நூல்களில் குறிபிட்டபட்டு உள்ளது. இந்த பாரத தேசத்தின் ஆன்மாவை மையபடுத்தி உள்ளது.
எங்கள் நம்பிக்கை இந்த அகண்ட தேசத்தின் ஒவ்வரு இடத்திலும் விதைக்கபட்டு உள்ளது. அதுவே நாங்கள் இந்த தேசத்தை காதலிக்க காரணம்.
அது என்றுமே இந்த கிறிஸ்தவ மத மாற்றிகளுக்கு புரியாது.

"
மதம் மாற நினைபவர்களுக்கு k.பாலசந்தர் அவர்களின் நெத்தியடி .1985 ல் வெளிவந்த " கல்யாண அகதிகள்" திரைப்படத்தின் climax காட்சி"

கிறிஸ்தவ நண்பர் உடனான விவாதம்!!

என்னுடைய நீண்ட நாள் பால்ய பருவத்து கிறிஸ்தவ நண்பர் எனது முந்தைய பதிவை கண்டு கோபம் கண்டார். அயல்நாட்டில் இருந்தாலும் அலைபேசியில் அழைத்து என்னை விளாசினார்.
அவரிடம் நான் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் தராமல் என்னை குற்றவாளி ஆக்கினார்.
• கிறிஸ்தவ மத மாற்றிகளை வீடு வீடாகவும், பொது இடங்களுக்கும் மத மாற்ற அனுப்புவது யார். அது தவறு இல்லையா
• எனது ஹிந்து மக்கள் ஹிந்துவாக இருப்பதில் கிறிஸ்தவத்திற்கு என்ன பிரச்சினை.
• கிறிஸ்தவத்தில் பல பிரிவுகளும், சாதி சார்ந்த தேவாலயங்கள், உண்டா இல்லையா?
• அன்பை போதித்த கிறிஸ்தவம் ஏதனால் சிலுவை போர்களில் ஈடுபட்டது?
• ஹிந்து மதம் கள்ளிப்பால் ஊற்றி குழந்தைகளை கொன்றது என்ற குற்றச்சாட்டை சொன்ன கிறித்தவ மதமாற்றிகள் அயார்லந்தில் உள்ள பல சர்ச்சுகள் தவறான விதத்தில் பிறந்த குழந்தைகளை பணத்திற்காக விற்றதையும், பிரசவத்தின் போது மயக்க மருந்து கொடுக்காமல் பல பெண்களை இறக்க விட்டதையும் இங்கே சொன்னதா?
• இஸ்லாமிற்கு பயந்து கிறிஸ்தவராக ஹிந்துக்கள, மத மாற்றினார்கள் என்ற கதை உண்டு. கிறிஸ்தவராக மாறினால் மட்டும் தான் பாதுகாப்பு தருவதாக சொன்னவர்களை எப்படி அன்பு மதத்தில் சேர்ப்பது?
• கண் அற்ற குருடனுக்கு, கண்ணை அருளும் முன், இறைமகனார் குருடனிடம் எந்த நிபந்தனையும் வைக்க வில்லை. அது இறையன்பு!!.
• மத மாறினால் மட்டும் பாதுகாப்பு என்று நிபந்தனை விதித்தவர்களை, எப்படி மனித குலத்தில் சேர்க்க முடியும்!!
• ஏசுவே மெய்யான கடவுள் என்று சொல்லிவிட்டு, யேசு இறைவனின் மகன் என்று ஏசுவிற்கு மேல் ஒருவர் உண்டு என்று முரண்பட்டிர்கள்!! மேரி மாதாவை கடவுள் என்றும், அந்தோனியாரை கடவுள் என்றும் மதம் மாறிய மக்கள் வழிபட்ட போது உங்கள் ஒரு கடவுள் சித்தாந்தம் சிதலமாகி போனதை பற்றி அறியமால் இருந்திர்களா இல்லையா?
• இயேசு கிறிஸ்து எல்லோரிடமும் அன்பை சொன்னார் என்று சொல்லி கிறிஸ்தவத்தை பரப்ப வெளி நாட்டில் இருந்த வந்த பல பாதிரியார்களின் வீட்டில் , எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட ஒரு கருப்பு நிற அடிமை குடும்பம் இருந்ததா இல்லையா?
• கிறிஸ்தவத்தின் பெயரால் பல கலாச்சாரங்கள் இந்த மண்ணில் இருந்து மறைந்து போனதா இல்லையா?
• தோமையறை, ஒரு ஹிந்து மன்னன் கொன்றான் என்ற குற்றசாட்டை எப்பொழுதும் சுமத்தும் நீங்கள், என்றாவது டச்சு கிறிஸ்தவர்களும் , போர்ச்கிசிய கிறிஸ்தவர்களும் பல ஆயிரம் ஹிந்து மத மக்களை கொன்ற வரலாற்றை யாரிடமும் இதுவரை சொன்னது உண்டா?
• ஏன் நான் ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு இயேசுவின் அன்பை பெற முடியாதா? முடியும், ஆனால் என்னை கிறிஸ்தவராக மாற்றினால் மட்டுமே,ஹிந்து மதத்தின் அடையாளங்களை அழிக்க முடியும். எங்கள் கோவில்கள் கோட்டான் வாழும் இடமாகும். மெல்ல கிறிஸ்தவம் ஹிந்து மதத்தை அழித்து தன்னை நிலை நிறுத்த முடியும். இப்படித்தானே பேகன் மதத்தை அழித்தார்கள்?
• ஹிந்து மதம் ,எல்லா வழிபாடுகளும் , எல்லா மதங்களும், ஏக இறைவனை சென்று அடைகின்றன என்று சொல்கிறது. நீங்கள் உங்கள் குழுந்தைகளுக்கு எங்கள் மதத்தை பற்றிஎன்ன சொல்லி கொடுக்கிறிர்கள் என்று வெளிபடுத்த முடியமா ?.
இயேசு உயரந்தவர். ஆனால் எந்த விதத்திலும் கிறித்தவம் இங்கே உயர்ந்தது இல்லை. எந்த மதமும் இங்கே உயர்ந்தது இல்லை.இங்கே சொல்லப்பட்ட அணைத்து கேள்விகளுக்கும் , அவர் சொன்ன பதில் “தவறுகள் நடந்து இருக்கலாம் ,ஆனால் அதற்கு ஒட்டு மொத்த கிறிஸ்தவத்தை எப்படி பொறுப்பாக்க முடியும்.”
இதை தான் நாங்களும் சொல்கிறோம், ஹிந்து மதத்தில் தவறுகள் இருக்கலாம் அதற்கு மொத்த ஹிந்து மதத்தையும் குறை கூறி நீங்கள் எப்படி மதம் மாத்தலாம் என்று கேட்டேன்.
நான் எங்கே மாற்ற முயன்றேன் என்றார். அப்படி என்றல் நீ ஏன் கோபம் கொள்கிறாய் என்றேன். நான் கிறித்தவ மத மாற்றிகள் என்று தான் குறிப்பிட்டு இருந்தேன். இயேசு கிறிஸ்துவை பற்றியோ, மொத்த கிறிஸ்தவர்களை பற்றியோ எங்குமே தவறாக குறிப்பிட்டதில்லை.
வெளிநாட்டில் இருந்த நிகழ்வை ஏன் பார்க்கின்றாய் என்றார். நீங்கள் மட்டும் வெளிநாட்டில் இருந்த வந்த மதத்திற்கு கொடி பிடிக்கலாம் , நான் மட்டும் இங்கே இருந்த மதத்திற்கு பண்ண கூடாதா என்று கேட்டேன்.
உடனே ஆரிய-திராவிட விவாத்திற்கு வந்தார். கிறிஸ்தவத்திற்கு 1௦௦௦ ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் கடவுளை பற்றி என்ன சொல்கீறீர்கள் என்ற கேட்டதற்கு மௌனம் சாதித்தார்.தன்னை திராவிடர் என்று சொன்னார். அழகான தமிழ் பெயரை கொண்ட அவர் , தனது அடுத்த தலைமுறைக்கு இட்ட பெயர், மேற்கத்திய பெயர். அது அவருடைய உரிமை.
உண்மையில் சொல்ல போனால் , அவர் ஒரு ஹிந்து, சரியான வேலை கிடைக்காமல் இருந்த போது,சென்னையில் அவருடன் பழகிய கிறிஸ்தவ நண்பர் அவருக்கு வேலை வாங்கித் தந்தார், கிறிஸ்தவராக மாற வேண்டும் என்று நிபந்தனை உடன். இன்று வரை அரசாங்கத்திடம் தான் ஒரு ஹிந்து என்று தான் சொல்லி வருகிறார். ஏன் எனில் சலுகைகளை பெற வேண்டும் அல்லவா.
எனது பழைய வேலையில் பிரச்சனைகள் வந்த போது, என்னை அழைத்து வேலைக்கு வாய்ப்பை கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவ அன்பர்.ஆனால் பதிலுக்கு அவர் என்னிடம் எதையும் எதிர்பார்கவில்லை. அதுவே இயேசு சொன்ன அன்பு. அவருடன் எப்பொழுதும் எனக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை.
இங்கே பிரச்சனை,கிறிஸ்தவ மத மாற்றிகள் , அவர்கள் சொல்லும் பொய்கள்.
இங்கே கிறிஸ்தவராக மாறுவதன் முலம் எந்த பலனும் இல்லை. மாறாக, மாறுவதன் முலம் சொந்த தேசத்தின் அடையாளங்களையும் , கலாசாரங்களையும் அழிக்க தான் உதவி செய்ய முடியும்.
நமது ஆன்மாவை களங்கப்படுத்தும் இந்த செயலை செய்யாதீர்கள்!!
எந்த மதத்திற்கு மாறினாலும் எந்த பலனும் கிடையாது!!
நற்பலன்கள் நம் செய்கையில் இருந்தே பெறப்படும்.

பயம் இல்லை என்று யார் சொன்னது

எனது நண்பர்கள் சிலர், எப்படி பயம் இல்லாமல் கிறிஸ்தவ மத மாற்றிகளை பற்றியும், இஸ்லாமிய தீவிரவாதிகளை பற்றியும் பதிவு இடுகின்றாய் என வினவுகின்றனர். பயம் இல்லை என்று யார் சொன்னது. மிக பெரிய உயிர் பயம் உள்ளது. அது மட்டும் அல்ல, இது எனது நட்பு வட்டாரத்திலும் , பணி புரியும் இடங்களிலும், குடும்பத்திலும் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாதா உண்மை.
என்ன செய்வது, இந்த பயத்தை விட, இவர்களை அனுமதித்தால் என் வருங்கால தலைமுறைக்கு இந்த தேசத்தின் எந்த பழம்பெரும் அடையாளங்களையும், கலாசாரத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்ற பயமே அதிகமாக உள்ளது.
என் முன்னோர்கள் பயத்தை கை கொண்டு இருந்தால், இன்று எனது அடையாளம் மாறி போய் இருக்கும். நல்ல வேலை, அப்படி நடக்க வில்லை.
தகவல் தொழில்நுட்பம் பெருமளவில் வந்த பிறகும், தன் முதுகில் ஆயிரம் கறைகளுடன் விளங்கிய இந்த மதங்கள், எல்லாவற்றையும் மறைத்து விட்டு, ஆதி மதமான ஹிந்து மதத்தை குறை சொல்லி திரிந்த போது அதிர்ந்து போனேன். சகிப்புத்தன்மை உள்ள என் ஹிந்து மக்கள் , குழம்பி நிற்பதை அறிந்து கொண்டேன். மற்ற மதங்களின் வரலாற்றை சுட்டி காட்ட எண்ணினேன்.
கருத்து ஆழமுள்ள , களத்தை நம்பவதற்கு பதில், சில பேர் வீச்சரிவாள் மேல் உள்ள நம்பிகையை விட்டு கொடுக்க மறுக்கிறார்கள். எனக்கு தெரிந்த வழியில் நான் போராடுகின்றேன். என்னை விட மிக பல மடங்கு , எழுத்து வடிவில் போராடும் பலர் உள்ளனர். எல்லோருக்கும் குடும்பம் உள்ளது. இருந்தும் களத்தில் நிற்கின்றனர்
ஒரு நல்ல விஷயம் இதுவரை, ஒரு 5 அல்லது 6 பேர், மத மாறும் நோக்கத்துடன் தாங்கள் இருந்தாகவும் , எனது சில பதிவுகளையும், நான் பகிர்ந்த மற்ற நண்பர்களின் பதிவுகளையும் , படித்து விட்டு, "இருக்கும் மதமே இன்பமான மதம்" என்று புரிந்து கொண்டதாக சொன்ன போது, எங்கும் நிறையும் இறைக்கு நன்றி சொன்னேன். இது போதும் எனக்கு.

மத மாற்றம் எதை சாதித்தது

எனது தோழியின் குழந்தையை பார்க்க அவர்கள் வீட்டிற்கு சென்று இருந்தேன். பரஸ்பர நல விசாரிப்புக்கு பின், சுகந்தனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்று என் தங்கை கேட்டாள் என்றார். புரியாமல் விழித்தேன். எப்பொழுதும் மத மாற்றத்தை பற்றிய பதிவுகளும், அரசியல் பதிவுகளும் அவர் முக புத்தகத்தில் தென்படுகின்றன, ஏன் இவ்வாறு செய்கிறார். ஏதாவது நகைச்சுவையாக பதியலாம் அல்லவா என்று தன்னிடம் வருத்தப்பட்டதாக என் தோழி கூறினார்.
கொஞ்சம் யோசித்து பார்த்தல் உண்மை தான். ஆனால் வேறு எதை பற்றி எழுதுவது. எல்லோருக்கும் உள்ளுக்குள் தேசத்தின் மேல் ஒரு வித காதல் உள்ளது. மார்கழி மாதத்தில் பெய்யும் பனி, எவ்வாறு எல்லோரையும் அணைத்து கொண்டு நடக்கிறதோ, அதே மாதிரி, தேசத்தின் மேல் உள்ள கவலை எல்லோர் மனதிலும் அடைந்து போய் கிடக்கிறது.
எனது ஒரு நண்பனும் இதை கருத்தை சொன்னான் உனக்கு வேறு வேலை இல்லையா , எப்போதும் இதை பற்றி எழுதுகிறாய். உனக்கான நம்பிக்கை தகர்க்கப்பட்டு , உன்னை சுற்றி முற்றிலும் வேறன நம்பிக்கை சூழ்ந்து இருக்ககுமானால் , நீ எவ்வாறு உணர்வாய் என்று கேட்டேன். அவ்வாறு நடக்காது என்றான். உனக்கு நடக்காது என்றால் , உன் மகனுக்கு நடக்கலாம், உன் குல தெய்வ வழிபாடு கூட நடக்க முடியாமல் போகலாம் என்றேன். அவனோ சற்றும் யோசிக்காமல் , என் மகன் எதற்கு இங்கு இருக்கின்றான் , அவனை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவேன் என்றான். என் மனதில் இருந்து அவன் சட்டேன்று விலகிப் போனான்.
என்னால் அப்படி போக முடியாது. இங்கு பல பேரால் அது முடியாது. இது என் தேசம் அல்லவா. இதை விட்டு விட்டு எங்கே போவது. அவர்களுக்கு பிரச்னை இல்லை, காளியம்மன் கோவிலில் கலவரமா , சரி விடு, மாரியம்மன் கோவிலில் மண்டியிட்டு கொள்ளலாம். அங்கேயும் பிரச்சினையா விடு, வீட்டிற்குள் விளக்கு ஏற்றி கொள்ளலாம். வீட்டு கதவையும் தட்டி விட்டார்களா , உடனே தனது நம்பிக்கையே நகர்த்தி விடுவார்கள்.
தனது அடையாளத்தை இழப்பது , தன்னை இழப்பதற்கு சமம்.
மத மாற்றம் ஒரு தேசிய அபாயம் என்று அண்ணல் காந்தி அடிகள் சொன்னார். ஏன் சொன்னார். உலகின் இரு பெரும் மதங்களின் தாக்கத்தால் மற்ற மதங்கள் அழிந்து போக , இன்று வரை தனித்து தாக்கு பிடித்து நிற்பது , ஹிந்து மதம் மட்டும் தான்.
சாதிகள் இல்லை என்று சொல்லி விட்டு, தனது கண் முன்னே சாதி பிரிவனை காட்டும் போது அதை எதிர்க்காமல் , நான் சாதியை ஆதரிப்பவன் அல்ல என்று தன்னை நல்லவனாக காட்டும் ஒரு ஹிந்து எந்த அளவு இந்த சமுதாயத்திற்கு அபாயகரமானவனோ , அதே அளவு, கிறித்தவ/முஸ்லிம் மத மாற்றிகளின் செயலை பிடிக்காமல் இருந்தும் , அதை கண்டிக்காமல் இருக்கும் ஒரு நல்ல கிறிஸ்தவரும் , ஒரு நல்ல முகமதியரும் இந்த சமுதாயதிற்கு அபாயகர்மானவர்களே.
மத மாற்றம் எதை சாதித்தது.
1. சொந்த தேசத்தை இழிவு படுத்தி பேசும் செயலை சாதித்தது.
2. அடிமை படுத்தி ஆண்டவனை புகழ வைத்தது.
3. ராமாயண/மகாபாரத வரலாற்றை படிக்கும் போது சொந்த தேசத்தின் வரலாறு தெரிய வரும், ஆனால் மத மாற்றம் ஐரோப்பாவின் /அரபு நாடுகளின் வரலாறை அறிய வைத்தது. விளைவு நம்பிக்கையை கண் காண இடத்தில கொண்டு வைத்தது.
4. வெளி நாட்டில் போய் ஆரய்ச்சி செய்து, வெளி நாட்டில் இருந்து வரலாற்றை எடுத்து வந்து, இந்த தேசத்தின் அறிவு வெளி நாட்டில் இருந்து பெறப்பட்டது என்ற அருவருப்பான கருத்தை முன் வைத்தது.
5. அற்புதங்கள் பல இங்கே நடந்தாலும் அதை அவர்கள் புகழும் ஆங்கிலேயனே புகழ்ந்து பட்டயங்கள் எழுதி கொடுத்து போன கோவில்கள் பல இருந்தும், அயல் நாட்டில் மட்டுமே அற்புதங்கள் சாத்தியம் என்று சொல்ல வைத்தது.
6. ஹிந்து மதத்தில் எழுதிய நூல்களை திருடி , எங்கள் இறைவனை பற்றி தான் சொன்னது என்று பொய் சொல்ல வைத்தது
7. தஞ்சாவூர் கோவில் கட்டிட கலையை புறந்தள்ளி , அரபு நாடுகளின் கட்டிட கலையை உன்னதமானது என்று உளற வைத்தது.
8. வடக்கையும் தெற்கையும் ஒரு சேர வென்றது மட்டும் அல்லாமல், அயல்நாடுகளையும் வென்ற எங்கள் பாட்டன் ராஜேந்திர சோழ சக்கரவர்த்தியை பேரரசர் என்று சொல்லாமல், தென்னகத்தை வெற்றி கொள்ளாத அக்பரை பேரரசர் என்று சொல்லி வரலாற்றை மறைத்தது.
9 முடிவாக , எங்கள் குழந்தைகளின் பள்ளிப் பாட புத்தகத்தில் அன்பை போதிப்பது எது என்று சொல்லி " கீதையா , பைபிளா" என்ற விஷ விளையாட்டை நடுத்தி அன்பை சொல்வது பைபிள் என்ற விடையை எழுத வைத்தது.
இது எல்லாம் தவறு அல்லவா?
என்னால் முடிந்தவரை என் எழுத்திலவாது எதிர்ப்பை காட்டுகின்றேன். அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்.?

கங்கை கொண்ட சோழன்-புத்தகம்

கங்கை கொண்ட சோழன்-புத்தகம். ராஜேந்திர சோழன் பற்றிய சரித்திரம். கடல் கடந்து கொடி பிடித்த எங்கள் தமிழ் மன்னன் இவன். எங்கே இந்த மன்னனை பற்றி சொன்னால், இவர் சார்ந்து இருந்து ஹிந்து மதத்தை பற்றியும் சொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, பரந்த பாரத பேரரசின் , வரலாற்று பக்கங்களில் இருந்து மறைக்கபட்ட மாமன்னர்.
சில திராவிட கழகங்களின் சூழ்ச்சியால் சோழர்கள் தமிழர்கள் இல்லை என்றும் கருத்து பரப்பபட்டது. இங்கே ஏது உயர்வானதாக இருந்ததோ, அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை, நாம் கீழாகத்தான் வாழ்ந்தோம் என்று நம் தலைமுறைக்கு அடிமை புத்தியை அறிமுகபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதி தான் சோழர்களை தமிழர்கள் இல்லை என்று சொன்னது.
ஆங்கிலயனும் ,முகமதியரும் வந்த பின்பு தான் நமக்கு நாகரிகம் வந்தது என்று நம் தலைமுறையிடம் நம்ப வைக்க பட்டது.
ஆனால் உண்மை அதுவல்ல. நாம் சிறப்பாக இருந்த காலங்கள் உண்டு. எல்லா வர்ணத்தினரும் ஒற்றுமையாக கனிந்த இருந்த நேரங்கள் நம்மிடையே இருந்து உள்ளது. இன்றைய ஓட்டு பதிவு முறை, சோழர்கள் காலத்தின் குடவோலை முறையில் இருந்து கடன் வாங்கப்பட்ட ஒன்று. வலிமையுடன் வலம் வந்து
வீற்று இருந்து அரசு புரிந்தவர்கள் நம் மாமன்னர்கள்.
நீங்கள் எந்த மதமாக இருந்தாலும், முடிந்த வரை அருகில் உள்ள பழமை வாய்ந்த ஆலயங்களுக்கு சென்று பாருங்கள். உங்கள் முன்னோர்கள் யார் என்று அறிய நேரிடம். தமிழ் மன்னர்களின் கலாச்சரம் , பேராண்மை அவர்கள் கட்டிய கோவில்களின் கல்வெட்டில் பொதிந்து இருக்கும். நீங்கள் தழைத்து வந்த தமிழ் மண்ணின் தலைமுறையை சொல்லும் அது.
நீங்கள் உங்களின் முன்னோர்களின் புகழை அறிய கூடாது என்ற காரணத்தினால் தான், உங்கள் மதங்கள், எங்கள் கடவுள்களை கல் என்றும், கல்லறையில் உறங்கும் பேய்கள் என்று சொல்லி, உங்களை உங்கள் வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் வழி மறித்து நிற்கின்றன.
நீங்களும் அதை பற்றி அறியாமல் கோவிலுக்கு வருவதை கொலையாக கருதுகின்றிர்கள். முடிந்த வரை வரலாற்று சரித்திரமவாது வாங்கிப் படியுங்கள். சில கற்பனைகள் கலந்து இருந்தாலும் , சரித்திரத்தின் செய்திகள் தொடர்ந்து அதில் சொல்லப்பட்டு வந்து இருக்கும்..
சோழ பேரரசத்தின் உச்சம் இராஜேந்திரன். தமிழ் கோலட்சிய காலம் அது. படிக்க படிக்க மனம் பரவசம் அடைகிறது ஒரு தமிழ்னாய்.
குறிப்பு. "பொன்னியின் செல்வன்" (கல்கி)படித்து விட்டு, "உடையார்" (பாலகுமாரன்)நாவலையும், "வேங்கையின் மைந்தன்" (அகிலன்)நாவலை படித்து விட்டு , "கங்கை கொண்ட சோழன்" (பாலகுமாரன்) நாவலையும், பிறகு முடிந்தால் "வெற்றி திருநகர்" (அகிலன்)நாவலையும் படியுங்கள்.

வெற்றி திருநகர்-புத்தகம்- அகிலன்

வெற்றி திருநகர்-புத்தகத்தை பற்றி ஒரு நண்பர் கேட்டார். விஜயநகர பேரரசின் உன்னத மன்னர் கிருஷ்ண தேவராயர் வரலாற்றை சுட்டி காட்டும் நாவல் அது. தென் இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் யாராவது ஒருத்தருக்கு, தாங்கள் இன்னும் ஹிந்துவாக இருப்பது குறித்து நன்றி தெரிவிக்க விரும்பினால், அது விஜய நகர அரசர்களுக்கும் (கர்நாடக), அவர்களின் வீரர்களுக்கும் தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.
முறையற்ற போர் முறை கொண்ட முஸ்லிம் மன்னர்கள் சூழ்ந்த இருந்து , தென் இந்தியா தத்தளித்து கொண்டு இருந்த நேரம், இருளை கிழித்துக் கொண்டு உதயமாகும் சூரியனாய் , எழுந்தது ஒரு அரசு.
நயவஞ்சக நரிகள் நாட்டாமை நடத்தி கொண்டு இருந்த போது, சிங்கமாய் சீறிய அரசு. என் வரையில் , நம் சோழர்களை விட ஒரு படி மேல் இருந்தவர்கள் இவர்கள். உண்மை. சோழர்கள் மேல் எப்போதும் எனக்கு ஒரு காதல் உண்டு. ஆனால் விஜயநகர பேரரசு மேல் அளவற்ற மரியாதை உண்டு.
ஏன் எனில் சோழர்கள் இருந்த காலம் வேறு மாதிரி. சோழர்களை சுற்றி இருந்தவரகள் ஹிந்து அரசர்களாக இருந்த காரணத்தினால் , ஹிந்து மதத்திற்கும், அதன் நம்பிக்கைக்கும் எந்த போர்களினாலும் பாதிப்பை ஏற்படுத்த முடிய வில்லை.
ஆனால் விஜய நகர கதை வேறு, சுற்றி நின்றவர்கள் இந்த மண்ணின் பழம்பெரும் நம்பிக்கையை வேரோடு அழித்து , தங்கள் நம்பிக்கையை இந்த மண்ணில் விதைக்க விரும்பிய பாமினி சுல்தான்கள். கோவில்களை அழிப்பதை கொள்கையாக கொண்ட வெறியர்கள்.
அதனால் போர் எப்போதும் போர். விஜயநகர அரசர்கள் மாதிரி போரிலே வாழ்க்கை நடத்திய மற்ற அரச பரம்பரை மிகக் குறைவு. வேண்டுமானால் ராஜபுத்திர அரசர், மராட்டிய வீர சிவாஜியை சொல்லலாம். இவர்கள் எல்லாம் ஹிந்து மதத்திற்காக போரிட்ட அரசர்கள்.
தென் இந்தியாவின் எந்த பழம் பெரும் ஆலயத்திற்கு நீங்கள் காலடி எடுத்து வைக்கும் பொது, ஒரு நிமிடம் இந்த விஜய நகர அரசுக்கு நன்றி சொல்லுங்கள். இவர்களின் வீர தியாகமே, இன்று நமக்கு ஆன்ம நம்பிக்கை அளிக்கும் திருக்கோவில்கள், நம்மிடையே பத்திரமாக அமைய காரணம்.
எழுத்தாளர் அகிலன் தன் முன்னுரையில் இப்படி குறிப்பிடுகிறார், "தென் இந்தியாவில் இன்னோர் பாகிஸ்தான் உருவாகாமல் தடுத்த பெருமை இந்த அரசை சாரும் "
துரதிஸ்டவசமாக தலைக்கோட்டை போரில் விஜயநகர அரசு தந்திரமாக முறியடிக்கப்பட்டது. பாலகுமாரன் தனது "பிருந்தாவனம்" நாவலில் தலைக்கோட்டை போரின் கோரமுகத்தை சொல்லி இருப்பார்.
வெற்றியின் விளம்பில் இருந்த போர், தலை கீழாக மாறியது!!
விஜயநகர படையில் தோழர்களாக இருந்த முஸ்லிம் படை தளபதிகள் ,கடைசி நேரத்தில் பாமனி சுல்தான்களுடன் இணைந்து விஜயநகர படைகளையே தாக்க, குழப்பம் ஏற்பட்டு விஜயநகர பேரரசு வீழ்த்தப்பட்டது.
வீரம் வெல்ல முடியாததை , நம்பிக்கை துரோகம் பாமனி சுல்தான்களுக்கு பரிசாக பெற்று தந்தது.
உண்மையில் நம் மக்கள் விஜயநகர பேரரசை மறந்தே போனார்கள்.
நம் மக்களுக்கு அது பழக்கம்தான் , அருளிய ஆண்டவனை , திருக்கோவில் தாண்டியதும் மறந்து விட்டு, அந்த ஆண்டவன் குடி கொண்டு இருக்கும் திருக்கோவில்களுக்கு தீங்கு நேரும் போது, அதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதும், மத சார்பற்ற மந்திரத்தில் மூழ்கி , நம்பிக்கை கொடுத்த ஆண்டவனையே நடு ஆற்றில் , விட்டு விலகுவதும், நம் மக்களின் வழக்கம் தான்.
பேரரசின் தலைநகரம் ஹம்பியின் எச்சங்கள் மிச்சம் இருக்க, Robert Sewell என்றவர் , இந்த அரசை பற்றி ஆராயுந்து, அதனை பற்றி தகவல்களை திரட்டி ஒரு நூலக வெளியிட்டார்.
நூலின் பெயர் என்ன தெரியுமா " மறந்து விட்ட பேரரசு" (A Forgotten Empire: Vijayanagar).
உண்மை தான்- "எம் ஹிந்து மக்கள் மறந்து விட்ட பேரரசு"
குறிப்பு: அன்றைய முஸ்லிம் மன்னர்களின்- செயலுக்கு இன்றைய சமுதாயத்தை நான் குற்றம் சொல்லவில்லை.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...