வெகு நாட்களாகவே 274 சிவாலயங்களை தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் உள்ளே எழுந்து கொண்டு இருந்தது. எல்லாவற்றையும் தரிசிக்க வேண்டும் எனற பேராசை!! ஆனால் அலுவலகத்தில் ஒரு மாதம் விடுப்பு கேட்டால் நமக்கு நிரந்தர விடுப்பு கொடுத்து அனுப்பி விடுவார்கள்.
வெள்ளிக்கிழமை அன்று திருவான்மியூர் மருந்திஸ்வரரிடம் சொல்லி விட்டு இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன், சென்னையில் உள்ள பாடி திரு வாலிஸ்வர்ரை தொட்டு, வேலூர் சென்று, அங்கிருந்து காஞ்சிபுரம் வந்து, பின் மேல்மருவத்தூர் சென்று, திருகழுகு குன்றம் வழியாக , செங்கல்பட்டு தொடர்ந்து, திருகச்சூர் கோவிலில் தலயாத்திரை நிறைவு செய்து மறைமலர் நகர் வழியாக சென்னை திருவான்மியூர் வந்து பயணத்தை நிறைவு செய்யலாம் என்று வரைபடம் உதவி கொண்டு தீர்மானம் கொண்டேன்.
நினைப்பது நம் செயல் என்றாலும், முடிப்பது ஈசன் கையில்.
முதல் தலம் திருவல்லீஸ்வரர், பாடி- சென்னை. நல்ல கூட்டம். ஈசனை ஒரு நிமிடம் நின்று பார்க்க முடியவில்லை. ஆனால் ஒரு நிமிடம் என்றாலும்கூட , தீப ஒளியில் மின்னலை போல நம் மனதில் விழுகிறார். சமபந்தரால் பாடப் பெற்ற தேவார பதிகத்தை படித்து விட்டு விடை பெற்று வந்தேன்.
திருமுல்லைவாயில் , மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில். உள்ளே நுழையும்போது ஈசனின் இருப்பை உணரலாம். நந்தி நம்மை தான் எதிர் நோக்கி இருக்கிறதா என்ற எண்ணம் வருகிறது. இங்கு மட்டும் நந்தி நம்மை பார்த்து நிற்கிறது, ஈசனை பார்க்காமல். அழகு என்ற வார்த்தை ஈசனை கண்டுதான் தோன்றியதோ?. சுந்தரர் இந்த சுந்தரனை பாடிய பாடலை படித்து விட்டு நகர்ந்தேன்.
வேதபுரீஸ்வரர் திருக்கோயில்-திருவேற்காடு, நிதியுதவி தேவைப்படும் கோவில் இது, ஆனால் ஈசன் நிறைந்தே இருக்கிறார். அமைதியான கோவில் என்பதால், அரிவைபங்கன்( ஈசன்), நம் மனதில் தவழ்கிறர். பரசுராமரம் அவர் தாய் ரேணுகையும் வழிபட்ட கோவில்.
அருகில் உள்ள கருமாரியம்மன் கோவிலையும் (ரேணுகை) வழிபட்டு விடை பெற்றேன்.
அருகில் உள்ள கருமாரியம்மன் கோவிலையும் (ரேணுகை) வழிபட்டு விடை பெற்றேன்.
அங்கிருந்து 66 கிலோமீட்டர் நகர்ந்து , தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், சிரமப்பட்டு கண்டுபிடித்து, ஈசனை கண்டேன். இது பற்றி தனி பதிவு பதிவு செய்து உள்ளேன்.
அடுத்து ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் -தக்கோலம்-வேலூர் சென்று அடைந்தேன். பாலாற்றில் பெருவெள்ளம் வந்த போது, பார்வதி தேவி , லிங்கத்தை காப்பாற்ற, அதை கட்டி அணைத்த வடு லிங்க திருமேனியில் தெரிகிறது. அம்பலக்கூத்தன்(ஈசன்) அழகில் அசத்துகின்றான்.
பின் மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் ,திருமால்பூர், வேலூர். என்ன வென்று சொல்வது இந்த தலத்து ஈசனை. துடிக்கும் உள்ளம், இந்த தலத்து ஈசனை கண்டால் நின்று போகிறது. அர்சககர் மிகவும் நல்லவர்.
திருமால் தன கண்பெயர்த்து ஈசனுக்கு அபிசேகம் செய்து , இன்னோர் கண்ணப்பன் நாயனார் ஆன கதையை அவர் சொல்லும்போது, நான் என்ன ஈசனுக்கு தருவது என்று தோன்றுகிறது.. உயிரை எடுத்து கொள் ஈசனே , என்னை சேர்த்து கொள், என்று மனம் இறைஞ்சுகிறது.
திருமால் தன கண்பெயர்த்து ஈசனுக்கு அபிசேகம் செய்து , இன்னோர் கண்ணப்பன் நாயனார் ஆன கதையை அவர் சொல்லும்போது, நான் என்ன ஈசனுக்கு தருவது என்று தோன்றுகிறது.. உயிரை எடுத்து கொள் ஈசனே , என்னை சேர்த்து கொள், என்று மனம் இறைஞ்சுகிறது.
வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருவல்லம்-வேலூர். மிக பிரமாண்டமாய் இருக்கிறது. இறையனார்(ஈசன்), இருப்பு தெளிவாய் தெரிகிறது. இறை இங்கே சிவானந்த மவுன குரு சுவாமிகளை அழைத்து இருக்கிறது. அவர் அமர்ந்து தியானம் செய்த பலாபழம் மரம் இன்றும் இருக்கிறது. தறிகெட்டு ஓடும் சிந்தனை, இங்கே இந்த இடத்தில குவிகிறது. நிற்கிறது, நின்று ஈசனை பற்றுகிறது. யார் போனாலும் இங்கே சிறிது நேரும் அமருங்கள். ஒரு சில நிமிடாவது, எல்லாம் மறந்து போய், உள்ளே ஆரழகன் (ஈசன்) வந்து அமர்கின்றான்.
மாலை தொடங்குகிறது, வேலூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி கிளம்பினேன். வழி எங்கும் ஈசன் கோவில் தென்படுகிறது, பஞ்சலிங்கம் இஸ்வரர், வராகிரிஸ்வரர் என்று தொடர்ந்து கொண்டே செல்கின்றேன். இருள் தொடங்க , மழை வலுக்கிறது, காஞ்சிபுரம் செல்லும் எண்ணத்தை கைவிட்டு, ஒரு கோவிலின் வெளி திண்ணையில் தங்க முடிவு செய்தேன். என்னுடன் சில ஊர் பேர் தெரியாத நபர்களும் அன்று இரவை ஒரு சிவன் கோவிலின் வெளியே கழித்தோம்
நாளை மீதியையும் எழுதுகின்றேன்.......
No comments:
Post a Comment