ஜீன்ஸ் பேன்ட் அணியாதே என்று சொன்னதற்கு கடுமையான எதிர் குரல் கொடுத்த நமது நவநாகரிக கார்ப்பேர்ட் பெண்மணிகள், தங்கள் பெண் இனத்தை அடிமையாக விற்க சொல்லும , இந்த பேடிகளுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பமால் ஒளிந்து கொள்வது ஏன்.
ஜீன்ஸ் பேன்ட் தடைக்கு எதிராக குரல் கொடுத்தால் நீங்கள் அறிவுஜீவிகள் , புரட்சி பெண்மணிகள். பெண்ணிய அடிமை முறைக்கு எதிராக ஒரு பதிவு கூட உங்களால் எழுத முடியாது அல்லவா. வாழ்க உங்கள் புரட்சி.
இன்றைய நவின உலகத்திலும் , பெண்களை அடிமைகளாக விற்கும் முறையை கொண்டுள்ளவர்களை என்ன வென்று அழைப்பது. அதற்கு ஒரு மதத்தை துணைக்கு வைத்து கொண்டால் , அந்த மதத்தை பற்றி என்ன நினைப்பது.
இஸ்ரலின் அக்கிரமம் என்று பக்கம் பக்கமாய் பதிவு எழுதியவர்கள் , இன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய சின்ன கண்டன பதிவை கூட போடுவதில்லை. கேட்டால் மீடியா அதிகமாக உருவகபடுத்தி சொல்கிறது என்று கதை அளக்கிறார்கள் .
எந்த மீடியா இஸ்ரேல் தாக்குதல்களை வெளியிட்டதோ , அதே மீடியாக்கள் தான் இன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கோர முகத்தை சொல்கிறது. ஐஎஸ்ஐஎஸ் பற்றி மீடியா சொன்னால் அது கதை. நல்ல நியாயம்.
எப்போது ஒரு மதம் , சொந்த தாய் தேசத்தையும் , பெற்ற தாயையும் விட இறைவனும் புனித நூலும், இறைதுதரும் மட்டுமே உலகில் உயரந்தது என்ற கருத்தை பதிவு செய்து விட்டதோ, அந்த மதம், தான் வாழும் தேசத்திற்கும, மனித நேயம் என்ற பண்புக்கும் ஊரு விளைவிக்கும் என்பதே உண்மை.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது எந்த உலக அரசாங்கமும் இஸ்லாமிய முத்திரை குத்த வில்லை. ஐஎஸ்ஐஎஸ் தான் , தாங்கள் தான் அகண்ட இஸ்லாமிய அரசு என்று அறிவித்தது. தாங்கள் போர் செய்வதே இசுலாமிய அரசு அமைக்க என்று தெளிவாக சொல்லி விட்டார்கள்.
ஆகையால் , எதோதோ மற்றவர்கள் தான் ஐஎஸ்ஐஎஸ் மீது இஸ்லாமிய முத்திரை குத்தி விட்டார்கள் என்று கதை விட வேண்டாம்.
ஆகையால் , எதோதோ மற்றவர்கள் தான் ஐஎஸ்ஐஎஸ் மீது இஸ்லாமிய முத்திரை குத்தி விட்டார்கள் என்று கதை விட வேண்டாம்.
பெண்ணை அடிமை சந்தையில் விற்பவன் மனிதனா? பணம் கொடுத்து அந்த பெண்ணை வாங்குபவன் மனிதனா? அதை ஒரு மதம் ஒத்து கொள்ளுமா?
இயற்கையின் படைப்பில் ஒரு அங்கமான பெண்களை, அவ மரியாதை செய்து அழிக்க நினைத்த அரசுகளை இந்த மண்ணில் இருந்து இயற்கை வேரோடு பிடுங்கி எறிந்து இருக்கிறது என்பது உலக வரலாறு.
இன்று ஒரு மதத்தின் பெயர் கொண்டு , அதை செய்கிறார்கள்.
இயற்கை சீற்றம் கொள்ளும் என்பது நிச்சயம். யார் அழிய போகிறார்கள் என்பதை வரலாறு சொல்லும்.
http://rt.com/news/196512-isis-yazidi-women-slavery/
Islamic state won’t even let us kill ourselves - A Yezidi Sex Slave