Monday, April 3, 2017

ஒரு மறக்கப்பட்ட பேரரசு-விஜய நகரம்-அத்தியாயம் 3

அத்தியாயம் 3
விஜய நகரத்தின் முதல் மன்னர்கள் (கி.பி 1316 to 1379)
Rapid acquisition of territory – Reign of Harihara I. – Check to Muhammadan aggression – Reign of Bukka I. – Kampa and Sangama? – The Bahmani kingdom established, 1347 – Death of Nagadeva of Warangal – Vijayanagar’s first great war – Massacres by Muhammad Bahmani – Battle at Adoni, 1366 – Flight of Bukka – Mujahid’s war, 1375 – He visits the Malabar coast – Siege of Vijayanagar – Extension of territory – Death of Mujahid, 1378.

1335 ல் மெல்ல தொடங்கப்பட்ட விஜய நகரத்தின் வளர்ச்சி வேகமாக நடந்தது. முகமதியர்களால் தொந்தரவுக்கு உள்ளான ஹிந்து மக்கள், ஹிந்து மதத்திற்காக போராடும் ஆண்கள், பழைய ஹிந்து அரசுகளின் மக்கள் என்று எல்லா வித மக்களும் தஞ்சம் அடையும் புகலிடமாக அது மாறியது.

விஜய நகரத்தை முதலில் ஆட்சி செய்த தலைவர்கள், தங்களை அரசர்கள் என்று அழைத்து கொள்ள துணிய வில்லை, அவர்களை பற்றிய குறிப்புகள் எழுதிய பிராமணர்களும் அவ்வாறு அழைக்க வில்லை. அதனால் தான் ஹரி ஹரி 1 , புக்கா 1, இருவரையும் தலைவர்கள் என்று நான் குறிப்பிட்டேன். 1340 இல் குறிக்கப்பட்ட கல்வெட்டு “ஹரியப்பா வோதேய” என்று சொல்கிறது, இந்த பழைய பெயர் கண்டிப்பாக “ஹரிஹரர்” என்று சொல்வதை விட குறைவான கெளரவத்தை தருகிறது, ஆகையால் பின்பு ஒரு கௌரவத்தை, தர தலைவன் என்று அழைத்து உள்ளார்கள். சமஸ்கிருதத்தில் “ஹரிஹரவை” அழைக்கும் பெயர் “மகாமண்டலேஷ்வரா” . இதன் பொருள் மிக பெரிய கடவுள். ஆனால் அரசன் என்று சொல்ல வில்லை.

1353 ல் குறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளும், ஹரி ஹர பின் வந்த புக்கரை அதே மாதிரி குறிப்பிடுகின்றன.  

1340 கால வாக்கிலே முதலாம் ஹரிஹரர் ஆளுகைக்கு மிக பெரிய பிரதேசங்கள் உட்பட்டு இருந்தன. துக்ளக்கின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டு இருந்த  , காலட்கி (Kaladgi) மாவட்டம், மால்ப்ரப்ஹாவின் (Malprabha) வடக்கு பிரதேசங்களை ஹரி கைப்பற்றி இருந்தார். பாதாமி (Badami) என்ற இடத்தில் ஹரியின் ஆணையின் பேரில் கோட்டை கட்டப்பட்டு இருந்ததே அதற்கு சாட்சி.

இவ்வாறாக, விஜயநகரதின்  முதல் தலைமை, மிக அமைதியாக, அதே நேரத்தில் விரைவாக பெரும் செல்வாக்கை பெற்று விரிந்து கொண்டு இருந்தது. புக்கருக்கு பின் வந்த இரண்டாம் ஹரி ஹரி காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றது. அவர் ராஜாதி ராஜன், அரசர்களின் அரசன், பேரரசன் என்று அழைத்து கொண்டார்.

முதலாம் ஹரி ஹரிவை  பெர்னோ நுனுஸ் “தேவ ராயா” என்று அழைக்கிறார். ஏழு வருடங்கள் இவர் ஆட்சி செய்தார், இவர் காலத்தில் தேசத்தில் அமைதி நிலவியது என்றும் குறிப்பிடுகிறார். அப்படி என்றால் 1343ல் இவர் மரணம் அடைந்து இருக்க வேண்டும். தனது குருவிற்கு இவர் மிக பெரிய கோவில் எடுத்தார் என்பதை பெர்னோ நுனுஸ் குறித்து வைத்து இருக்கிறார். ஹம்பியின் நதி ஓரத்தில்  அமைந்த இந்த மிக பெரிய ஆலயத்தின் ஒரு சில பகுதிகள் மட்டுமே இன்றும் வழிபாட்டிற்கு எஞ்சி உள்ளன. மற்ற பகுதிகள் ஈவிரக்கமின்றி 1565ல் முகமதியர்களால் நாசமாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
ஏற்கனவே கூறியது போல, இபின் படுடா தனது குறிப்பில் “ஹரிப்” என்ற அரசரை பற்றி 1342ல் குறிப்பிடுகிறார். பெர்னோ நுனுஸ் தரவுகளையும் கணக்கில் எடுத்து கொண்டால், முதலாம் ஹரி ஹரர், ஏழு வருடங்கள் அமைதியாக ஆட்சி செய்து , 1344 முன் உயிர் துறக்கிறார். அதே ஆண்டில் நிகழ்ந்தவற்றை குறிக்கும் மற்ற வரலாற்று ஆதாரங்கள் படி, முகலாயர்களால் வீழ்த்தப்பட்ட வாரங்கலின் அரசரான பிரதாப ருத்ராவின் மகன் கிருஷ்ணா , விஜய நகர அரசரிடம் தஞ்சம் அடைகிறார். இவர்களும், எஞ்சியிருக்கும் பல்லாலர் இளவரசர்களுடன் இணைந்து , முகலாயர்களை விரட்டி அடித்து, தக்காணின் தெற்கு பகுதியை மீட்கிறார்கள்.

தென் இந்தியாவில் டெல்லி சுல்தான் ஆட்சியின் அதிகாரத்தை அழிக்க தயாராகுகிறார்கள்.

எனவே நான் முதலாம் ஹரிஹரர் இறந்த ஆண்டு 1343ம் என்று கொள்கின்றேன்.
முதலாம் ஹரி ஹரி ஆட்சி  செய்த ஆண்டை பற்றி ஓரே ஒரு முரண்பாடான தகவல் உண்டு. சம்கமாக வம்சத்தை குறிக்கும் ஒரு கல்வெட்டு , 1356ல் முதலாம் ஹரி ஹரி வழங்கிய மானியத்தை பற்றி சொல்லும் போது “சுல்தானை தோற்கடித்து” என்ற குறிக்கிறது. ஆனால் அது சொல்லும் அர்த்தம், துக்ளக் தனது நாட்டின் பகுதிகள் மேல் உள்ள அதிகாரத்தை இழத்தல் என்பதாகும்.

முதலாம் ஹரி ஹரியின் பிறகு அவரது சகோதரர் , முதலாம் புக்கர் ஆட்சிக்கு வருகிறார். பெர்னோ நுனுஸ் படி அவர் முப்பத்தி ஏழு வருஷம் ஆட்சி செய்கிறார் ,கூட ஒரிசா (Orya) உட்பட, தெற்கு பகுதியில் உள்ள சகல ராஜ்யங்களையும் கைப்பற்றுகிறார். மிக பெரிய படை பலத்தை  உபயோக படுத்தாமலே , பெரும்பாலான தென் இந்திய அரசுகள் அவரின் கீழ் வந்தன. இஸ்லாமிய சர்வாதிகார ஆதிக்கத்தில் இருந்து ஹிந்து மதத்தை காத்தல் என்ற காரணத்தால் பல ஆர்வமுடன்  இவருடன் இணைந்தன.
வரலாறு படி கி.பி 1380 முதலாம் புக்கர் மரணம் அடைகிறார். முதலாம் புக்கரின் ஆட்சி கால கல்வெட்டுகள் 1354 ல் 1371 வரை குறிக்கின்றன என தொல் பொருள் ஆராச்சியாளர் டாக்டர் ஹுல்டஸ் (Hultzsch) சொல்கிறார். முதலாம் புக்கரக்கு பின் வந்த இரண்டாம் ஹரி ஹரி அரசரின் கல்வெட்டும் 1379ல் ஆரம்பிக்கிறது. ஆக முதலாம் புக்கா 1379 வரை அரசாள்கிறார். இன்னும் சொல்ல போனால் முதலாம் புக்கர் அரசாண்ட ஆண்டுகள் முப்பத்தி ஏழு என்பதை விட, முப்பத்தாறு என்று தான் சொல்ல வேண்டும். அதாவது கி.பி 1343 முதல் 1379 ஆண்டு வரை.

ஆனால் நெல்லூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு  வரும் செம்பு தகடுகள் உள்ள கல்வெட்டு மற்றோர் கதை சொல்கிறது. அது கிருஷ்ணா சாஸ்திரி என்பவரால் கவனமாக இன்றைய மொழிக்கு திருத்தப்பட்டு உள்ளது. அதன் படி சிறந்த போர் வீரரான இருந்த முதலாம் புக்கர் அரியணையை அபகரித்துக்கொண்டதாக தோன்றும். முதலாம் ஹரி ஹரியின் தந்தையான சம்கமாவிற்கு ஐந்து மகன்கள். மூத்தவர் முதலாம் ஹரி ஹரி, அடுத்து கம்பா , மூன்றாவது முதலாம் புக்கர். இதில் யார் முதலாம் ஹரி ஹரிக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார் என்பதே கேள்வி.

1354 தேதியிட்ட முதலாம் புக்கர் கல்வெட்டும், மற்றும் 1356 தேதியிட்ட இந்த நெல்லூர் கல்வெட்டும் ஒரு விதமான விடை சொல்கிறது. அதன் படி, “முதலாம் ஹரி ஹரிக்கு பின் கம்பா ஆட்சிக்கு வருகிறார். கம்பாவின் மகன் , இரண்டாம் சம்கமா, கம்பாவிற்கு பின் அரசாள்கிறார். அவர் 1356 ஆண்டில் பிராமணர்களுக்கு நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை பரிசளிக்கின்றார்.” இது சொல்வதை வைத்து பார்த்தால் , கம்பா தான் முதலாம் ஹரிக்கு பின் 1343 முதல் 1355 வரை அரசாள்கிறார். அவருக்கு பின் அவர் மகன்  இரண்டாம் சம்கமா ஆட்சிக்கு வருகிறார். இதை உறுதி செய்யும் படி வேறு தகவல்கள் எதுவும் நம்மிடம் இல்லை. ஒரே ஒரு தகவல் மட்டும் உள்ளது. அது “மாதவிய ததுவ்த்ரி” (MADHAVIYA DHATUVRITTI) என்ற நூலை இயற்றிய சயனச்சர்யா என்பவர் , விஜயநகரத்தின் குருவான மாதவச்சாரியார் என்பவரின் சகோதரர். இவர் கம்பாவின் மகனான சம்கமாவிடம் அமைச்சராக இருந்தார். இதை வைத்து தான் கிருஷ்ணா சாஸ்திரி , ஹரிக்கு பின் கம்பா வந்தார் என்று சொல்கிறார்.

அதாவது முதலாம் ஹரி ஹரிக்கு பின் ஆட்சி அதிகாரம் பற்றிய சர்ச்சை இருந்த நிலையில், எப்படியோ புக்கரின் கை உயர்ந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து 1354ல் அல்லது அதற்கு முன்னரே தன்னை ராஜா அறிவித்தார் என்று நாம் அர்த்தம் கொள்ள்ளலாம். அரச குடும்பத்தில் சண்டைகள் நிகழ்ந்து , குடும்பத்திற்குள் பிரிவுகள் நடந்து , ஒருவரை ஒருவர் வீழ்த்தி , அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பது எல்லா அரச குடும்பத்திலும் தென்படும் இயல்பான விஷயம் தான்.

அனுமானத்தின் அடிப்படையில் என்று பார்த்தால் முதலாம் புக்கரின் அரசாட்சி 1343 ல் 1379 வரை நீடித்தது. இனி இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் தரவுகள் படி , கிருஷ்ணா நதிக்கு வடக்கே அதிகாரம் பெற்று இருந்த இஸ்லாமிய அரசுகளுடன் விஜய நகரம் என்ன போக்கை கடை பிடித்தது என்று பார்க்கலாம்.

பல ஹிந்து அரசுகளின் கூட்டமைப்பு விஜயநகர அரசருடன் இணைந்து , முகலாயர்களை பின்னடைய செய்தது. இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் தரவுகள் படி “வாராங்கல் ருத்ர தேவரின் மகன் கிருஷ்ணா நாயக், தனிப்பட்ட முறையில் பல்லாலர் தேவரை சந்தித்து ஒரு ஹிந்து கூட்டமைப்பை உருவாக்கி , முகலாயர்களை , தக்காணை விட்டு விரட்ட வேண்டுமே என்று வலியுறுத்தினார். பல்லாலர் இளவரசன் அதை ஒத்துக் கொண்டு , தெலுங்கானவில் உள்ள அனைத்து ஹிந்து அரசுகளையும் இணைத்து படை திரட்டி அதற்கு தானே தலைமை ஏற்பதாக உறுதி அளிக்கிறார்”.

பல்லாலர் தேவர் பின்னர் விஜயநகர நகரத்தை உருவாக்கி, படைகளை கட்டமைத்து, போரை துவக்கினார். அதன் விளைவாக முகமதியர்கள் வாரங்கலில் இருந்து விலகுகின்றனர். அதன் கவர்னர் இமாத்-உல்-முல்லாக் தேவகிரிக்கு பின் வாங்குகின்றார். இதனால் தூண்டபட்ட மலபார் மற்றும் கர்நாடக அரசர்களின் படைகள், விஜயநகர் அரசர்களுடன் இணைந்து கொள்ள , தக்காணை முழுதும் கைப்பற்றி, முகலாயர்களை அங்கிருந்து வெளியேற செய்தனர். சில மாதங்களிலே துக்ளக்கிடம் தேவகிரியை தவிர்த்து வேறு தெற்கு பிரதேசம் இல்லாமல் போனது. இது தான் முகமதியர் வரலாற்றாசிரியர் சொல்லும் கதை.

இதில் கவனிக்க தக்க விஷயம் என்றால், இந்த ஹிந்து அரசுகளின் இந்த வெற்றிகள் தற்காலிமாக மட்டுமே அப்போது இருந்தது, முகலாயர்களை விரட்டி அடித்து விட்டு , மீண்டும் கிருஷ்ணா நதியின் தெற்கு பகுதிக்கு அப்பால் உள்ள தங்கள் நிலைகளுக்கு திரும்பி போனார்கள். வெற்றி கொள்ளபட்ட இடங்கள் பாதுகாப்பு இன்றி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாய நிலையில் இருந்தது. முகலாயர்கள் தக்காணை விட்டு முழுதும் விலக வில்லை.

டெல்லி சுல்தானின் ஆதிக்கம் முற்றிலும் அந்த பகுதியில் அழிக்கப்பட்டு இருந்தாலும், அது குறுகிய காலமே நீடித்தது. கி.பி 1347 ஆகஸ்ட் 3ம் தேதி ஆலா-உத்-தின் என்பவன் தக்காணில் உள்ள குல்பர்கா என்ற இடத்தில் சுல்தானாக முடி சூட்டி கொண்டான். அவனின் வழியில் ஒரு புது வம்சம் உருவாகி சுமார் 140 ஆண்டுகள் நீடித்தது.
சில ஆண்டுகளுக்கு பிறகு ஆலா-உத்-தின் கர்நாடக நாட்டின் மீது ஒரு வெற்றிகரமான படையெடுப்பு நடத்தினான். ஆனால் செல்வத்துடன் அந்த படை திரும்பி வந்தாலும் , அது மாபெரும் வெற்றி என்று பிரிஷ்டாஹ் குறிக்க வில்லை. இருந்த போதிலும், இந்த புது சுல்தான் தன் ராஜ்யத்தை துங்கபத்ரா ஆற்று வரை விரிவுப்படுத்தினான், அதாவது அடோனி என்ற கோட்டை வரை.  (அடோனி-இன்றைய இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ள நகரம்).

ஆலா-உத்-தின் கி.பி 1358ம் ஆண்டு, ஞாயிறு அன்று அறுபத்தி ஏழு வயதில் இறந்தார், இவருக்கு பின் முகமது ஷா அரியணைக்கு வந்தார். விஜயநகர ராயர்,  ஆலா-உத்-தினுக்கு, விலை மதிப்பிட முடியாத ஒரு மரகத கல்லை வழங்க , அதை பல விலையுயர்ந்த கற்களுடன் சேர்த்து சுல்தான் அவரது அரியணையில் வைத்து கொண்டார். ஆனால் இதை முஹம்மதே செய்து தனது அரியணையில் உள்ள குடை மேலே வைத்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

ஆரம்பகால முஹம்மது ஆட்சி காலத்தில் பாமினி சுல்தான்களின் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் பெரும் பகுதி, விஜயநகரம் மற்றும் வாரங்கல் இந்துக்ககளால் உருக்கி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதன் பொருட்டு எண்ணற்ற வியாபாரிகள் சாகடிக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் முதலாம் புக்கர் அவரது நண்பர்களான வாரங்கல் அரசுடன் சேர்ந்து இழந்த பகுதிகளை மீட்க சுல்தான் மீது போர் முரசு கொட்டினார். ஆனால் சுல்தான் போருக்கு தயாராக இல்லை, ராயரின் தூதவர்களை கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகள் தன் அரசவையில் தங்க வைத்து , பீஜப்பூருக்கு உல்லாச பயணம் அனுப்பினார். ஒரு வழியாக இறுதியாக போர் என்று முடிவு செய்து கொண்டு, பல எதிர் கோரிக்கைகளை ஹிந்துக்கள் மீது வைத்தார்.

முதலாம் புக்கார் வாரங்கல் படைகளுடன் இணைந்து கொள்ள,  முஹம்மது அவர்கள் மீது போர் தொடுத்தான். தலைநகரை கொள்ளையடித்தல் என்ற நோக்கத்தில் முன்னேறி, வெற்றி தோல்வி இல்லாமல் திரும்பி போனான். பிரிஷ்டாஹ் அதற்கு அப்புறம் அதை பற்றிய தாக்குதல்கள் பற்றி சொல்ல வில்லை.  அதில் இருந்து , முகமதியர்கள் அதற்கு மேல் எந்த தாக்குதலையும் நடத்த முடியாத நிலையில் இருந்தனர் என அறிந்து கொள்ளலாம்.

முகலாயர்களின் உடனான தொடர் யுத்தத்தில் , ஹிந்து அரசான வாரங்கல் எப்போதும் அமைதியாக இருந்தது இல்லை. முதலாம் புக்கரின் விஜயநகரத்தில் நிகழ்ந்தவற்றை பார்க்கும் முன், சிறிதளவு வாரங்கலில் நடந்த வரலாற்றை பார்ப்போம்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு, ஏதோ ஒரு காரணத்தால் வாரங்க ராஜாவால் அவமான படுத்த பட்டதாக உணர்ந்த பாமினி சுல்தான் முஹம்மது  “வேலுன்புட்டம்” (தெலுங்கானா பகுதியில் உள்ள நகரம்) என்ற பழைய நகரத்தின் மீது படை எடுத்து செல்கிறான். அதை கைப்பற்றி , அதன் குடி மக்களை படுகொலை செய்கிறான், அதிர்ஷ்டம் அற்ற வாரங்கலின் இளவரசன் விநாயகர் தேவாவை சிறை பிடிக்கின்றான். கோட்டையின் முன் ஒரு பெரிய நெருப்பை எழுப்பி, கல்லை வீசும் போர் எந்திரத்தில் இளவரசனை கட்டி, நெருப்பில் தூக்கி ஏறிய செய்து உயிரோடு எரித்து கொல்கின்றான். ஒரு சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு சுல்தான் தனது தேசத்திற்கு திரும்புகிறான். ஆனால் வழியில் ஹிந்துக்கள் கூட்டமாக தாக்கி சுல்தானின் படையை நிலை குலைய செய்கின்றனர்.  எப்படியோ தப்பி பிழைத்து சுல்தான் நாடு திரும்புகையில் அவன் படையில் ஆண்கள் 1500மட்டும் மிஞ்சுகின்றனர். சுல்தானும் கையில் கடுமையான காயத்துடன் ஊர் திரும்புகிறான்.

இதன் பிறகு, முதலாம் புக்கரும் , வாரங்கல் இளவரசரும் , டெல்லி சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தக்காணின் இழந்த பகுதிகளை மீட்க அவனுக்கு உதவ முன் வந்தனர். 

ஆனால் அதிகமான உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட இருந்த  பெரோஸ் ஷா துக்ளக் என்ற அந்த டெல்லி சுல்தானால், இதை செயல்படுத்த முடிய வில்லை. இதனால் ஊக்கம் பெற்ற பாமினி சுல்தான் முஹம்மது புதிய படைகளை உருவாக்கி வாரங்கல் மற்றும் கோல்கொண்டா எதிராக இரண்டு படை பிரிவுகளை அனுப்பினான்.

படை எடுப்பு வெற்றிகரமாக நடந்தது, தோல்வியுற்ற அரசரிடம் இருந்து ஒரு அற்புதமான மதிப்பு மிக்க கோல்கொண்டா வைரத்தை சுல்தான் பரிசாக பெறுகிறான்  அது அந்நாளில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் பவுண்ட் பண மதிப்பை கொண்டது. 

பெரும் போரட்டத்திற்கு பிறகு வாரங்கல் இறுதியாக கி.பி 1424 ஆண்டு முற்றிலும் பாமினி அரசுடன் இணைக்க பெற்றது. கிருஷ்ணா நதியின் நீளத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும், கிழக்கு கடற்கரையை தவிர்த்து, முகலாயர்கள் ஆதிக்கம் தொடர்ந்தது.
முதலாம் புக்கரின் ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகள், அதனால விஜயநகர்த்தில் நடந்த விளைவுகள் பற்றி இனி பார்ப்போம். 1365 ஆண்டில் இருந்து அதன் பின் வந்த  இரண்டு நூற்றாண்டுகளில் ஹிந்து அரசுகளின் தலை எழுத்தை நம்மால் சிரமம் இல்லாமல் அறிய முடியும்.

1366 ஆண்டின் ஆரம்ப கால வாக்கிலே பாமினி சுல்தான் விஜயநகரப அரசுக்கு எதிராக செயல்பட துவங்கினான். அவனது ஒரு மகிழ்ச்சியான இரவு , உணவிற்கு பிறகு ஹிந்துக்களை படு கொலை செய்வதில் தான் முடிந்தது. இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் கணக்கு படி, கண்டிப்பாக அரை மில்லியனுக்கு சற்றும் குறையாத எண்ணிக்கையில் ஹிந்துக்கள் படு கொலை செய்யப்பட்டனர்
சுல்தானிடம்  முத்திரை  பதிப்பவராக வேலை பார்த்த , முல்லா தாவுத் , தான் நேரில் பார்த்த கதையை பினவருமாறு கூறினார்.

“ஒரு நாள் சந்தோஷமான மாலை வேளையில், தோட்டத்தில் சுல்தானை புகழ்ந்து இரண்டு இசை இசையமைப்பாளர்கள் படி கொண்டு இருந்ததை , புன்னகை பொங்க சுல்தான் பார்த்து கொண்டு இருந்தார். சுல்தான் அளப்பரிய மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று, நூறு கலைஞர்களுக்கு விஜய நகரத்தின் பீஜ்நகர் கருவூலத்தில் பணம் கொடுக்க தனது அமைச்சருக்கு கட்டளை இட்டார். ஆனால் சுல்தான் மது போதையில் அதை விளையாட்டாக சொல்வதாக நினைத்து அமைச்சர் அந்த கட்டளையை நிறைவேற்ற வில்லை. ஆனால் சுல்தான் அமைச்சரின் எண்ணத்தை புரிந்து கொண்டதாக தெரிந்தது. அடுத்த நாள் அதை பற்றி அமைச்சரிடம் கேட்ட போது, அமைச்சர் மௌனமாக நின்றார். “எனது வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தை, அர்த்தம் இல்லாமல் சொல்லப்படும் என்று நினைக்கிறாயா? , மதுவின் தாக்கத்தால் அதை சொல்ல வில்லை, அதற்கு பிறகு அர்த்தம் வைத்து தான் சொன்னேன்” என்ற கோபமாக சுல்தான்  சொன்னார். அரசரின் ஆணையின் படி, அமைச்சர் அந்த உத்தரவில் சுல்தானின் முத்திரையை பதித்து, விஜயநகர அரசரிடம் விரைவாக அனுப்பி வைத்தார். ஆனால் ராயர் அந்த உத்தரவு வரவை, அந்த தூதவனின் பின் பக்கத்தில் சொருகி, அவனை கழுதை மேல் ஏற்றி அவமானபடுத்தி திருப்பி அனுப்பினார். மேலும் தனது படைகளை பாமினி அரசின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த நோக்கத்துடன் அவர் முப்பதாயிரம் குதிரை வீரர்கள் , மூவாயிரம் யானைகள், ஆயிரம் காலட் படைகளுடன்  அடோனி என்ற கோட்டைக்கு அணிவகுத்து சென்றார். அங்கிருந்து படைகளை பிரித்து , சுல்தானின் பகுதிகளை நாசமாக அனுப்பி வைத்தார் ”.

அது மழை பெய்யும் காலமாக இருந்தாலும், ராயர் சளைக்காமல் படைகளை செலுத்தி கொண்டு சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்ட ராய்ச்சல் மாவட்டத்தின் முக்கிய நகரமான முத்கல்(mudkal) என்ற நகரத்தினுள் நுழைந்தார். கிருஷ்ணா மற்றும் துங்கபத்திரா நதிகள் இணையும் வடக்கு பகுதியில் அமைந்த முக்கோணம் வடிவிலான இந்த பிரதேசம் எப்போதும் ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உரிமை கோரும் இடமாக இருந்தது, அடுத்த வந்த 200 ஆண்டுகளில் பல போர்கள் அங்கே நடந்தன. முத்கல் நகரம் பிடிக்கப்பட்டு, அனைத்து மக்களும் ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள், உட்பட வாளுக்கு இரையாக்கபட்டனர். ஒரு மனிதன் மட்டும் தப்பி குல்பர்க நகரத்தில் உள்ள சுல்தானுக்கு, முத்கல் நகரம் வீழ்ந்த செய்தியை எடுத்து கொண்டு போனான்.
செய்தியை கேள்விப்பட்டு ஆத்திரப்பட்ட சுல்தான் அவனது சக தோழர்கள் துணிச்சலாக போரிட்டு மரணம் அடைந்த போது, இவன் மட்டும் தப்பி தன் முன் உயிரோடு நிற்பது தாங்க முடியாத கோபத்தை தருகிறதுஎன்று சொல்லி அந்த பரிதாபமான மனிதனுக்கு உடனடியாக மரண தண்டனை தந்தான்.

அதே நாளில் , அதாவது 1366ம் ஆண்டு சுல்தான் தென் திசை நோக்கி படைகளை செலுத்தும் முன் பின்வரும் சத்தியபிரமாணம் செய்தார், இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் படி ஒரு லட்சம் காபீர்களை அதாவது ஹிந்துக்களை படுகொலை செய்து முத்கல் நகர மக்களின் கொலைகளுக்கு பலி வாங்காத வரை , தனது வாளை உறைக்குள் போட மாட்டேன் என்று சொல்லி புனித போரை தொடக்கினார்.
கிருஷ்ணா நதிக்கரையை அடைந்த பிறகு எதிரிகளின் ரத்தத்தால் முத்கல் நகர மக்களின் ஆன்மாக்களை மகிழ்விக்கும் வரை, உண்ணுதல், உறங்குதல் எதுவும் இல்லாமல் , மேல் உலகத்தினால் ஆசிர்வாதிக்கபட்ட தனது படைகளை நகர்த்தி கொண்டு போவேன் என்று தன்னை அரசாட்சி செய்ய வைத்த அந்த இறைவனின் மேல் சூளுரைத்தார். தனது மகன் முஜஹிட் ஷா, தனக்கு பின் அரசராக வர வேண்டும் என அறிவித்து, மாலிக் சைப் என்பவனை அரச பிரதிநிதியாக நியமித்தான்.

தன்னிடம் உள்ள யானை படைகளில் 20ஐ மட்டும் தன்னுடன் வைத்து கொண்டு , மற்றதை அவனிடம் கொடுத்து மீண்டும் குல்பர்காவிற்கு அவர்களை திருப்பி அனுப்பினார். அவர் பின்னர் தாமதம் இல்லாமல், ஒன்பது ஆயிரம் குதிரை வீர்களுடன் நதியைக் கடந்து போனார். ராயின் படைகளால் தாக்கு பிடிக்க முடியாமல் போன போதும், ராயர் முன் எச்சரிகையாக தனது மதிப்பு மிக்க செல்வத்தையும், யானை படையையும் தனது தலைநகரத்திற்கு முன்னதாகவே அனுப்பி விட்டார். சூழ்நிலை பொறுத்து பின்வாங்கலாமா அல்லது அடுத்த நாள் யுத்தத்தில் ஈடுபடலாமா என்று முடிவு செய்து கொண்டார்.

அந்த இரவு மூர்க்கதனமாக இருந்தது. அதிகபடியான மழையால் சேறுகளில் சிக்கி கொண்டு யானைகள் மற்றும் குதிரைகளால் முகாமில் இருந்து நான்கு மைல் தாண்டி முன்னேற முடியவில்லை. முஹம்மது ஷா இரவில் எதிரிகளின் நடமாட்டத்தை அறிந்த போது, உடனடியாக முகாமை விட்டு அவர்களை நோக்கி அணிவகுத்து சென்றார். விடியலின் போது அவர் ராயின் முகாமில் வந்தடைந்தார் , ஆனால் அதற்குள் எச்சரிக்கை அடைந்த காபீர்கள் படை , குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி எல்லாவற்றையும் விட்டு விட்டு பின்வாங்கி போனது. முஹம்மது ஷா, ராயரின் சந்தையின் முகாமில் நுழைந்து ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் என்று எல்லாரையும் படுகொலை செய்தார், எழுபதாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது

ஒரு மழைக்காலதையும், வெப்ப காலத்தையும் முத்கல் நகரில் கடத்தி விட்டு, பின் புது படைகளை சேர்த்து கொண்டு அடோனி நோக்கி போனார். துங்கபத்திரா கரையில் சமமான அமைந்த அந்த நிலப்பரப்பை, ராயர் தனது சகோதரியின் ஆட்சி பொறுப்பில் விட்டு இருந்தார், அங்கே அவன் மிக பெரிய படையையும், பீஜ்நகரில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்த யானைகளையும் நிறுத்தி இருந்தான். முஹம்மது ஷா கற்களை வீசும் பொறிகளுடன், குறுகிய காலத்தில் துங்கபத்ரா நதியை கடந்து இதுவரை எந்த முகமதியரும் நுழையாத பீஜ்நகரின் பிரதேசத்தில் முதல் முறையாக நுழைந்தார்” .
இப்படி இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் குறிப்பிடுவது , ஆரம்ப கால டெல்லி சுல்தானின் அனுகொண்டியின் மீதான படை எடுப்பானது ஆற்றின் வடக்கே நிகழ்ந்தது என்ற வரலாறு உண்மையை உறுதிபடுத்துகிறது.

பிரிஷ்டாஹ், இந்த விஜயநகர அரசரை கிருஷ்ணா ராய் அல்லது கிருஷ்ணா ராயன் என்ற அழைப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; ஆனால் அவரது உண்மையான பெயர் புக்கா என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த  தகவல்களை  சேகரித்து எழுதும்போது பெயர்களை அவ்வ்போது தவறாக குறிப்பிடுகிறார்.

சுல்தான் முஹம்மது,  பின்னர், துங்கபத்ரா நதியை கடந்த போது அவனுக்கும் பெரும் கோட்டையான அடோனிக்கும் இடையில்  சுமார் இருபத்தைந்து மைல் தான் இருந்தது. அந்த கோட்டை செங்குத்தான மலைகளில் இருந்து நதிக்கு சற்று அருகாமையில் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு அரை வட்ட வடிவில் அமைந்த இந்த இடத்தின் மையத்தில் கோட்டை இருந்தது. நதியில் குறைந்த அளவே தண்ணீர் பாய்ந்து, அதை கடக்கும் வகையில் தான் இருந்தது.

இந்த போர் எங்கே நடை பெற்றது என கண்டறிவது கடினம், ஆனால் என்னை பொறுத்தவரை, முஹமது கோட்டையை தாக்கி சேதபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னேறினால் , முதலாம் புக்கர் கோட்டைக்கும் அவனுக்கும் இடையில் மிக பெரிய படையுடன் நின்று இருப்பார். ஆக சுல்தான் தற்போதைய சிறுகுப்பா (ஆந்திராவின் எல்லைக்கு அருகில் உள்ள கர்நாடகவின் பகுதி ) என்ற நகரத்திற்கு அருகாமையில் எங்கேயாவது ஒரு இடத்தில் கடந்து சென்று , பருத்திகள் விளையும் கெள்டல் (kowtall) என்ற  சமவெளி பகுதியில் அந்த பெரும் போர் நடை பெற்று இருக்க வேண்டும்.

முதலாம் புக்கர், முஹம்மது படைகள், நதியை கடந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்து , தனது சபையை கூட்டி முகமதுவை எதிர்க்கும் வழி முறைகளை  ஆராய்கிறார். புக்கரின் தாய் வழி உறவை சேர்ந்த ஹோஜ் மூல் என்ற தளபதியின் கீழ் படைகள் நடத்தப்பட்ட வேண்டும் என்பதை அந்த சபை ஒத்துக் கொண்டது.  உத்தரவை ஏற்று கொண்ட தளபதி முகம்மதுவை உயிருடன் பிடித்து கொண்டு வர வேண்டுமா அல்லது அவன் தலையை மட்டும் ஈட்டி முனையில் எடுத்து வந்து உங்களுக்கு பரிசளிக்க வேண்டுமா என்று கேட்டான். “இறந்த எதிரி தான் எப்போதும் பிரச்சினை இல்லாதவன், ஆகையால் அவனை பிடித்த உடன் கொன்று விடு” என்று மறுமொழி சொல்கின்றார் புக்கர். ஹோஜ் மூல், நாற்பதாயிரம் குதிரை மற்றும் ஐந்து லட்சம் காலட் படையுடன் முஹம்மது நோக்கி போனான்.

பிராமணர்களை வைத்து , தனது படைகளுக்கு, முகமதியர்களை ஏன் துரத்த வேண்டும் என்ற அவசியத்தை தினம் தினம் போதிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். மேலும் முகமதியர்கள் செய்த பசு கொலைகளையும் , ஹிந்துக்களின் புனித இடங்களை அழித்தும், கொன்றும் செய்த அநிதிகளை விரிவாக போர் வீர்ர்களுக்கு சொல்லி வர வேண்டும் என்று உத்தரவு இட்டான்.
 
சுல்தான் முகமது ஷா, எதிரி தனது முகாமில் இருந்து நாற்பத்திரண்டு மைல் தொலைவில் வந்த போது, தளபதி கானிடம் தனது  பதினைந்து ஆயிரம் குதிரை மற்றும் ஐம்பது ஆயிரம் காலட் படையை திரட்ட சொன்னான். ஆயிரம் குதிரை மற்றும் முப்பது ஆயிரம் காலட் படை, பொறி இயந்திரத்துடன் தளபதியை முன்னே போக சொன்னான்.

யுத்தம் தொடங்கியது.

“கி.பி 1366 ஜூலை மாதம் 23 தேதி இருளடைந்த (காபீர்கள் , அதாவது முதலாம் புக்கரின்) படையும், பெரும் ஒளியை கொண்ட சுல்தானின் படைகளும் மோதின. இருந்து அதிகாலையில் இருந்து மாலை நான்கு மணி வரை, ஓயாத அலைகள் போல் இரு படைகளும் சண்டை இட்டு கொண்டு இருந்தன, இருபுறமும் பெரும் எண்ணிக்கையில் சேதம் ஏற்பட்டது. முகமதுவின் தளபதி கானின் படையில் இடது, மற்றும் வலது புறமாக இருந்த படை தளபதிகள் மூஸ் கான், ஈஸ் கான் இருவரும் வீர மரணத்தை தழுவ, அவர்கள் படைகள் சிதறி , துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய படைகளுக்கு தோல்வி ஏற்படும் நிலை உருவாகியது. அந்த சமயத்தில், முஹமது மூவாயிரம் குதிரை படையுடன் அங்கே வர, தறிகெட்டு அலைந்து கொண்டு இருந்த தளபதி கான்களின் படை வீரர்கள், உற்சாகம் பெற்று, அவருடன் சேர்ந்து கொண்டனர். பொறி இயந்திரத்தை நடத்தி கொண்டு இருந்த முக்க்ரிப் கான், முன்னேறி செல்லாமல் தொலைவில் இருந்தே எதரிகளின் கால்ட் படையையும், குதிரைகளையும் கலைத்து கொண்டு இருந்தான். முன்னேறி சென்று தாக்க அனுமதி கேட்டான். தளபதி கான், தனது படையில் இருந்த சிறந்த படை வீரர்களை அவனுக்கு, கொடுத்து , முன்னேறி செல்ல அனுமதி கொடுத்தான். இதன் மூலம், காபீர்கள் மீது விரைவாக தாக்குதல் நடத்தியதால், காபீர்களால் எதிர் தாக்குதல் நடத்த முடியாமல், ஆயுத தட்டுப்பாடு அவர்களிடம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் தளபதி கானின் ஷீர் ஷிகார் என்ற யானை, பாகனின் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து, எதிரிகள் படையின் மைய பகுதியில் நுழைய, அதை காபீர்களின் படை தலைவன் ஹோஜ் மூல் யானை படையால் வழி மறிக்கப்பட்டு, அதன் பாகன் கொல்லப்பட்டான். ஐந்நூறு குதிரைகள் உடன் கான் முஹம்மது அதை தொடர்ந்து போக, யானை தெறித்து ஓடி, எதிரிகளின் அணிவகுப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஹோஜ் மூல் மரண காயம் பெற்ற பிறகு, தப்பி போக, அவனது படைகளால் அதற்கு மேல் எதிர்க்க முடிய வில்லை. காபீர்களின் மைய படை அணிவகுப்பு கலைய ,எல்லாப் படைகளும் பின் வாங்கி தப்பி போயின.

சுல்தான், ஹிந்துக்களை படுகொலை செய்ய புது உத்தரவுகளை கொடுத்தார். கர்ப்பிணி பெண்கள், மற்றும் தாயின் மார்பில் பால் குடித்து கொண்டு இருந்த குழந்தைகள் உட்பட எல்லாரும் படுகொலை செய்யப்பட்டனர்

முஹம்மது அதே இடத்தில் ஒரு வாரம் நின்றார் , அவருடைய சொந்த ஆட்சிப்பிரதேசங்களில்,அவரது வெற்றியின் செய்தி பரப்பபட்டது. தனது ஹிந்துக்களின் மீதான சபதத்தை முடிக்க,  முதலாம் புக்கர் நிலை கொண்டு இருந்த இடத்தை நோக்கி போனான். புக்கர், மிச்சம் இருக்கும் படையை வைத்து கொண்டு சுல்தானை எதிர்க்க முடியாமல் போனதால் , காடுகளுக்கு இடையே தப்பி ஓடினார். எதிரில் வருபவர்கள் யார் என்றாலும் , கொன்று விட்டு, சுல்தான் மூன்று மாதங்கள் புக்கரை பின் தொடர்ந்து போய் கொண்டு இருந்தார். கடைசியில் புக்கர் தனது விஜயநகர நகரத்தை அடைந்தான். சுல்தானும் பின் தொடர்ந்து அந்த நகரத்தின் அருகில் வந்தான்.

சுருக்கமாக சொன்னால், சுல்தான் ஒரு மாதம் வீணாக விஜயநகர முற்றுகையிட்ட பின்னர், துங்கபத்திரா நதிக்கு மறுபுறம் பின்வாங்கி, போகும் வழி எங்கும், ஹிந்து மக்களை கொன்றான். பின் ஒரு பெரிய சமவெளியில் தனது படையை நிறுத்த, அவனுக்கும் புக்கரின் படைக்கும் நடுவில் பெரிய இடைவெளி இல்லாமல் இருந்தது. முகம்மது வேண்டும் என்றே பின் வாங்கி போனது, எதிரியை தன்னை தொடர்ந்து வர செய்தல், மற்றும் எதிரிக்கு மித மிஞ்சிய நம்பிகையை அளித்து , அலட்சியமாக இருக்க செய்தல் என்ற நோக்கத்தை கொண்டது. அது சரியாக நிறைவேறியது. சுல்தான் திடீரென எதிர்பாராத இரவு தாக்குதலை புக்கரின் படை மீது நடத்தினான். பாதுகாப்பு இல்லாமல், பெண்களின் நடனத்தை மது குடித்து ரசித்து கொண்டு இருந்த,  தாக்குதலில் இருந்து தப்பி விஜயநகர் நோக்கி போக, அவரது படைகள் பத்து ஆயிரம் கொடூரமாக கொல்லப்பட்டனர். ஆனால் இதில் திருப்தி அடையாத சுல்தான் ஆத்திரம் கொண்டு, கோட்டையை சுற்றியுள்ள எல்லா ஹிந்துக்களையும் படுகொலை செய்ய உத்தரவிட்டார்.
பின்னர் புக்கா சமாதான உடன்படிக்கை செய்ய முயன்றான், ஆனால் சுல்தான் மறுத்துவிட்டார்.

தூதுவர்கள் சுல்தானிடம், “நீங்கள் ஒரு லட்சம் ஹிந்துகளை கொல்வது என்று தான் சத்திய பிரமாணம் எடுத்து கொண்டு உள்ளீர்கள் தவிர, ஒட்டு மொத்த ஹிந்துக்களின் இனத்தை அழிப்பது என்ற சத்தியத்தை நீங்கள் செய்ய வில்லை” என்று சுட்டி காட்டினர். அதற்கு சுல்தான் அவரது சபதத்தை விட இரண்டு மடங்கு ஹிந்துக்கள் கொல்லப்பட்டு விட்டாலும், புக்கர், தனது இசை கலைஞர்களுக்கு பணத்தை கொடுத்து மகிழ்விக்காத வரை , படுகொலைகள் தொடரும் என்றார். அதை ஏற்று கொண்டு அந்த இடத்திலே பணத்தை தூதுவர்கள் கொடுத்தனர்.

சுல்தான் “இறைவனுக்கு புகழ் சேரட்டும், எனது கட்டளை நிறைவேறியது, காலத்தின் பக்கத்தில் இருந்து எனது பெயர் ஒளி குன்றாமல் இருக்கும்” என்று சொன்னார். 
தூதுவர்கள் மேலும் தொடர்ந்து “எந்த மதத்தின் பெயராலும், ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை ஆதரிக்க கூடாது” என்று வேண்டுகோள் வைத்தனர். “புக்கர் தவறு இழைத்து இருந்தால், அதற்கு ஏழைகள் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்க முடியாது” என்று வாதிட்டனர். “கடவுளின் விருப்ப படிதான் எல்லாம் நடந்தது, எதையும் மாற்ற தனக்கு அதிகாரம் இல்லை” என சுல்தான் பதில் உரைத்தார்.
தூதுவர்கள் இறுதியில்” நாம் இருவரும் அண்டை நாடுகள் , தேவையற்ற கொடூர யுத்தத்தில் இறங்கி, மனக்கசப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று சமாதான உடன்படிக்கை வைத்தனர்.

சுல்தான் அந்த வார்த்தைகளை கேட்டு யோசனை செய்து,” இனி வரும் காலங்களில் எதிரியை வென்ற பின், ஒருவரையும் கொல்ல கூடாது என்றும், தனக்கு பின் ஆட்சிக்கு வருபவர்களும் இதை கடைபிடிப்பார்கள்” என்றும் உறுதிமொழி தந்தார்
எந்த சந்தேகமும்  இல்லாமல் அதற்கு பின் சில ஆண்டுகளாக அமைதி நிலவியது. ஆனால் அந்த யுத்தத்தில் நடந்த படு கொலைகள் அதற்கு பின் தான் தெரிய வந்தன. முஹம்மதுவின் வெற்றியை பேசும் இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் தனது அறிக்கையில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ஹிந்துக்களை முஹமது கொண்டு குவித்தான் என்று புகழ் பாடுகின்றார்.  கர்நாடகவில் உள்ள பல மாவட்டங்கள் , அந்த போருக்கு பிறகு தங்களது பழைய மக்கள் தொகைக்கு பல ஆண்டுகளாக மீள முடிய வில்லை.
இவ்வாறாக அந்த கொடூர போர் முடிவடைந்து , சில ஆண்டுகளாக விஜயநகரம் மற்றும் குல்பர்கா இடையே அமைதி நிலவிற்று.

முஹம்மது ஷா தனது 55 வது வயதில் , 21 ஏப்ரல் 1375 மரணம் அடைய , 19 வயது நிரம்பிய அவன் மகன் முஜாஹித் ஆட்சிக்கு வருகின்றான். வந்த சில நாட்களில், கிருஷ்ணா மற்றும் துங்கபத்திரா இடைப்பட்ட பகுதியில் அமைந்த கோட்டைகள் மற்றும் மாவட்டங்கள்,  இரு தேசத்திற்கும் இடையில் பிரிக்கப்பட்ட விதம், தனக்கு ஏற்பு உடையது அல்ல, ஆகையால் துங்கபத்திரா வரையில் மட்டும் ராயரின் அதிகாரத்தை வைத்து கொண்டு, முழு கிழக்கு பகுதியையும், அதனுடன்  பீக்போர் கோட்டை மற்றும் சில இடங்களை தர வேண்டும் என்று முதலாம் புக்கருக்கு(ராயர்) ஓலை அனுப்புகின்றான். கர்நாடகவில் உள்ள தர்வர்ட் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள இந்த கோட்டை நிலவியல் ரீதியாக முக்கியமான ஒன்று. தக்கானின் முகமதிய ஆட்சியாளர்கள் எப்போதும் இந்த கோட்டையை பேராசையுடன் பார்த்து கொண்டு இருந்தார்கள். ஏன் என்றால், விஜய நகரத்திற்கு கடல் வழியாக நேரடி பாதை உண்டு, அதுவும் இல்லாமல் இதை கைப்பற்றினால் ஹிந்துக்களின் வர்த்தக பாதையை அழித்து விடலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு.

ஆனால்  ராயர் அதை ஏற்காமல், அதே மாதிரியான எதிர் கோரிக்கை வைத்தார். “ராய்ச்சூரும், முத்கல் இரண்டும் அனுகொண்டி அரச குடும்பத்திற்கு பாத்திய பட்டது. எனவே டோப் (ராய்ச்சூர் மாவட்டத்தை உள்ளடக்கிய முக்கோண பிரதேசம்) என்ற இடத்தில் இருந்து சுல்தான்  முழுவதும் வெளியேற வேண்டும், கிருஷ்ணா நதி வரை தன் ஆளுகைக்கு உட்பட்டது , அதுவும் அன்றி சுல்தானின் தந்தை முகமது ஷா காலத்தில்  கொண்டு சென்ற யானைகளை திருப்பி தர வேண்டும் என்று எதிர் ஓலை அனுப்பினார். 
.
ஓலை தன் வேலையை செய்தது.

சுல்தான் விஜய நகரத்தின் மீது போர் பிரகடனம் செய்து, இரண்டு நதிகளையும் கடந்து அடோனி கோட்டை அருகே வந்தான். ராயர் துங்கபத்ரா கரையில் முகாமிட்டுள்ளார் என்று அறிந்த பின், அடோனி கோட்டையை முற்றுகை இட ஒரு படையையும், விஜயநகரத்தை நோக்கி ஒரு படையையும் அனுப்பி விட்டு, மெதுவாக அதே நேரத்தில் மிகுந்து எச்சரிக்கையுடன், ஆற்றை ஒட்டி வடமேற்கு திசையில் படையை நடத்தி கொண்டு போனான். ராயர் சுல்தான் படையை எதிர் கொள்ள தயாராக இருந்த போதிலும், கடைசி நிமிடத்தில் தன் மனதை மாற்றி கொண்டு,  தனது கோட்டையின் தெற்கு பகுதியில் உள்ள சந்தூர் மலை காடுகளில் பின் அடைந்தான்.
இந்த இடத்தில் இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ், ஆரம்பித்து நாற்பதே வருடம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாக வளர்ந்து வரும் விஜய நகரத்தை பற்றி, சற்றே  புகழ்கிறார்.

"முஜாஹித் ஷா, விஜய நகரின் பெரும் அழகு மற்றும் புகழைப் கேள்விப்பட்டு, அதை நோக்கி முன்னேறினார். ஆனால் கோட்டை வலிமையானது என்பதால், முற்றுகை இட இது நேரம் இல்லை என்பதால் , ராயரை தொடர்ந்து போனார்.

இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் சொல்லும் பின் வரும் விஷயத்தை அந்த அளவுக்கு முடிய வில்லை என்ற போதும், பாரம்பரிய கதை படி நம்பி தான் வேண்டும்.
“ராயரை தொடர்ந்து காடுகள் இடையே, கடினமான பாதைகள் வழியாக சுல்தான் பின் தொடர்ந்து போகிறார். இதே மாதிரி காடுகள் இடையே மாறி மாறி ஆறு மாதம் கழிகிறது. புக்கர் சமவெளிக்கு வர வில்லை. சுல்தானின் பிடிவாதத்தால் அவரது படைகள் வேறு வழி இல்லாமல் தொடர, மிகவும். சோர்ந்து போனது. ஆனால் சுல்தான் தொடர்ந்து போனார். இறுதியில் அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது. காடுகள் வழியாக தொடர்ந்து பயணம் செய்தததால், ராயர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உடல் நிலை பாதிப்பு அடைய, மருத்துவர் அறிவுரையின் படி ஒரு ரகசிய வழியில் விஜயநகரம் திரும்புகிறார். அதை அறிந்து அவர் பின் ஒரு படை பிரிவை அனுப்பி விட்டு, “ஸீட் பண்ட ரம்சீர்” என்ற இடத்திற்கு அமீர் அல் அம்ரா பகதூர் கான் மற்றும் ஐயாயிரம் வீரர்களுடன் பொழுதை கழிக்க சென்றார்.

ஸீட் பண்ட ரம்சீர் இடத்தில், சுல்தான் ஆலவுதின் கில்ஜீயின் அதிகாரிகளால் ஒரு காலத்தில் கட்டப்பட்ட இருந்த ஒரு மசூதியை பழுது பார்த்தார். அங்கே இருந்த பல ஹிந்து கோவில்களை அழித்து, சிலைகளை உடைத்து, நாசம் செய்து விட்டு, விஜயநகரம் நோக்கி போனார்”

ராமேஸ்வரதில் உள்ள ஒரு மசூதியை இவர் சரி செய்ததாக ஒரு கதை உண்டு. ஆனால் ஸீட் பண்ட ரம்சீர் உள்ள இந்த மசூதி 1310 ம் ஆண்டு  மாலிக் காஃபூர் கிழக்கு கடற்கரையில் அமைத்தார் எனபது தான் உண்மை. மேலும், கி.பி பதினான்காம் நூற்றாண்டில் தெற்குப் பகுதியில் இவ்வளவு இஸ்லாமிய படை வீரர்களுடன் ஊடுருவி ராமேஸ்வரம் போனார்கள் என்று சொல்வது நம்பும் படியாக இல்லை. அப்படி போய் இருந்தால், ஒவ்வோர் இடத்திலும் எண்ணற்ற ஹிந்துக்களால் எதிர்க்க பட்டு இருப்பார்கள். கண்டிப்பாக 5000 இஸ்லாமிய படை வீரர்களை 1000 மைல்கள் அமைதியாக பயணிக்க அனுமதித்து இருக்க மாட்டனர். விஜயநகரத்தில் இருந்து இராமேஸ்வரம் 500 மைல் தொலைவில் இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மைசூர் அரசர் பல்லாலர் ராஜாவை வெற்றி கொண்டு பிறகு, அதன் பொருட்டு மலபார் கடல் பிரதேசத்தில் இந்த மசூதியை மாலிக் காஃபூர் கட்டினான். ராமேஸ்வரத்தில் இல்லை. கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியாக இருந்த கலோனல் பிரிக்ஸ் இந்த வேறுபாட்டை உணர்ந்ததாக சொல்கிறார், மசுதி கட்டப்பட்ட இடம் தெற்கு கோவாக இருக்கலாம் என்கிறார். ராமேஸ்வரத்தில் ஒரு பழைய மசூதியின் எச்சங்கள் உண்டு, அது கட்டப்பட்ட தேதி இன்னும் உறுதிபடுத்த பட வில்லை. சரி அதை விட்டு விட்டு, முதலாம் புக்கர் கதைக்கு மீண்டும் வருவோம்.

விஜயநகர போக அப்போது  இரண்டு சாலைகள் உண்டு . முதல் வழி படைகள் போகும் பெரிய வழி, இரண்டாவது குறுகலான கடினமான பாதை. முதல் வழியாக போனால் தீடிர் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதால், இரண்டாவது வழியாக போனார். குறிப்பிட்ட பாதுகாப்பு படைகளுடன் அந்த இடத்தை கடந்து விஜயநகரத்தின் வெளிப்புற இடத்தை அடைந்தார்.

சுல்தான் முஜாஹித் மலபார் கடற்கரை வழியாக வந்து இருந்து இருந்தால் பயணிகள் எப்போதும் உபயோக படுத்தும், இந்த திறந்த சமவெளி சாலைகளை தான் பயன்படுத்தி இருப்பார்கள். இந்த வழியை தவிர்த்து, சந்தூர் மலைகள் பக்கவாட்டில் தொடர்ந்து பயணித்தோ அல்லது பெல்லாரியில் இருந்து விஜயநகர் செல்லும் வழியாக பயணித்தோ, விஜயநகரத்தின் வெளிப்புற வந்து அடைந்து இருப்பார்.

சுல்தானின் இந்த துணிச்சலை கண்டு அதிசயித்த புக்கர், தனது படைகளையும், மக்களையும், தெருக்களை பாதுகாக்க சொன்னார்.  அவர்களை அடித்து விரட்டினான் சுல்தான். இப்போது ஆற்றின் ஒரு பகுதி மட்டும் தான், புக்கரின் கோட்டைக்கும் , சுல்தானுக்கும் நடுவில் இருந்தது.
.
கோட்டைக்கு அருகில் ஹிந்துக்களால் வணங்கபட்ட அற்புதமான தங்கம் மற்றும் வெள்ளியால் வேயப்பட்ட ஒரு கோவில் பல நகைகளுடன் செல்வ செழிப்புடன் இருந்தது. ஹிந்து கோவில்களை இடிப்பதை, தனது மத கடமையின் ஒரு அங்கம் என நினைத்து அந்த கோவிலை இடித்து தரை மட்டமாக்கி, அங்கே உள்ளே நகைகளை கொள்ளை அடித்தான்.

பிரிஷ்டாஹ் “சிறிதளவே தண்ணிர்” என்ற சொல்வதை பார்த்தால் கமலபுராத்தில் இருந்த ஒரு அழகிய எரி என்றும் கொள்ளலாம். ஆனால் சுல்தான் உடைத்த கோவிலின் பெயர் தெரிய வில்லை. ஒரு வேளை இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வரலாற்றாசிரியர் இவற்றை எழுதும் போது, பாரம்பரியத்திலிருந்து எழுதிய கருத்தாக தான் அது தெரிகிறது. அந்த மலைகளில் இருந்த பல கோவில்கள் சுற்றியும்,  பல தண்ணீர் கூட்டம் இருந்தது.
இன்னோர் முரண்பாடன விஷயம்,  சுல்தான் எப்படி எல்லா வெளிபுற பாதுகாப்பு அரண்களை மீறி , புக்கரின் கோட்டைக்கு மிக அருகில் சென்றார் என்று பிரிஷ்டாஹ்ப சொல்ல வில்லை. சொல்லி இருக்க வேண்டும் , இருந்தாலும் கி.பி. 1443 அப்துர் ரஜ்ஜாக் என்ற பயணி ஏழு அடுக்குகள் தாண்டி உள்ள விஜயநகர கோட்டையை பார்த்தேன் என்று குறிப்பிட்ட உள்ளதை வைத்து பார்த்தால், முதலாம் புக்கரின் காலத்தில் எவ்வளவு அடுக்குகள் இருந்து இருக்கும் என்பது தெரிய வில்லை.

சரி யுத்தத்திற்கு வருவோம்.

“இந்த கட்டத்தில் சுல்தான் தாக்கப்பட்டார்,  கிட்டத்தட்ட உயிரிழந்தார் என்றும் சொல்லலாம்” என்று பிரிஷ்டாஹ் குறிப்பிடுகிறார்.

“ஹிந்துக்கள் தங்கள் கோவில் அழிக்கப்பட்டு, தங்கள் ஆராதனைக்குரிய  தெய்வத்தின் சிலைகள், முகமதிய படைகளால் உடைக்கப்பட்டதை கண்டு ஆத்திரத்துடன் வான் அதிர அழுது புலம்பினர். முதலாம் புக்கரை அழைத்த அவர்கள், சுலதானை நோக்கி பெரும் எண்ணிகையில் தயக்கம் இன்றி முன்னேறி போனார்கள். இதை எதிர்பார்க்காத சுல்தான் தடுமாறி போனார். தனது குடையை ஒதுக்கி விட்டு, தனது மெய்காப்பாளர் மஹமூத் என்ற வீரனை ஒரு சிறிய சிற்றாறு கடந்து சென்று, வரும் ஹிந்துக்களின் எண்ணிக்கை என்ன என்று பார்க்க சொன்னார். தூரத்தில் இருந்து சுல்தானை அறிந்த கொண்ட ஒரு ஹிந்து, தனது சிலைகளை உடைத்து ,தனது தேசத்தையும் தனது நம்பிக்கையையும் சிதைத்து, தன் ஹிந்து மக்களை கொல்லும் சுல்தானை பழிவாங்கி, தான் அழியா புகழை அடைய வேண்டும் என்ற வெறியில் அவரை நோக்கி வந்தான். 

அந்த சிற்றாறு ஒட்டிய இடங்கள் நாசப்பட்டு இருந்ததால், யாரும் கவனிக்காத வண்ணம், மிக துரிதமாக அதை கடந்து, சுல்தானை நோக்கி பாய்ந்து வந்தான். அதிர்ஷ்டசவசமாக கடைசி நிமிடத்தில் அதை கவனித்து, தனது மெய்காப்பாளர் மஹமூத்க்கு, சுல்தான் செய்கை செய்ய, உடனே அந்த ஹிந்துவை தாக்கினான் மஹமூத். ஆனால் அவன் குதிரை திமிறி முன் பக்கம் எகிற, மஹமூத் கீழே விழுந்தான். ஹிந்துவுக்கு மஹமூத்வை கொல்லும் வாய்ப்பு கிடைக்க, அதற்குள் சுல்தான் மின்னலை விட அவனை நோக்கி போனார். மஹமூத்வை விட்டு,  அந்த ஹிந்து, மிக பலமான தாக்குதலை சுல்தான் மீது செய்ய, அது மரண அடி போல் எல்லாருக்கும் தெரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அது சுல்தானின் இரும்பு தலை கவசத்தில் பட்டதால் அவர் தப்பினார். அந்த ஹிந்து இரண்டாக வெட்டப்பட்டு அவன் குதிரையில் இருந்து கீழே விழுந்தான். அதே குதிரையில் மஹமூத்வை ஏற்றி, சிற்றாற்றை கடந்து, சுல்தானின் மற்ற படையுடன்  படையில் இணைந்து கொண்டனர்.

ஹிந்துக்கள் தோற்கும் அளவிற்கு போரட்ட களம் உருமாறிக்கொண்டு இருந்தது. ஆனால் முதலாம் புக்கரின் சகோதரர் இருபது ஆயிரம் குதிரை படை மற்றும் அதிக எண்ணிக்கையில் காலட் படைகளுடன் வந்து சேர, நிலைமை மாறி போனது. விஜய நகரத்தை ஆக்கிரமிப்பு செய்யும் எண்ணத்தில் இருந்த சுல்தானின் படைகள் சோர்ந்து போயின. பின் சண்டை மிக தீவிரம் அடைந்தது. யுத்தத்தின் நடு பகுதியில் சுல்தான் மாமா தாவுத் கான், தனது சுல்தான் படையின் பாதுகாப்பு பற்றிய அச்சத்தால், தான் பிடித்து வைத்து சண்டை போட்டு கொண்ட இருந்த “துன்னசோதரா” என்ற முக்கியமான கள இடத்தை அப்படியே விட்டு விட்டு , சுல்தானுடன் இருக்கும் பகுதிக்கு சென்று அவருடன் சேர்ந்து பிரமிக்கத்தக்க வகையில் யுத்தம் செய்தார்.

மீண்டும் முகம்தியர்களுக்கே வெற்றி வந்து சேரும் நிலை வந்த போதிலும், தாவுத் கான் விட்ட இடத்தை ராயரின் படைகள் பிடித்து கொண்டு பலமாக நிலை கொண்டதால், விஜய நகர படைகளால் சூழப்பட்ட அபாயம் ஏற்பட்டதால், வேறு வழி இன்றி சுல்தான் படைகளுடன் பின் வாங்க நேரிட்டது. திறமையான தன் படைகளை, எதிரிகளின் தாக்குதல்களை மீறி  அந்த மலைகளில் இருந்த வெளி கொண்டு வந்தார். அறுபது அல்லது எழுபது ஆயிரம் பெண் கைதிகளை கைப்பற்றி கொண்டு விஜயநகரத்தை விட்டு பின் வாங்கி, அடோனி கோட்டை முன் தன் படைகளுடன் நிலை கொண்டார்.  ஒன்பது மாதம் வெறுமனே முற்றுகை செய்து விட்டு, அது பலன் தர வில்லை எனபதால் , தனது தேசம் நோக்கி பின் வாங்கி போனார்.

இப்படித்தான் இந்த யுத்தம் முடிந்தது.

பிரிஷ்டாஹ்ப 1378ல் இருந்த விஜயநகரத்தை பற்றி சுருக்கமாக சொல்கிறார் “ விஜய நகரத்தை விட தாங்கள் மேலானவர்கள் என்பதை தக்க வைக்க  , பணம், அதிகாரம் மற்றும் விஜயநகரத்தில் ஆளுமை செய்யுதல் போன்ற விஷயத்தின் மூலம் பாமினி சுல்தான்கள் முயற்சி செய்தனர்” இது அந்த ஆண்டில் சொல்ல பட்ட குறிப்பு என்று எடுத்து கொள்ளவும். ஏன் எனில் நிச்சயமாக அதற்கு பின் வந்த வருடத்தில்,  தென் இந்தியா முழுவதம் ராயரின் ஆதிக்கத்தில் இருந்தது.

“கோவாவின் மீன் பிடி துறைமுகம், பெல்காமில் உள்ள கோட்டை, துளு நாட்டில் உள்ள பல மாவட்டங்கள் எல்லாம் ராயரின் அதிகாரத்தில் இருந்தன. அவரது ஆட்சியில் மக்கள் நல்ல நிலைமையில் இருந்தனர், ராயருக்கு தங்களை சமர்ப்பித்தனர். மலபார், இலங்கை, மற்றும் பிற தீவுகளில் உள்ள நாடுகள் தூதர்களை ராயரின் அரசவைக்கு அனுப்பி பெரும் செல்வத்தை பரிசாக கொடுத்தன” என்று தரவுகள் சொல்கின்றன
மேலும் விஜயநகரத்தை பற்றி பேசும் முன், சுல்தானை பாதுகாக்கும் நல்ல எண்ணத்துடன் , தனது இடத்தை விட்டு சுல்தானிடம் போன அவரின் மாமா தாவுத் கான் கதை என்ன ஆனது என்று பார்ப்போம்.

“தனது இடத்தை விட்டு , தன்னிடம் வந்து சேர்ந்து கொண்ட மாமாவை பார்த்து அப்போதுஆத்திர பட்டாலும், யுத்தத்தின் நடுவில் இருந்ததால், வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தால் அதை அடக்கி கொண்டார். பின்வாங்கி போன பின்னர், அவரை அழைத்து கடினமாக கண்டித்தார், அவரின் செய்கையால், சுல்தான் படைகள் விஜயநகர்த்தில் இருந்து தப்பி வருவது  கடினமாகி போனது என்று குற்றம் சாட்டினார்.”
இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்டு, அதிருப்தியில் இருந்த பிரபுக்களுடன் இணைந்து சுல்தானை படுகொலை செய்ய சதி செய்தார் அவர் மாமா  சரியாக திட்டமிட்டு, அடோனி கோட்டை முற்றுகை தோல்வி  அடைந்து சுல்தான் குல்பர்க திரும்பும், நேரத்தில் ஏப்ரல் 16ம் தேதி வெள்ளிகிழமை நடு இரவில் தன் கூடாரத்தில் உறங்கி கொண்டு இருக்கும்போது சுல்தான் குத்தபட்டார். ஆனால் உயிர் போக வில்லை, அதனால் பட்டா கத்தியால் பல முறை குத்தப்பட்டு அந்த துரதிருஷ்டவசமான சுல்தான் இறந்து போனார். சுல்தான் முஜாஹித்க்கு குழந்தைகள் இல்லாததால், சுல்தானின் நேரடி உறவினர் என்பதால் தாவுத் கான் அந்த இடத்திலே சுல்தானாக முடி சூடிக் கொண்டு, குல்பர்கா போனார். பின் அங்கே அரசராக அறிவித்து கொண்டார்.

ஆனால் சுல்தான் முஜாஹியை கொன்றது சிறிய பலனை தான் தாவுத் கானுக்கு தந்தது. சுல்தான் தேசம் இருபிரிவாக பிரிந்து குழப்பத்தில் நின்று தவித்தது. மே 21 தேதி 1378, தாவுத் கான் ஒரு பெரிய மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கும்போது படுகொலை செய்யப்பட்டார். அதே நேரத்தில் முதலாம் புக்கர், டோப் என்ற பிரதேசத்தின் மீதி ஆளுமை செலுத்த ஆரம்பித்தார், கிருஷ்ணா நதியையும் தாண்டி, சுல்தானின் ஆளுகையில் இருந்த ராய்ச்சூர் கோட்டையிலும் கால் பதித்தார்.

தாவுத்க்கு பிறகு, ஆலா-உத்-தின் என்பவற்றின் இளைய மகன் முதலாம் முஹமது பட்டத்திற்கு வருகிறான். கொல்லப்பட்ட சுல்தான் முஜாஹியின் தங்கை, அதிகார போட்டியை தடுக்கும் பொருட்டு, தாவுத்தின் எட்டு வயது மகனின் கண்களை குருடாக்கி விட்டாள். முதலாம் முஹமது எல்லார் உடன் நட்பு பாரட்ட முயல்கின்றான். முதலாம் புக்கரின் ராய்ச்சூர் கோட்டை மீதான முற்றுகையை ஏற்று கொண்டு ,அவருக்கு கப்பம் கட்டுவதாக ஒத்து கொண்டு முகமது ஷா காலத்தில் ஏற்படுத்த பட்ட, அமைதி உடன்படிக்கை ஏற்று கொள்கின்றான். முதலாம் முகமதுவின் ஆட்சி காலத்தில் இருந்து, அடுத்த இருபது வருடம் அவனது தேசத்திலும் அவனது அண்டை தேசத்திலும் அமைதி இருந்தன. அவன் ஏப்ரல் 20ம் தேதி 1397 இறந்தான்.

தொடர் யுத்தத்த்தில் இடுபட்டு கொண்டு இருந்த முதலாம் புக்கர் , நோய் வாய்ப்பட்டு 1379ல் இறந்தார், அவரின் மறைவுக்கு பிறகு விஜயநகரத்தில் பல நிகழ்வுகள் நடக்க தொடங்கின. 

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...