Monday, August 31, 2015

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன் - புத்தகம்.
ரயில் பயணத்தின் போது, இந்த புத்தகம் வாங்கினேன். படிக்க மிக சுவராசியமாக இருக்கிறது. இயேசுவை பற்றி இன்னோர் பரிணாமத்தில் சொல்கிறது. புண்ணிய பூமியான பாரத தேசம் , ஆன்மிகத்தின் மையப்புள்ளியாக தொன்று தொட்டு எப்போதும் இருந்து வருகிறது என்பதில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

ஐரோப்பாவை சேர்ந்த மக்களுக்கு ஆன்மிக பிச்சை போட்ட அட்சய பாத்திரமாக நமது பாரத தேசம் விளங்கி இருக்கிறது.

ஆண்டவனால் அனுப்பப்பட்ட இறைவனின் பிள்ளைக்கும் இந்த தேசமே ஆன்மிக பள்ளியாக இருந்து, அவதாரங்களுக்கு ஆண்டவன் யார் என்று அறிவித்து இருக்கிறது.

ஆங்கிலத்தில் கவர் ஸ்டோரி ஆக சில வலைதளங்களில் இதை படித்து உள்ளேன். தாய் தமிழில் இன்று தான்  விரிவாக இப்போது தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

புத்தருக்கும் , யேசுவுக்கும் , கிருஷ்ணருக்கும் உள்ள பல ஒற்றுமைகளை இந்த நூல் பைபிள் கதைகள் வைத்தே வெளிபடுத்துகிறது.

யாராக இருந்தாலும், இயேசுவை சிலுவையில் அறையப்படும் அந்த காட்சிகளை கண்டால் , நம்மை அறியாமல் கண்களில் இருந்து கண்ணிற் வந்து விடும்.

சக மனிதன் கொடூரமாக கொல்லபட்டால் , எந்த இதயமும் கண்ணிற் வடிக்கும். கிறிஸ்தவம் உளவியல் ரீதியாக இதை நன்கு பயன்படுத்தி கொள்கிறது என்று ஒருமுறை நண்பர் சொன்னார்.

கிராமங்களில் இயேசு சிலுவையில் அறையப்படும் காட்சிகளை காட்டி , அந்த மக்கள் மன ரீதியாக இரக்கத்தின் விளிம்பில் இருக்கும்போது, மிக சுலபமாக அந்த மக்களிடம் இயேசுவை விற்று விடுவார்கள் என்று சொன்னார்.

உண்மை தான் , என்ன தான் கிறிஸ்தவ மத மாற்றிகளின் மீது எனக்கு கோபம் இருந்தாலும் , கிறிஸ்துவின் மீது இன்று வரை எனக்கு துவசேம் வராமல் இருக்க , இயேசுவின் சிலுவை காட்சிகள் தான் காரணம் என்று நினைக்கிறேன்.

இந்த புத்தகம் அவரின் உயிர்த்தெழுதல் பற்றி வேறு கதை சொல்கிறது, அதற்கு பைபிள் வார்த்தைகளை கடன் வாங்கி புதிய அர்த்தம் சொல்கிறது. மத்தேயு எழுதிய நற்செய்தி, மாற்கு எழுதிய நற்செய்தி,லூக்கா எழுதிய நற்செய்தி, யோவான் எழுதிய நற்செய்தி போன்ற பைபிளின் நூல்களில் காணப்படும் முரண்பாடுகளை கோடிட்டு காட்டுகிறது.

இது எல்லா மதங்களின் நூல்களில் காணப்படும் பொதுவான விஷயம்தான்.
ஆனால் கிறிஸ்தவத்தின் அடித்தளமான உயிர்த்தெழுதல் பற்றி இருக்கும் முரண்களை நூல் ஆசிரியர் சுட்டி காட்டுவது கிறிஸ்தவத்தின் அடித்தளத்தை அசைக்கும் முயற்சியாக தெரிகிறது.

இயேசு உயிர் தப்பித்து இந்தியா வந்து வாழ்ந்தார் என்பதை புத்த மத நூல்ளில் இருந்து வரலாற்று ஆதாரமாக காட்டுகிறார். உண்மையில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் விஷயம். இறைவனின் பிள்ளை இந்தியாவில் இருந்தார் என்பது.

இந்த நூல் இயேசுவை எந்த இடத்திலும் மறுக்க வில்லை. மறைக்க வில்லை. உண்மையில் அவரின் அற்புதங்களை ஒத்து கொள்கிறது. ஆனால் இயேசுவின் அற்புதங்கள் , இந்தியாவில் இருந்து பெறப்பட்டது என்றும், அவரின் ஆன்மாவை தொட்ட ஆன்மிகம் , புத்த மதத்தில் இருந்தும், ஹிந்து மதத்தில் இருந்தும் வந்தது என்று சொல்கிறது.

கிறிஸ்தவ மத மாற்றிகள் நம்ப மாட்டார்கள். வேளாங்கன்னியில் அயல்நாட்டு அன்னை காட்சி கொடுத்தது என்றால் கண்ணை மூடி கொண்டு நம்புவார்கள் அதே சமயத்தில் சமயபுரத்திலும், பவானி கூடு துறையிலும் உள்ள எங்கள் அம்மன்கள் அயல்நாட்டை சேர்ந்த ஆங்கிலே அதிகாரிகளுக்கு அற்புதங்களை காட்டியதால், அந்த ஆங்கிலே அதிகாரிகள் நன்றி கடனாக அந்த கோவில்களுக்கு செய்த அறப்பணிகள் வரலாற்று பட்டயமாக இன்றும் பதிந்து உள்ளது என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். இன்று வரை எனக்கு இவர்களின் நம்பிக்கை பற்றி விசித்திரமாக இருக்கிறது.

ஒரு ஹிந்து வேளாங்கன்னியையும், சமயபுரத்தியையும் நம்புவான். எங்கும் நிறைவது இறை என்பதில் பெரு நம்பிக்கை கொண்டவன் அவன். அதனாலே அவன், ஹிந்து மத தெய்வங்களின் அவதார தலங்களை தவிர்த்து , இஸ்லாமியரளும், கிறிஸ்தவர்களாலும் ஆக்கிரமிக்க பட்ட எந்த ஹிந்து கோவிலையும் திரும்ப பெற நினைப்பது இல்லை.

எங்களுக்கு வேளாங்கன்னி கோவில் எதுவாக இருந்தது என்றும், பரங்கி மலை எந்த முனிவரின் வாழ்விடமாக இருந்தது என்றும் தெரியும். மீண்டும் அந்த இடங்களை ஹிந்துக்கள் கேட்காமல் இருக்க காரணம், அந்த இடங்கள் இன்று மற்ற மத நம்பிக்கையாளர்களின் ஆன்மிக இடமாக உள்ளது.

“ஆன்மிகத்தை எந்த ஆண்டவர் சொன்னால் என்ன , கோவில் இருந்த இடத்தில மீண்டும் கோவில் தானே வைத்து உள்ளனர் , நல்லது!! எப்படியோ அந்த இடம் புனிதமாக உள்ளது” என்ற ஆன்மிக அடிப்படையில் தான் ஹிந்துக்கள் கேட்பதில்லை என்பதை மற்ற மதங்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லை என்பதே வேதனையான விஷயம்.

புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான் , நூல் ஆசிரியர் இப்படி சொல்கிறார்,

“சர்சுகள் இயேசுவின் உலக மக்களுக்கான நற்செய்தியை , இயேசுவை பற்றிய நற்ச்செய்தியாக மாற்றி , இயேசுவை ஒரு வியாபார பொருள் ஆக்கியது தான்”
சத்தியமான வரிகள்!!

https://www.facebook.com/photo.php?fbid=799662790099940&set=gm.801675569895546&type=1&theater

 

1 comment:

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...