Sunday, August 23, 2015

அப்துல் கலாம்!!

இந்திய தேசம் மௌனமான அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது. மெல்லிய வலி எல்லோர் உள் மனதினுள் பாய்ந்து இருக்கிறது. இந்தியாவிற்கான வல்லமை வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டது என்று அயல் நாட்டு அடிமைகள் கூவிய போது, இல்லை உள் நாட்டிலே அதற்கு உரம் இருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தியவர்.

தாய்நாட்டையும் தாய் தமிழையும் உளமார நேசித்தவர். உலகத்தில் இந்தியாவின் இருப்பானது , அதன் இளைய சமுதாயத்தை பொறுத்து அமையும் என்பதை புரிந்து கொண்டு, எண்பது வயதிலும் இருபதை , இந்தியாவை நோக்கி இழுத்து கொண்டு இருந்தவர். 

எப்போதுதாவது பூக்கும் அதிசய மலர்களை போல் இந்த தேசத்தில பூத்தவர். அப்துல் கலாம்கள் அழிவதும் இல்லை, இனி தோன்றுவதும் இல்லை.
அணுவை பிளந்து கொண்டே போக முடியுமே தவிர அழிக்க முடியாது.
அக்னி குஞ்சொன்று, விண்ணுலகை எட்ட தன் சிறகை விரித்தது.

Rest In Peace Sir

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...