Saturday, August 27, 2016

இன்று கோகுல கண்ணனின் பிறந்த நாள்

இறை மனிதருள் மானிடராக மலர்ந்த நாள். கண் இருந்தும் குருடராக இருளில் திரிந்த மனித கூட்டத்திற்கு கதிரவனாய் வந்தவன் எங்கள் கண்ணன். வாழ்விற்கும் சாவிற்கும் இடைப்பட்ட போர்க்களத்தில் நின்று ஆடி கொண்டு இருக்கும் ஆத்மாவிற்கு அருளிய பரம ஆத்மா .

எப்போதும் எதிர்மறை எண்ண அம்புகளால் துளைக்கப்பட்டு துன்பப்படும் மனது , இறையை துணைக்கு அழைத்தால் , இறை வந்து நிற்கும், பாதகமாய் யோசிக்க வைக்கும் பாணங்களை பதறடித்து , நம் மனதை பாதுகாக்கும் என்று கருத்தை கருத்தரிக்க வைக்கவே கண்ணன் களம் கண்டான் நம் புண்ணிய பாரதத்தில். 

பேதையாக கலைந்து கிடைக்கும் சிந்தனையில் , கீதையாக கண்ணன் உள் இறங்க, கள்ளுண்ட கள்வனாக கவனம் எல்லாம் கண்ணன் மேலே குவிகிறது. எங்கள் கண்ணன் வரலாறு சொல்லாமல் , பாரதத்தின் வரலாறு சொல்ல படுவதில்லை. கண்ணனை மறுத்து இங்கே வேறு கதைகள் இல்லை.

ஊசலாடும் உள்ளத்திற்கு அவன் சொன்ன உபதேசத்தை தவிர்த்து வேறு வார்த்தை உலகில் இல்லை. எங்கே எல்லாம் துர் சிந்தனையும் , நற் சிந்தனையும் நேர் கோட்டில் நிற்கிறதோ அங்கே கீதை வரும் அதன் உடன் எங்கள் கண்ணன் வருவான் மற்றும் ஒரு களம் காண " கல்கியாக"

கல்கியின் அவதார திரு நாளை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் அனைவருக்கும் கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்


வேளாங்கண்ணி ஆலயமமும் கிறிஸ்தவமும்

ஏசுவே மெய்யான தெய்வம் , அவர் மட்டும் கொண்டாட பட வேண்டியவர், வணங்க பட வேண்டியவர் என்று "நீங்கள் எல்லாம் பாவிகள் , பல தெய்வ வழிபாடு செய்பவர்கள்" என்று ஹிந்துக்களிடம் ஒரு கடவுள் கதை கதைத்த ஒரு கூட்டம், இயேசுவின் அன்னையை வணங்க நடை பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். காவி கூட்டம் என்று ஹிந்துக்களை இழித்த கூட்டம், உலகம் பார்க்க அதே காவி உடையுடன் ஊர்வலம் போய் கொண்டு இருக்கிறார்கள் . இறையின் பிள்ளை இயேசு என்று அறிவித்தார்கள். இயேசு இறக்கும் தருவாயில்" தந்தையே ஏன் என்னை கை விட்டிர்கள் என்றார்" . யார் அந்த தந்தை என்று எவரும் அறிந்தது இல்லை. 

உலகத்தை ரட்சிக்க வந்த பிள்ளை என்று சொல்லப்பட்டவர் , உயிர் விடும் தருவாயில் , தன்னை ஏன் ரட்சிக்க வில்லை என்று தன் தந்தையை கேட்டது ஒரு வகையில் விசித்திரம் தான். கர்த்தர் ஒருவரே மீட்பர் என்றவர்கள் , மீட்பரின் அன்னையையும் துணைக்கு அழைக்கிறார்கள் தாங்கள் மீள்வதற்கு. இறைவனின் அடியவர்களையும் ஹிந்துக்கள் வணங்கிய போது, கேலி பேசிய கிறிஸ்தவம் , மேரியையும், அந்தோனியாரையும் , தோமையரையும் வணங்கி கொண்டு இருக்கிறது . ஒரு கடவுள் சித்தாந்தம் பேசி திரிந்த கிறிஸ்தவம், மெல்ல காலவதி ஆகி கொண்டு இருக்கிறது இந்தியாவில்.

யாராவது உங்களிடம் "கர்த்தரை மட்டும் நம்பு கற்களை நம்பாதே" என்று கதை அளந்தால் மேல் சொன்னவற்றை கேளுங்கள்.

மீட்பர் மீட்கப்பட வேண்டும் போல, இந்திய கிறிஸ்தவத்திடம் இருந்து;

குறிப்பு: இது ஒரு ஹிந்து தலம் என்றே பெருமளவு சொல்லபடுகிறது , போர்த்துகீசியர்கள் தாங்கள் கால் பட்ட இடங்களில் எல்லாம் ஹிந்துக்களை கொன்று , ஹிந்து கோவில்களை அழித்து , கிறிஸ்தவ கோவிலை கட்டினர் என்பது வரலாறு. இந்த வேளாங்கண்ணி ஆலயமும் அவர்களால் எடுத்து கட்டப்பட்டது என்பது வரலாறு. நாப்பது வருடத்திற்கு முன் , கன்னியாகுமரி அம்மனை , கன்னி மேரி அம்மனாக மாற்ற முயற்சி நடந்தது. ஹிந்துக்களால் தடுக்கப்பட்டது. இப்பவே இவர்கள் செய்ய முயலும் போத, 400 ஆண்டுகள் முன், ஹிந்துக்கள் வலிமை குறைந்து இருந்த சமயம் இந்த ஆலயம் கட்டபட்டு இருக்கிறது . கொஞ்சம் யோசித்தால் உண்மை புலனாகும் .

வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?
http://www.tamilhindu.com/…/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0…/

வரும் கிருஷ்ண ஜெயந்திக்கு எத்தனை பதிவுகள் வரும்?

வரும் கிருஷ்ண ஜெயந்திக்கு எத்தனை பதிவுகள் வரும் பாருங்கள் , " எங்கள் வீட்டு கண்ணன்" என்று தங்கள் குழந்தைகளை அழகுபடுத்தி , புகைப்படம் எடுத்து பதிவு செய்வார்கள். தவறு இல்லை, ஆனால் அதே கண்ணனையும் பெருமாளையும் இழிவுபடுத்தி வரும் பதிவுகளை கண்டும் காணாமல் இருந்தவர்கள் எல்லாம் இதை செய்வார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி என்ற நாளை , இன்று வரை தாங்கி பிடிப்பது ஹிந்து மதம், அந்த ஹிந்து மதத்திற்கும் , ஹிந்து மக்களுக்கும் ஊறு நேரும் போது, ஊமையாக இருந்தவர்கள், கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் தங்கள் குழந்தைகளை கண்ணனாக கொண்டாடுவதை பார்க்கும்போது, கொஞ்சம் உறுத்தலாக தான் இருக்கிறது 

உங்கள் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகளை அப்படி கண்ணனாக கொண்டாட , ஹிந்துக்களும் , அதன் அடித்தளமான ஹிந்து மதமும் இருக்க வேண்டும் என்பது பல ஹிந்துக்களுக்கு, குறிப்பாக பல ஹிந்து தாய்க்குலங்களுக்கு புரிவதில்லை என்பதே வேதனையான விஷயம்.

பலுசிஸ்தானை பற்றி ஏன் சில இஸ்லாமிய கூட்டம் கவலைபடுவதில்லை

எங்கோ எதோ தேசத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கு சென்னையில் போராட்டம் நடத்திய சில கூட்டம், காஸ்மீரில் முஸ்லிம்கள் கொல்லபடுகிறார்கள் என்று ஓலமிட்ட பல கூட்டம், இஸ்ரேலால் பாலஸ்தீன மக்கள் கொல்லபடுகிறார்கள் என்று அழுத பல கூட்டம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானி்ல் அதே இஸ்லாமிய மக்கள் கொல்லப்படும் போது அமைதி காக்கிறது , எந்தவொரு போராட்டமும் இல்லை. உங்கள் நட்பு வட்டத்தை நன்றாக கவனித்து பாருங்கள், சிரியாவிற்கு கூட அவர்கள் இடம் இருந்து பதிவு வந்து இருக்கும் , ஆனால் பலுசிஸ்தானை பற்றி எந்த பதிவும் அவர்களிடத்தில் இருந்து வராது. 

காரணம் சுலபம், ஹிந்துக்களின் மீதான வெறுப்பில் பிறந்த பாகிஸ்தான் என்ற தேசத்தின் அடிப்படை, இந்தியாவை அழித்தல். இந்தியாவில் பிறந்து அத்தனை சலுகைகளையும் அனுபவித்த பின்னரும் , சொந்த தேசத்தை கழுத்தறுக்க காத்திருக்கும் கூட்டத்தின் ஒரே நம்பிக்கை, பாகிஸ்தான். ஹிந்துக்கள் நிறைந்த ஹிந்துஸ்தானை, பாகிஸ்தான் வெல்லும். அதன் மூலம் அகண்ட இஸ்லாமிய அரசு நிறுவப்படும். இந்தியா சிதறும் என்று எண்ணியவர்களுக்கு , பாகிஸ்தான் மேலும் உடையும் என்பது பேரிடியாக இருப்பதால் , பலுசிஸ்தானி்ல் இஸ்லாமிய மக்கள் கொல்லபட்டாலும் அமைதி காக்கின்றனர். தேசத்தின் எதிரி பலவீனம் அடைதல் அந்த தேசத்து மக்களுக்கு நற்செய்தி. பாகிஸ்தான் உடைவதை சந்தோசமாக நாம் பாக்க, இந்த கூட்டமோ கனத்த மௌனம். கூட இருந்து குடி கெடுக்கும் கூட்டம் அல்லவா அதை செய்யும்.

ஒரு வரலாற்று உண்மையை இவர்கள் மறந்து போனார்கள், எவ்வளவு பெரிய அகண்ட பேரரசை இவர்கள் கட்டி அமைத்தாலும் , அதை கல்லறைக்கு இவர்களே அனுப்பி வைப்பார்கள். ஏன் எனில் இவர்கள் கதை அப்படிபட்டது.

http://www.dailythanthi.com/…/Pakistan-is-a-factory-of-terr…

Before I Wake (2016) திகில் படம்

Before I Wake (2016) . பெரும்பாலும் திகில் படங்கள் என்றால் முடிந்த வரை தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த படத்தின் கதை அழகாக இருந்தது என்று ஒரு நண்பர் சொன்னதால் பார்க்கலாம் என்று நினைத்தேன். குற்றமற்ற குழந்தையின் கனவுகள் என்னெவென்று அறிந்தவர் யாரும் இல்லை. மனித அறிவிற்கு எட்டாத அந்த ஆண்டவன் ஒருவேளை அறிந்து இருக்கலாம்.
கதை படி, குழந்தை கண் மூடினால் , கனவுகள் உயிர் பெற்று , நிஜமாக நடமாடுகின்றன. ஆனால் குழந்தையை பயப்படுத்தும் கனவுகளின் கதாபாத்திரங்கள் உயிர் பெறுதல் நிகழும்போது , அழகின் அற்புதங்கள் அமானுஷ்யத்தின் அலறலாக சிதறுகிறது.
குழந்தையின் கனவுகள் எப்படி கரு தரிக்கிறது என்பதை இறுதி காட்சி சொல்லும்போது, பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய படம் என்ற இடத்தில இருந்து பாடமாகிறது.
http://www.imdb.com/title/tt3174376/

Discovery tamil மிக்க நன்றி

உண்மையில் பிரமிக்க வைத்தது இந்த நிகழ்ச்சி. Discovery tamil மிக்க நன்றி, சுதந்திர தினத்தன்றும் நடிகை , நடிகர்களின் பட அனுபவத்தை பற்றி தான் மற்ற தொலைக்காட்சிகள் தீவிரமாக விவாதித்து கொண்டு இருந்த போது, Discovery tamil இந்திய ராணுவ வீரர்களை பற்றி விவரித்து கொண்டு இருந்தது. கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்த்த பல பேர் அரண்டு போய் இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இத்தனை வேதனைகளை சுமக்கும் நம் வீரர்களை பார்க்கும்போது, மனம் கலங்கி போனது. வெறும் பணம், சாகசத்திற்கு மட்டும் என்று இதை கொள்ள முடியாது. இத்தனை கஷ்டங்கள் அடைந்து ராணுவ குழுவில் இடம் பெறுதல் , வீர மரணத்திற்கு தான் இட்டு செல்லும் அறிந்தும் இதை செய்கிறார்கள் எனும்போது தேசத்தின் மீதான காதல் இல்லாமல் இதை செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. இதை பார்த்த பிறகும், நடிகனுக்காக அழுபவனையும் , விளையாட்டு வீரர்களுக்காக அழுபவனையும், சும்மா தலைவன் தலைவன் அன்று கத்தி கொண்டு உள்ளவர்களை காணும் போது வெறுப்பாக வருகிறது. 

யாருக்காக அழ வேண்டும், யாருக்காக வேதனை பட வேண்டும் என்று தெரியாத ஒரு மக்களுக்காக , ஒரு தேசத்தின் பாதுகாப்பு படைகள் உயிர் விடுகின்றன. அந்த மக்களோ , போர் என்று நிலைமை வந்தால் மட்டும் தான் ,பாதுகாப்பு படைகளை பற்றி கவலை கொள்கின்றன , அதாவது தங்கள் சுய பாதுகாப்பை பற்றிய கவலையால் உந்தப்பட்டு , அப்போது மட்டும் தேசம் பற்றி கவலை வருகிறது. தேசம் காப்பாற்ற பட்டு, தங்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட உடன் , அந்த மக்கள் வருந்துவது , நடிகர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கு தான். ராணவ வீரர்களை பற்றி அவர்களுக்கு ஒரு துளியும் கவனம் இல்லை, அவர்கள் கவனத்திற்கு வந்தாலும் , அதை கவனிக்காத மாதிரி கடந்து விடுகிறார்கள்.
வாழ்க குடிமக்கள்

இந்திய இராணுவச் செய்இந்திய இராணுவச் செய்திகள் யாருக்காவது பாரா கமாண்டோ ஆக விருப்பமா!!!
இந்திய என்ற ஒற்றை சொல்லால் உந்தப்பட்டு சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து பாரா கமாண்டோ வீரராக மாற துடித்த நம் வீரர்களை இந்த நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்
இக்காட்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில காட்சிகள் மற்றும் பயிற்சிகள் மறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

மணிப்பூர் மீண்டும் மலரும்.


16 ஆண்டு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது:
முதல்வராக போவதாக ஷர்மிளா அறிவிப்பு

நல்ல முடிவு. இவரின் சில இந்திய ராணவ எதிர்ப்பு என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. சில வருந்தக்க நிகழ்வு நடந்தது. ஆனால் தவறுகள் சுட்டி காட்டப்பட்ட பிறகு அது மீண்டும் நடக்காமல் இருக்கமாறு செய்யப்பட்டது. பிரிவனை வாதிகள் இருக்கும் இடத்தில இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகள் இருந்தே தீரும். இருந்தே தீர வேண்டும். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

இவர் ஒன்றை அறிய வேண்டும், இதே போராட்டத்தை இவர் சீனாவில் செய்து இருந்தால் இவர் என்றே கொல்லப்பட்டு இருப்பார். இந்தியாவின் ஜனநாயகம் இவரை காத்தது. 

அடுத்த பெண் கற்பழிக்கப்பட்டு கொல்லபட்டால் , அந்த செய்திகளை கவனமாக தவிர்த்து விட்டு செல்லும் நம் நவ நாகரீக பெண்கள் இருக்கும் இந்திய தேசத்தில், பெண்களுக்காக இவர் நடத்திய போராட்டம் பிரமிக்கதக்கது. அசாதாரணமானது.

மத்தியில் மோடி அரசு நடக்கும் போது, இவர் ஜனநாயகத்திற்கு திரும்பியது , மோடி அரசின் மீது இவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிபடுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

மணிப்பூர் மீண்டும் மலரும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1582430

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...