Saturday, August 27, 2016

Before I Wake (2016) திகில் படம்

Before I Wake (2016) . பெரும்பாலும் திகில் படங்கள் என்றால் முடிந்த வரை தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த படத்தின் கதை அழகாக இருந்தது என்று ஒரு நண்பர் சொன்னதால் பார்க்கலாம் என்று நினைத்தேன். குற்றமற்ற குழந்தையின் கனவுகள் என்னெவென்று அறிந்தவர் யாரும் இல்லை. மனித அறிவிற்கு எட்டாத அந்த ஆண்டவன் ஒருவேளை அறிந்து இருக்கலாம்.
கதை படி, குழந்தை கண் மூடினால் , கனவுகள் உயிர் பெற்று , நிஜமாக நடமாடுகின்றன. ஆனால் குழந்தையை பயப்படுத்தும் கனவுகளின் கதாபாத்திரங்கள் உயிர் பெறுதல் நிகழும்போது , அழகின் அற்புதங்கள் அமானுஷ்யத்தின் அலறலாக சிதறுகிறது.
குழந்தையின் கனவுகள் எப்படி கரு தரிக்கிறது என்பதை இறுதி காட்சி சொல்லும்போது, பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய படம் என்ற இடத்தில இருந்து பாடமாகிறது.
http://www.imdb.com/title/tt3174376/

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...