Saturday, November 18, 2017

ஒரு மறக்கப்பட்ட பேரரசு-விஜய நகரம்-அத்தியாயம் 5


அத்தியாயம் 5
முதலாம் தேவ ராயர்  (கி.பி 1406 to 1419 )

The amorous monarch, Deva Raya I. – The farmer’s beautiful daughter – The king’s escapade – The city threatened – A Hindu princess wedded to a Muhammadan prince – Firuz Shah’s anger – Pertal’s marriage – King Vijaya – Probable date of accession of Deva Raya II.
கி.பி 1406ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பிரிஷ்டாஹ்ப விவரிக்கிறார். அந்த சம்பவத்தின் கதநாயகன் விஜயநகர அரசர். அவர் வேறு யாரும் அல்ல இரண்டாம் புக்கருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அவர் தம்பி முதலாம் தேவ ராயர் என்று தான் நான் நம்புகின்றேன். அது ஒரு நகைப்புக்குரிய சாகச நிகழ்ச்சி. அது முத்கல் நகரத்தில் உள்ள ஒரு விவசாயின் அழகிய மகளை அடைவதற்கு அவர் மேற்கொண்ட பயணம். அவளை கைப்பற்றி தன் அந்தபுரத்தில் வைக்க வேண்டும் என்ற பேராசையில் ராயர், பிரசின்னைக்குரிய பகுதியில் நுழைந்தார். இள வயது உடைய இவர் 1406ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்ததும். இந்த அனார்த்தம் நடக்கிறது. அவனது இந்த துணிச்சலான நடவடிக்கை பல முக்கியமான அழிவுகளை விஜயநகரத்தில் ஏற்படுத்துகின்றன.

பிரிஷ்டாஹ்ப சொல்கிறார் “ இறைவன் எல்லா அழகையும் சேர்த்து அந்த விவசாயின் பெண்ணாக படைத்து உள்ளான் “
ஒரு வயது முதிர்ந்த பிராமணர், தன்னிடம் படிக்கும் இந்த பெண்ணை பற்றி வியந்து, அவள் ராயரின் மாளிகையில் வசிக்க முழுதும் ஏற்புடையவள் என்று எண்ணுகிறார்.
உடனே விஜயநகரம் சென்று ராயரிடம் இந்த பெண்ணின் அழகை பற்றி விவரித்து, அவள் தங்கள் மாளிகையை அலங்கரிக்க பொருத்தமானவர் என்றும், ராயர் சம்மதித்தால், ராயரின் சார்பில், அந்த பெண்ணின் பெற்றோரிடம் பேசி மணம் முடிக்க சம்மதம் வாங்கி வருவதாக சொன்னார்.
ராயர் அதில் மயங்கி, உடனே பல பரிசுகள் அவருக்கும், அந்த பெண் குடும்பத்திற்கும், அந்த பெண்ணுக்கும் கொடுத்து , மணம் பேச சொன்னார். பிராமணர் எங்கும் நிற்காது, மீண்டும் முத்கல் வந்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் ,ராயரின் பரிசுகளை வழங்கி விஷயத்தை சொன்னார். அதை கேட்டு மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போன அவர்கள், தங்கள் பெண்ணிற்கு வந்த அரச வாழ்வை நினைத்து மகிழ்ந்தனர்.
அந்த பெண்ணுக்கும் சந்தோசம் என்றாலும், அரசருக்கு வாழ்க்கை பட்டால் , மாளிகையை விட்டு வெளி வர முடியாது , தாய் தந்தையர் மற்றும் உறவுகளை பார்க்க முடியாது, ஒரு கைதி போல் இருக்க வேண்டும் என்று எண்ணி, அந்த பரிசுகளை ஏற்க மறுத்து விட்டாள். அவளின் பெற்றோர் என்ன தான் சொன்னாலும் ஏற்க வில்லை. பெண்ணின் கண்ணீரில் கரைந்த அந்த பெற்றோர், அந்த பிராமணரிடம் அரச சம்பந்தத்தை ஏற்க முடியாது என்று சொல்லி, எல்லா பரிசுகளையும் திருப்பி கொடுத்து அவரை அனுப்பி விட்டனர்.
பிராமணர் ராயரிடம் திரும்பி தகவலை சொல்ல, ராயரின் காதல் வெறி உச்சத்தை அடைந்தது. படை கொண்டு சென்று அந்த அழகு பதுமையை வெற்றி கொள்ள முடிவு செய்தார். ஆனால் அந்த பதுமை வசித்து கொண்டு இருந்த இடமோ பகைவரின் ஆளுமையில். அதாவது சுல்தான் ஃபிருஸ் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில். என்ன செய்ய காதல் கண்ணை மறைக்க களம் கண்டார் படைகளுடன். வெளி உலகத்திற்கு ஒரு சுற்று பயணம் செல்வதை போல் பாசாங்கு காட்டி விட்டு, ஒரு பெரிய படையுடன் புறப்பட்டார்.
துங்கபத்திரா நதிக்கரையை அடைந்த உடன், தன் நெருங்கிய நண்பர்களின் அறிவுரையையும் மீறி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயாயிரம் குதிரை வீரர்களை அழைத்து, “எங்கும் தங்கமால், விரைவாக முத்கல் சென்று அதை சுற்றி வளைத்து, தன் மனதை சிறை பிடித்தவளையும், அவளது குடும்பத்தையும் , ஒரு சிறு காயம் இன்றி தன்னிடம் சிறை கைதியாக கொண்டு வரும் படி” கட்டளை இட்டான்.
எதிர்பாராத ஒன்று எதிர்பார்த்த மாதிரி நடந்தது. ராயர், பிராமணர் மூலமாக அந்த பெண்ணின் குடும்பத்திற்கு எச்சரிக்கை செய்ய மறந்தார். ஆனால் ராயரின் ஒரு பெரிய படை ஒன்று முத்கலை நோக்கி வருகிறது என்ற தகவல் அந்த பெண் மற்றும் அவர்கள் உறவுகளுக்கு எட்ட, தங்கள் வசிப்பிடங்களில் ஒளிய ஆரம்பித்தார்கள். ராயரின் படைகள் தேடுதலை தொடங்கின, ஆனால் போகும் வழி எங்கும் நகரத்தை கொள்ளை இட்டு கொண்டே போயின.
ராயரின் படைகள் சுல்தானின் மிக பெரிய படையால் தாக்கப்பட்ட்டு , ராயரின் படையில் 2000 பேர் கொல்லப்பட, அது பெரும் போருக்கு அது வித்திட்டது.
கி.பி 1406ம் ஆண்டு குளிர் கால தொடக்கத்தில், மிக பெரிய படையுடன் சுல்தான் விஜயநகரத்தை தாக்கினார். ஒரு கடினமான தாக்குதல் மூலம், விஜய நகரத்தின் சில வீதிகளை அவரால் கைப்பற்ற முடிந்தாலும், கடுமையாக விஜய நகர படைகள் எதிர்த்ததால் அவரால் அங்கே நிலை கொள்ள முடியாமல் வெளியேற வேண்டியதாயிற்று.
இதனால் ஊக்கம் பெற்ற ராயர் கோட்டை மதில்களை கேடயமாக பயன்படுத்தி தனது வீர்ர்கள் மூலம், சுல்தான் படைகளை சிதைத்தான். ஒழுங்கற்ற தரை தளத்தை உடைய அந்த பாறை கோட்டைகளில், சுல்தான் வீரர்களால் குதிரையை செலுத்த முடியாமல் ,சோர்ந்து போயினர். இந்த சிக்கலான நேரத்தில் சுல்தான் கையில் ஒரு அம்பு பாய்ந்து காயப்படுத்த, குதிரையில் இருந்து இறங்காமல் , அம்பை பிடுங்கி போட்டு விட்டு, ஒரு துணியால் காயத்தை கட்டி கொண்டார்.
ஒரு வழியாக சுல்தான் படைகளை சேர்ந்த அஹம்கான், கான்காணன் கூட்டு முயற்சியால் விஜய நகர படைகள் விரட்டப்பட, சுல்தான் விஜயநகரத்தை விட்டு தூரம் தள்ளி ஒரு வசதியான சம வெளி இடத்தில் தனது அடிப்பட்ட வீரர்கள் குணமாகும் வரை நிலை கொண்டார்.
நான்கு மாதங்கள் அதே இடத்தில் நிலை கொண்டு, ராயரை அவரது சொந்த கோட்டையில் சிறை வைத்த மாதிரி மறித்து நின்றார். அவரின் படைகள் விஜயநகரத்தின் தெற்கு பகுதியை சேதப்படுத்தின. பங்கபூரின் கோட்டையும் தாக்குதல்களுக்கு தப்ப வில்லை. வசதியான சமவெளி இடம் என்பது விஜயநகரத்தில் தெற்கு பக்கம் அமைந்த செழுமையான ஹோஸ்பெட் என்ற ஊர். அந்த இடத்தில் அதிக பழக்கம் இல்லாததால் , சுல்தான் படைகளால் , முழு தெற்கையும் வெல்ல முடிய வில்லை. பங்கபூரின் கோட்டையை கைப்பற்ற அனுப்பபட்ட படைகள், அதை கைப்பற்றி சுல்தானுக்கு பரிசாக 60,000 ஹிந்துக்களை கைதிகளாக பிடித்து வந்தன.
கான்கானிடம் விஜய நகர முற்றுகையை விட்டு விட்டு, சுல்தானே விஜயநகர படைகள் வலுவாக இருக்கும் அடானி கோட்டையை சேதப்படுத்த போனார், அதில் வெற்றியும் கண்டார்.
எனவே ராயர் வேறு வழி இல்லாமல் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்த முயன்றார். ஆனால் அவமானகரமான நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாய நிலைமைக்கு போனார்.
என்ன தெரியுமா ?
தனது மகளை சுலதானுக்கு மணம் முடித்து கொடுத்தல் , பங்கபூரின் கோட்டை மீதான உரிமையை என்றென்றும் சுலதானுக்கு கொடுத்தல், கணக்கில் அடங்கா செல்வத்தை கொடுத்தல்.
சுலதானின் ஆட்சிக்குட்பட்ட பெண்ணை வலுவால் வெல்லலாம் என்று எண்ணிய ராயர் , கடைசியில் தன் சொந்த பெண்ணையே , சுல்தானுக்கு தாரை வார்க்கும் அவலம் நிகழ்ந்தது.
ஒரு அரசனின் பெண்ணாசை, அதி சிறப்பு வாய்ந்த விஜயநகர பேரரசின் வரலாற்றில் பெரும் கரும் புள்ளியாக இறங்கியது.

விஜயநகர ராயர்கள் தங்கள் இனத்திலே பெண் கொடுத்து பழக்கப்பட்டவர்கள் , ஆனால் வெளி இனத்தில் கொடுப்பது என்பது அவர்களை பொறுத்தவரை மிக பெரிய அவமானமாகும். ஆனால் வேறு வழி இல்லாமல் சுல்தான் குடும்பத்துடன் திருமண ஏற்பாட்டிற்கு தயாராகி  வந்தனர். அதை தொடர்ந்து சுல்தான் படை நிலை கொண்டு இருந்த இடத்திற்கும் , நகரத்திற்கும் உள்ள பாதை நாப்பது நாட்கள் திறக்கபட்டது . சாலையின் இருபுறமும் கடைகள் மற்றும் மேடைகள் அமைக்கப்பட்டு , நடனக் கலைஞர்கள் மற்றும் பல்துறை கலைஞர்கள் தங்களது திறைமைகளை காட்டி , எல்லாரையும் மகிழ்வித்து கொண்டு இருந்தனர். சுல்தானின் படை தளபதிகள் , மணமகளுக்கான பரிசு பொருட்களுக்குடன், நகரத்திற்கு சென்று , ராயரிடம் இருந்து எராளமான சீர் வரிசைகளை பெற்று மணமகளுடன்  ஏழு நாளில் சுல்தான் முகாமிற்கு திரும்பி வந்தனர்.  சுல்தானை பார்க்க வேண்டும் என்ற பெரும் விருப்பத்தை ராயர் வெளிபடுத்த, சுல்தான் நகரத்திற்கு மணமகளுடன் சென்று , மாமனாரை பார்க்க சென்றார். 
“ஒரு தேதி குறிப்பிட பட்டு, சுல்தான் தன் படை முகமாய் , தன் தளபதி கான் கானிடம் பொறுப்பில் விட்டு விட்டு , புறப்பட்டார்.  போகும் வழியிலே அவரை எதிர்கொண்டு  ராயர் வரவேற்றார். நகரத்தின் நுழைவாயிலிலிருந்து அரண்மனை வரை, ஆறு மைல் அளவிற்கு வீதியின் இருபுறமும்  தங்கம், வெல்வெட்,  மற்றும் இதர விலை உயர்ந்த துணிகளால் அலங்கரிக்க பட்டு இருந்தது. இரண்டு அரசர்களும் குதிரையின் மீது அமர்ந்து வர, அவர்கள் முன்னும் பின்னும், பல ஆண்களும் பெண்களும் , தலையில் மிக பெரிய தங்க தட்டுகள், வெள்ளி தட்டுகளுடன் வந்தனர். நகரத்தில் இருந்த மக்கள்,  தங்களால் முடிந்த காணிக்கையை அவர்களுக்கு அளித்தனர்.  
எல்லா நிலைகளையும் கடந்து நகரத்தின் மைய பகுதிக்கு அணிவகுப்பு வந்ததும், ராயாரின் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டு பரிசு பொருட்களை கொடுத்து, அழைத்து கொண்டு , முன்னால் சென்றனர். அரண்மனை வாசலில் சுல்தான் மற்றும் ராய் தங்கள் குதிரைகளிலிருந்து  இறங்கினர்.  அற்புதமான நகைகள் கொடுக்கப்பட்டு ,மணமகள் மற்றும் மணமகன் வரவேற்புக்காக தயாரிக்கப்பட்ட அடுக்குமாடிகளுக்கு  அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் . ராயர்  அங்கிருந்து வெளி ஏறி , தனது சொந்த அரண்மனையில் ஓய்வு பெற்றார். மூன்று நாட்களுக்கு சிறப்புடன் கவனிக்க பெற்ற சுல்தான்,  ராயரை விட்டு கிளம்பும் போது, ஏற்கெனவே கொடுக்கப்பட்டு இருந்த பரிசு பொருட்களை விட அதிக பரிசு பொருட்களை வலுக்கட்டாயமாக வாங்கி கொண்டு புறப்பட்டார். அவருடன் நான்கு மைல் வரை வந்த ராயர், தன்நகரத்திற்கு திரும்பினார்.”
சுல்தான் ஃபெரோஸ் ஷா தனது முகாமுக்கு  ராயர் வரவில்லை என்பதில் கோபமடைந்தார், மேலும் மீட்டர் ஃபூஸுல் ஒல்லல்லாவிடம், “அத்தகைய புறக்கணிப்பு  செய்த ராயருக்கு என்றாவது ஒருநாள் பழிக்கு பழி வாங்கப்படும்” என்று சொன்னார். இந்த  செய்தி ராயருக்கு  தெரிவிக்கப்பட்டது, ராயர் அதை உதாசீனம் செய்து பேச ,  குடும்ப உறவுகள் சுல்தானுக்கும் ராயருக்கும்  இருந்தபோதிலும், அவர்களுக்குள் இருக்கும் வெறுப்பும் பகையும் குறைய வில்லை. 
ஃபெரோஸ் ஷா தன் நகரத்திற்கு திரும்பி வந்தவுடன்  , அழகிய பரிசை  அந்த விவசாயின் அழகிய மகளுக்கு  அனுப்பி, அவளை வரவேற்றார். அவளின் அழகு எல்லாவற்றையும் விஞ்கிறது என்று புகழ்ந்து, தனது மூத்த மகன் ஹாசன் கானுக்கு  அவளை பரிசளித்தார் . பிரிஷ்டாஹ்ப தரவுகள் படி,  அந்த  பெண்ணின்   கணவர்  “ஒரு பலவீனமான , சீரழிந்த இளவரசர் " என்று விவரிக்கப்படுகிறார்.  உண்மையில் அந்த அரசர் தான்  சிம்மாசனத்திற்கு வாரிசாக இருந்தார் ஆனால்  பலமிக்க அஹமது "கான் கான்", மூலம்  அகற்றப்பட்டு ஃபிரோஸபாபாத்தில்  தனியாக கேளிக்கையுடன்  மகிழ்ச்சியாக வாழ்ந்தார். 
அவரை பற்றி சொல்லும் கடைசி தகவல்கள் , அவரது மாமா  அஹமதா ஷா, அவரை அன்போடு நடத்தினார், "அவருக்கு ஃபிரோஸபாபாத் அரண்மனையை கொடுத்தார். ஏராளமான ஜாகிர் (தோட்டம்), கொடுத்து , அரண்மனையை சுற்றி உள்ள  எட்டு மைல்கள் தொலைவில் சுற்றி வேட்டையாட மற்றும் ஆள அனுமதிக்கிறார்” . ஹாசன் கான்  தனது தந்தையின் அரசை ஆள்வதை காட்டிலும் விட இதில் அதிகமான  ஆனந்தம் அடைகிறார். அவரது மாமா வின் தயவில் வாழ்ந்து வந்தாலும் ,  இருவருக்கும்  இடையே எந்த முரன்பாடு இல்லை  ஆனாலும், சிறிது காலம் கழித்து ஹாசன் கானின் கண்கள் குருடாக்க பட்டு, ஃபிரோஸபாபாத் அரண்மனையிலே முடக்கபட்டார். இது கி.பி 1434 க்கு பின்னர் நடந்து இருக்க வேண்டும்.
முதலாம் தேவா ராயர்  குறைந்தபட்சம்  கி.பி 1412 வரை வாழ்ந்தார், அதற்கு பின்  அவரது மகன் வீர விஜயாவால் ஆறு ஆண்டு ஆட்சி செய்தார் , அவரை  போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ்  "விசா" என்று குறிப்பிடுகிறார். முதலாம் தேவா ராயர்  யின் கடைசிக் கல்வெட்டானது கி.பி. 1412 - 13 இல் காணப்படுகிறது.  கி.பி 1413 - 14 ல் அவரது மகன் வீர விஜயாவால் கல்வெட்டு கிடைக்க பெறுகிறது. விஜயாவின் கடைசி கல்வெட்டு 1416 - 17 ஆகும்.  அதற்கு பின் ஆட்சிக்கு வந்த அவரது மூத்த மகனான  இரண்டாம் தேவ ராயர் பற்றி சொல்லும் கல்வெட்டு  “திங்கள், ஜூன் 26, 1424 – 25”. பெர்னோ நுனுஸ்  தரவுகள் படி, இரண்டாம் தேவ ராயர் ஆட்சி காலம் இருபத்தி ஐந்து ஆண்டுகள்.
இரண்டாம் தேவ ராயர் கி.பி  1419 இல் ஆட்சிக்கு வந்தார் என்பதே என் எண்ணம் , அதற்கு  பின்வரும் காரணங்கள் இருக்கலாம். பெர்னோ நுனுஸ்  தரவுகள்  விஜயாவின் ஆட்சியில் அவர் "மதிப்புக்குரிய எதுவும் எதுவும் செய்யவில்லை" என்றும், இரண்டாம் தேவ ராயர்  எப்போதும்  போர் செய்து கொண்டு இருந்தார் என்றும் சொல்கிறது. 
இப்போது நாம் அதை பிரிஷ்டாஹ்ப தரவுகள் இருந்து படி பார்த்தால். கி.பி 1417 குல்பர்காவின் சுல்தான், ஃபிருஸ், தெலுங்கானாவில் இந்துக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கினார். அதோனியின், வடபகுதியில் எழுபது மைல்களுக்கு அப்பால் பானுல் கோட்டை, [100], மீது தாக்கி அதை சீர்குலைக்கும் முயற்சியில் இரண்டு ஆண்டுகள் இறங்கினார்,  ஆனால் அதை குறைக்கும் முயற்சி, ஆண்களுக்கும் குதிரைகளுக்கும் மேல் ஏற்பட்ட  கொள்ளைநோய்யால் அது  தோல்வி அடைந்தது.
இதனால் பிரபுக்கள் பலர் முகாம்களை விட்டு வெளியேறி, தங்கள் ஆதரவாளர்களுடன்  அந்த பகுதியை சேர்ந்த ஆளுநர்களிடம் சேர்ந்து கொண்டனர்.  இந்த நெருக்கடி நிலையை பயன்படுத்தி , ராய் தனது படைகளை சேகரித்து, சுற்றியிருந்த இளவரசர்களிடமிருந்து,  சொல்லபோனால்  தெலங்கானா((வாரங்கல்),  ராஜாவிடம் கூட  உதவி  பெற்று, குதிரை படையையும் , கால்ட்படைகளையும் சேகரித்து  சுலதானுக்கு எதிராக  போனார். 
இது கி.பி1419 நடந்தது.  பெர்னோ நுனுஸ்  தரவுகள்  படி “வீர விஜயா மதிப்புக்குரிய எதுவும் எதுவும் செய்யவில்லை”   என்று சொல்கிறார் . ஆக இந்த வீரமிக்க  குணாதிசயத்தை, எதவுமே செய்யாத  வீர விஜயாவுடன் ஒப்பிட்டு பார்த்தால் , பொருந்த வில்லை, ஆனால் அதை இரண்டாம் தேவ ராயருடன் பொருத்தி பார்த்தால் சரியாக இருக்கும். ஆக இரண்டாம் தேவா ராயா, அவரது வாரிசாக சீக்கிரம் அரசரானார். அவரைச் சுற்றி வைராக்கியமும், லட்சியமும் நிறைந்த,  பிரபுக்கள் இருந்த நிலையில் அவர் ஹிந்து படைகளை ஒருங்கிணைத்து , அவர்கள் தேசத்தின் பரம எதிரிக்கு எதிராக போரை தொடங்கினார். அவர் மிக மிக இளம் வயதிலேயே அரசரானார் என்றே  நான் நம்புகிறேன். 
இந்த தரவுகள் தான் சரி என்று கொண்டால், 25 ஆண்டுகள்  இவர் ஆட்சி செய்தார்  என்றால், அது கி.பி 1444 வரை.  இந்த தரவுகள் மேலும் சில விஷயத்தை சொல்கின்றன. இராண்டாம் தேவா ராயாவின் மகன் மற்றும்  அவரது வாரிசான "பினா ராவ்” எப்படி , அவரது மருமகனால்,  விஷம்  கொடுக்கப்பட்டு , ஆறு காய்ச்சல்களுக்குப்பின் அவரது காயங்களின் விளைவுகளால்  இறந்தார் என்பதை சொல்கிறது. 
 ஆனால் அப்படி பட்ட சம்பவத்தை குறிபிடும்  அப்துர் ரஸ்ஸாக் தரவுகள் இன்னும் நம்பகதன்மை உடையது.  ஏனெனில் அவர் இராண்டாம் தேவா ராயாவின் சமகாலத்தியவர் மட்டும்  அல்ல, அந்த நேரத்தில் விஜயநகரில் இருந்தார் என்பதும் முக்கியம். அவர் அரசரின்  சகோதரன், இராண்டாம் தேவா ராயரை கொலை செய்ய நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது என்கிறார்.  நவம்பர் 1442 மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் அவரது பயணத்தின் போது, அவர் தங்கி இருந்த இடத்தில் இது நிகழந்தது என்று சொல்கிறார். அப்துர் ரஸ்ஸாக் ராசாக் ராஜாவின் மரணத்தைக் குறித்துப் பேசவில்லை, எனவே அவர் இருக்கும் வரை அரசரின் மரணம் நிகழ வில்லை , அவர் கி.பி 1443 இல் தலைநகரை விட்டு வெளியேறுகிறார். 
பெர்னோ நுனுஸ்ன்   "ஆறு மாதம் கழித்து இறந்தார்  என்று கருத்திற்கு முக்கியதுவம் கொடுக்காமல் , இரண்டு தரவுகளையும் சேர்த்து பார்த்தால்,  இரண்டாம் தேவ ராயர் மீதான தாக்குதல்  "ஏப்ரல் 1443 ஆண்டு என்று கொண்டால், அதற்கு பின் இராண்டாம் தேவா ராயர் இறந்தது  கி.பி 1444ம் ஆண்டு துவக்கத்தில். இருந்தாலும் ஒரு குழப்பம் இன்னும் நீடிக்கிறது.  ஏன் எனில்  இரண்டாம் தேவா ராயா  கி.பி 1449 ஆண்டு  என்று குறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு கிடைத்து இருக்கிறது.இருப்பினும்,  அது அதே பெயரில்  உள்ள மற்றொரு மன்னர் தான் என்பதற்கு சாத்தியம் அதிகம். மேலே கொடுக்கப்பட்ட உண்மைகளை ஒன்றாக சேர்த்து கவனித்தால் , இரண்டாம் தேவா ராயா  ஆட்சி என்பது  கி.பி 1419 மற்றும் கி.பி  1444. இடைப்பட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகள் தான். 

சரி இனி இரண்டாம் தேவ ராயர் ஆட்சி காலத்தில் சுல்தானுடன் நடந்த மோதல்களை பார்ப்போம் 


கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...