Friday, March 4, 2016

அப்சல் குருவின் நினைவு நாள் கொண்டாடிய பல்கலை கழகம்

அப்சல் குருவின் நினைவு நாள் கொண்டாடிய பல்கலை கழகம் என்பது தான் மிக கவனிக்க வேண்டியது. இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்க பட்டவன் அவனுக்கு நினைவு நாள் கொண்டாட்டம் என்று அறிவிப்பு என்பது எப்படி பேச்சுரிமையில் வந்தது. ஆனால் இத்தகைய குழப்பத்திற்கு வித்திட்டது நமது மதிப்பு மிக்க நீதிமன்றம் என்று நினைக்கின்றேன்

என் நினைவு சரியாக இருந்தால், இந்தியாவில் தடை செய்யபட்ட விடுதலை புலிகளை ஆதரித்த பேசுதல் குற்றமாகாது என்று தீர்ப்பு அளித்தது. நீதி மன்றம் பேச்சுரிமை காத்ததாக பெருமைப்பட்டது அன்று.
வந்த வினையே அங்கு தான். அது மெல்ல பரவி , தேசம் ஒழிக என்ற அளவிற்கு பேச்சுரிமை வந்தது. அதாவது இந்திய தேசத்தால் தீவீராவதி என்று அறிவித்த நபரை மக்கள் ஆதரிக்கலாம் என்று பொருள் கொள்ளப்பட்டது.

ஆனால் அதே நீதிமன்றம் , தீவீரவாத தாக்குதல் அச்சம் கொண்டு ,இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் உதவியை நாடியது என்பது உண்மை.

முதலில் நீதிமன்றம், எது பேச்சுரிமை என்பதை தெளிவு படுத்த வேண்டும். இந்திய அரசாங்கம், தமிழ் நாடு அரசாங்கம் ஒழிக என்பது கூட பேச்சுரிமையில் வரும், ஏன் எனில் அது ஆளும் அரசாங்கத்தை மையபடுத்தும். அது மக்களின் உரிமை.

ஆனால் இந்தியா ஒழிக/தமிழ்நாடு ஒழிக என்பது தேசத்தின் அழிவை விரும்பும் வார்த்தை. அதுவும் பேச்சுரிமையில் வருமா?,

அப்சல் குரு இந்தியாவின் அழிவை விரும்பியவன், அவனின் நினைவை நாளை ஒரு பல்கலை கழகம் கொண்டாடுகிறது. அதுவும் தலைநகரில். இந்தியாவின் அழிவை தடுக்க , தன் உயிர்களை தந்து கொண்டு இருக்கும் நமது பாதுகாபு படைகளை அவமதித்தல் போன்றது.

வழக்கம்போல் நமது மக்கள் அமைதி காக்கின்றனர், ஏன் என்றால் இந்தியா என்ற நாட்டிற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

உண்மையில் மிகவும் வலிக்கிறது, அப்சல் குருவின் நினைவு நாளை கொண்டாடியவர்களை விட , மௌனமாக இருக்கும் நம் மக்களை பார்க்கும் போது.

புதுடில்லி:தேச விரோத கோஷமிட்ட…
dinamalar.com
Like
Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...