Friday, November 21, 2014

274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 1-பகுதி

274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 1-பகுதி
மீண்டும் ஓர் பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு ஒரு இரண்டு நாட்களுக்கான இரு சக்கர வாகன பயணத்திட்டம். இந்த முறை திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவார பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கலாம் என்று முடிவு எடுத்து கொண்டு, சனிக்கிழமை காலை 5 மணி அளவில் பயணத்தை தொடங்கினேன்.
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை. காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. நான் மழை சாலைகளை தின்று போய் விட்டு இருக்கும் என்று நினைத்து செங்கல்பட்டு, திருச்சி சாலை வழியாக சென்று விட்டேன். நெடுஞ்சாலை எல்லாம் நன்றாக தான் இருந்தது. அங்கிருந்து இக்கோவிலை அடைவதற்குள் நான் பட்ட இன்னல்களை ஈசன் மட்டுமே அறிவான்.
குரங்கணில்முட்டம், அழகிய கிராமம். நான் சென்று போது கோவில் நடை திறக்க வில்லை. சில ஐயப்பன் பகதர்கள் வெளி நின்று மாலை போட்டு கொண்டு இருந்தனர். பிரசாதம் தந்தார்கள். அணிலாக மாறிய இந்திரன், காகம் உருவம் கொண்ட எமதர்மன், குரங்காய் வந்த வாலி, மூவரும் ஒன்றாய் நின்று வழிபட்ட தலம். கோவிலை சுற்றி அரைவட்டதில் எமதர்மன் உருவாக்கிய தீர்த்தம் உள்ளது.
ஐயர் வீடு அருகாமையில் உள்ளதால், அவரை நாடினேன். அவர் , “இன்று எனது தம்பியின் முறை அவரிடம் சாவி வாங்கி கொள்ளுங்கள்” என்று தம்பியின் நம்பர் கொடுத்தார். அவரை தொடர்பு கொண்டு சொன்ன பிறகு , ஒரு நாப்பது நிம்டம் கழித்து வந்தார்.
கோவில் திறந்தார். கூத்தனை (ஈசன்) கண்டதும் மனம் குரங்காய் கூத்தாடுகிறது. காத்திருந்த நேரங்கள், இந்த கணத்திற்கு தான் என்று மனம் திரும்ப திரும்ப சொல்கிறது. இடப்பக்கம் அம்மை நிற்கின்றாள், அப்பனின் நேரடி பார்வையில் நாம் நிற்க, தாயோ இடப்பக்கம் ஆதரவாய் நம் அருகே நிற்கின்றாள். என் தாயும், என் தந்தை முன் நான் நேராக நிற்கும்போது , அப்படிதானே இடப்பக்கம் எனக்கு ஆதரவாய் நிற்பார்கள் என்று மனம் எண்ணுகிறது.
மந்தியாய் மேய்ந்த மனம், ஈசன் முன் மடங்கி ஒடுங்கி நிற்கிறது. தீபம் காட்டி அர்ச்சகர் ஆண்டவனின் அருளை சொல்கிறார். சுற்றி வந்தால் மிக சுமாரான நிலையில் தான் கோவில் உள்ளது. வருமானம் அற்ற கோவில்கள் வேறு என்ன செய்ய முடியம் என்ற சிந்தனையோடு அங்கிருந்து விடை பெற்றேன்
அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை. ஒரு ஏரிக்கரை வழியாக கடந்து சென்று , கோவிலை அடைந்தேன். கோவில் செல்லும் வழியில் ,சுந்தரர்க்கு வந்து உணவளித்த ஈசன், அவருக்கு என்று நீர் கொடுக்க ஒரு தீர்த்தத்தை உண்டாக்கிய இடம் உள்ளது. பக்தனை காண படைத்தவன் வருவது பக்தியின் உச்சம்.
என்னை காண ஈசன் வருவனோ, அல்லது செய்த பாவங்கள் என்னை பழி தீர்த்து பிறகு, ஈசன் வருவானோ என்ற கேள்விகள் தீர்த்தத்தின் முன் நிற்கும்போது அலையாய் மோதுகிறது. அவன் என்னை நாடி வரா விட்டால் என்ன, நான் அவனை நாடி போய் , அவன் திருவடியை அடையாமலா போய் விடுவேன் என்ற பதில் உள்ளே வருகிறது. மனம் சமாதனம் அடைந்து கோவில் சென்றேன்.
நல்ல நிலையில் உள்ள கோவில். இரண்டு மூலவர்கள். அகத்தியர் பூசித்த ஈசன் தாளபுரீஸ்வரர், புலத்தியர் பூசித்த ஈசன் கிருபாநாதஈஸ்வரர்.
கோவில் வெளியே அகத்தியர் காலம் முன்னே, ஈசனை பாதுகாத்து , வணங்கி கொண்டு இருந்த முனிஸ்வரர் ஆலயம் உள்ளது. இவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கோவில் உள்ளே புகுந்தேன். மயான அமைதியில் கோவில், அழகாய் ,மிக தூய்மையாக நிற்கிறது.
ஈசன் தியானத்தில் உள்ளான் போலும். ஒரு ஈசனின் ரூபமே நம்மை அழகில் அடித்து போட்டு விடும். இங்கே இரண்டு ஈசனின் ரூபம், சொல்ல வா வேண்டும். ஆனந்தம், பேரனானந்தம். பளிங்கின்மேனியன் (ஈசன்) பார்வையில் நம்மை கொல்கின்றான். தீபம் ஏற்றி ஐயர் காட்டினாலும், தீபம் மீறி ஈசனே தீபமாய் ஒளிர்கின்றான். வலபக்கம் இரண்டு தாயார்கள் நிற்கிறார்கள்.
அப்பனின் அழகை கண்டு, அம்மை கூட நாணி நிற்பதாய் பட்டது எனக்கு. கோவில் சுற்றி வந்தேன். மிக சிரத்தையுடன் கோவிலை நன்றாக வைத்து இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டு அடுத்த கோவில் கிளம்பினேன்.







கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...