Tuesday, March 22, 2016

பெல்ஜியம் தாக்குதல்!!

ஐரோப்பிய தேசங்கள் மீண்டும் மீண்டும் இரையாகின்றன. கருணை காட்டிய தேசங்களுக்கு சரியான காயத்தை காட்டி விட்டார்கள். பாவம் இது நிற்க போவதில்லை. யாரும் தடுக்க போவதில்லை. எங்கேயோ ஒரு மலை குகையில் உக்காந்து கொண்டு, தான் விரும்பும் இடத்தில் தீவிரவாதிளால் எப்படி தாக்க முற்படுகிறது. உள்ளே இருந்து உளவு சொல்கிறார்கள் என்பது உண்மை .

தேசப்பற்றை விட மத பற்று பெரியது என்பதே இங்கே மைய கருத்தாக இருக்கிறது, இருந்து இந்த உளவாளிகளை இயக்கி கொண்டு இருக்கிறது . இது தான் அடிப்படை பிரச்சினை. இதை கண்டு கொள்ளாமல் விட்டு விடு , உலக தேசங்கள் கண்டன அறிக்கை விடுகின்றன.

ஒரு முறை தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்காவை மீண்டும் அவர்களால் தாக்க முடிய வில்லை. ஏன் எனில் அந்த அரசாங்கம் , கருணையின் அளவுகோலை மதத்தை வைத்து நிர்ணயம் செய்ய வில்லை. அங்கே மத பற்று வேலை செய்ய வில்லை.

ஏன் எனில் எப்போது எவர் தீவிரவாதியை அல்லது அந்த அமைப்பின் மேல் பற்று கொள்கிறார்கள் என்பது தெரிய வருகிறதோ அப்போதே அந்த தேசத்தில் இருந்து தூக்கி எறியபடுகிறார்கள் அல்லது கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள்.

அந்த நடைமுறைக்கு மற்ற தேசங்கள் வந்தால் மட்டுமே தேசத்தின் மக்கள் பிழைப்பார்கள். முக புத்தகத்தில் ISIS இன் ஆதரவாளர்கள் அதிகம் தென்படுகின்றனர். அமெரிக்காவை தவிர எந்த தேசம் கடும் நடவடிக்கை எடுக்கிறது?

வல்லரசுகள் நடத்திய யுத்தத்தில் அப்பாவி இஸ்லாம் மக்கள் கொல்லபட்டார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அந்த வலி இங்கே வன்முறையாக உருப்பெற்று நிற்கிறது. என் மக்களை கொன்றாய் அல்லவா , உன் மக்களை கொல்கின்றேன். இது எப்பொது நிற்க போகிறது.

வல்லரசுகள் உங்களுடன் நேரிடியாக மோதுகின்றன , நீங்களும் வல்லமை மிக்கவர் என்றால் நேரிடையாக மோதுங்கள்.யாரும் அறிய வண்ணம் குண்டுகளை வைத்து அப்பாவிகளை கொன்று விட்டு சவால் விட்டு கொண்டு இருக்கிறார்கள்.

வல்லரசுகளை உங்கள் தேசத்திற்கு வரவழைத்தது யார்? நீங்கள் தானே. உங்கள் இருவர் இடையே நடைபெறும் வீபரித விளையாட்டிற்கு விலையாக போகிறது அப்பாவி மக்களின் உயிர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1484365

ஐரோப்பா நாடான பிரான்சில் சரியான அடி

Suganthan Rajamanickam shared BBC News's video.
November 16, 2015 ·

ஐரோப்பா நாடான பிரான்சில் சரியான அடி. நன்றாக கவனித்து பாருங்கள் , isisi ன் தன் சொந்த இஸ்லாமிய மக்களின் மீது நடத்திய கோர தாண்டவத்தை கண்டுக்காமல் விட்ட எல்லா நடுநிலை வாதிகளும் , கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம்களும் இன்று இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் பேர் மட்டுமே ISIS யையும் கண்டித்தனர், இன்றும் இந்த தாக்குதல்களை கண்டிகின்றனர்.

ஏன் என்றால் உலகத்தின் கவனம் முழுதும் இஸ்லாம் குவிகிறது. இஸ்லாமிய தேசத்தில் இஸ்லாமியர்கள் கூட வாழ முடியாது என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். இருக்கும் ஒரே வாய்ப்பு ஐரோப்பா. இந்த குண்டு வெடிப்பு , அவர்கள் அகதிகளாக தஞ்சம் புகுவதை பல ஐரோப்பிய தேசங்கள் விரும்பாது செய்யும் . மேலும் வல்லரசுகளின் கூர்மை மொத்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள் மீதும் திரும்பும்.

பாதுகாப்பு பற்றிய பதற்றம் , பல தேசங்களை இஸ்லாமிய அடிப்படை வாதிகள் என்ற கண்ணோட்டதை விடுத்து, மொத்த இஸ்லாமியர்களையும் நோட்டம் விட செய்யும். இது பல நல்ல முஸ்லிம்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் வலுவிழக்க செய்யும்.

ஒரு சில பேர் செய்வதால், மொத்த இஸ்லாமும் எப்படி பொறுப்பு ஏற்கும். நாங்களும் இதை ஒத்து கொள்கின்றோம். இதை தானே நமது பிரியத்திற்குரிய தாய் தேசத்து மக்களும் கேட்டார்கள். ஒரு சிலர் செய்யும் சகிப்புத்தன்மை அற்ற செயலால் , எப்படி ஒட்டு மொத்த தேசத்தையும் சகிப்புத்தன்மை அற்றது என்று சொல்லலாம்.

போலி மத சார்பற்றவாதிகளும் , சிறுபான்மையின் பல மத மாற்ற கூட்டமும் சேர்ந்து கொண்டு ஒட்டு மொத்தமாக பாரத தேசத்தை உலக மக்களுக்கு முன்னால் இழிவு செய்தார்கள். இந்த தாய் நாட்டை நேசித்தவர்கள் மத்தியில் அது எப்படி ரணத்தை உண்டாக்கி இருக்கும்.

ஆனால் இன்று கதையை மாற்றுகிறார்கள். இஸ்லாத்தை பொறுப்பு ஆக்காதீர்கள் என்று அலறுகிறார்கள்.அட அறிவாளிகளா!! வைத்தவன் , இஸ்லாத்திற்கு என்று சொல்கின்றான். எவன் தீவீரவாதி என்று ஒரு தேசத்தின் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கின்றதோ , அவனை தியாகி என்று சொல்லி அவன் பின்னே போகிறார்கள்.

அதே நீதிமன்றம் பல இஸ்லாமிய்ரக்ளையும் விடுவித்து இருக்கிறது. ஆனால் அதை மறந்து விடுவார்கள்.

ஏழு இடங்களில் எப்படி தாக்குதல் சாத்தியம். உள்ளே ஆள் இல்லாமல் உளவு பார்த்து இருக்க முடியுமா?. தான் வாழும் தேசம் என்று தெரிந்தும், இஸ்லாமிய தேசத்தில் கிடைக்காத சுதந்திரம் இங்கே கிடைக்கிறது என்று அறிந்த பிறகும், மதம் யாரோ சிலரின் மூளையை மழித்து, வாழ்வளித்த தேசத்தை வீதியில் ஏறிய செய்து இருக்கிறது. அப்படி என்றால் அது எவ்வளவு வீரியமான மதம்.
இந்த குண்டு வெடிப்பின் சூட்டை தடுக்க , எல்லா நல்ல முஸ்லிம்களும் முன்னிலை படுத்த படுவர். தொடர்ந்து இதை கண்டிப்பார்கள். அடிப்படை வாதிகள் அது வரை காணாமல் போவர், அடுத்த குண்டு வெடிப்புக்கு ஆயுத்தம் செய்ய.

மெல்ல சூடு தணியும். எல்லாரும் அமைதியாகி போவர்கள். மீண்டும் அடிப்படை வாதிகள் கிளம்புவார்கள். எந்த தேசம் இரையாக போகிறதோ?
இது ஒரு சுழற்சியாக தொடர்ந்து நடை பெறுகிறது

அறிந்தோ அறியாமலே , பல அடிப்படை வாதிகள் கடும் தண்டனையில் இருந்து தப்ப பல நல்ல முஸ்லிம்கள் தான் காரணம். ஆனால் நல்ல முஸ்லிம்களையும் குறை சொல்ல முடியவில்லை. ஏன் எனில் அடிப்படை வாதிகளை எதிர்த்தால் அவர்களும் கொல்லபடுவர்.

இது ஒரு தொடர்கதை. இது நிற்க போவதில்லை. யாரும் இனி நிம்மதியாக இருக்க போவதில்லை என்பதும் இங்கே நிதர்சனம்

Write a comment...

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...