Sunday, April 16, 2017

ராம நவமி. ராமன் பிறந்த தினம்

ராம நவமி. ராமன் பிறந்த தினம். எவனின் ஒர விழி பார்வை நம் மேல் விழாதா என்று ஏங்கி தவிக்கிறமோ, அந்த ஆதியும் அந்தம் அற்ற ஈசனை் , யோகத்தில் ஆழ்த்துவது ராம நாமம். நான் ஈசனை நினைத்து கொண்டு இருந்தால், ஈசன் ராமனை நினைத்து கொண்டு உள்ளான். சிவ பக்தன் ராவணனின் சிரம் போனது, ராம நாமத்தை பற்றி கொண்டு இருந்த சீதா மாதாவின் கரம் பற்ற போனதால் என்று வரலாறு சொல்கிறது.
அப்பனுக்கு பல மனைவி, பிள்ளையோ ஏக பத்தினி விரதன். வந்தது இறை என்று ஐந்தறிவு பறவை ஜடாயுக்கு தெரிந்து இருந்திருந்தது , யோசிக்கும் அறிவே அற்று திரிந்த மந்திக்கும் தெரிந்து இருந்தது வந்தது மனிதன் அல்ல என்று. ராமன் கால் பட்டதும் கல்லுக்கும் புரிந்தது அது கடவுள் என்று.
ஆனால் இறை பக்தனான ராவணனுக்கு மட்டும் வந்ததது யார் என்று புலப்படவே இல்லை. இறை பக்தி இறங்கி போய், இச்சை மட்டுமே அவனிடம் எச்சம் இருந்தது. முறையற்ற, பொருள் அற்ற காமம் அவனுள் இருந்த கடவுளை கரைத்து , காலனை அவன் வாயிற் படிக்கு வரவழைத்தது.
ராம பாணம் ரதம் ஏறி சிவ பக்தனை சவம் ஆக்கியது.
காமம் கொண்ட மனதை ராம பாணம் கருவறுதத்து.
தியானத்தில் ஆழ்ந்த ஈசனை , காமத்தில் ஆழ்த்த வந்த காம தேவன் மீது ஈசன் எய்தியது வேறு எதுவும் இல்லை, சாட்சத் ராம பாணம் தான்.
ராமன் என் அரசன், என்னை ஆளும் என் ஈசனையும் அவனே ஆள்கின்றான் எனும் போது ராம நாமத்தை மிஞ்சி இங்கே எந்த மந்திரமும் இல்லை, எந்திரமும் இல்லை.
சஞ்சலத்தில் சிக்கி சிதையும் நம் சிந்தனைகளை , சிறை மீட்க வருவது "ராம நாமம்"
ராமனை பரத தேசத்தின் அரசனாக எண்ணும், அனைவர்க்கும் ராம நவமி வாழ்த்துக்கள்.

Image may contain: 2 people, indoor

ஒரு மறக்கப்பட்ட பேரரசு-விஜய நகரம்-அத்தியாயம் 4


அத்தியாயம் 4
விஜய நகரத்தின் வளர்ச்சி (கி.பி 1379 to 1406 )

Harihara II. – Firuz Shah of Kulbarga – Fresh wars – Assassination of a prince in 1399 A.D. – Bukka II.

முதலாம் புக்கர்க்கு பிறகு அவரது மகன் இரண்டாம் ஹரிஹர் ஆட்சிக்கு வருகிறார். போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ் இந்த இரண்டாம் ஹரிஹர்ரரை “Pureoyre Deorao” அல்லது “Pureoyre” என்ற போர்த்துகீசிய பெயரில் குறிப்பிடுகிறார். தெலுங்கு, கன்னட மொழியில் “P” என்ற வார்த்தையும் “H” என்ற வார்த்தையும் உச்சரிக்கும்போது ஒரே ஒலியை தான் தருகின்றன. கல்வெட்டுகள் படி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இவர் ஆட்சி நடத்துகிறார். தனக்கு தானே  “ராஜாதிராஜன்” என்ற பட்டத்தை அளித்து கொண்ட முதல் விஜயநகர அரசர் இவரே. தென்னிந்திய கோவில்களுக்கு பல உதவிகளை அளித்தார் என்று பட்டயங்கள் கூறுவதில் இருந்து தென்னிந்தியாவில் இவரின் மேலாதிக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

மாதவச்சார்யாரின் சகோதரர் , சாய்னா இவரிடம் முதல் அமைச்சராக வேலை செய்தார். 1379 மற்றும் 1382 உள்ள  இரண்டு கல்வெட்டுகளின் படி இவரின் தளபதி “முட்டா”. மற்றோர் தளபதியின் பெயர் “இருகா”. இவர் இரண்டாம் புக்கரிடம் அமைச்சராக இருந்த சைசா என்பவரின் மகன். “குண்டா” என்ற மற்றோர் படை தளபதியின் பெயர் இவரின் ஆட்சி காலத்தில் குறிக்கப்பட்டு இருந்தாலும், அவர் வாழ்ந்த காலம் பற்றி உறுதியான தகவல் இல்லை.

விஜயநகரத்தில் உள்ள கமலபுரா என்ற இடத்தில், 1385 ஆண்டில் நிதியுதவி அளிக்கப்பட்டதை சொல்லும் ஜெயின் மத கோவிலினுள் உள்ள தூண்களில் இரண்டாம் ஹரி ஹரியின் பெயர் உள்ளதை வைத்து பார்க்கும்போது, மற்ற மதங்களின் மீது சகிப்புத்தன்மை கொண்ட மனிதராக இருந்தவர் என்று அறிய முடிகிறது. மற்றொரு கல்வெட்டு படி, இவரின் ஆரம்ப கால ஆட்சி காலத்தில் முகமதிய படைகள் கோவாவிலிருந்து வெளியேற்றப்பட்டது. கோவாவில் கடைசியாக கண்டுபிடிக்க பட்ட கல்வெட்டு, அந்த நேரத்தில் அங்கே “பச்சன்ன உடையார்” என்பவர் ஆளுநரக இருந்தார் என்று தெரிவிக்கிறது

இரண்டாம் ஹரி ஹரியின் பட்டது அரசி பெயர் மல்லாதேவி அல்லது மல்லம்பிகா. அவரின் அரசாட்சி பரவிய இடங்கள் என்பதற்கு ஆதாரமாக  மைசூர், தார்வார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளில்களில் கல்வெட்டுகள் கிடைத்து உள்ளன. இவர் சிவனின் விருபாக்ஷா வடிவத்தை வணங்கும் சிவா பக்தராக இருந்தாலும், மற்ற எல்லா மதத்தின் மீது மிக அதிக சகிப்புத்தன்மை கொண்டவராக இருந்து உள்ளார். சமீபத்திய கல்வெட்டுகளில் மூலம் கிடைத்த இவரது ஆட்சியின் உண்மையான தேதி அக்டோபர் 15, 1399 வரை.

சரி சற்றே பாமினி சுல்தான்கள் நிலவரம் பற்றி பார்ப்போம்.

முதலாம் முகமதுவிற்கு பிறகு 17 வயது நிரம்பிய அவனது மூத்த மகன், குல்பர்கவின் ஆட்சிக்கு வருகின்றான். ஆனால் அவன் ஆட்சி செய்ய ஆரம்பித்து, ஒரு ஒன்றைரை மாதம் முடியும் நேரத்தில் ஜூன் 14, 1397ம் ஆண்டு, ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில்,  திட்டமிட்டு ஒரு தேர்ந்த அடிமை மூலம் அவன் கண்கள் குருடாக்கபடுகின்றன. பின் அவனது  இளைய சகோதரன், ஷம்ஸ்-உத்-தின், ஆட்சிக்கு வருகின்றான் ஆனால் ஐந்து மாதங்கள் ஆட்சி செய்த பிறகு, சுல்தான் தாவுத் கானின் மகன் ஃபிருஸ் கானால் கண்கள் குருடாக்கபட்டு, அரியணையில் இருந்து நீக்க படுகின்றான்.

ஃபிருஸ் சந்தேகத்திற்கு இடமின்றி பாமினி சுல்தான்களின் மூத்த வம்சத்தின் கிளை பிரிவில் வந்தவன். அவனது வம்சத்தில் அவன் தான் மிகவும் பிரபலமான ஒருவர். நவம்பர் 15, 1397ல் குல்பர்கவின் மன்னராக அரியணை ஏறினான். அவனை வயதானவர் என்ற பிரிஷ்டாஹ்ப 1419 ஆண்டு தரவில் குறிப்பிடுவதில் இருந்து , இவன் ஆட்சிக்கு வரும் போதே மத்திம வயதை கடந்தவராக தான் இருக்க முடியும்.

இரண்டாம் ஹரி ஹரியின் கடைசி ஆண்டு எது என்பதை பற்றி சற்று ஆராய்வோம்.

1406 ஆண்டில் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள், இரண்டாம் புக்கரின் மூத்த மகன் பற்றியும், அவனுக்கு பின வந்த பல வெற்றியாளர்கள் பற்றியும், 1412 வரை ஆட்சியில் இருந்த இரண்டாம் புக்கரின் இளைய சகோதரன் முதலாம் தேவராயர் பற்றியும் தகவல் தருகின்றன. 
  
சற்று மீண்டும் வரலாறை திரும்பி பார்க்க வேண்டும். விஜய நகரத்தின் முதல் மன்னர், வயதான முதலாம் ஹரிஹரர் ஏழு வருஷம் ஆட்சி செய்கிறார். அவருக்கு பின் அவரது தம்பி முதலாம் புக்கர் முப்பத்தி ஏழு வருஷம் ஆட்சி செய்கிறார். ஆகையால் முதலாம் புக்கரின் பிள்ளையான இரண்டாம் ஹரி ஹரி ஆட்சிக்கு வரும் போது, முதலாம் புக்கர் மிகவும் வயதான நிலைக்கு சென்று தான் மரணம் அடைந்துள்ளார். அதன் அர்த்தம் இரண்டாம் ஹரி ஹரியும் மத்திம வயதை தாண்டி தான் ஆட்சிக்கு வருகிறார். இவர் 20 வருடம் ஆட்சி செய்கிறார் , அதனால் 1399 வரை ஆட்சி செய்த இவரும் வயதானவரே.

இதை கவனத்தில் கொண்டு, பாமினி சுல்தான் ஃபிருஸ் ஆட்சி காலத்தில் நடந்தவற்றை சொல்லும் பிரிஷ்டாஹ்ப தரவுகளை பார்க்க வேண்டும்.
செப்டம்பர் 1398 ஆண்டு முதல்  செப்டம்பர் 1399 ஆண்டில் வரை  அவர் சொல்லும் தரவின் படி “விஜய நகர அரசர் முப்பது ஆயிரம் குதிரை படைகள் மற்றும் , கணக்கில் அடங்கா காலட் படைகளுடன், ஆற்றிற்கு இடைப்பட்ட சுல்தானின் பிரதேசத்தில் நுழைந்து , முத்கல் மற்றும் ராய்ச்சூர் கோட்டைகளை பலவீன படுத்த வேண்டும் என்று நோக்கில் வருகிறார்”

ராயருக்கும் , சுல்தானுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் ஆகஸ்ட் மாதம் 1399 ஆண்டு முடிவுக்கு வருகிறது. இந்த படை எடுப்பு , குளிர் கால தொடக்கத்தில் இருந்து இருக்கலாம். டிசம்பருக்கு முன் படை எடுப்பு நடக்க சாத்தியம் இல்லை. பருத்தி சம வெளியில் படைகள் கடந்து போக அதுவே சரியான காலம். இந்த படை எடுப்பை , சமதானத்தை விரும்பும் வயதான இரண்டாம் ஹரி ஹரி அவரின் தலைமையில் கீழ் நடத்தி இருக்க வாய்ப்பு இல்லை. 

ஆகவே அவரின் அனுமதி பெற்று அல்லது கட்டாய படுத்தியோ அவரின் மகன்  இரண்டாம் புக்கர் தைரியமாக இந்த படை எடுப்பை நடத்தி போய் இருக்கலாம். இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் படி, சமதான உடன்படிக்கை 1398ல் முறிந்து போகிறது.

ஆக போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ், இஸ்லாமிய வரலாற்று ஆசரியர் பிரிஷ்டாஹ்ப, மற்றும் பல கல்வெட்டு தகவல்களை வைத்து பார்த்தால் , இரண்டாம் ஹரி ஹரர் இறந்த ஆண்டு 1399. அவரது ஆட்சி காலம் பற்றி சிறிய தரவுகளே உள்ளன.

இரண்டாம் ஹரி ஹரிக்கு பிறகு அவரது மூத்த மகன் இரண்டாம் புக்கர் ஆட்சிக்கு வருகிறார். இவரும் மத்திம வயதை கடந்தவர் என்பதால், இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னேரே தனது மகனை சேர்த்து கொண்டு போர்க்களம் கண்டவர்.

போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ் “ இரண்டாம் ஹரி ஹரர் இறந்த பிறகு , அவரது மகன் ஆட்சிக்கு வருகின்றான், அவன் “Ajarao” அஜரோ என்று அழைக்க படுகின்றான், நாற்பத்தி மூன்று ஆண்டுகள் அரசாண்ட அவர் எப்போதும் முகலாயர்களுடன் போரிட்டு வந்தார்“ என்று குறிப்பிடுகிறார்
இவரை “அஜரோ” என்று சொன்னதையும் மற்றும் இவர் நாற்பத்தி மூன்று ஆண்டுகள் போரிட்டார் என்று நுனுஸ் சொல்வதையும் என்னால் தெளிவாக விளக்க முடிய வில்லை. ஆனால் கல்வெட்டுகள் தரும் தரவை வைத்து பார்த்தால் , அஜரோ என்று அவர் அர்த்தபடுத்தவது இரண்டு அரசர்களை. அதாவது இராண்டாம் புக்கர் மற்றும் அவரது இளைய சகோதரன் முதலாம் தேவராயர். அவர்கள் ஆட்சி செய்த காலம் நாற்பத்தி மூன்று ஆண்டுகள் அல்ல, 14 வருடம் தான்.

இரண்டாம் புக்கர் ஆட்சி காலத்தில் , விஜய நகரம் நன்கு வளர்ச்சி பெற்றது, புதிய கோட்டைகள், கோபுரங்கள் கட்டப்பட்டு, பாதுகாப்பு செய்யப்பட்டு எல்லைகள் வலுவூட்டபட்டன என்று நுனுஸ் சொல்கிறார். ஆனால் அவர் செய்ததில் மிக சிறப்பானது, துங்கபத்ரா ஆற்றில் ஒரு பெரிய அணையை கட்டி, அதில் இருந்து நதியை ஒட்டி பதினைந்து மைல் நீளம் கொண்ட கால்வாய் உருவாக்கி அதை நகரம் வரை எடுத்து சென்றது. பல மலைகளை அகழ்ந்து கற்பாறைகள வெட்டி அந்த காலத்தே உருவாக்கப்பட்ட பாசன கால்வாய் அன்றைய இந்தியாவின் அற்புதமான படைப்பு. இன்றைய காலகட்டத்திலும் பயன்பாட்டில் அந்த கால்வாய் உள்ளதுஎனும் போது ஐயமின்றி அவரின் மிக சிறந்த உருவாக்கம் இது.
இரண்டாம் புக்கர் ஆட்சியில் நடைப்பெற்ற போர்கள் பற்றிய பெரிய தரவுகள் நுனுஸ்ன் பதிவுகளில் இல்லை. கோவா, சால் ,தபுல் இடங்களில் முகலாயர்களுக்கு எதிராக யுத்தங்கள் நடத்தி, அவர்களை கோரமண்டல  கடற்கரை பக்கம் துரத்தி விட்டு, அவர்களிடம் இருந்து கப்பம் பெற்றான்.

இரண்டாம் புக்கர் மற்றும் அவரது இளைய சகோதரன் முதலாம் தேவராயர் பற்றி நுன்ஸ் தரும் தரவுகளை விட, பிரிஷ்டாஹ்ன் தரவுகள் அதிக தகவல்களை தருகின்றன. 

சரி யுத்தம் என்னவாயிற்று என பார்ப்போம்

இரண்டாம் புக்கர்(ராயர்) தலைமையில் படைகள் போகின்றன, டிசம்பர் 1398 ஆண்டிற்கு முன்னர், மழைக்காலதிற்கு முன் தான் இந்த யுத்தம் நடந்து இருக்க வேண்டும். அதே நேரத்தில் இரண்டாம் புக்கரின் மகனும் கலந்து கொள்கின்றான். நோக்கம் முத்கல் மற்றும் ராய்ச்சூர் கோட்டைகளை கைபற்ற வேண்டும்.

பாமினி சுல்தான் ஃபிருஸ், இவர்களை எதிர் கொள்ள போகும் வழியில் உள்ள ஹிந்துக்கள் எல்லாரையும் கொன்றான் , ஒரு ஹிந்து ஜமின்தாரும் அவனது மக்கள் என்று  கிட்டத்தட்ட எட்டாயிரம்  ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.

ராயர் பிரச்சனைக்குரிய அந்த பகுதியின் வடக்கு பகுதியில் நுழைந்து , கிருஷ்ணா நதிக்கரையில் படைகளுடன் முகாம் இட்டு இருந்தான். ஆற்றில் பெரு வெள்ளம் ஓடி, முகலாயர்கள் ஆற்றை கடந்து வருவதை  தடை செய்தது.

சுல்தான் ஃபிருஸ் ஆற்றின் மறுகரையில் தன் படைகளுடன் முகாம் இட்டு , ஆலோசனை நடத்துகின்றான். ஆனால் அவன் திருப்தி அடையும் வகையில் யாரும் யோசனை சொல்ல வில்லை.

சுல்தான்  தனியாக யோசனையில் ஆழ்வதை கண்ட, காசி சுராஜ் என்பவன்,  சுல்தான் அனுமதி தந்தால்,  தானும் தன் நண்பர்கள் மட்டும் ஆற்றை கடந்து மறுகரை சென்று அரசனை அல்லது அவன் மகனை மட்டும் யாரும் அறியாத வழியில் கொன்று விட்டு வருவதாக சொன்னான்.

சுல்தான் அனுமதி தந்து அவனுடன் நூறு போர் வீரர்களையும் மாறு வேடத்தில் அனுப்பி வைத்தான். காசி சுராஜ் மற்றும் அவரது நண்பர்கள் எழு பெரும் பிச்சை எடுத்து உண்ணும் சாமியார்கள் மாதிரி வேடமிட்டு , நடன பெண்கள் குடி இருக்கும் பகுதியில் நுழைந்தனர். காசி சுராஜ் ஒரு விலைமகள் மீது அதிக ஆர்வம் கொள்ளவது போல் நடித்து , அவளுடன் தங்க அதிக பணம் கொடுத்தான். சாயந்திரம் அந்த பெண் வெளியே செல்ல முற்படுகையில், அவள் இல்லாமல் வாழ முடியாது என்று அழுது நாடகமாடினான். 

அந்த பெண் தான் இன்று சாயந்திரம் ராயரின் மகனை மகிழ்விப்பதற்காக, தன் குழுவுடன் செல்ல வேண்டும் என்றும், இசை மற்றும் நடன குழுவை தவிர்த்து வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றாள். அப்படி என்றால் என்னையும் அழைத்து செல், நானும் சில இசை கருவிகளை வாசிப்பேன் என்று வாசித்த காட்ட, அது அவளுக்கு பிடித்து போனது. அவனை அழைத்து சென்று தன்னுடன் வாசிக்க வைத்தால், மற்றவர்களிடம் இருந்து தான் தனியாக தெரிந்து,  இளவரசரை மகிழ்விக்கலாம் என்று எண்ணினாள். அவனையும் அவன் கூட்டத்தையும் அழைத்து கொண்டு இளவரசன் இருப்பிடம் அடைந்தாள்.

நடன கலைஞர்கள் ஆடும் போது, பாடுபவர்கள் சேர்ந்து பாட வேண்டும் என்ற நடைமுறை படி, நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு, பல குரல் வித்தகர்களையும் வேறு இசை கருவியில் திறமையானவர்களையும் இளவரசன் அழைத்தான். காசி குழு தங்கள் திறமையை காட்ட தயாரானது. அவர்களில் பல பேர் பெண் வேடம் இட்டு இருந்ததால், எல்லாரிடம் சிரித்து பேசி பழகி, பல குரலில் பேசி ஆடி, இளவசரன் முன் வேகமாக போவதும் , பிறகு வேகமாக பின் வாங்குவதமாக இருந்தனர். இளவசரன் அசந்த சமயத்தில், தங்கள் கூர் வாள்களை அவன் மார்பில் சொருகி, தன் கூட்டாளிகளுக்கு சமிக்கை செய்தனர். கூடாரத்திற்கு வெளியில் தயாரக இருந்த அவன் ஆட்கள் உள்ளே புகுந்தனர். ஏற்கனவே மயக்கம் மருந்து கலந்த மதுவை குடித்து இருந்தால, இளவரசனின் பாதுகாவலர்கள் சுலபமாக கொல்லப்பட்டனர். எல்லா தீபத்தையும் அணைத்து விட்டு கூட்டத்தில் கலந்து தப்பி போனார்கள்

மிக பெரிய குழப்பம் அங்கே எழுந்தது. எல்லா இடத்திலும் அபாய சங்குகள் ஒலித்தன. சில பேர் சுல்தான் பன்னிரண்டு ஆயிரம் வீரர்களுடன் நதி கடந்து வந்து  முகாமில் தீடிரென்று தாக்குதல் நடத்தி அரசரையும் . இளவரசனையும் வெட்டி போட்டார் என்று வதந்தி பரவியது.

அந்த இரவு வழக்கத்திற்கு மாறாக மிகவும் இருண்டு, நீண்டு இருந்தது. பத்து மைல்களுக்கு விரவி இருந்த அந்த ராயரின் படைகளின் முகாமில் உண்மையில் நடந்தது என்னவென்று யாருக்கும் முழுதாக தெரியாமல், பல தளபதிகள் குழப்பத்துடன் தங்கள் இடங்களிலே ஆயுதம் தரித்து நின்று இருந்தனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில், கிட்டத்தட்ட நான்கு ஆயிரம் சுல்தான் துருப்புகள் , படகுகள் மூலம் ஆற்றை கடந்து தாக்குதல்களுக்கு தயாராக வந்தன. ராயரின் படைகள் எதிர்க்க தயாராக இருந்தாலும், முகாமில் எழுப்பப்பட்ட குழுப்பமான அபாய எச்சரிக்கை மணியால், தாக்குதல் நடத்தாமல் பின் வாங்க தொடங்கின. அதி காலை முன்னரே சுல்தான் தனது முழு படைகளுடன் நதி தாண்டி, உக்கிரமாக ராயர் படைகளை தாக்கினார்.

வஞ்சகத்தால் கொல்லப்பட்ட தன் மகனின் இறப்பால் அதிர்ச்சியில் இருந்த ராயர், கலவரமடைந்து , சிறிய எதிர்ப்பு மட்டும்  காட்டி விட்டு, தனது மகனின் உடலை எடுத்து கொண்டு சூரியன் உதிக்கும் முன்னேற படைகளுடன் விஜய நகரம் நோக்கி போனார்.

ராயரின் முகாமை கொள்ளை அடித்த பெரும் செல்வம் பெற்ற சுல்தான், தன் ராயரை பின் தொடர்ந்து விஜயநகரம் நோக்கி போனான். போகும் வழி எங்கும் ஹிந்துகளை கொன்று குவித்து கொண்டே போனான், அவர்கள் உடல்கள் சாலை எங்கும் சிதறி கிடந்தன.

இரண்டாம் புக்கர் (ராயர்) விஜயநகரத்தை பாதுகாப்பாக அடைந்தான். சுல்தான் தனது சகோதரனை, விஜயநகர கோட்டைக்கு தெற்கு பகுதியில் உள்ள இடங்களை சூறையாட அனுப்ப, அவன் பல பிராமணர்களை கைப்பற்றி கொண்டு வந்தான். அவர்களின் உறவினர்கள் விஜய நகர் அரசர் இரண்டாம் ஹரி ஹரியியிடம் அழுது புலம்ப, அவன் பத்து லட்சம் வராகன் கொடுத்து அவர்களை மீட்டு சுல்தானுடன் சமதான உடன்படிக்கை செய்தான்.

செப்டம்பர்  மாதம் , 1399 ஆண்டிற்கு சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட அந்த சமாதான உடன்படிக்கையின் படி, யுத்தத்திற்கு முன்பு என்ன எல்லைகள் இரு தேசத்திற்கும் இருந்தனவோ அதே எல்லைகள் தொடர வேண்டும், இரு தேசங்களும் மற்ற தேசங்களின் குடி மக்களை துன்புறுத்த கூடாது என்பது சுல்தானாலும், ராயாராலும் ஏற்கப்பட்டன.
சுல்தானுக்கு இந்த போரில் செல்வம் கிடைத்தது என்றாலும், எல்லைகள் மாற வில்லை, ஆக பெரும் வெற்றி என்று சொல்ல முடியாது. 

பிரச்சினைக்குரிய நில பகுதிகள் பிரச்சினை குரியதாகவே அப்போதும் இருந்தன.

இந்த சமதான உடன்படிக்கைக்கு அடுத்து சில மாதங்கள் கழித்து, தனது எல்லையான “பெரர்” என்ற இடத்தில் கலகம் செய்த நெர்சிங் என்ற ஆளுநரை அடக்க சுல்தான் படைகளுடன் போனார்.

புர்ஹன் மாசிர் (BURHAN-I MAASIR) என்ற புத்தகம் , இங்கே நடந்த யுத்தத்தை பற்றி பல தகவல்களை தருகிறது. சுல்தான் பல செல்வங்களை கப்பமாக பெற்றான்.

அக்டோபர் 15, 1399ல் பிறகு  இரண்டாம் ஹரி ஹரர் இறந்து போக, அவர் மகன் இரண்டாம் புக்கர் ஆட்சிக்கு வருகிறார்.

இரண்டாம் புக்கர் ஆட்சி பற்றி சில தரவுகளே இருந்தாலும்,  பிரிஷ்டாஹ்ப தரவு படி, குஜராத், மால்வா, கன்டிஷ் அரசுகளின் தூண்டதலால், இரண்டாம் புக்கர் ஒப்புக் கொண்ட பணத்தை சுல்தானுக்கு தர வில்லை. ஜூன் 1406 முதல் ஜூன் 1405 வரை, கணக்கின் படி , நான்கு வருட பணம் நிலுவையில் இருந்தது, ஆனால் சுல்தானுக்கு அது பற்றிய எந்த தகவலையும்  ராயர்வி சொல்ல வில்லை. சுல்தான் சரியான தருணத்திற்காக காத்து இருந்தார்.


இந்த தருணத்தில், இரண்டாம் புக்கருக்கு பிறகு அவரது தம்பி முதலாம் தேவ ராயர் நவம்பர் 5, 1406ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தான். அதற்கான ஆதாரம் மைசூர் கல்வெட்டில் உள்ளது..

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...