Wednesday, September 9, 2015

பா ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்” புத்தகம்.

பா ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்” புத்தகம். இஸ்லாத்தின் உன்னத அரசனான சலாவுதீன் என்ற மனித நேயம் மிக்க மாமன்னரை பற்றி அறிமுகம் செய்தது பா ராகவனின் “நிலமெல்லாம் ரத்தம்” புத்தகம். அவரின் மற்றும் ஒரு படைப்பு இது.

ஆர்.எஸ்.எஸ் பற்றிய எல்லா கருத்துக்களையும் களம் காண்கிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் தேச பக்தி பற்றி சந்தேகம் இல்லை என்று சொல்லும் அதே வேளையில், ஆர்.எஸ்.எஸ் இன் மீதான மாற்று மதத்தவரின் குற்றச் சாட்டை மறுக்காமல் பொது தளத்தில் வைக்கிறது.

தீண்டாமை அற்ற இயக்கம் ஆர் ஸ் ஸ் என்ற உண்மையை அழுத்தமாக ஆதாரத்துடன் சொல்கிறது. பாகிஸ்தானுடனான யுத்தத்திலும், சீனாவுடனான யுத்தத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆற்றிய பங்களிப்பை புத்தகம் உறுதி செய்கிறது. இந்திய தேசம் இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் போது, எப்போதும் இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து பங்கேற்கும் செயலை மறைக்காமல் சொல்கிறது.

கோவாவை இந்திய தேசத்துடன் இணைத்து வைக்க அடித்தளம் அமைத்தது ஆர்.எஸ்.எஸ் என்ற வரலாற்றை அறிமுகபடுத்துகிறது.

காஷ்மிர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதி செய்ய ஆர்.எஸ்.எஸ் போராடிய கதையை சொல்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் , கிறிஸ்தவ மிசனரிகள் உடனான ஆர் ஸ் ஸ் இன் யுத்தத்தை பற்றி பேசுகிறது
பாபர் மசூதி இடிப்பு பற்றியும், மீனாட்சிபுரம் மதம் மாற்றம் பற்றியும், ஒரிசாவின் பாதிரியார் கொலை பற்றியும் சொல்லும்போது ஆர்.எஸ்.எஸ் இன் குழந்தைகள் என்று மற்ற ஹிந்து இயக்கங்களை குறிப்பிட்டு சொல்கிறது.

ஆர் ஸ் ஸ் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதி இருக்கிறார். முடிந்தால் வாங்கி படியுங்கள். என்னை பொறுத்தவரை விமர்சனங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி இருந்தாலும், ஆர் ஸ் ஸ் என்ற ஒரு இயக்கம், இந்திய தேசத்தில் எழாமல் போய் இருந்தால் , இந்திய என்ற தேசத்தை மேலும் மதத்தின் பெயரால் வெட்டி பிளந்து இருப்பார்கள்.

ஹிந்து மதம் பெரும்பான்மை பெற்ற எந்த மாநிலமும் இந்த தேசத்தில் தனி நாடு கோருவதில்லை. ஹிந்து மதம் அழிந்து கிறிஸ்தவம் , இஸ்லாம் பெரும்பான்மை பெற்ற மாநிலங்கள் , நாகலாந்து , மிசோரம் , காஸ்மீர்.... மாநிலங்களில் தான் தனி நாடு கேட்டு போராட்டங்கள் அதிக அளவில் நடை பெறுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொண்டால், ஆர் ஸ் ஸ்-இன் இருப்பு இந்த தேசத்தில் இருத்தல் மிக அவசியம் மட்டும் அல்ல, ஹிந்துக்களின் வலிமையான வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

"பாகிஸ்தான் போகும் ரயில்" - குஷ்வந்த் சிங் (Train to Pakistan).

" பாகிஸ்தான் போகும் ரயில்" - குஷ்வந்த் சிங் (Train to Pakistan).
கிழக்கு பதிப்பகம் -விலை 175
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் இடையே நடைபெற்ற சம்பவங்களை பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட நாவல். மிகுந்த சர்ச்சையில் சிக்கியது இது வெளி வந்த போது. தென் இந்திய மக்களை விட, வட இந்திய மக்கள் ஏன் பாகிஸ்தான் மீது வெறுப்பில் உள்ளனர் என்பதை சொல்லும் நாவல்.

தேசத்தை வெட்டி பிளந்தவர்களால் , இரு வேற்று மத சார்ந்த காதலை வெட்டி பிரிக்க முடியாமல் போன கதை பற்றி பேசுகிறது. தேசமே சகிப்புத்தன்மையை தூக்கி சாக்கடையில் எறிந்த போது, ஹிந்து, முஸ்லிம், சீக்கிய மத மக்கள் வாழ்ந்த கிராமம் மட்டும் சகோதரர்களாக வாழ முற்பட்ட கதை.

இந்தியாவில் இருந்து செல்லும் முஸ்லிம் அகதிகளை ஏற்றி கொண்டு பாகிஸ்தான் போகும் ரயிலை தொடர்ந்து கதையும் பயணிக்கிறது. நம்மால் தான் அதற்கு மேல் தொடர முடியவில்லை.

ஜின்னாவின் முஸ்லிம் லீக் ஆரம்பித்த "நேரடி நடவடிக்கை " என்ற செயல் பல ஹிந்து மக்களை கொன்றொழிக்க, பதில் நடவடிக்கை இந்தியாவில் ஆரம்பித்தது என்பது தான் வரலாறு.

இந்த புத்தகம் கற்பனை கலந்த கதை என்று வாதிடுபவர்கள் இன்று பாகிஸ்தான் என்ற தேசத்தில் ஹிந்துக்களின் சதவிகிதததை எடுத்து பார்த்தால், கதையின் பெயர்கள் கற்பனையாக இருந்தாலும் , அதன் கதையின் கரு, பிரிவினையின் போது தான் பிரசவித்து இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய தேசம் என்று வக்காலத்து வாங்கும் நடுநிலை வாதிகளின் கவனத்திற்கு. இஸ்லாமியர்கள் பெரும்பான்மை பெற்றதால் அங்கு இஸ்லாமியர் அல்லாதவர் வாழ வழி அற்று போனது என்ற உண்மையை மற்றும் உணருவதில்லை.

ஹிந்துக்கள் பெரும்பான்மை பெற்ற தேசம் தான் தன்னை மதசார்பற்ற நாடக பறை சாற்றியது. அதற்கான பலனை என் தேசம் இப்போது அனுபவிக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து வந்த முதல் ரயில் தான் ஹிந்துக்கள் சீக்கியர்களின் உயிரற்ற பிணத்தை எடுத்து வந்தது என்பது வரலாறு.

வரலாற்றை வரிகளில் விட்டு விடாமல், நமது வாழ்வாதாரத்தின் வாழ்வின் ஒரு பகுதியாக வரித்து கொண்டால். அடுத்த தலைமுறையின் வாழ்க்கை இந்த தேசத்தில் வளமாகும்.

மறைக்கப்பட்ட இந்தியா "- எஸ். ராமகிருஷ்ணன்

மறைக்கப்பட்ட இந்தியா "- எஸ். ராமகிருஷ்ணன். விகடன் பிரசுரம். விலை 290.
உலக சரித்திரத்தில் எப்போதும் நம் பழமை வாய்ந்த கலாச்சார பெருமை மிக்க பாரதம் தனக்கான ஆளுமையை எல்லா இடத்திலும் பதிவு செய்து வந்து இருக்கிறது. என் இந்திய தேசம் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் உலகத்திற்கு அளித்து வந்து இருக்கிறது. அது ஆன்மிகமானாலும் சரி, அறிவியல் ஆனாலும் சரி.

புத்தகத்தின் பல பகுதி அதற்கான பக்கங்களை வாசிக்க நமக்கு தருகிறது. உச்சத்தில் இருந்த பருத்தியை எப்படி ஆங்கிலயேன் அழித்தான் என்பதை உதாரணத்துடன் படிக்க நேர்கையில் உள்ளே உக்கிரம் வருகிறது. சீன பயணிகளின் கண்டு அதிசியத்த இந்தியா என்று எழுதப்பட்டதை படித்த நம்மிடம், பழமை வாய்ந்த இந்தியாவில் பயணித்த ரஷ்யா பயணிகளின் பயணத்தோடு நம்மை அழைத்து செல்கிறது. 

சாந்தி நிகதேன் என்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தின் கதையை நம்மிடம் கற்பிக்கிறது. இந்திய சுதந்திர போரில் ஈடுபட்ட தலைவர்களின் சுவாசத்தை சுமந்த சென்ற ஆசாத் இந்தியா வானொலியின் வரலாற்றை பேசுகிறது. இன அழிப்பிற்கு உட்பட்ட ஆர்மினியர்களின் அவல நிலைமையும் , அவர்களை தாயாக அரவணைத்த இந்தியாவையும் அறிய வைக்கிறது.

தீண்டாமை என்ற தடுப்பு சுவர், இந்தியாவின் மக்களில் மனதில் கட்டப்பட்டு இருந்ததை அறிந்த ஜோதிராவ் புலே என்ற மனிதர், அதை இடிக்க புறப்பட்டதையும், அதற்காக காந்திக்கு முன்னரே அவருக்கு மகாத்மா என்ற பட்டம் வழங்கப்பட்டதையும் பட்டியல் இடுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இவர், மேலே படிக்க வேண்டும் என்ற ஊக்குவித்த இஸ்லாமிய ஆசிரியரையும், இவர் தொடங்கிய பள்ளிக்கு பல பிரமாணர்கள் உதவி செய்ததையும் அறிய நேரும் போது, நற்பண்பு என்பது சாதி மதம் கடந்த மனிதர்களின் நல்ல அன்பு என்பதை ஆணித்தரமாக சொல்கிறது.

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட நம் மனதின் மன நிலையும் புரண்டு போகிறது. நமக்கான வரலாறு நமக்கான இந்த பாரத தேசத்தில் புதைந்து இருக்கிறது. வெறும் எலும்பு கூடுகளை எடுத்து காட்டி நம்மை ஏமாளியாக்கி கொண்டு இருந்தார்கள். மறைக்க பட்ட இந்தியா புத்தகம், புதைக்கபட்டு நம்மிடம் இருந்து, மறைக்க பட்ட மாமனிதர்களை பற்றி பேசுகிறது. அவர்களின் ஊடே நமது மகதோன்மை கொண்ட மாட்சிமை தாங்கிய நமது தாய் தேசத்தை பற்றிய அறிவை நமக்கு ஊட்டி செல்கிறது.
Suganthan Rajamanickam's photo.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...