Wednesday, September 9, 2015

மறைக்கப்பட்ட இந்தியா "- எஸ். ராமகிருஷ்ணன்

மறைக்கப்பட்ட இந்தியா "- எஸ். ராமகிருஷ்ணன். விகடன் பிரசுரம். விலை 290.
உலக சரித்திரத்தில் எப்போதும் நம் பழமை வாய்ந்த கலாச்சார பெருமை மிக்க பாரதம் தனக்கான ஆளுமையை எல்லா இடத்திலும் பதிவு செய்து வந்து இருக்கிறது. என் இந்திய தேசம் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் உலகத்திற்கு அளித்து வந்து இருக்கிறது. அது ஆன்மிகமானாலும் சரி, அறிவியல் ஆனாலும் சரி.

புத்தகத்தின் பல பகுதி அதற்கான பக்கங்களை வாசிக்க நமக்கு தருகிறது. உச்சத்தில் இருந்த பருத்தியை எப்படி ஆங்கிலயேன் அழித்தான் என்பதை உதாரணத்துடன் படிக்க நேர்கையில் உள்ளே உக்கிரம் வருகிறது. சீன பயணிகளின் கண்டு அதிசியத்த இந்தியா என்று எழுதப்பட்டதை படித்த நம்மிடம், பழமை வாய்ந்த இந்தியாவில் பயணித்த ரஷ்யா பயணிகளின் பயணத்தோடு நம்மை அழைத்து செல்கிறது. 

சாந்தி நிகதேன் என்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தின் கதையை நம்மிடம் கற்பிக்கிறது. இந்திய சுதந்திர போரில் ஈடுபட்ட தலைவர்களின் சுவாசத்தை சுமந்த சென்ற ஆசாத் இந்தியா வானொலியின் வரலாற்றை பேசுகிறது. இன அழிப்பிற்கு உட்பட்ட ஆர்மினியர்களின் அவல நிலைமையும் , அவர்களை தாயாக அரவணைத்த இந்தியாவையும் அறிய வைக்கிறது.

தீண்டாமை என்ற தடுப்பு சுவர், இந்தியாவின் மக்களில் மனதில் கட்டப்பட்டு இருந்ததை அறிந்த ஜோதிராவ் புலே என்ற மனிதர், அதை இடிக்க புறப்பட்டதையும், அதற்காக காந்திக்கு முன்னரே அவருக்கு மகாத்மா என்ற பட்டம் வழங்கப்பட்டதையும் பட்டியல் இடுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இவர், மேலே படிக்க வேண்டும் என்ற ஊக்குவித்த இஸ்லாமிய ஆசிரியரையும், இவர் தொடங்கிய பள்ளிக்கு பல பிரமாணர்கள் உதவி செய்ததையும் அறிய நேரும் போது, நற்பண்பு என்பது சாதி மதம் கடந்த மனிதர்களின் நல்ல அன்பு என்பதை ஆணித்தரமாக சொல்கிறது.

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட நம் மனதின் மன நிலையும் புரண்டு போகிறது. நமக்கான வரலாறு நமக்கான இந்த பாரத தேசத்தில் புதைந்து இருக்கிறது. வெறும் எலும்பு கூடுகளை எடுத்து காட்டி நம்மை ஏமாளியாக்கி கொண்டு இருந்தார்கள். மறைக்க பட்ட இந்தியா புத்தகம், புதைக்கபட்டு நம்மிடம் இருந்து, மறைக்க பட்ட மாமனிதர்களை பற்றி பேசுகிறது. அவர்களின் ஊடே நமது மகதோன்மை கொண்ட மாட்சிமை தாங்கிய நமது தாய் தேசத்தை பற்றிய அறிவை நமக்கு ஊட்டி செல்கிறது.
Suganthan Rajamanickam's photo.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...