Wednesday, September 9, 2015

"பாகிஸ்தான் போகும் ரயில்" - குஷ்வந்த் சிங் (Train to Pakistan).

" பாகிஸ்தான் போகும் ரயில்" - குஷ்வந்த் சிங் (Train to Pakistan).
கிழக்கு பதிப்பகம் -விலை 175
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் இடையே நடைபெற்ற சம்பவங்களை பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட நாவல். மிகுந்த சர்ச்சையில் சிக்கியது இது வெளி வந்த போது. தென் இந்திய மக்களை விட, வட இந்திய மக்கள் ஏன் பாகிஸ்தான் மீது வெறுப்பில் உள்ளனர் என்பதை சொல்லும் நாவல்.

தேசத்தை வெட்டி பிளந்தவர்களால் , இரு வேற்று மத சார்ந்த காதலை வெட்டி பிரிக்க முடியாமல் போன கதை பற்றி பேசுகிறது. தேசமே சகிப்புத்தன்மையை தூக்கி சாக்கடையில் எறிந்த போது, ஹிந்து, முஸ்லிம், சீக்கிய மத மக்கள் வாழ்ந்த கிராமம் மட்டும் சகோதரர்களாக வாழ முற்பட்ட கதை.

இந்தியாவில் இருந்து செல்லும் முஸ்லிம் அகதிகளை ஏற்றி கொண்டு பாகிஸ்தான் போகும் ரயிலை தொடர்ந்து கதையும் பயணிக்கிறது. நம்மால் தான் அதற்கு மேல் தொடர முடியவில்லை.

ஜின்னாவின் முஸ்லிம் லீக் ஆரம்பித்த "நேரடி நடவடிக்கை " என்ற செயல் பல ஹிந்து மக்களை கொன்றொழிக்க, பதில் நடவடிக்கை இந்தியாவில் ஆரம்பித்தது என்பது தான் வரலாறு.

இந்த புத்தகம் கற்பனை கலந்த கதை என்று வாதிடுபவர்கள் இன்று பாகிஸ்தான் என்ற தேசத்தில் ஹிந்துக்களின் சதவிகிதததை எடுத்து பார்த்தால், கதையின் பெயர்கள் கற்பனையாக இருந்தாலும் , அதன் கதையின் கரு, பிரிவினையின் போது தான் பிரசவித்து இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய தேசம் என்று வக்காலத்து வாங்கும் நடுநிலை வாதிகளின் கவனத்திற்கு. இஸ்லாமியர்கள் பெரும்பான்மை பெற்றதால் அங்கு இஸ்லாமியர் அல்லாதவர் வாழ வழி அற்று போனது என்ற உண்மையை மற்றும் உணருவதில்லை.

ஹிந்துக்கள் பெரும்பான்மை பெற்ற தேசம் தான் தன்னை மதசார்பற்ற நாடக பறை சாற்றியது. அதற்கான பலனை என் தேசம் இப்போது அனுபவிக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து வந்த முதல் ரயில் தான் ஹிந்துக்கள் சீக்கியர்களின் உயிரற்ற பிணத்தை எடுத்து வந்தது என்பது வரலாறு.

வரலாற்றை வரிகளில் விட்டு விடாமல், நமது வாழ்வாதாரத்தின் வாழ்வின் ஒரு பகுதியாக வரித்து கொண்டால். அடுத்த தலைமுறையின் வாழ்க்கை இந்த தேசத்தில் வளமாகும்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...