கடவுளே!! இவர்கள் திருந்தவே மாட்டார்கள். பெண் காதலிக்கும் வரை என்ன
செய்து கொண்டு இருந்தார்கள். கல்யாணம் நடந்த பிறகு என்ன பிரச்சினை. விட்டு
விட வேண்டியது தானே. எப்படியாவது பெண் வாழ்ந்தால் போதும் என்று
நினைப்பவர்கள் தான் பெற்றோர். பெற்ற பிள்ளையை விட சாதி தான் பெரிதா?
என்ன கொடுமை. சாதி எனும் வியாதி பிடித்து அலையும் ஜென்மங்களை எந்த மருந்து கொடுத்தும் குணப்படுத்த முடியாது . அடுத்த சாதியின் ரத்தம் ஒன்று தான் இவர்களுக்கு அருமருந்து போல. மருமகனை கொன்று , மகளை கொல்ல முயன்று தோற்று , அவளை விதவையாக்கி, மகளின் தந்தை சிறைசாலைக்கு சென்றதுதான் உங்கள் சாதி செய்த சாதனையா.?
வேதனையாக இருக்கிறது. உங்களது சாதி பற்று ஒவ்வொரு முறையும் சவக்குழி தோண்டி, அடுத்த சாதியின் உடலை புதைக்கிறது. ஆனந்த கூத்தாடுகிறது. அடுத்த சவக்குழி செய்து காவல் காக்கிறது. யாரும் அகப்படவில்லை என்றால் உங்களையே அதில் அடக்கம் செய்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
போங்கயா நீங்களும் உங்கள் வெங்காய சாதியும்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1478764