Monday, May 23, 2016

2016 தேர்தல் பிஜேபியின் நிலை

பிஜேபி ஒரு இடத்தில கூட வெற்றி பெற முடியாதது வருத்தத்தை அளித்தாலும் , மீண்டும் DMK வர முடியாமல் போனது ஒரு விதத்தில் ஆறுதல் அளிக்கிறது பிஜேபி யை பொறுத்தவரை நரேந்திர மோடி தன்னால் முடிந்தவற்றை செய்து விட்டார். மத்தியில் ஆட்சியில் அமர்த்தி விட்டார். இன்றைய நிலைமை வரை, அவர் தான் மிக சிறந்த பிரதமராக இருக்கிறார்.
அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது , தமிழ் நாடு பிஜேபி எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்ய போகிறது. கண்டிப்பாக எல்லா மாநில கட்சிகளும் ஒன்று சேர்ந்து அவரை வீழ்த்தத் தான் முயற்சிக்கும். எத்தனை MPகளை தமிழகத்தில் இருந்து நீங்கள் அவருக்கு தந்து உறுதுணையாக இருக்க போகிறீர்கள் என்று யோசியுங்கள்.
தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட எல்லா மக்களும் காலையில் எழுந்து படிப்பது தினசரி நாளிதழ்கள், செய்தி சேனல்கள்.
கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா செய்தி சேனல்களும் உங்களுக்கு எதிராக இருக்கின்றன. ஆன்மிக நம்பிக்கை கொண்ட நபரால் தொடங்கப்பட பாலிமர் தொலைக்காட்சி கூட மிக கவனமாக பிஜேபி பற்றி எதிர்மறை எண்ணம் வரும் அளவிற்கு தான் செய்திகள் தருகிறது. விகடனை பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களுக்கு எதிராக உங்கள் கட்சியின் சட்ட துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு எப்போதும் யார் முதல்வர் வேட்பாளர் என்று பார்த்து தான் வாக்கு அளித்து கொண்டு வருகின்றன. உங்கள் முதல்வர் வேட்பாளரை முதலில் தயார் செய்யுங்கள். அவரை முன் நிறுத்தி வேலை செய்யுங்கள். கண்டிப்பாக பலன் தரும்.
ரஜினிகாந்த் உட்பட எல்லா நடிகர்களையும் விட்டு விடுங்கள். அவர்களால் உங்களுக்கு எந்த பலனும் இல்லை. உங்களால் அவர்கள் தான் பலன் அடைந்தனர். நெப்போலியன் வந்தார். என்ன விதத்தில் அவர் பிஜேபி க்கு உதவினார்.
கேரளாவில் கூட மாதா அமர்தான்மி அவர்களின் ஆதரவு பிஜேபி வேட்பாளர் அவர்களுக்கு கிடைத்தது. இங்கே எத்தனை மடங்கள் எத்தனை ஆன்மிக தலைவர்கள் உள்ளனர், அவர்கள் கூட ஏன் வெளிப்படையாக உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க இல்லை. உங்கள் ஹிந்து மத பற்று கூட உங்களுக்கு உதவ வில்லை என்று யோசியுங்கள்
பல தமிழக பிஜேபி தலைவர்கள் கண்டிப்பாக முயற்சி செய்தனர் மறுக்க வில்லை. பல விவாதங்களில் நல் முறையில் பங்கு பெறுகின்றனர். ஆனால் இன்னும் போத வில்லை.
முக புத்தக போராளிகள் , பிஜேபி ஆதரவு நண்பர்கள் முக புத்தகத்தில் பிஜேபி யை பற்றி தவறான எண்ணம் பரப்ப படுவதை தடுகின்றனர், போராடுகின்றனர். அதற்கு மேல் அவர்களிடம் எதிர்பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. களபணி வேறு விஷயம்.
அதிமுக, திமுக தலைவர்கள் உடல் அளவில் தளர்ந்து இருக்கிறார்கள். எதிர்காலத்தை காணும்போது அங்கே தலைவர்கள் தேவை வரும் என்று புரிகிறது
இங்கே தலைவன் யார் என்று பார்த்து தான் தொண்டன் உருவாகின்றான். முதலில் தமிழகத்தில் ஒரு தலைவர்/தலைவி கீழ் சேருங்கள் , அங்கே இருந்து பயணத்தை தொடங்க செய்யுங்கள்
கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை சுவைத்து விட்டனர், ஒரு முறை பிஜேபிக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுப்பது தவறு இல்லை என்று தான் நான் நினைக்கின்றேன்

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...