Saturday, October 29, 2016

ஹிந்து பேரரசு விஜய நகரம்- தமிழில் என் சிறு முயற்சி

விஜய நகரம் பற்றி ஆங்கிலத்தில் வந்த A Forgotten Empire: Vijayanagar நூலை தழுவி, தமிழில் இது வரை 20% எழுதி இருக்கின்றேன். ஒரு முறை தந்தையிடம் விஜய நகர பேரரசை பற்றி பேசி கொண்டு இருந்த போது, தமிழில் கிடைத்தால் வாங்கி கொடுப்பா என்றார். தேடினால் A Forgotten Empire: Vijayanagar நூல் தமிழில் இல்லை.

அகிலனின் வெற்றி திரு நகர் புத்தகம் தான் கிடைத்தது. ஒரு கட்டத்தில் நானே மொழி பெயர்த்தால் என்ன என்று யோசித்தேன். மொழி பெயர்க்கும் அளவிற்கு ஆங்கில அறிவு உள்ளதா நம்மிடம் என்ற தயக்கம் , மற்றும் ஏது நேரம் என்று எண்ணம். அப்புறம் அப்புறம் என்று சலிப்பு. 

விரைந்தோடும் எந்த வினாடிகளிிலும் விதி எவரையும் இழுத்து கொண்டு போய் விடும். மறு ஜென்மத்திலும் என்னை மனிதனாக மீள் எடுக்க என்னிடம் மந்திரம் இல்லை. ஆக இந்த நிமிடம் வரை நம்மை விட்டு வைத்து இருப்பது இறைவனின் கருணை. இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை.

என்னை வளபடுத்தி சுதந்திரமாக யோசிக்க வைத்த ஹிந்து மதத்திற்கு என்னை வருத்தாமல் :) ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம். அதன் காப்பாளர்கள் பற்றி ஹிந்து பிள்ளைகள் அறிய வேண்டும். அதன் வெளிப்பாடு தான் இந்த சிறு முயற்சி.

தஞ்சையை கட்டியவன் சோழன், அது நம் தலைமுறை வரை பத்திரமாக காத்தவன் சந்தேகம் இல்லாமல் விஜய நகர பேரரசு. மீனாட்சி அம்மாளை காத்தவர்கள் அவர்கள். தமிழ் பெருமை பேசும் எந்த கோவிலையும் இங்கே நம்மவற்காக தருவதற்கு தன் உயிரையே விலையாக தந்தவர்கள் விஜய நகரத்தின் வீரர்கள்.

பிரசுர உரிமை பற்றி யோசிக்க வில்லை. வந்தால் பார்த்து கொள்ளலாம். ஆங்கில நூலை பொது தளத்தில் வைத்து இருக்கிறார்கள், அதனால் வராது என்று நினைக்கின்றேன். நூலை வார்த்தைக்கு வார்த்தை பிரதி எடுக்க வில்லை. அதன் வார்த்தைகளின் வளமையை ஒட்டி தான் வழுவி கொண்டு உள்ளேன்.

ராபர்ட் அவர்களின் உழைப்பு அசாத்தியமானது. தொகுப்புகளை ஆவணபடுத்த என்ன தொல்லைகள் பொறுத்தார் என்பதை அவர் மட்டும் அறிவார். ஆனால் நமக்கு ஒரு பேரரசை பரிசளித்து விட்டு போய் இருக்கிறார்.

சீக்கிரம் எழுதி முடித்து , அடுத்து நோக்கி போக வேண்டும். ஆனால் நிழலாய் நம்மை தொடரும் நிறையான இறை, எங்கே நம்மை நகர்த்தும் என்று நிர்ணயம் செய்ய முடிய வில்லை. அவன் நகர்த்தும் வரை நகர்வோம்.

ஒரு சில பக்கம் என்னை எப்போதும் அரவணைக்கும் ஒரு சில நண்பர்கள் பார்வைக்கு.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...