Friday, April 15, 2016

சட்டத்தை விட பாரம்பரியம் பெரிதா சபரிமலை விஷயத்தில் கோர்ட் கேள்வி

நல்ல கேள்வி. இதை அப்படியே எல்லா மதத்திற்கும் கேட்டால் நல்லது.
அனைவரும் ஏன் நீதிபதி வரும் போது எழுந்து நிற்க வேண்டும். கால் மேல் கால் மேல் போட்டு அமரலாம் அல்லவா. அனைவரும் சமம் என்றால் நீதிபதியும் சமம் அல்லவா. அவருக்கு மட்டும் ஏன் சிறப்பு மரியாதை. ஏன் எனில் அது அவருக்கான மரியாதை அல்ல , அந்த பதவிக்கு என்று உருவாகப்பட்ட மரியாதை, அது பாரம்பரியம்.

எனக்கு தெரிந்தவரை நீதிபதி வரும் போது, எழுந்து நிற்க வேண்டும் எந்த சட்டத்திலும் சொல்ல வில்லை. அது பாரம்பரியமாக வருகிறது என்றே நம்புகிறேன் . ஆண் பெண் சம உரிமை கண்டிப்பாக வேண்டும். எல்லா தண்டனைக்கும் இருவருக்கும் ஒரே மாதிரி தண்டனை வழங்க வேண்டும், எல்லா நீதி மன்றங்களிலும் 50 சதவீதம் பெண் நீதிபதிகள் நியமிக்க வேண்டும். 

முதலில் நீதிமன்றங்கள் சம உரிமையின் அளவுகோலை , தங்கள் இடத்தில் இருந்தும் தங்கள் சட்டங்களிலும் இருந்து ஆரம்பித்து மற்ற எல்லாருக்கும் முன் மாதிரியாக வர வேண்டும்.

பின்பு அவர்கள் மக்களின் மத நம்பிக்கையிலும் , அவர்களின் பாரம்பரிய வழக்கத்திலும் தலையிடலாம்.

அப்போது தான் நீதி நீதியாக வரும்


http://www.dinamalar.com/news_detail.asp?id=1499365

என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ். உலகின் மூத்த மொழி, பல மொழிகள் பெற்று எடுத்த பெரு மங்கை , ஆனால் எப்பொதும் எங்கள் தமிழ் குடி மக்களுக்கு இள நங்கை. முச்சங்கம் அமைத்து நாடு ஆண்ட மன்னர்கள் சீராட்டியது , அவர்கள் நாவை ஆண்ட என்றுமே முதுமை அடையாத எங்கள் முத்தமிழை தான்.

உலகின் மூத்த குடி என்று எம் தமிழ் இனம் சொல்வதற்கு இன்று வரை வரலாற்று சான்றாய் இருப்பது, இருக்க போவது நாம் பேசும் தமிழ், நம் பிள்ளைகள் பேச போகும் தமிழ்.

தமிழில் பேசுவது எனது உரிமை, அதன் வழியே நம் தமிழ் தாயை காப்பது நம் கடமை என அறிந்த, அத்தனை தமிழ் கூறும் நல் உள்ளங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...