பல நண்பர்கள் வேண்டுகோளின் படி, நான் இரண்டு நாட்களுக்கு முன் சென்று வந்த திருவண்ணாமலை, விழுப்புரம் கோவில்களின் தகவல்களை பட்டியல் இட்டு (இரண்டு புகைப்படம்) உள்ளேன். கோவிலின் தொடர்பு எண்களையும் பெற்று வந்தேன். என்னால் முடிந்த அளவு தகவல்களை தொகுத்து உள்ளேன். ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும். உதவி செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் , நீங்களே கோவில் அர்ச்சகரை தொடர்பு கொண்டு, உங்களால் முடிந்த நிதியுதிவி செய்யலாம்.
கோவிலின் கால பூஜைகள் மற்றும் கோவிலை கட்டுபடுத்தும் அதிகாரம் பற்றிய தகவல்கள், சரியாக சொல்ல முடியவில்லை. சில இடங்களில் அர்ச்சகர் நான்கு கால பூஜை என்றால், உள்ளூர் மக்கள் 2 கால பூஜை என்கிறார்கள். சில இடங்களில் அரசாங்க மேற்பார்வை என்கிறார்கள், இன்னோர் சாரார் அரசாங்கத்தின் ஆளுமையில் உள்ள கோவில் உள்ளது என்று தகவல் சொல்கிறார்கள்.
ஆனால் வரலாற்றில் உச்சத்தில் இருந்த பல கோவில்கள், இன்று காலத்தின் எச்சமாய் நிற்கிறது. பதினைந்து ஏக்கர் நிலத்திற்கு , வருட குத்தகையாக 1000 ரூபாயை வாடகையாக தருகின்ற , அவலம் இன்னமும் தொடர்கிறது. 1000 ரூபாய் வைத்து கொண்டு ஒரு கோவில் என்ன செய்ய முடியும், 500 ரூபாய் மாத சம்பளம் பெற்று கொண்டு ஒரு அர்ச்சகர் எப்படி குடும்பம் நடத்துவார்.
இயற்கை சீற்றத்திற்கு தாங்கி நின்ற கோவில்களை, எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று மனிதன் நினைத்து விட்டான் போலும்.
கோவில்களில் குடி கொண்டு இருக்கும் இறைவனை விட்டு விடுங்கள்.
கோவில்கள் அழிந்து போனால், நம் வராலறு அழிந்து போகும். எல்லா கோவில்களும், தமிழக மன்னர்களை பற்றிய ஏதாவது செய்திகளை தாங்கி நிற்கிறது.
கோவில்கள் அழிந்து போனால், நம் வராலறு அழிந்து போகும். எல்லா கோவில்களும், தமிழக மன்னர்களை பற்றிய ஏதாவது செய்திகளை தாங்கி நிற்கிறது.
கோவில் ஒன்று இல்லாமல் போய் இருந்தால், நான் அரசாண்ட தமிழ் இனத்தை சேர்ந்தவன் என்று யாராலும் இன்று பெருமை பேசி திரிந்து கொண்டு இருக்க முடியாது. கோவில் ஒன்று இல்லாமல் போனால், எங்கே போய் பரதம் ஆடுவீர்கள், கல்யாணம் செய்வீர்கள், உங்கள் குறை சொல்லி அழுவீர்கள்.
தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழ் மக்கள், அதில் 6 கோடி பேர் ஹிந்துக்கள். அதில் பத்து லட்சம் பேர் மாதம் பத்து ரூபாய் போட்டால் கூட , தமிழகத்தின் எல்லா கோவில்களையும், நம்மால் காப்பாற்ற முடியும்.
முப்பது பேர் சேர்ந்து ஒரு கோவிலை தத்து எடுக்கலாம். ஒரு கால பூஜை என்பதை இரு காலம் ஆக்கலாம், மாதத்திற்கு ஒருமுறையாவது கோவிலை சுத்தபடுத்தும் பணிக்கான பண செலவை செய்யலாம்.
நான் என் நண்பர்களை சேர்த்து செய்யலாம் என்று முடிவு செய்து உள்ளேன்.
கோவில்களை காப்பது என்பது, நமது கடந்த கால பெருமை மிக்க வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு மீட்டு எடுத்து செல்லும் முயற்சியின், மீள் தொடர்ச்சி என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தொடர்ச்சி நின்று போனால், அது வீழ்ச்சி ஆகி விடும்!!
கோவில்கள் செல்லும் வழி