Monday, November 17, 2014

சுந்தரர் அவதரித்த ஊரின் கோவில்,விளையாட்டு மைதானமா?

சுந்தரர் அவதரித்த ஊரின், ஈசனின் கோவில், விளையாட்டு மைதானமாக பயன்படும் அவலம். 274 சிவாலயங்களின் பயணத்தின் ஒரு பகுதியாக, இரண்டு நாட்களுக்கு முன், விழுப்புரம் மாவட்டம் , திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சென்றேன், அங்கே தான் இந்த காட்சி.
விளையாட்டு தவறு அல்ல. விளையாடும் இடம் தவறு. மனம் நிம்மதி தேடும் இடத்தில , கூச்சல் போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். கோவில் வெளியில் செருப்புக்களை பக்தர்கள் விட்டு , உள்ளே நுழைந்தால், இவர்கள் செருப்பு காலுடன் உள்ளே நுழைந்து விளையாடி கொண்டு இருக்கின்றனர்.
அவர்களை தட்டி கேக்க கோவில் நிர்வாகம் அஞ்சுகிறது. அங்குள்ளவர்களை விசாரித்தால், அந்த பயத்தில் நியாயம் உள்ளதாகவே தெரிகிறது. மிக தவறான வார்த்தைகள் வரும் என்று அஞ்சுகிறார்கள். நான் கேக்க முற்பட்ட போது, தடுத்து விட்டார்கள். நீங்கள் வெளியூர், நீங்கள் பேசி எந்த பயனும் இல்லை. நீங்கள் வார்த்தைகள் வாங்க வேண்டி வரும் என்றார்கள்.எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால், இவர்கள் உள்ளே நிரந்தரமாக நெட் கட்டி விளையாடு கின்றனர் என்பது நிதர்சமான உண்மை. அது பக்தர்களுக்கு மிக பெரிய இடைஞ்சல் என்பதும், கோவில் சுற்றும் பெண் பக்தர்களுக்கு உளவியல் ரீதியான அச்சுறுத்தல் என்பதும் நான் கண் கூடாக கண்ட உண்மை.
விளையாடும் அனைவரும் வாலிப பருவும். கடவுள் நம்பிக்கை உள்ள கூட்டமாக தெரியவில்லை. கண்டிப்பாக இந்த கூட்டத்தில் யாரோ இரண்டு பேர் , இந்த செயலை செய்ய அடுத்தவர்களை ஊக்குவித்து கொண்டு உள்ளனர்.
இந்து அறநிலையத்துறை , கோவில் காவலாளி எல்லாம் இருந்தும் எல்லாம் ஊமையாக உள்ளனர். உள்ளூர் ஆட்களை பகைத்து கொண்டால் , ஊரில் இருக்க முடியாது என்று பயபடுகின்றனர்.
இதனாலே பெண்கள் வெளி பிரகாரத்தை சுற்றி வருவதை தவிர்த்து விடுகின்றனர் என்று புரிகிறது.
சிறுவர்களிடம் விசாரித்தால், சில சமயம் மதியம் கோவில் நடை அடைகபட்டாலும், கோவில் மதில் மேல் ஏறி குதித்து உள்ளே சென்று விளையாடுவார்கள் என்று சொன்னார்கள், எப்படி உள்ளே போவர்கள் என்று எனக்கு ஒரு சிறுவன் செய்தே காட்டினான். கோவில் நடை சாத்திய பிறகு, கோவிலுக்குள் போவது, விதி மீறல் ஆகாதா ?
கோவில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்று புரிகிறது. நான் தினமலருக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன். அந்த ஊரை சேர்ந்த நண்பர்கள் யாராவது இருந்தால், அந்த ஊர் பெரியவர்களிடம் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களிடம் , நமது கவலையை தெரிவித்து, அந்த இளைஞர்களை, கோவில் வெளியே வேறு இடம் தேடி கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
இன்று இதை அனுமதித்தால், நாளை , கிரிக்கெட் என்று ஒரு கும்பல் உள்ளே புகும். ஏற்கனவே கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்க பட்டு விட்டன. மிச்சம் இருப்பது கோவில்கள் மட்டும் தான், அதையும் விளையாட்டு என்ற போர்வையில் மெல்ல ஆக்கிரமிக்கும் முயற்சியை , முளையிலே நாம் கிள்ளி ஏறிய வேண்டும்.




No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...