ராம நவமி. ராமன் பிறந்த தினம். எவனின் ஒர விழி பார்வை நம் மேல் விழாதா என்று ஏங்கி தவிக்கிறமோ, அந்த ஆதியும் அந்தம் அற்ற ஈசனை் , யோகத்தில் ஆழ்த்துவது ராம நாமம். நான் ஈசனை நினைத்து கொண்டு இருந்தால், ஈசன் ராமனை நினைத்து கொண்டு உள்ளான். சிவ பக்தன் ராவணனின் சிரம் போனது, ராம நாமத்தை பற்றி கொண்டு இருந்த சீதா மாதாவின் கரம் பற்ற போனதால் என்று வரலாறு சொல்கிறது.
அப்பனுக்கு பல மனைவி, பிள்ளையோ ஏக பத்தினி விரதன். வந்தது இறை என்று ஐந்தறிவு பறவை ஜடாயுக்கு தெரிந்து இருந்திருந்தது , யோசிக்கும் அறிவே அற்று திரிந்த மந்திக்கும் தெரிந்து இருந்தது வந்தது மனிதன் அல்ல என்று. ராமன் கால் பட்டதும் கல்லுக்கும் புரிந்தது அது கடவுள் என்று.
ஆனால் இறை பக்தனான ராவணனுக்கு மட்டும் வந்ததது யார் என்று புலப்படவே இல்லை. இறை பக்தி இறங்கி போய், இச்சை மட்டுமே அவனிடம் எச்சம் இருந்தது. முறையற்ற, பொருள் அற்ற காமம் அவனுள் இருந்த கடவுளை கரைத்து , காலனை அவன் வாயிற் படிக்கு வரவழைத்தது.
ராம பாணம் ரதம் ஏறி சிவ பக்தனை சவம் ஆக்கியது.
காமம் கொண்ட மனதை ராம பாணம் கருவறுதத்து.
தியானத்தில் ஆழ்ந்த ஈசனை , காமத்தில் ஆழ்த்த வந்த காம தேவன் மீது ஈசன் எய்தியது வேறு எதுவும் இல்லை, சாட்சத் ராம பாணம் தான்.
ராமன் என் அரசன், என்னை ஆளும் என் ஈசனையும் அவனே ஆள்கின்றான் எனும் போது ராம நாமத்தை மிஞ்சி இங்கே எந்த மந்திரமும் இல்லை, எந்திரமும் இல்லை.
சஞ்சலத்தில் சிக்கி சிதையும் நம் சிந்தனைகளை , சிறை மீட்க வருவது "ராம நாமம்"
ராமனை பரத தேசத்தின் அரசனாக எண்ணும், அனைவர்க்கும் ராம நவமி வாழ்த்துக்கள்.


No comments:
Post a Comment