Saturday, August 27, 2016

மணிப்பூர் மீண்டும் மலரும்.


16 ஆண்டு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது:
முதல்வராக போவதாக ஷர்மிளா அறிவிப்பு

நல்ல முடிவு. இவரின் சில இந்திய ராணவ எதிர்ப்பு என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. சில வருந்தக்க நிகழ்வு நடந்தது. ஆனால் தவறுகள் சுட்டி காட்டப்பட்ட பிறகு அது மீண்டும் நடக்காமல் இருக்கமாறு செய்யப்பட்டது. பிரிவனை வாதிகள் இருக்கும் இடத்தில இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகள் இருந்தே தீரும். இருந்தே தீர வேண்டும். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

இவர் ஒன்றை அறிய வேண்டும், இதே போராட்டத்தை இவர் சீனாவில் செய்து இருந்தால் இவர் என்றே கொல்லப்பட்டு இருப்பார். இந்தியாவின் ஜனநாயகம் இவரை காத்தது. 

அடுத்த பெண் கற்பழிக்கப்பட்டு கொல்லபட்டால் , அந்த செய்திகளை கவனமாக தவிர்த்து விட்டு செல்லும் நம் நவ நாகரீக பெண்கள் இருக்கும் இந்திய தேசத்தில், பெண்களுக்காக இவர் நடத்திய போராட்டம் பிரமிக்கதக்கது. அசாதாரணமானது.

மத்தியில் மோடி அரசு நடக்கும் போது, இவர் ஜனநாயகத்திற்கு திரும்பியது , மோடி அரசின் மீது இவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிபடுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

மணிப்பூர் மீண்டும் மலரும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1582430

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...