உண்மையில் பிரமிக்க வைத்தது இந்த நிகழ்ச்சி. Discovery tamil
மிக்க நன்றி, சுதந்திர தினத்தன்றும் நடிகை , நடிகர்களின் பட அனுபவத்தை
பற்றி தான் மற்ற தொலைக்காட்சிகள் தீவிரமாக விவாதித்து கொண்டு இருந்த போது, Discovery tamil
இந்திய ராணுவ வீரர்களை பற்றி விவரித்து கொண்டு இருந்தது. கண்டிப்பாக இந்த
நிகழ்ச்சியை பார்த்த பல பேர் அரண்டு போய் இருப்பார்கள் என்பதில் ஐயம்
இல்லை.
இத்தனை வேதனைகளை சுமக்கும் நம் வீரர்களை பார்க்கும்போது, மனம் கலங்கி போனது. வெறும் பணம், சாகசத்திற்கு மட்டும் என்று இதை கொள்ள முடியாது. இத்தனை கஷ்டங்கள் அடைந்து ராணுவ குழுவில் இடம் பெறுதல் , வீர மரணத்திற்கு தான் இட்டு செல்லும் அறிந்தும் இதை செய்கிறார்கள் எனும்போது தேசத்தின் மீதான காதல் இல்லாமல் இதை செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. இதை பார்த்த பிறகும், நடிகனுக்காக அழுபவனையும் , விளையாட்டு வீரர்களுக்காக அழுபவனையும், சும்மா தலைவன் தலைவன் அன்று கத்தி கொண்டு உள்ளவர்களை காணும் போது வெறுப்பாக வருகிறது.

யாருக்காக அழ வேண்டும், யாருக்காக வேதனை பட வேண்டும் என்று தெரியாத ஒரு
மக்களுக்காக , ஒரு தேசத்தின் பாதுகாப்பு படைகள் உயிர் விடுகின்றன. அந்த
மக்களோ , போர் என்று நிலைமை வந்தால் மட்டும் தான் ,பாதுகாப்பு படைகளை பற்றி
கவலை கொள்கின்றன , அதாவது தங்கள் சுய பாதுகாப்பை பற்றிய கவலையால்
உந்தப்பட்டு , அப்போது மட்டும் தேசம் பற்றி கவலை வருகிறது. தேசம் காப்பாற்ற
பட்டு, தங்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட உடன் , அந்த மக்கள்
வருந்துவது , நடிகர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கு தான். ராணவ வீரர்களை
பற்றி அவர்களுக்கு ஒரு துளியும் கவனம் இல்லை, அவர்கள் கவனத்திற்கு
வந்தாலும் , அதை கவனிக்காத மாதிரி கடந்து விடுகிறார்கள்.
வாழ்க குடிமக்கள்
வாழ்க குடிமக்கள்
இந்திய என்ற ஒற்றை சொல்லால் உந்தப்பட்டு சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து பாரா கமாண்டோ வீரராக மாற துடித்த நம் வீரர்களை இந்த நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்
இக்காட்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில காட்சிகள் மற்றும் பயிற்சிகள் மறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment